தேனிலும் இனிய நற் குணம் நிறைந்த வலைத்தள உறவுகள் அனைவருக்கும் இந்த அம்பாளடிளின்முதற் கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன் .
இன்று முதல் ஒரு வார காலத்திற்கு வலைச்சரத்தின் ஆசிரியை பொறுப்பை ஏற்று வழிநடத்த என்னை இங்கு அழைத்த சீனா ஐயாவுக்கும் ஏனையோருக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன் .இன்று முதல் நாள் ஆதலால் இன்று எனது சுய புராணத்தைத் தான் சொல்ல வேண்டும் என்பது வலைச்சரத்தின் விதிமுறைகளில் ஒன்று :) .எனது புனைப் பெயர் அம்பாளடியாள்.எனக்கு என் பெற்றோர்கள் இட்ட பெயர் சாந்தரூபி .நான் தமிழீழத்தில் வன்னிமாவட்டத்தில் பிறந்தவள் .இப்போது வசிக்கும் இடம் சுவிஸ் .என்னைப்பற்றி சொல்வதற்கு ஒன்றுமே இல்லை .அகதி என்ற சொல்லே ஆண்டவன் கொடுத்த பரிசு :) .கவிதைகள் ,பாடல்கள் ,கதைகள் ,இரங்கல் பாக்கள் என்று இளவயது முதல் எழுதும் பழக்கம் என்னையும் இந்த இடத்தில் நிற்க வைத்தது .கவிதை என்பது என் உயிர் மூச்சு .இறுதி நிமிடத்திலும் ஒரு கவிதை எழுதிச் சென்றால் அதுவே சொர்க்கம் என எண்ணுபவள் .
எல்லாவற்றிற்கும் மேலாக சிறு வயது முதல் என் வாழ்வின் அனைத்து வெற்றிகளுக்கும் அன்னை ஆதி பராசக்தியே காரணம் என்று என் மனம் நம்புவதால் தான் நான் அவளின் அன்பிற்கு அடியவள் என்று பொருள்பட அம்பாளடியாள் என புனைப் பெயரைச் சூடிக் கொண்டேன் .தமிழ் மீது எனக்கு உள்ள அளவு கடந்த பற்றின் நிமிர்த்தம் இங்கும் மழலைகளுக்குத் தமிழைக் கற்றுக் கொடுத்து வருகின்றேன் .என் தளத்தை இதுவரை அறியாதவர்கள் இங்கு சென்று பார்க்கவும் .http://rupika-rupika.blogspot.com/ நான் எழுதியதில் என் மனத்தைக் கவர்ந்த பகிர்வுகள் என்றும் சிலவற்றை இங்கே அறிமுகம் செய்து வைக்க வேண்டுமாம் :) எனக்கு என் ஆக்கங்கள் பிடித்திருந்தது போல் உங்களுக்கும் பிடித்திருந்தால் தொடர்ந்து வாசியுங்கள் (உங்கள் தலை எழுத்தை யாரால் மாற்ற முடியும் .மன சாட்சி பேசுது :) )
பாடல்கள்
காற்றாக நான் மறவோ
மாமா மாமா என்னைப் பார்த்தால் உனக்கு
http://rupika-rupika.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
http://rupika-rupika.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
தித்திக்கும் பாடல் நூறு
மறக்க முடியாத நினைவு இதை மறந்து
கவிதைகள்
யாராக இருப்பினும் ஓர் ஐந்தடி தள்ளி நில்
இவள் போலில்லை அவள்
சோக கீதங்கள்
கண்ணைக் கட்டிக் காட்டுக்குள்ளே
இதற்க்கு மேலும் போக முடியாதுங்க நீங்களே போய்ப்பாருங்கள் .முடிந்தால் திடங்கொண்டு போராடு அன்பர் சீனு அவர்களால் அழைக்கப்பட்ட போட்டி நிகழ்வு ஒன்றிக்குக் காதல் கடிதம் வரைந்துள்ளோம் அதில் எனது கடிதம் மூன்று தொடராக உள்ளது http://rupika-rupika.blogspot.com/2013/06/blog-post_282.html .
வாசியுங்கள் .மீண்டும் நாளை சந்திப்போம் நான் தேடித் தேடி எடுத்த அரிய முத்துக்களின் அறிமுக ஊர்வலத்தில் .மிக்க நன்றி உறவுகளே தங்கள் வருகைக்கும் ஆதரவிற்கும் !
வாழ்த்துக்கள்... சுய அறிமுகம் அருமை....
ReplyDeleteதங்கள் சுய விவரம் அழகாய் தொகுத்துள்ளீர்கள்.. தொடர வாழ்த்துகள்...! த.ம: 1
ReplyDeleteஆசிரியை பணி சிறக்க வாழ்த்துகள் !
