என் கடந்த பதிவு அந்த மூன்று பேரையுமே மிகவும் எமோசனலாக டச் செய்திருப்பது நானே எதிர்பாராதது.. இது போன்ற ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது தான் என் மனதில் அவர்களைப்பற்றி நான் நினைப்பதை கூற முடிகிறது.. பேசும் போதும், சாட்டிலும் இது மாதிரி செண்டிமெண்ட் விசயங்களை சொல்ல மிகவும் கூச்சமாக இருக்கும்.. அப்படியே சொன்னாலும் அது நடிப்பு போல் இருக்கும்.. நேற்று எழுதி முடிக்கும் போது எனக்கு ஒரு திருப்தி இருந்தது.. அந்த திருப்தி, அந்த மூவரின் சந்தோசத்தை பார்த்து இன்னமும் அதிகரித்துவிட்டது.. ரத்னவேல் சார், டான் அசோக் & செல்வக்குமார் நண்பா உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்...
இன்றும் என் மனதை ஒவ்வொரு வகையில் கவர்ந்த மூன்று பேரைப்பற்றித்தான் சொல்லப்போகிறேன்.. அதுவும் என் வழக்கமான சொந்த கதை, சோக கதைகளோடு தான்..
அது 2012 டிசம்பர் மாதம்.. திருப்பூரில் தொழிற்களமும் தாய்த்தமிழ் பள்ளியும் இணைந்து திரு.சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களை அழைத்து நடத்திய ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு பதிவர்கள் பலரும் போவதாகவும், தன்னால் போக முடியாததால், என்னை அங்கு போய் கலந்து கொள்ள சொன்னார் திரு.ரத்னவேல் ஐயா அவர்கள். எனக்கு அங்கு ஒருவரையும் தெரியாது.. பதிவர் கண்மணி மட்டும் சொந்த ஊர் என்பதால் லேசாய் அறிமுகம் உண்டு.. ஒரு வழியாய் அங்கு போய் சேர்ந்தால், அங்கிருக்கும் ஒரு முகமும் எனக்கு தெரியவில்லை.. பதிவர், பெற்றோர், மைக்செட் ஸ்பீக்கர் ஆள் என எல்லோரும் ஒரே மாதிரி இருந்தார்கள்.. ‘சரி நாம பாட்டுக்க ஒரு மூலையில போயி ஒக்காருவோம்’ என அமர்ந்தேன்.. என் அருகில் அமர்ந்திருந்த ஒவ்வொருவராக பேச ஆரம்பித்தார்கள். அப்போது அறிமுகமானவர்கள் தான் அண்ணன் வீடு சுரேஷ் குமார், அண்ணன் திண்டுக்கல் தனபாலன் எல்லாம்..
இவர்கள் எல்லோர் மேலும் ஒரு மதிப்பும், ‘அய்யோ பெரிய ஆள்ப்பா’ என்கிற பயமும் இவர்களிடம் என்னை சகஜமாக பேச விடவில்லை.. அப்போது ஒருவர், சராசரி இந்திய உயரத்தில், என்னை விட அழகான கண்ணாடி அணிந்து கொண்டு, என்னை போல் ரெண்டு நாள் வளரவிட்ட தாடி மீசையோடு வந்து பேசினார்.. “நான் ஸ்ரீநிவாசன்.. ’திடங்கொண்டு போராடு’னு எழுதிட்டு வரேன்” என்றார்.. ப்ளாக் பெயரை கேட்டால் ஏதோ புரட்சிக்காரர் மாதிரி இருந்தது.. ஆனால் ஆள், நாம் சைட் அடிக்கும் பெண்ணின் தம்பி போல் பார்த்தவுடன் பிடித்தவரானார்...
