Tuesday, July 30, 2013

தூரிகை கண்ட முத்துக்கள் - நாள் 1



அன்புத்தோழமைகளுக்கு மனம்கனிந்த வணக்கம். _/\_வலைச்சரத்தில் இரண்டாவது நாளான இன்று  நான் கண்டு ரசித்த வலைப்பூத் தோட்டத்தில் பூத்திருக்கும் சில மலர்களை இங்கே அறிமுகப்படுத்துகிறேன்.  


காயத்ரியும், விசுவும்.(ஒரு நகைச்சுவைக்காக மட்டுமே.. யார் மனதையும் காயப்படுத்த அல்ல)

காயத்ரி : வாங்க விசு சார். வணக்கம்..நல்லா இருக்கீங்களா..?

விசு : வணக்கமா.. நான் நல்லா இருந்தா என்ன பண்ணப்போற  நல்லா இல்லேன்னா என்ன பண்ணப்போற.. நல்லா இருக்கேன்னு சொல்லிட்டு நல்லா இல்லேன்னா நல்லா இல்லாதத கண்டுபிடிச்சு  நல்லா ஆக்கிடுவியா..இல்ல  நல்லா இருந்துகிட்டே  நல்லா இல்லேன்னு சொன்னா.. நல்லா இல்லேன்றதில் இருக்கும்  நல்லா இருப்பதை கண்டுபிடிச்சு  நல்லா இருப்பதை நிலைநிறுத்திடுவியா..??

காயத்ரி: ம்ம்...என்ன சார் செய்யறது...நல்லா இருக்கிற நான் நல்லா இல்லாம ஆயிடுவேனோன்னு இருக்கு இப்ப.

விசு : விடும்மா..இதுக்கே இப்படியா..ஆமா என்ன எதுக்கு இப்ப கூப்பிட்ட..?

காயத்ரி: எங்கள எல்லாம் நல்லால்லாம ஆக்கத்தான்..அய்யோ மன்னிச்சுக்கோங்க சார்..ஏதோ மனசில உள்ளது அப்படியே வாய் தவறி வந்திடுச்சு..!!

நம்ம வலைச்சரத்துல வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தனும். இன்னிக்கு வலைச்சரத்தில் நான் அறிமுகப்படுத்தப்போகும் முதல் நாள் என்பதால் உங்க மூலம் முதல் பதிவரை அறிமுகப்படுத்தலாமேன்னு கூப்பிட்டேன்..

விசு: அப்படியாம்மா..ரொம்ப சந்தோசம்..பண்ணுக்கும், வாழப்பழத்துக்கும், பயித்தியக்கார ஆசுபத்திரிக்கும்னு கூப்பிடாம இதுபோன்ற ஒரு நல்ல விசயத்திற்கு அழைச்சதுல சந்தோசம்மா.. யாரு அந்தப்பதிவர் சொல்லு அறிமுகப்படுத்திடலாம்.

காயத்ரி : ரொம்ப நன்றி சார். இவரைத்தான் அறிமுகப்படுத்தனும் நீங்க..

விசு : இரும்மா அவரைப்பற்றி என்ன எழுதியிருக்க, அவர் என்ன எழுதியிருக்காரு ஒரு முறை படிச்சிட்டு வரேன்.. கவிஞர்.தமிழ்க்காதலன்  காலதேவனின் கைக்குழந்தையாய்  பூமித்தாயின் மடியில் தமிழ்த்தேடி, தவமிருக்கும் இவரின் இதயச்சாரல்...   நம்மையெல்லாம் கவிதை மழையில் குளிர்விக்கும்  குற்றால அருவி...!! இவரது எந்தப்பதிவை எடுத்துரைப்பது எதை விடுவது தெரியவில்லை. இதயச்சாரலில் கவிதை மழை மட்டுமா வீசும்...?!

சிலை உடைப்பு...சமூகம் பற்றிய சிந்தனையைத் தூண்டும் பதிவு,
இந்திய தளபதி” (சுபாஷ் சந்திர போஸ்)
//
இன்றும் எங்கள் இரத்தத்தில் இளஞ்சூட்டை
தணியாமல் தகிக்க வைக்கும் புரட்சியே..! 
வார்த்தைகளில் இல்லாமல் செயல்களில் வாழ்க்கை 
செதுக்கிய செம்மலே...! பாரதத்தின் தவப்புதல்வ...!!
புகழுக்கு மயங்காத புரட்சியின் புத்துயிரே..!
புழுக்களின் கூடாரத்தில் குலவியாய் கொட்டியவனே..! 
வழுக்களின் சூழ்ச்சியை வஞ்சகத்தை திட்டியவனே..!// 

இவரது ஒவ்வொரு வார்த்தையும் நேதாஜி அவர்களை நம்மில் உயிர்ப்பித்து இருக்கச்செய்கிறது.  
இறையாண்மை என்றால் என்ன..??  அனைவரும் கேள்விப்பட்ட வார்த்தைதான். இருப்பினும் எத்துனை பேருக்கு விளக்கம் தெரியும் என்பது தெரியவில்லை. இறையாண்மை பற்றியும் இன்னும் பல கேள்விகளையும் கேட்டு, பதிலையும் இதயச்சாரலில் அளித்துள்ளார் தமிழுக்காய் தவமிருக்கும் கவிஞர்.தமிழ்க்காதலன். 

அவனும்அவளும்.. அவனின் அவளைப்பற்றி  அப்படி என்னதான் அவளின் அவன் கூறியிருக்கிறான்..??!!! 

காயத்ரி : என்ன சார் படிச்சிட்டீங்களா..? அப்படியே நாலு நல்ல வார்த்தை சொல்லி ஒவ்வொருவரையா அறிமுகப்படுத்துங்க சார்.

விசு : ஏம்மா, உனக்கு அப்படி என்னதான்மா என்மேல கோவம்..?

காயத்ரி : ஏன் சார் அப்படி கேட்கறீங்க..உங்கமேல மதிப்பும், உங்க எழுத்தில் ஈடுபாடும் கொண்ட என்னப்போய் இப்படி கேட்கறீங்க..

விசு : ஏம்மா ஒரு சந்தேகம், என்ன எதுக்கு இதுக்கு தேர்ந்தெடுத்தன்னு தெரிஞ்சுக்கலாமா..?

காயத்ரி : அவனும், அவளும்.. பதிவைக்கண்டதும் அறிமுகப்படுத்த நீங்கதான் சரியான நபர்னு நினைச்சேன் சார் அதான்..??!!!

விசு :படிச்சேன்மா. கவிஞரைப்பாராட்டனும்னு மனசெல்லாம் பரபரக்குது. ஆனா..
//அவள் அவளாக அவளின் அவளை
அவளுக்கு காட்டிச் சிரிக்கும் அவளை
அவள் அறியாது அவளற்ற அவளாக
அவள் இருக்க அவளுக்குள் அவளாய்..//
இதைப்படிச்சதும், அவனின் அவளை நினைச்சு பொறாமையடையறதா..? இல்ல அவளுக்குள் இத்தனை அவளான்னு பெருமூச்சு விடறதா...?? அவனையும், அவளுள் அவனாக இருக்கும் அவளையும் படிச்ச பிறகும் எப்படிம்மா அறிமுகப்படுத்த மனசு வரும்.. இதப்படிச்சா அவங்கவங்களோட அவனின் அவளின் நினைவுதான்மா வரும்.  எனக்கே தல சுத்தறமாதிரி இருக்கு.  எனக்கு கொஞ்சம் ஓய்வு தேவைம்மா..
அவனோட அவள் அவனின் அவளாகவே அவனுக்காகவே இருக்கட்டும்னு வாழ்த்திட்டு நான் கிளம்பறேம்மா.

கவிஞர்.தமிழ்க்காதலனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அனைவரையும் சிந்திக்கத்தூண்டும் தங்கள் எழுத்துப்பணி என்றும் தொடரட்டும்.. :)

காயத்ரி: சார் இன்றைய மற்ற பதிவர்களையும் அறிமுகப்படுத்திடுங்களேன்.

விசு : வேண்டாம்மா, இன்னிக்கு இந்த ஒரு அறிமுகமே எனக்கு ஒரு மாசம் அலுவலகத்தில போய் ஓய்வெடுக்கனும்போல இருக்கு. அவளின் அவனை கொஞ்சம் அசைபோட்டுப்பார்க்கறேன் ஓய்வா இருக்கும்போது,  நீயே மற்றவங்களையும் அறிமுகப்படுத்திடும்மா.. ரொம்ப நல்லா இருப்பே.

காயத்ரி : சற்றே ஏமாற்றத்துடன், சரி சார்..நீங்களே அறிமுகப் படுத்துவீங்கன்னு நினைச்சேன். உங்க உடல்நிலையைக் கருத்தில்கொண்டு (மனநிலையையும்தான்) நானே அறிமுகப்படுத்தறேன். வருகைக்கு ரொம்ப நன்றி சார். _/\_
 
விசு சாரோட வேண்டுகோளை ஏற்று மற்ற பதிவர்களையும் நானே அறிமுகப்படுத்திடறேங்க இன்னிக்கு.

*****

.வு. துரை அவர்களின் கனவுகள் மெய்ப்பட வேண்டும் வலைப்பூவில் கதைகவிதைஹைக்கூ என கலக்கிவரும் இவரின் கனவுகளில் வறுமையையும்தாய்மையையும் மனம் உருக வைக்கும் வரிகள்.
//நெலம தெரியாம எரிஞ்ச
நாதாரி வயித்த அணைக்க
              
குண்டு சொம்புத் தண்ணிய
மொண்டு ஊத்துப் போகையில//

வாங்களேன் தொடர்ந்து படிப்போம் நனையுதே மாராப்பு...


.வு. துரை அவர்களின் மற்றோரு வலைப்பூவான  மரபுக்கனவுகள் என்ற வலைப்பதிவில் இருவரியில் சொல்வேன்...இருப்பதச் சொல்வேன் - தூதுக்குறள் / அறம் என குறள் எழுதியிருக்கிறார்..

அம்மா
தூய்மைக்கு மேலேதும் இல்லையிங்குஆனாலும்
தாய்மைக்குப் பின்தான் அது [338]
ந.வு. துரை அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

*****

சாய்ரோஸ் அவர்களின் கதம்ப மாலை  பெயருக்கேற்ப மணம்வீசும் மல்லிகையாய்க்கவிதைகள், அழகூட்டும் ரோஜாவாய் சமூகப்பகிர்வுகள். மனம்கவரும் செம்பருத்தியாய் காமசூத்திரம் , முல்லைப்பூவின் மணமாய் சமையல் குறிப்புகள் சிலிர்பூட்டும் மரிக்கொழுந்தாய் நையாண்டி.. அமானுஷ்யமா (ஆமாங்க அவரோட வலைப்பூவின் புகைப்படமே அப்படித்தான் இருக்க.) :) அரசியல்னு கதம்பமாய் தன் பூங்காவனத்தை அலங்கரித்து வந்து செல்பவர்களை மணம் வீசும் மலர்களினால் மனம் கவர்கிறார்.  அனைத்துப் பூக்களின் மணம் சுவாசிக்கும் நேரமின்மையால் ஒரு சிலபூக்களைக் கூறுகிறேன்.   

பேரணி என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும்
பேரணிமாநாடுமண்ணாங்கட்டியெல்லாம் எதுக்கு?.  இதற்கு அவர் விளக்கியிருக்கும் காரணங்களைக் காண்போமா..வாங்களேன்..அவரின் பூந்தோட்டம் சென்றுவருவோம்..!

நையாண்டிகள் எத்தனை முறைப்படித்தாலும் நம்மை மறந்து சிரிக்கவைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை...  நையாண்டி..எப்படித்தான் யோசிப்பாங்களோ..?

சாய்ரோஸ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

*****
பாலை மண்ணில் விழுந்த கிராமத்து  விதையான 'பரிவை' சே.குமார்  தன் எண்ணங்களை வார்த்தைகளினால் வசந்த ஊஞ்சல் கட்டி மனசு  தளத்தில் அனுபவம், வாழ்க்கை, விமர்சனம், கிராமத்து நினைவுகள், சிறுகதைகள் மற்றும் கவிதைகள்  என அனைத்தையும் ஓரிடத்தில் சங்கமிக்க வைத்துள்ளார்.  இவரது சிறுகதைகள் கிராமத்து மண்ணின் மணம் மாறாமல் பரிவையில் பிறந்திருக்கும் மற்றொரு பாரதிராஜாவோ என நமையெல்லாம் சிந்திக்கத் தூண்டுமளவு யதார்த்த நடையில் அசத்தியிருக்கிறார். இவரின் சிறுகதையில் கோட்டாமி தனித்திருக்கும் பெண்ணைப்பற்றி ஊரார் என்னவெல்லாம் பேசுவார் என்பதை கோட்டாமியில் இயல்பாக கூறியிருக்கிறார். அதில் ஒரு வரி...
 //அவர்களுக்குப் எப்படித் தெரியும் நான் இழந்த என் மகள் மீண்டும் கிடைத்தது போல் உணர்கிறேன் இந்த அபலையின் அன்பில் என்பது...'// 
கவிதையிலும் சளைத்தவர் இல்லை - 'பரிவை' சே.குமார். இவரது
கிராமம் பேசுகிறேன்...  என்கிற கவிதை இன்றைய நிலையை எடுத்துக்கூறி கண்ணீரை வரவழைக்கும் பதிவு. 
//பல வீடு பூட்டியிருக்க
சில வீடு திறந்திருக்க
இப்பவும் இங்க
கொஞ்சம் உயிர்ப்பிருக்கு...// 

தம்பி குமார் அவர்களின் மனசில் தொடர்ந்து மண்ணின் மணம் வீசிக்கொண்டிருக்க வாழ்த்துகள்.

வலைச்சரம் மூலமாக அறிமுகமான நட்புக்களின் எழுத்துக்களைப் படித்து நிறை குறைகளை எடுத்துச் சொல்லி தட்டிக் கொடுத்து இன்னும் அருமையான படைப்புக்களை படைக்கச் செய்வோம் தோழமைகளே.

அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி... _/\_
வாழ்க வளமுடன்... :)

20 comments:

  1. வலைச்சரம் மூலமாக அறிமுகமான தூரிகை கண்ட முத்துக்கள். வாழ்த்துகள்..!

    ReplyDelete
  2. அக்கா வணக்கம்...

    இரண்டாம் நாள் அறிமுகத்தில் என் நண்பன் தமிழ்க்காதலன், கதம்பமாலை சாய்ரோஸ் மற்றும் வேலு என அருமையான பதிவர்களை இனம் கண்டு பகிர்ந்திருக்கிறீர்கள்... அதற்கு வாழ்த்துக்கள்...

    என் நண்பனுடன் எனக்கும் அறிமுகம். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. வலைச்சரத்தில் தொடர்ந்து அறிமுகமாகும் போது இன்னும் நல்லா எழுதணும் என்ற எண்ணம் கூடிக்கொண்டேதான் போகிறது. அதற்கு வலைச்சரத்துக்கும் அறிமுகம் செய்யும் ஆசிரியர்களுக்கும் நன்றி.

    கொஞ்ச நாட்களாக எழுத்தைத் தொடராமல் இருக்கும் தமிழ்க்காதலன் இனி தொடர்ந்து எழுதுவார் என நம்புகிறேன்...

    ஆமா அதென்ன பாரதிராஜா ரேஞ்சுக்கு கொண்டு பொயிட்டீங்க... பரியன்வயல் என்கிற எங்கள் ஊரைப் பெயரைத்தான் 'பரிவை' என பெயருக்கு முன்னால் சுருக்கிப் போட்டிருக்கிறேன்... சும்மா ஒரு பந்தாவுக்குத்தான். ஹா... ஹா... பரியன் வயல் குமாராகவே இருப்பதே நலம்...

    அழகாக தொகுத்திருக்கும் அக்காவுக்கு நன்றி....

    தொடருங்கள் தொடர்கிறோம்...

    மீண்டும் ஒரு முறை என்னை அறிமுகம் செய்தமைக்கு நன்றி... நன்றி... நன்றி...

    ReplyDelete
  3. தமிழ் மணத்திலும் வாக்கு அளித்தாச்சு...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. @இராஜராஜேஸ்வரி..வாங்க தோழி..வருகைக்கும், அறிமுகங்களை வாழ்த்தியமைக்கும் நன்றி..:)

    ReplyDelete
  5. @சே.குமார்...உன்னுடைய எழுத்துக்கள் தொடர்ந்து மணம் வீச வாழ்த்துக்கள் தம்பி..:)

    ReplyDelete
  6. அனைவருக்கும் வாழ்த்துக்கள்... மரபுக் கனவுகள் தளம் புதிய அறிமுகம்... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    இருவரியில் சொல்வேன்...இருப்பதச் சொல்வேன் - தூதுக்குறள் / அறம் - ரசித்தேன்...

    உரையாடல் பாணி அருமை... மேலும் அசத்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. @திண்டுக்கல் தனபாலன்..மிக்க நன்றி சகோ..

    ReplyDelete
  8. தோழி காயத்ரிக்கு வாழ்த்துக்களும் மனமார்ந்த நன்றிகளும்... ஆரம்பமே அசத்தலாக உங்கள் ஸ்பெஷல் விசுவுடன் பேசுவதுபோல எழுதியிருப்பது மிகச்சிறப்பு...
    இந்த வாரம் முழுக்க மிகச்சிறப்பாய் உங்கள் முத்திரையை பதிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
    கலக்குங்க...