ReplyDeleteமிக்க நன்றி ஸ்கூல் பையா :)
ReplyDeleteமிக்க நன்றி சகோ .இரவின் புன்னகை
ReplyDeleteமிக்க நன்றி சகோ கூடல் பாலா !
ReplyDeleteஅன்புத் தோழியே!
ReplyDeleteஉங்கள் சுய அறிமுகம் அமர்க்களம்!
தொடரட்டும் உங்கள் பணி!
சிறக்கட்டும் அத்தனையும்!
உளமார்ந்த இனிய வாழ்த்துக்கள்!
த ம.4
தங்கள் சுயபுராணம் அருமை. வலைச்சர ஆசிரியர் ஆனதற்கு என் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteசுயபுராணம் அருமை.வலைச்சர ஆசிரியர் பணியினை சிறப்பாக ஆற்றிட வாழ்த்துக்கள்.
ReplyDeleteசுய அறிமுகம் அருமை...
ReplyDeleteமேலும் அசத்த வாழ்த்துக்கள்...
''யாராக இருப்பினும் ஓர் ஐந்தடி தள்ளி நில்'லில் சாந்த ரூபியின் ஆங்காரமுகம் கண்டேன் ...வலைச்சரத்தில் ஆயிரம் கால்கொண்டு அலங்கார முகத்துடன் அபிநயம் படைத்திட வாழ்த்துகள் !
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteசுய அறிமுகம் மிக அருமையாக உள்ளது இந்த வாரம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
valyai chara ashiriyaruku valthukkal
ReplyDeletemmm....''.. இளவயது முதல் எழுதும் பழக்கம் என்னையும் இந்த இடத்தில் நிற்க வைத்தது..
ReplyDeletemmm..So You are in middle aged.- I thought you are a Young.......generation....mmm..
Best wishes..
Vetha.elangathilakam.
இணையத்தில் உங்கள் படைப்புகடளுடாக நீஞ்கள் அறிமுகமாகி இருந்தபோதும், உங்கள் சுயபுராணம் இன்னும் நெருங்கி வரச்செய்து உறவினரானது போன்ற மகிழ்வைக் கொடுத்தது.
ReplyDeleteஉங்கள் கை வண்ணத்தில் இவ்வாரம் மிகச் சிறப்பாகவும் செழுமையாகவும் வலைச்சரம் வர வாழ்த்துகிறேன்.
ReplyDeleteஇணையத்தில் உங்கள் படைப்புகள் ஊடாக நீங்கள் அறிமுகமாகி இருந்தபோதும், உங்கள் சுயபுராணம் இன்னும் நெருங்கி வரச்செய்து உறவினரானது போன்ற மகிழ்வைக் கொடுத்தது.
உங்கள் கை வண்ணத்தில் இவ்வாரம் மிகச் சிறப்பாகவும் செழுமையாகவும் வலைச்சரம் வெளிவர வாழ்த்துகிறேன்.
மிக்க நன்றி தோழி இளமதி தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் !
ReplyDeleteமிக்க நன்றி கோபாலகிருஷ்ணன் ஐயா தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் !
ReplyDeleteமிக்க நன்றி தோழி ஸாதிகா தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் !
ReplyDeleteமிக்க நன்றி சகோதரா (தனபாலன் ) தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் !
ReplyDeleteகாளிமா தேவி என்தன் கண்களில் வந்து நின்று வாழிய வாழிய என்று அருள் புரியட்டும் தங்கள் இனிய நல்
ReplyDeleteவாழ்த்தினைக் கண்டு :) மிக்க நன்றி ஐயா வருகைக்கும் வாழ்த்திற்கும் .
மிக்க நன்றி புதுகைத் தென்றலே இனிய நல் வாழ்த்துரைத்தமைக்கு !!
ReplyDeleteமிக்க நன்றி வேதா இலங்காதிலகம் அம்மா தங்கள் வருகைக்கும்
ReplyDeleteவாழ்த்திற்கும் .
மிக்க நன்றி ஐயா .வெள்ளவத்தையில் நீங்கள் கிளினிக் வைத்திருக்கும்
ReplyDeleteபோது எனது தோழிக்கு உடல் நிலை சரில்லாமல் இருந்தார் அவரை
அழைத்துக்கொண்டு நானும் உங்களிடம் வந்திருந்தேன் .எனக்கும்
மிகவும் அறிமுகமானவரே தாங்களும் என்பதில் பெருமை கொள்கின்றேன் .
மீண்டும் எனது நன்றிகள் ஐயா வருகைக்கும் இனிய நல் வாழ்த்திற்கும் !
மிக்க நன்றி அன்புச் சகோதரன் ரூபன் தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் .
ReplyDeleteIசுயபுராணம் அருமை.வலைச்சர ஆசிரியர் பணியினை சிறப்பாக ஆற்றிட வாழ்த்துக்கள்.
ReplyDeleteIசுயபுராணம் அருமை.வலைச்சர ஆசிரியர் பணியினை சிறப்பாக ஆற்றிட வாழ்த்துக்கள்.
ReplyDeleteIசுயபுராணம் அருமை.வலைச்சர ஆசிரியர் பணியினை சிறப்பாக ஆற்றிட வாழ்த்துக்கள்.
ReplyDeleteவியபதி அவர்களே தங்கள் வரவும் வாழ்த்தும் கண்டு மைகிழ்ந்தேன் .மிக்க நன்றி வருகைக்கும் வாழ்த்திற்கும் .
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரி...
ReplyDeleteதொடர்ந்து கலக்குங்க...
தொடர்கிறோம் நாங்க...
மிக்க நன்றி சகோதரா வருகைக்கும் வாழ்த்திற்கும் .
ReplyDeleteமிக்க நன்றி அன்புச் சகோதரர் குமார் தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் .
ReplyDeleteவருக வருக... அன்புச் சகோதரி அம்பாளடியாளுக்கு மனம் நிறைய வரவேற்பு! அசத்துங்க வாரம் பூரா... தவறாம வந்து வாழ்த்தக் காத்திருக்கோம் நாங்க!
ReplyDeleteநல்ல சுய அறிமுகம்.....
ReplyDeleteதொடர்ந்து வலைச்சரத்தில் அசத்த வாழ்த்துகள்.....
மிக்க நன்றி பாலகணேஸ் ஐயா தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் .
ReplyDeleteமிக்க நன்றி சகோ தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் .
ReplyDeleteநமக்குத் தெரிந்தவர்கள் வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றால் சந்தோஷம்!
ReplyDeleteஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
உங்கள் பெயர் காரணம் தெரிந்து கொண்டேன். உங்கள் சுயபுராணத்தில் தெரியும் மெலிதான சோகம் மனதை நெகிழச் செய்தது!
வணக்கம் தோழி.
ReplyDeleteஎன் வீட்டில் விருந்தாளிகள் வருகையால் இங்கு வர தாமதம்.
சுயபுராணம் அருமை.
தொடருங்கள். நானும் தொடருகிறேன்.
வாழ்த்துக்கள் தோழி.
அகதி என்ற சொல்லே ஆண்டவன் கொடுத்த பரிசு//
ReplyDeleteசுய புராணத்தில் மனதை ரணம் கொள்ள வைத்த வரிகள், அகதிக்கும் ஒரு அகதி வராதா என்றே சொல்லுகிறது மனசு.
ம்ம்ம்ம் கலக்குங்கள் வலைச்சரத்தில் வாழ்த்துக்கள்....!
தொடக்கமே அருமை. தொடருங்கள். வாழ்த்துக்கள்
ReplyDeleteதமிழ் மீது எனக்கு உள்ள அளவு கடந்த பற்றின் நிமிர்த்தம் இங்கும் மழலைகளுக்குத் தமிழைக் கற்றுக் கொடுத்து வருகின்றேன்...
ReplyDeleteவணக்கத்திற்கு உரிய செயல் தோழி. அறிமுகம் சிறப்பு.
மகிழ்ச்சி.
ReplyDeleteவாழ்த்துகள்.
அன்னை ஆதி பராசக்தியே காரணம் என்று என் மனம் நம்புவதால் தான் நான் அவளின் அன்பிற்கு அடியவள் என்று பொருள்பட அம்பாளடியாள் எ//
ReplyDeleteஆதி பராசக்தியின் அன்பிற்கு அடியவள் என்பதால் அவளுக்கு உகந்த ஆடி மாதத்தில் உங்களுக்கு வலைச்சர பொறுப்பு.
உங்கள் இயற்பெயரும் மிக அருமை.
வலைச்சர ஆசிரியப்பணிக்கு நல்வாழ்த்துக்கள் அம்பாளடியாள்§
ReplyDeleteவலைச்சரபணி தங்களது கைகளில் என்று இன்றுதான் அறிந்துகொண்டேன். வாழ்த்துகள்.
ReplyDeleteஇனித்திடும் வாரம் அழகாக அறிமுகப்படுத்துகின்றீர்கள்.
வலைச்சர ஆசிரியர் பணியை ஏற்றதற்கும், அதனை திறம்பட செய்வதற்கும் வாழ்த்துக்கள் சகோ.!
ReplyDeleteநேரமின்மைக் காரணத்தினால் முன்பே கருத்திட முடியவில்லை. :)
மிக்க நன்றி உறவுகளே இங்கே வருகை தந்து வாழ்த்தியமைக்கு .
ReplyDelete