இவரை எல்லோருக்கும் தெரியும்.. ஆனாலும் இங்கு சொல்லக்காரணம் இவர் எனக்கு என் ப்ளாக்கை எப்படி promote செய்வது, தமிழ்மணம் என்றால் என்ன என்பது போன்ற பல முக்கிய marketing strategyக்களை சொல்லிக்கொடுத்தவர். லார்டு லபக்கு தாஸ் மாதிரி நைட்டு ரெண்டு மணிக்கு கூட இவரிடம் ப்ளாக் சம்பந்தமாக டவுட் கேட்கலாம்.. இன்னொரு முக்கிய காரணம், ப்ளாக்காக இருந்த என் பக்கத்தை, வெப்சைட்டாக மாற்றிக்கொடுத்தவரும் இவர் தான்..
பொதுவாகவே நம்ம சீனுவிற்கு பயணக்கட்டுரைகள் மிக மிக அற்புதமாக வரும்.. அதில் அவருக்கே உரிய நகைச்சுவையும் பாயாசத்தில் போட்ட முந்திரி மாதிரி சூப்பராக இருக்கும்.. ஒவ்வொரு ஊரில் முக்கிய இடம் என்று ஒன்று இருக்கும். அதற்கு சரித்திர முக்கியத்துவமோ அரசியல் முக்கியத்துவமோ இருக்கும்.. ஆனால் நமக்கு அதை பற்றிக்கூட தெரிந்து கொள்ள ஆரவமோ, அதை பகிரும் எண்ணமோ இருக்காது.. நம்ம ஆள் இங்கிருந்து மெனக்கட்டு காஷ்மீருக்கு சென்று, தெரிந்த நண்பர் ஒருவர் மூலமாக அங்கிருக்கும் ராணுவ முகாமையும், சில ராணுவ ரகசியங்களையும் கசிய விட்ட ஒரு பதிவு இது.. ராணுவ ரகசியங்களை வெளியிட்ட இந்த பதிவிற்காக இன்னும் ஏன் இவரை மிலிட்டரி கோர்ட் தண்டிக்கவில்லை என எனக்கு மிகப்பெரிய டவுட்..
என்ன பதிவின் கடைசி வரி பார்த்து உங்களுக்கும் என்னைப்போலவே டவுட் வருகிறதா? சரி அது கிடக்கட்டும், தனுஷ்கோடியில் 1964ல் மிகப்பெரிய புயலும் கடல்சீற்றமும் வந்து ஒரு ஊரையே மொத்தமாக தன் வாயில் போட்டு சென்றதே, அப்போது காதல் மன்னன் ஜெமினி தன் காதல் மனைவியுடன் அங்கு தான் இருந்தாராம்.. மாலையே சுதாரித்து கிளம்பிவிட்டதால் அவர்கள் தப்பித்தார்கள்.. அந்த இருவர் தப்பித்தாலும் எத்தனை ஆயிரம் பேர் அங்கு சடலமாகக்கூட கிடைக்காமல், இருக்கிறாரா இறந்தாரா என்று கூட தெரியாமல் போய்விட்டனர்?ஜெமினி அங்கு இருந்த தகவலையும், இப்போதைய தனுஷ்கோடியின் நிலையையும் நேரடியாக விசிட் அடித்து சீனு அருமையாக பதிந்த பதிவு இது.. இதில் உங்களுக்கோ எனக்கோ நிச்சயம் டவுட் வராது..
நம்ம ஆளு கதையும் வெளுத்து கட்டுவார்... அவர் சமீபத்தில் எழுதிய ஒரு கதை என்னை மிகவும் பாதித்து விட்டது.. மருத்துவமனை என்கிற பெயரில், பிணத்தை கூட விலை பேசும் கொடூரமும், அந்த கொடூரர்களுக்கு கொடுக்கும் தண்டனைகளும் என கதை ரொம்ப சீரியஸாக கொஞ்சம் திகிலாக போனாலும் அவர் சொல்ல வந்த கருத்து சூப்பர். அவர் எழுதிய கதைகளில் the best என்று நான் இதைத்தான் சொல்வேன்.. ஒரு திருவிழா கதையும் அழகாக நகைச்சுவையோடு எழுதியிருப்பார்.. அது இவரின் வழக்கமான நகைச்சுவை என்பதால் அதை விட இது எனக்கு மிகப்பிடித்திருந்தது..
தலைவர் சுஜாதாவின் பிறந்த நாள் அன்று நான் எழுதிய பதிவில் ஒரு வரி வரும்.. "எல்லோராலும் சுஜாதா போல் எழுதிவிட முடியாது.. ஆனால் எழுதும் எல்லோருமே சுஜாதாவால் தான் எழுதுகிறார்கள்” என்று... சற்றே மிகைப்படுத்தப்பட்ட கருத்து என்றாலும், சுஜாதா ரசிகர்களைப்பொறுத்தவரை இது ஒரு இயல்பு நவிற்சி கூற்று தான்.. நண்பர் சீனுவும் என்னைப்போல் தலைவரின் மிகப்பெரிய வெறியர் தான்.. சுஜாதாவின் கணேஷ் - வசந்த பாத்திரங்களைப் பற்றி அவர் எழுதியிருக்கும் ஒரு மிக மிக சூப்பரான பதிவு.. கணேஷும் வசந்தும் என்னைப்பொறுத்தவரை சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் மாதிரியான ஆட்கள்.. இந்த உலகிற்கு வயதானாலும் அவர்களுக்கு ஆகாது.. 1970களிலும் 18 வயது பொண்ணை சைட் அடித்தவன் வசந்த்.. 2008, ஃபெப்ரவரி 27 வரையும் கூட வசந்த் அதை தான் செய்தான்.. கணேஷும் ரிட்டையர் ஆகாமல் ஒரு சூப்பர் லாயராகவே இருந்தான்.. காலங்கள் மாறினாலும் வசந்த் கடைசி வரை கணேஷுக்கு ஜூனியராகவே இருக்கிறான்..
சீனுகுரு இன்று எனக்கு முகநூல், பளாக் என்பதையும் தாண்டி ஒரு நல்ல நண்பராக இருந்துவருகிறார்.. அவர் மூலம் அறிமுகமானவர் தான் நண்பர் ரூபக் ராம்.. ராம் என்கிற பெயர் இருப்பதால் எனக்கு இவரை டக்கென்று பிடித்துவிட்டதா என தெரியவில்லை. எங்கள் இருவரை விட கொஞ்சம் சிறியவர் வயதில்.. எங்களை மிஞ்சுபவர் எழுத்தில். இவரின் மொழி ஆளுமை நன்றாக இருக்கும்.. முடிந்த வரை தமிழிலேயே எழுதுவார்.. இவரும் பொதுவாக பல விசயங்கள், சிறுகதைகள் என எழுதினாலும், நான் குறிப்பிட்டு சொல்ல நினைப்பது இவரின் உலக சினிமாக்கள் பற்றிய பதிவுகளைத்தான்..
அந்தக்கால ஓர் இரவு, பத்து வருடங்களுக்குள் வந்த விருமாண்டி, ஆய்த எழுத்து போன்ற படங்களில் ஒரு ஒற்றுமை இருக்கும்.. அதாவது ஒரே சம்பவங்கள், பல்வேறு பாத்திரங்களின் வாயிலாக அவரவர்களுக்கு ஏற்றாற்போல் சொல்லப்படும். விருமாண்டியில் பசுபதி, “எல்லாத்தையும் தாங்கிட்டு ஒரு இடி தாங்கியா நின்னேன்” என்று சொல்லும் போது, ‘இவன் நல்லவனா இருப்பானோ’னு ஒரு டவுட்டு வரும்.. அதே படத்துல கமல், “நா அன்னலெச்சுமிய கெடுத்து கொன்னுட்டேன்னு சொல்லிருப்பாய்ங்களே?”னு கேக்கும் போது, ‘ஒக்கா மக்க, இவன் நல்லவன்டா அந்த கொத்தாளத்தேவன் தான் கெட்டவன்’ என வேறு ஒரு நினைப்பு வரும்.. இந்த மாதிரி ஒரே விசயத்தை பல பாத்திரங்கள் மூலம் ஒவ்வொரு விதமாக சொல்லும் திரைக்கதை முறையை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் அகிரா குரசவா.. ஏதோ சாத்தூர் கார சேவுனு நினைத்துவிடாதீர்கள்.. ஆள் பெரிய ஆள்.. அவரின் ’ராஷோமோன்’ தான் நமது ஓர் இரவில் இருந்து விருமாண்டி வரை அனைத்திற்கும் முன்னோடி.. அதைப்பற்றிய நண்பரின் பதிவு..
நீங்கள் ஆள் அரவமே இல்லாத ஒரு நெடுஞ்சாலையில் வேலை நிமித்தமாக வேகமாக சென்று கொண்டிருக்கிறீர்கள்.. உங்களுக்கு முன் ஒருவன் வழி விடாமல் சென்று கொண்டிருக்கிறான் அவன் வண்டியில். நீங்கள் ஓட்டுவது ஒரு சாதா கார்.. அவன் ஓட்டுவது ஒரு மிகப்பெரிய ட்ரக். வழி விடாத அவனுக்கு விடாமல் ஹார்ன் அடிக்கிறீர்கள்.. அப்போதும் அவன் வழிவிடவில்லை. வேறு வழி இல்லாமல் அவனை சைடு எடுத்து முந்தி செல்கிறீர்கள். இது நம் வாழ்வில் அடிக்கடி நடக்கும் சம்பவம். ஆனால் இப்படி ஒரு நாள் செல்லும் போது அப்படி நீங்கள் சைடு வாங்கிய ட்ரக்காரன், நீங்கள் அவனை முந்தியது பிடிக்காமல் உங்களை கொல்ல பின் தொடர்ந்து வருகிறான். என்ன செய்வீர்கள்? இப்படி ஒரு கதையை ஒரு பக்கா ஆக்ஷன் படமாக வில்லனின் முகத்தையே காட்டாமல் நம்மை சீட் நுனியில் அமர வைத்து பரபரக்க வைத்திருப்பார் ஸ்பீல்பெர்க்.. இது அவர் சினிமாவில் புகழ் பெரும் முன் எடுத்த படம்.. படத்தில் பெயர் டூயல். இதைப்பற்றிய விமர்சனத்தையும் பாருங்கள்..
நான் MBA படிக்கும் போது (அடடா இவன் இந்த MBA படிச்சத விட மாட்டானானு டென்சன் ஆகாதீங்க.. படிப்பை தாண்டி நிறைய கற்றுக்கொண்டது அப்போது தான்), பேச்சாளுமை குறித்த ஒரு வகுப்பில் எனக்கு ஒரு படம் போட்டுக்காட்டினார்கள்.. அதாவது ஒரு சிறுவன் மீது கொலைப்பழி சுமத்தப்படுகிறது. 12 பேர் கொண்ட குழு அதைப்பற்றிய தங்கள் முடிவை நீதிபதிக்கு கொடுக்க வேண்டும்.. அந்த 12 பேரில் 11 பேர் பையன் தான் குற்றவாளி என்று பேச்சை ஆரம்பிக்கிறார்கள். ஒருவர் மட்டும் இல்லை அவன் நிரபராதி என்கிறார். அந்த ஒருவர் தன் பேச்சுத்திறமையால் எப்படி மீதி 11 பேரையும் தன் முடிவை ஒத்துக்கொள்ள வைக்கிறார் என்பதே "2 Angry men" என்னும் இந்தப்படத்தின் கதை. இந்த கதையில் என்ன அழகு என்றால், சாட்சி, ஃப்ளாஷ்பேக் என்று எதுவுமே கிடையாது. நிஜத்தில் அந்த பையன் தான் கொலை செய்தானா இல்லையா என்பது கூட யாருக்கும் தெரியாது. ஆனால் தங்களின் பேச்சின் மூலம் அவர்களாக ஒத்த முடிவுக்கு வருவார்கள்.. படத்தில் மொத்தமே மூன்றே மூன்று காட்சிகள் தான்.. முதல் கோர்ட் சீன். ரெண்டாவது ரூம் சீன், இடையில் ஒருவர் தம் அடிக்க போகும் சீன். படத்தின் 90% ஒரே அறையில் நடக்கும். ஒரு ஆக்ஷன் படம் பார்ப்பது போல் இதை அவ்வளவு சுவாரசியமாக பார்க்கலாம்.. ஆரம்பம் முதல் கடைசி வரை போர் அடிக்காது. நண்பர் தன் பாணியில் இந்த படத்திற்கு கொடுத்திருக்கும் விமர்சனம்..
இந்த மூன்று படங்களில் முதல் படத்தை தவிர மற்ற இரண்டையும் நான் பார்த்திருக்கிறேன்.. மிக மிக அருமையான படங்கள்.. ரூபக் ராம் அவர்கள் தேடிப்பிடித்து நல்ல படங்களாக பார்த்து நமக்கும் அதைப்பார்க்க ஆர்வத்தை தூண்டும் விதமாக எழுதுவது மிகவும் அருமையாக இருக்கிறது.. வேற்று மொழிப்படங்கள் மட்டும் அல்லாது தன்னை பாதித்த தமிழ்ப்படங்களையும் உலக சினிமா லிஸ்டில் சேர்ப்பதாக சொல்லியிருந்தார் என்னிடம் ஒரு முறை.. பார்க்கலாம்....
சரி, இனி உங்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கலாம் என்றிருக்கிறேன்,.. நேற்று நான் சொன்ன டான் அசோக் மூலம் எனக்கு பழக்கமானவர் தான் நண்பர் முத்து சிவா.. தீவிரமான ரஜினி ரசிகர்.. அதே அளவில் மிகத்தீவிரமான கவுண்டமணி ரசிகர்.. காமெடி சினிமா ரசிகர்.. இவர் பதிவுகள் பெரும்பாலும் சினிமா சார்ந்தும், நகைச்சுவை சார்ந்துமே இருக்கும்.. அதிகமாக கவுண்டமணியின் வசனங்களை தன் பதிவுகளில் சேர்ப்பார்.. அதுவே இவரின் எழுத்துக்களுக்கு இன்னும் நிறைய ரசனையை ஏற்றும்..
சனி, ஞாயிறுகள் ஆகிவிட்டாலே மாலை நேரங்களில் குடும்பத்துடன் டிவி பார்க்க முடிவதில்லை.. ஒவ்வொரு சேனலிலும் ஒருத்தன் பொண்டாட்டி இன்னொருத்தியின் புருசனோடு ஆடிக்கொண்டிருக்கிறாள்.. ஆடி முடித்ததும் அவளின் புருசன், “என் பொண்டாட்டிக்கு மிஸ்டர்.X கூட கெமிஸ்ட்ரி சூப்பரா வொர்க் அவுட் ஆச்சி”னு சொல்லுவான்.. ஜட்ஜஸ் கை தட்டி ரசிப்பார்கள்.. மார்க் போடுவார்கள்.. இந்த மாதிரி அரை குறை ஆடைகளுடன் கோர்த்து விடும் நிகழ்ச்சிகள் தான் பெரும்பாலும் சனி ஞாயிறுகளில் நம் இல்லங்களை அல்லோலகல்லோலப்படுத்திக்கொண்டிருக்கும் (ஆத்தாடி எம்மாம் பெரிய வார்த்த!!!).. இந்த மாதிரி நிகழ்ச்சிகளை முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் நண்பர் துவைத்து காயப்போட்ட பதிவு..
