Sunday, June 23, 2013

வெற்றி வேல் ஆசியா உமரிடம் இருந்து பொறுப்பேற்கிறார்

அன்பின் சக பதிவர்களே 

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற ஆசியா உமர் - அறிமுக மலர், கல்வி மலர், கதை மலர், டயட் மலர், அனுபவ மலர், கவிதை மலர், பல்சுவை மலர் என் பல்வேறு தலைப்புகளில் பதிவுகள் எழுதி,  தான் ஏற்ற பொறுப்பினை மிகுந்த ஈடுபாட்டுடனும் ஆர்வத்துடனும் நிறைவேற்றி மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். 

இவர் எழுதிய பதிவுகள்                      : 0007
அறிமுகப் படுத்திய பதிவர்கள்       : 0211
அறிமுகப் படுத்திய பதிவுகள்          : 0227
பெற்ற மறுமொழிகள்                           : 0328
வருகை தந்தவர்கள்                             : 1302

பொறுப்பேற்பதற்கு முன்னர் மிகவும் தயங்கிய இவர் பொறுப்பேற்ற பின்னர் அருமையான பதிவுகளையும் அவற்றை எழுதிய பதிவர்களையும்  ஆர்வத்துடன் அறிமுகப் படுத்தி தன் கடமையினைச் சரிவர செய்து ஏற்ற பொறுப்பினை பாராட்டத்தக்க முறையில் செய்து முடித்த மகிழ்ச்சியுடன் விடைபெறுகிறார். 

ஆசியா உமரை வாழ்த்தி வழி அனுப்புவதில் வலைச் சரக் குழுவினர் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். 

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடனும் ஆர்வத்துடனும் இசைந்துள்ளார் வெற்றிவேல்.  

வெற்றி வேல்  B.tech-Petrochemical Technology - அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து விட்டு- இப்போது சென்னை உரத்தொழிற்சாலையில் பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்-  படித்ததும் பணீ புரிவதும் பொறியியல் படிப்பினைச் சேர்ந்த வேதியியல் துறையானாலும், தமிழ் மீது கொண்ட காதலால் இங்கும் எழுதிக்கொண்டு இருக்கிறார்.  கல்லூரியில் படிக்கும் காலத்தில் விகடன் மாணவர் பத்திரிக்கையாளராக பணியாற்றியிருக்கிறார். 

இவர் அரியலூர் மாவட்டத்தினைச் சார்ந்த சாளையக்குறிச்சியினைச்  சொந்த ஊராகக் கொண்டவர்.  இவர் தன்னைப் பற்றிக் கூறும் பொழுது, எப்போதுமே தழுவிக் கொண்டிருக்கும் தென்றலிலும், பூக்கள் மணம், கண்களுக்கு விருந்தாய் பச்சைப் பசேல் என்ற பசுமை என்று வாழ்ந்த இவர் தான்,  இன்று நகரத்து புழுதியிலும், அதன் போக்குவரத்து சத்தத்திலும் தானாக உழன்று கொண்டிருக்கும் ஓர் கிராம நாடோடி யாக வாழ்கிறார் எனக் குறிப்பிடுகிறார்.

அருமை நண்பன் வெற்றிவேலினை வருக ! வருக ! என வரவேற்று வாழ்த்துவதில் வலைச்சரம் குழுவினர் பெருமை அடைகிறோம். 

நல்வாழ்த்துகள் ஆசியா உமர்

நல்வாழ்த்துகள் வற்றிவேல் 

நட்புடன் சீனா
வலைச்சர பொறுப்பாசிரியர். 



13 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. விடைபெற்றுச்செல்லும் வலைச்சர ஆசிரியர் அவர்களுக்கும்,புதிய பொறுப்பேற்கும் ஆசிரியர் அவர்களுக்கும் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.


    ReplyDelete
  3. ஆசியா உமர் அவர்களுக்கு பாராட்டுக்கள்..

    வெற்றிவேலின் வருகைக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  4. வெற்றிவேல் அவர்களை வரவேற்கிறேன்... வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. வெற்றிகரமாக ஆசிரியப் பணி முடித்த ஆசியாவுக்கும்,
    வெற்றிகரமாக ஆசிரியப் பணியை ஆரம்பிக்க இருக்கும் சகோதரர் வெற்றிவேலுக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. வரும் வார வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

    இந்த வார ஆசிரியர் ஆசியா உமருக்கு பாராட்டுகள்..

    ReplyDelete
  7. அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியினை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.வலைச்சரத்தில் ஆசிரியப் பொறுப்பேற்கும் பதிவர்கள் பணியாற்றுவது ஒரு வாரம் தான்,ஆனால் பொறுப்பாசிரியரும்,குழுவினரும் ,தொடர்ந்து இவ்வளவு அருமையாக வலைச்சரத்தை செம்மையாக தொய்வில்லாமல் நடத்துவது,மிகவும் பாராட்டுதலுக்குரியது. என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

    வருகிற வாரத்தில் பொறுபேற்கும் வலைச்சர ஆசிரியர் வெற்றிவேல் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. அன்பின் ஆசியா உமர் - வாழ்த்தினிற்கு நன்றி. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  9. அன்பினிய ஆசியாவிற்கும், வெற்றி வேல் அவர்களுக்கும் வாழ்த்துகள். சீனா ஐயாவிற்கும், வலைச்சர குழுவினருக்கும் நன்றிகள் பல.

    ReplyDelete
  10. பொறுப்பினை வெற்றிகரமாக‌ நிறைவேற்றிவிட்டு விடைபெற்றுச் செல்பவருக்கும்,வரும்வார பொறுப்பினை ஏற்றுக்கொள்பவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. மிகச் சிறப்பாக வலைச்சர ஆசிரியர் பணியினை ஆற்றிய திருமதி ஆசியாவிற்கு பாராட்டுக்கள். நிறைய புதுத் தளங்கள். நிறைய படிக்க வேண்டும் நானும்.

    அவரிடமிருந்து பொறுப்பினை ஏற்கும் திரு வெற்றிவேல் அவர்களுக்கு நல்வரவு!

    ReplyDelete
  12. சென்ற வாரம் சிறப்பாக தொகுத்த தோழி ஆசியாவுக்கும்
    இவ்வாரம் தொகுக்க வந்துள்ள வெற்றிவேலு அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete