வணக்கம் !
பல்சுவை விருந்தளிக்கும் முத்துக்களின் அணிவக்குப்பில் இன்று நான் ஆண் பதிவர்களை அறிமுகம் செய்யவுள்ளேன் .இவர்களது படைப்புக்கள் யாவும் வாசிப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் .அந்தவகையில் நான் இன்று முதலில் அறிமுகப் படுத்தபோவது எங்கள் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய சென்னைப் பித்தன் ஐயா அவைகளை !
சென்னைப் பித்தன்
நான் பேச நினைப்பதெல்லாம் என்ற வலைத் தளத்தினூடாக அவரது எண்ணக் கருத்துக்களைக் கதை கதையாகச் சொல்லி மகிழ வைக்கின்றார் .மிகவும் நகைச்சுவையாகக் கதைகளைச் சொல்லிப் புரிய வைப்பதில் தனக்கெனத் தனிநிகாரானவரும் கூட .இவரது பின்னூட்டங்கள் கூட மிகுந்த ரசனை மிக்கதாக இருக்கும் .வாசகர்களின் மனதைப் புரிந்து கொண்டு காலத்திற்கு ஏற்ப அரிய நற் கருத்துக்களைத் தரும் இவரது வயது வலைத் தளத்தைப் பொறுத்தவரை என்றும் பதினாறு எனக் கொள்ளலாம் இவரது படைப்புக்களில் இருந்து இன்றைய பகிர்வு http://chennaipithan.blogspot.com/2012/08/blog-post_14.html. http://chennaipithan.blogspot.com/2012/07/blog-post_13.html, இதையும் கொஞ்சம் பாருங்கள் http://chennaipithan.blogspot.com/2012/06/blog-post_28.html .
http://chennaipithan.blogspot.com/ மிக்க நன்றி ஐயா !
பால கணேஷ்
சென்னைப் பித்தன் ஐயாவின் ஆக்கங்களைப் போலவே இவரும் அனுபவப் பகிர்வுகளைப் பகிர்வதில் வல்லவர் . மின்னல் வரிகள் என்ற தளத்தினூடாக இவர் எழுதும் எழுத்துக்களிலும் தணல் பறக்கும் .அருமையான படைப்புக்களைப் பகிரும் இவரது ஆக்கங்களில் ஒன்றான "என் முதல் நாடக அனுபவம்" இதைப் பார்த்த போதுதான் புரிந்தது இவருக்கு நடிப்புத் துறையிலும் ஈடுபாடு இருந்துள்ளது என்று http://minnalvarigal.blogspot.com/2013/04/blog-post_8.html தான் பெற்ற அனுபவங்களினூடாக மக்களுக்கொரு நல்ல செய்தியைத் தருவதும் ஓர் எழுத்தானுடைய பாராட்டத் தக்க செயல்தானே.இவரது எழுத்துக்கள் எப்போதும் ஒரு நல்ல செய்தியைக் கொடுத்துகொண்டே தான் இருக்கும் அத்தோடு மிகவும் பழமை வாய்ந்த சிறப்பான திரைப்பட (நடிகர் ,நடிகைகளைப் பற்றி நான் அறிந்திராத பல சுவையான தகவல்களையும் ,நகைச் சுவை ,இலக்கியம் என பன்முகப் பட்ட படைப்புக்களைத் தந்து கொண்டிருக்கின்றார் பால கணேஷ் ஐயா .மிக்க நன்றி .http://minnalvarigal.blogspot.com/
பழனி கந்தசாமி
மன அலைகள் என்ற தளத்தினூடாக எழுதி வரும் பழனி கந்தசாமி ஐயாவின் பகிர்வுகள் கொஞ்சம் அரசியல் ,அனுபவம் ,புதிய தகவல்கள் என்று மனம் கவரும் வண்ணம் அமைந்திருக்கும் .கற்பனைக் கதை சொல்லும் போது இவரது வயது மனக் கண்ணுக்குத் தெரியாது விசித்திரமாக இருக்கும் .மிகுந்த நகைச்சுவையும் கலந்திருக்கும் .இந்திரனுடன் ஒரு ஒப்பந்தம் அப்படி என்ன ஒரு ஒப்பந்தம் போட்டிருப்பார் இதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள் உங்களுக்கே புரியும் http://swamysmusings.blogspot.com/2013/03/2.html .தேவலோகத்தில் ஒரு புரட்சி http://swamysmusings.blogspot.com/2013/02/blog-post_27.html...!! :) . நான் மீசை வளர்த்த கதை http://swamysmusings.blogspot.com/2013/02/blog-post_14.html .இப்படிச் சாப்பிட வேண்டும் எதை எப்படிச் சாப்பிட வேண்டும் சொல்லுவார் கேளுங்கள் http://swamysmusings.blogspot.com/2013/03/blog-post.html அவசியம் நாம் இதைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் .http://swamysmusings.blogspot.com/
சேதுராமன் அனந்தகிருஷ்ணன்
அன்பே ஆண்டவன் .பக்தியால் இட்ட பகிர்வு மனப் பாறைகளில் முட்டித் தெறித்து முத்தி தருவது எப்போது? ......!!!!!! .இறைவனின் திருவடிகளே தஞ்சமென வாழும் இறை பக்தர் இவருடைய பகிர்வுகளில் இங்கே நல்வாழ்விற்குகந்த முத்துக்கள் சங்கமித்துக் கிடக்கின்றன தேடுவாரத்துக் கிடக்கும் இம்முத்துக்களைத் தேடி வந்து அறிந்து கொண்டால் மேலும் மேலும் ஆக்கங்கள் பொலிவுறும் .http://mathinanth.blogspot.ch/2013/07/blog-post_10.html , http://mathinanth.blogspot.ch/2013/07/blog-post_19.html ,வீடு தேடி வருவான் விட்டாலன் http://mathinanth.blogspot.ch/2013/06/blog-post_8536.html ,மனக் கண்களைத் திறந்து வைத்து மனிதன் மகிழ்வாய் வாழ வழி சொல்லும் பகிர்வுகள் இவைகளைக் காணத்தான் கண்கள் கோடி வேண்டும் ! வணகுகின்றேன் ஐயா .
G.M.பாலசுரமணியம்
பூவையின் எண்ணங்கள் என்ற வலைத் தளத்தில் அருமையான சமையல் குறிப்புகளைப் பகிர்ந்து வருகின்றார் .இந்த வயதிலும் சில நல்ல தகவல்களைப் பகிர வேண்டும் என்பது இவருடைய விருப்பம் .இருப்பினும் இவரது ஆக்கங்களைப் படித்துக் கருத்திடுவோர் ஒரு சிலரே என்ற ஒரு சிறு தாக்கமும் ,ஏக்கமும் இவரது ஒரு பின்னூட்டத்தில் இருப்பதைக் கண்டு கொண்டேன் (http://kamalabalu294.blogspot.ch/2013/06/blog-post_16.html#comment-formஅனைவரது வருகைக்கும் நன்றி. எத்தனையோ சமையல் வகைகள். படிக்கவும் செய்து பார்க்கவும் மனம் இருக்குமானால் பதிவிட நான் தயார்).// வலைத் தளத்தை வடிவமைக்கத் தெரிந்தவர்கள் இவர்களது ஆக்கத்திற்கு பின்தொடர்வோர் இணைப்பை உருவாக்கிக் கொடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் இவரது ஆக்கங்களும் இவர் எண்ணம் போல் வளர்ச்சி பெறும் என்ற நோக்குடன் தான் இந்தத் தகவலையும் உங்களுடன் பகிர்ந்து கொண்டேன் .http://kamalabalu294.blogspot.ch/2013/06/blog-post.html
பகிர்வுகளுக்கு மிக்க நன்றி ஐயா !http://kamalabalu294.blogspot.ch/
துரை செல்வராஜூ
தஞ்சையம்பதி இத் தளத்தினூடாக பக்தி மணம் கமழும் படைப்புகளை அள்ளி அள்ளி வழங்குகின்றார் .இவரது எழுத்துக்களைப் பார்க்கும் போது தோழி இராஜராஜேஸ்வரி அவர்களுடைய வலைத் தளம் தான் நினைவிற்கு வருகின்றது அத்தனை அழகாக எழுதுவதிலும் படங்களைப் பகிர்வதிலும் இவர் வல்லவராகத் தோன்றுகின்றார் .மனம் கவர்ந்த பதிவுகள் இங்கு ஏராளம் உள்ளது அதிலிருந்து ஒரு சிலவற்றை இங்கே பகிரலாம் என நினைக்கின்றேன் .ஆடி வெள்ளி தொடர் http://thanjavur14.blogspot.ch/2013/07/01.html ,
அம்மன் தரிசனம் http://thanjavur14.blogspot.ch/2013/07/01_21.html திருக்கடவூர்
http://thanjavur14.blogspot.ch/2013/07/blog-post.html........http://thanjavur14.blogspot.ch/ மிக்க நன்றி ஐயா பகிர்வுகளுக்கு .
செல்லப்பா ஜக்யஸ்சுவாமி (yagyaswamy) இமையத்தலைவன் என்ற தளத்தில் கவிதை ,கதை ,அனுபவம் என்று பல்சுவை முத்துக்களைப் பகிர்ந்து வருகின்றார் .இவரது ஆக்கங்கள் மிகவும் சிறந்த நற் கருத்துக்களையே எந்நாளும் கொடுத்து வருகின்றது .அந்த ஆக்கங்களிலிருந்து சிலவற்றை இங்கே பகிரலாம் என எண்ணுகின்றேன் .
http://imayathalaivan.blogspot.ch/search/label/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D ஆவிகளுடன் சில http://imayathalaivan.blogspot.ch/2013/07/4.html ,கல்கியும் மலர்களும்
http://imayathalaivan.blogspot.ch/2013/07/5.html,மிக்க நன்றி ஐயா பகிர்வுகளுக்கு
வணக்கம் அன்பிற்கிய நல் உறவுகளே .மீண்டும் நாளை இதே பல்சுவை விருந்தளுக்கும் முத்துக்களுடன் உங்களைச் சந்திக்கின்றேன் .மிக்க நன்றி தங்கள் அனைவரினது வருகைக்கும் இனிய நற் கருத்துகளுக்கும் !
Sethuraman Anandakrishnan அவர்களின் தளம் புதிது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅனைவருக்கும் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.
ReplyDeleteதங்களுக்குப் பாராட்டுக்கள் + நன்றிகள்.
மூவர் எனக்கு புதியவர்கள்! சென்று பார்க்கிறேன்! அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துக்களும் தங்களுக்கு நன்றியும்!
ReplyDeleteஇரண்டு நாட்கள் எனது கணணி ஒத்துழைக்கவில்லை ஆதலால் பதிவெளுதுவதிலும்
ReplyDeleteகொஞ்சம் சிரமமாக உள்ளது .ஆங்காங்கே ஒரு சில தவறுகள் எழுத்தில் இருக்கின்றன
தயவு கூர்ந்து பொறுத்தருளுங்கள் .
நடிகைகளைப் பற்றி நாம் (நான் )அறிந்திராத பல சுவையான தகவல்களையும் ,நகைச் சுவை ,இலக்கியம் என பன்முகப் பட்ட படைப்புக்களை(த்)யும் தந்து கொண்டிருக்கின்றார் பால கணேஷ் //
மிக்க நன்றி சகோ வருகைக்கும் வாழ்த்திற்கும் .
ReplyDeleteமிக்க நன்றி சகோ (தனிமரம் ) வருகைக்கும் வாழ்த்திற்கும் .
ReplyDeleteமிக்க நன்றி ஐயா வருகைக்கும் வாழ்த்திற்கும் .
ReplyDeleteமிக்க நன்றி சகோ வருகைக்கும் வாழ்த்திற்கும் .
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள், நல்ல வலைதளங்களை தேடி தரும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாத்தியார் கணேஷ் அலுவல் விசயமாக சுற்றுப் பயணத்தில் இருப்பதால் கணினி பக்கம் படையெடுக்க முடியவில்லை.
ReplyDeleteஇருந்தபோதும் வலைசர அறிமுகம் பற்றி கேள்விப்பட்டவுடன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உங்களுக்கு தனது நன்றியை உடனடியாகத் தெரிவிக்கச் சொன்னார்....