இப்பலாம் ப்ளாக்கில் மாய்ந்து மாய்ந்து எழுதுவது குறைந்து கொண்டே வருகிறது.. எல்லோரும் ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் ரெண்டு வரியில் ஸ்டேட்டஸ் போடுகிறார்கள்.. லைக்கும் கமெண்ட்டும் வாங்குகிறார்கள்.. ஒரு பிரபலமாக மாறிவிடுகிறார்கள்.. நாலே வரியில் நான் சொல்வதற்கு எளிதாக இருக்கும் இந்த விசயத்தை நிஜத்தில் சாதிப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? ஃபேஸ்புக்கில் ஒருத்தன் பிரபலமாக என்னென்ன தகிடுதத்தோம் எல்லாம் பண்ண வேண்டும் என சீரியஸாக உண்மையை சொல்லியிருக்கும் அடுத்த நகைச்சுவை அணுகுண்டு...
சரி ஃபேஸ்புக்கில் பிரபலமாக மேற்சொன்ன எல்லாவற்றையும் செய்ய நான் ரெடி.. ஆனா ஆஃபிஸ்ல ஓப்பி அடிச்சாத்தான் இந்த கருமத்தை எல்லாம் பண்ணி ஃபேஸ்புக்குல நாம ஃபேமஸ் ஆக முடியும். ஆஃபிஸ்ல ஒழுங்கா வேலை பாத்தா ஃபேஸ்புக்குல நமக்கு என்ன வேலை? சரி, இப்ப ஆஃபிஸ்ல ஓப்பி அடிக்கணும்.. அதுக்கு என்னவெல்லாம் செய்யலாம்?இருக்கே, அதுக்கும் நம்ம ஆள் கிட்ட ஐடியா நிறைய இருக்கே.. ’வேணாம்டா இந்த மானங்கெட்ட பொழப்பு’னு சொல்றவங்க இப்பயே கிளம்பி போயிரலாம்.. தியாகம் தான் நம்மை உயர்த்தும்னு புரிஞ்சவங்க மேலே சொன்ன ரெண்டு விசயங்களையும் பின்பற்றுங்க, பேஸ்புக்குல பெரிய இடத்துக்கு வரலாம்.. வேலையிலயும், ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பின்னலாம் போங்க...
இன்று கூட நான் ஃபேஸ்புக்கில் ஒரு நகைக்கடை, விளம்பரம் என்கிற பெயரில் லோக்கல் கேபிள் சேனலில் செய்யும் டார்ச்சரை பற்றி கூறியிருந்தேன்.. நம்ம நண்பருக்கும் அந்த மாதிரி நேர்ந்த ஒரு அனுபவத்தை பாருங்கள்.. ஒரு நடிகர், நல்லா காது குத்தி, UKG படிக்குற மாதிரி இருக்குற பிள்ளைக்கு பேரு வைக்குற மாதிரி ஒரு விளம்பரம்.. அத பத்தி நம்ம ஆளு ஒரு லாஜிக் கேள்வி கேப்பாரு பாருங்க, இப்ப படிக்கும் போது கூட விழுந்து விழுந்து சிரிக்கிறேன்..
நகைச்சுவை உணர்வு என்பது ஒரு வரம்.. அது நமது நண்பர் முத்து சிவாவிற்கு மிக சூப்பராக வருகிறது.. அவர் ப்ளாக்கில் 100க்கு 90% நகைச்சுவை பதிவுகள் தான் இருக்கும்.. படிக்கும் போது கேர்ஃபுல்லாக இருங்கள்.. நீங்கள் விழுந்து விழுந்து சிரிப்பதை பார்த்து, ‘பாவம் பிள்ளைக்கு என்னமோ ஆயிருச்சி’னு பயந்து பக்கத்து மசூதிக்கு கூட்டிட்டு போயிற போறாங்க...
இன்று அறிமுகப்படுத்தியவர்களில் சீனு குருவை பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என நம்புகிறேன்.. ரூபக் ராம் இப்போது தாம் 6மாதங்களாக எழுதுகிறார்.. மிக வேகமாக வளர்ந்து வருகிறார்.. நிச்சயம் பெரிய ப்ளாக்கராக வருவார்.. நண்பர் முத்துசிவாவை சினிமா சம்பந்தமான, நகைச்சுவை விசயங்கள் படிப்பவர்கள் அனைவருக்கும் தெரியும் என நம்புகிறேன்.. கடந்த 5நாட்களில் இன்று உங்களை அதிகமாக சிரிக்க வைத்து சந்தோசப்படுத்தியிருப்பேன் என நம்புகிறேன்..