    ReplyDelete
  9. @சாய்ரோஸ்...வாங்க தோழர்.தங்கள் வாழ்த்திற்கு நன்றி..:)

    ReplyDelete
  10. வணக்கம்
    இன்று வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  11. அன்பின் கவிக் காயத்ரி - அருமையான பதிவு - அறிமுகங்கள் அனைத்துமே அருமை - சென்று பார்4க்கிறேன் - மறுமொழிகள் அங்கேயே இடுகிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  12. @Rupan, வருகைக்கும், தோழமைகளை வாழ்த்தியமைக்கும் நன்றி தோழர்.

    ReplyDelete
  13. @அன்பின் சீனா, மிக்க மகிழ்ச்சியும், நன்றியும் ஐயா.._/\_

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. @கவிஞர்.தமிழ்க்காதலன்(இதயசாரல்)...தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி தோழரே. தங்கள் வாழ்த்து எமது எழுத்துக்களை வளப்படுத்தட்டும். _/\_

    ReplyDelete
  16. எம் மதிப்பிற்குரிய ஐயா சீனா அவர்களுக்கும், இந்த வார ஆசிரியராக பொறுப்பேற்று இருக்கும் தோழி காயத்ரி அவர்களுக்கும், அன்பில் எம் பணிவான வணக்கம்.

    தோழி மிக அருமையாக விசு அவர்களை அழைத்து வந்து பதிவுலக எழுத்தாளர்களை மிக வித்தியாசமாய் அழகாய் அறிமுகம் செய்த விதம் பாராட்டுக்குரியது.

    என் அன்புத் தோழனும், சகோதரனுமான “பரிவை சே. குமார்” அவர்களுடன் எம்மையும் இணைத்து ஒரு அறிமுகம் மனதை நெகிழ வைக்கிறது. உண்மையில் நான் எழுதி வருடங்கள் ஆனாலும், இன்றும் அவை வலைச்சரத்தில் வலம் வரும் அழகை காணும் போதும், என் அன்புத் தோழனின் உணர்வுப்பூர்வமான ஆசையும், மீண்டும் எழுத என்னைத் தூண்டுகின்றன. தொடர்ந்து எழுதுவேன் என் அன்புத் தோழனே..!

    நல்ல எழுத்துக்கள் எவரிடமிருந்து வந்தாலும் அவை மிகச் சரியாக அடையாளம் காணப்படவும், அங்கீகரிக்கப் படவும் வலைச்சரம் மற்றும் இதுபோன்ற வலையகங்கள் மிகச்சிறப்பான பங்கினை அளிக்கின்றன.

    எமது பணிவான வணக்கத்துடன், வாழ்த்தையும் ஐயா சீனா, தோழி காயத்ரி, மற்றும் வலைச்சர பதிவர்களுக்கும் தெரிவித்துக்கொண்டு இனிதே விடைப்பெறுகிறேன்.

    ”தமிழ் வாழ்க”, ”தமிழன் வளர்க”,
    தமிழின்றி சிறக்காது தமிழினம் ”மறவாதே தமிழா”.

    நன்றி.

    ReplyDelete
  17. தூரிகையின் இவ்வார பொறுப்பாசிரியை கவி. காயத்ரி அவர்களே

    தாங்களும் ஐயா விசு அவர்களும் நடத்திய அரட்டை அருமை.
    மட்டுமல்ல தாங்கள் இன்று தொடுத்து வழங்கியிருக்கும் மாலையில் இடம்பெற்றுள்ள பல மலர்களின் முன்னுரையை பார்த்தேன் மிக அற்புதமான மலர்களை தேர்வு செய்து இன்றய மாலையை தொடுத்திருக்கிறீர்கள் நுகர்ந்து மகிழ்ந்தேன். நேரம் கிடைக்கும்பொழுது ஒவ்வொரு மலர்களையும் முழுமையாக நுகர்ந்து பார்க்கிறேன்.

    மொத்தத்தில் தாங்கள் இன்று தொடுத்திருக்கும் மலர்களின்மாலை அருமை.
    நிச்சயமாக இந்த மாலையில் இடம்பெற்ற மலர்களும் இடம்பெறாத மலர்களும்
    படித்து மகிழ்ந்த மலர்களின் மனமும் காயமடைவதாக இல்லை,
    அனைத்து மனதினையும் கவர்ந்து ஈர்க்கும் விதமாகவே தொடுத்திருக்கிறீர்கள்
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. @anandsweetkani, வாங்க தோழர்..மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்..:)

    ReplyDelete
  19. இன்றைய அறிமுகப் பதிவர்களின் அறிமுக நடை மிகச்சிறப்பு!
    அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  20. @இளமதி..மிக்க நன்றி தோழி..:)

    ReplyDelete