தன்னோடு அறிமுகமான சக வலையுலக தோழர்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவிக்கச் சொன்னார்....
மிக்கநன்றி அம்பாளடியாள் :-)
அன்புடையீர்!.. வணக்கம். என்னையும் தங்கள் வலைச்சரத்தில் அன்பின் முகவரியுடன் அறிமுகம் செய்து வைத்தமைக்கு பணிவான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்!.. மேலும் பொறுப்புகள் கூடியிருப்பதாக உணர்கின்றேன். எல்லாம் வல்ல சிவம் எல்லாருடனும் என்னையும் வழி நடத்துவதாக!...
ReplyDeleteஎன்தளத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்
ReplyDeleteஇன்றைய அறிமுகங்களில் சிலர் எனக்குப் புதியவர்கள்......
ReplyDeleteஅறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.....
நன்றி, நன்றி, நன்றி.
ReplyDeleteஅறிமுகத்திறகு நன்றி சொல்லி, வளமாக வாழ வாழ்த்துகிறேன்.
என்னை அறிமுகப்படுத்தி கவுரவித்ததற்கு நன்றி. எனது மற்ற இடுகைகள்
ReplyDelete1.ananthako.blogspot.com. knowledge sharing.
2.anandgomu.blogspot.com tamil-hindi sampark to learn tamil-hindi.
3. sethukri.blogspot.com only hindi.
4.aa sethu himaachal -apna blog. navbharat times hindi news paper to learn tamil through hindi.
எல்லாம் இறைவனருள்.அன்பே ஆண்டவன்.
பாதி நான் படிப்பவர்கள்...
ReplyDeleteமீதி புதியவர்கள்...
சென்று பார்க்கிறேன் அம்மா.
அறிமுகங்கள் அனைவரும் மூத்தோர்... அதனால் வணங்குகிறேன்.
அறிமுகங்களுக்கு நன்றி அம்மா...
இறுதி இருவரும் புதியவர்கள்.அறிமுகங்களிற்கு பாராட்டுக்கள்
ReplyDeleteஅனைவரும் நான் விரும்பித் தொடரும்
ReplyDeleteஅருமையான பதிவர்கள்
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
மூவர் புதியவர்கள் அறியத் தந்ததற்கு நன்றி.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள்.
சுவாரஸ்யமான அறிமுகங்கள்..பாராட்டுக்கள்..
ReplyDeleteஇன்றைய அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்திய உங்களுக்கும் என் மனமார்ந்த இனிய நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteThanks for including my site in your study.(not able to write in tamil, since I'm using mobile phone.)-Y Chellappa from Atlanta.
ReplyDeleteஇன்று சீனியர் சிட்டிசன்களிலிருந்து சிலரை, குறிப்பிடத்தக்க
ReplyDeleteசில பதிவுகளோடு அறிமுகம் செய்தீர்கள். மிக்க நன்றி!
வணக்கம்
ReplyDeleteஇன்று வலைச்சரத்தில் அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிகவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteசிறப்பாக அறிமுகப்படுத்திய உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎன் வலைத் தளத்தை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி. என்னால் இந்த வலைத்தள்த்தில் அதிக கவ்னம் செலுத்த முடியவில்லை. இதுவரை ஏழே பதிவுகள். ஆனால் மூன்று முறை வலைச்சரத்தில் அறிமுகம். மீண்டும் நன்றி.
அனுபவப்பதிவர்களின் அறிமுகத்திற்கு நன்றி!
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை!
ReplyDelete-கலையன்பன்.
<a href="http://www.kalaiyanban.blogspot.com/2013/07/2.html>;பாட்டை மாத்துங்க கவிஞரையா! (2)</a>
மிக்க நன்றி உறவுகளே தங்கள் வருகைக்கும் இனிய நற் கருத்துகளுக்கும் .
ReplyDeleteதிரு துரை செல்வராஜூ அவர்களும் திரு செல்லப்பா யக்யஸ்வாமி அவர்களும் புதியவர்கள். இருவரையும் அறிமுகம் செய்ததற்கு நன்றி.
ReplyDeleteதெரிந்த மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!