நாளையோடு என் பயணம் முடிகிறது.. அதற்குள் மிச்சம் இருக்கும் அனைவரையும் அறிமுகப்படுத்த முயல்கிறேன்.. :-)
மிகவும் அருமையான வாசிக்க வாசிக்க சளிப்புத் தராத பதிவு. உங்கள் தயவால் இம் மூவரையும் கண்டு கொண்டோம். தங்கள் எழுத்து நடை எளிமையாகவும், சுவையாகவும் உள்ளது. நானும் இனி தொடர்ந்து எழுதணும் என்ற பேரவாவை தூண்டி விட்டுள்ளீர்கள். :)
ReplyDeleteசீனு சிறந்த பதிவர்... அவர் அனுபவத்தைக் கூட கதை வர்ணனையோடு சொல்வார்...
ReplyDeleteரூபக் ராம்....
இவரது கதைகளில் வார்த்தைகள் விளையாடும்.
இன்னும் இவரோடு அறிமுகம் கிடைக்கவில்லை...
சீனு பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்... தினமும் ஒரு முறையேனும் நான் அவருடன் போனில் பேசிவிடுகிறேன்.... ரூபக்கின் எழுத்து நடையில்து நல்ல முதிர்ச்சி தெரிகிறது.... தேர்ந்த எழுத்தாளாராக வருவார்....முத்து சிவ்வின் தளத்தை அதிகம் படித்ததில்லை..... பார்க்கிறேன்... நன்றி...
ReplyDeleteசீனுவின் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். ஒரு முறை சந்தித்தும் இருக்கிறேன்.
ReplyDeleteரூபக் ராம் - பதிவுகளில் இவருடைய பின்னூட்டங்களைப் பார்த்ததுண்டு. இதுவரை படித்ததில்லை. படிக்கிறேன்....
வாழ்த்துகள்.
மூவரும் சிறப்பாக எழுதுபவர்கள்... மூவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeletegood introductions especially muthu siva
ReplyDeleteமிக்க நன்றி நண்பா... உங்கள் உற்சாகமான நினைவுகளின் பகிர்தலுக்கு...
ReplyDeleteவலையுலகம் கடந்த ஒருவருடத்தில் என் வாழ்வில் பல முக்கியாமான நண்பர்களைப் பெற்றுத் தந்துவிட்டது, அவர்களுள் நீங்களும் ஒருவர். முதலில் நான் உங்கள் ரசிகன் என்பதை விட உங்கள் சிறுகதைகளின் ரசிகன். ஆழ்ந்த கருத்துகளையும் அசால்ட்டாக அதே நேரத்தில் அந்த உணர்வுகளை படிப்பவர் மனதில் உணரும் விதமாக நீங்கள் எழுதக் கூடிய அந்த எழுத்துக்களுக்கு ரசிகன். என்னிடம் சிறுகதை என்று தற்காலத்தில் யாராவது பேச வந்தால் அல்லது பேசினால் உடனடியாக நியாபகம் வருவது உங்களது கலர்க் காதலும் முத்து செல்வியும் டைம் மெசினும் தான்.
வெகுநாளாய் எனக்கொரு சந்தேகம் உண்டு திருப்பூர் சந்திப்பிற்கு நீங்கள் எப்படி வந்தீர்கள் என்பது குறித்து, நம் அறிமுகத்திற்கு காரணமான ரத்னவேல் அய்யாவிற்கு எனது நன்றிகள். உங்களை என்னிடம் அறிமுகம் செய்து வைத்தது கடற்கரை தலத்தில் எழுதி வரும் விஜயன். அவனுக்கும் எனது நன்றிகள்.
என்னைப் பற்றி சில விஷயங்கள் கூறியுள்ளது எனக்கே மலைப்பாய் உள்ளது. நன்றி.
// ப்ளாக் பெயரை கேட்டால் ஏதோ புரட்சிக்காரர் மாதிரி இருந்தது.. ஆனால் ஆள், நாம் சைட் அடிக்கும் பெண்ணின் தம்பி போல் பார்த்தவுடன் பிடித்தவரானார்....// என்னடா நம்ம பயல இன்னும் கால வாரலையேன்னு நினைச்சேன் :-)
//லார்டு லபக்கு தாஸ் மாதிரி நைட்டு ரெண்டு மணிக்கு கூட இவரிடம் ப்ளாக் சம்பந்தமாக டவுட் கேட்கலாம்.. // ஹி ஹி ஹி இத மட்டும் பிளாக்கர் நண்பன் படிச்சாருன்னா நாளு நாளைக்கு ரூம் போட்டு சிரிப்பாரு :-)
//ராணுவ ரகசியங்களை வெளியிட்ட இந்த பதிவிற்காக இன்னும் ஏன் இவரை மிலிட்டரி கோர்ட் தண்டிக்கவில்லை என எனக்கு மிகப்பெரிய டவுட்..// பாகிஸ்தான் ராணுவம் என்னை தீவிரமாக தேடி வருவதாக சங்கத்து தீவிரவாதி நேற்று சொன்னார் :-)
ரூபக் ராம் பற்றி மிக சிறப்பான அறிமுகம். எழுதி வரும் அத்தனை உலக சினிமாக்களையும் உடனடியாக பார்க்க வேண்டும் போல் உள்ளது.
ReplyDeleteசிறுகதைகள், சினிமா என்ற பதிவுகளையும் தாண்டி இன்னும் பல பதிவுகள் எழுதி மிக பதிவுலகில் உற்சாகமாக நடை போட வாழ்த்துக்கள்
சீனு, ரூபக் ராம் பதிவுகள் வாசித்து இருக்கிறேன்! மூன்றாமவர் முத்துசிவா வின் பதிவுகள் படித்தது இல்லை! அறிமுகத்திற்கு நன்றி!
ReplyDeleteஅன்பின் ராம்குமார் - // நாளையோடு என் பயணம் முடிகிறது.. அதற்குள் மிச்சம் இருக்கும் அனைவரையும் அறிமுகப்படுத்த முயல்கிறேன்.. :-)//
ReplyDeleteஎன்ன இது - இன்றோடு தங்களின் வேலை முடியவேண்டும் - இன்று மாலை 6 மணீக்குள் பயணததை முடித்து விடுங்கள் -
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அன்பின் சீனா சார் நான் இதை நேற்று இரவு சொன்னேன்.. இன்று முடித்து விடுவேன்..
ReplyDeleteஅலுவலகம் மூலம் அறிமுகமாகி என் வாழ்கையில் ஒரு புதிய பாதையை காட்டியவர் சீனு. என்னை பதிவுலகில் கை பிடித்து இழுத்து கொண்டு செல்பவர் அவரே, எனக்கு கிடைக்கும் எல்லா பாராட்டுக்கள் அவரை சேர்வதே சிறப்பு (கொட்டுக்கள் என்னையே சேரும்). சீனு மூலம் சிவகாசிக்காரனாக அறிமுகம் ஆனவர் நண்பர் ராம் குமார், பேச்சு வழக்கில் கடை எழுதும் முன் இவர் பதிவுகளை படிப்பது வழக்கம்.
ReplyDelete// ராம் என்கிற பெயர் இருப்பதால் எனக்கு இவரை டக்கென்று பிடித்துவிட்டதா என தெரியவில்லை.// ஹா ஹா...
சிறப்பான அறிமுகத்திற்கு என் கோடான கோடி நன்றிகள் ராம் குமார்.
ஸ்கூல் பையன், தமிழ்வாசி பிரகாஷ், சீனு மற்றும் D.D உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.