Wednesday, August 21, 2013

கோவையிலிருந்து அகிலா – 3

இனிய வணக்கம் நண்பர்களே...


குட்டிக் கவிதை...

எடை குறைந்திருக்கிறேனாம்...
எடுத்துச் சென்ற இதயத்தை
விட்டுச் செல்...


எழுத்தும் அதன் அழகும் : யதார்த்தம்
யதார்த்தங்களைத் தொட்டு எழுதப்படும் எழுத்துக்கள் அதிகமாய் மக்களை ஈர்க்கும். அவை நாம் வாழும் சமுகத்தை அதன் மக்களை அவர்களின் வாழ்வியலைப் பற்றி அதிகமாய்ப் பேசும். அந்த எழுத்து வாசகனின் மனதில் ஒரு நம்பகத்தன்மையை உருவாக்கும். கவிதை நடையில் எழுதப்பட்ட யதார்த்தங்கள் எளிதாய் புரிந்துக் கொள்ளப்படும்.     


எனக்கு அறிமுகத்தில் பிடித்த சில பதிவுகள் உங்களுடன் பகிர்கிறேன்... 

உதயசங்கர் 
எழுத்தாளர், கவிஞர் என்பதால் உதயசங்கர் அவர்களின் பதிவில் கவிதை மணம். 
நடப்பதொன்றே என்னும் கவிதையில் பயணத்தை பந்தயமென்று பிழைத்தவனில்லை நான் என்கிறார். எழுத்தின் வாசனை எங்கும் இவரது கரிசக்காடு வலைப்பூவில்...
புதிது என்கிற கவிதையில்,

இன்று
அந்த மரத்தின் இலைகள்
உதிர்ந்து கொண்டிருக்கின்றன
மௌனமாய் இருக்கிறது மரம்
மௌனம் மரணமல்ல
தியானம்

என்று மௌனம் பேசுகிறது...


மன்னார் அமுதன் 

தந்தையாயிருத்தல் என்னும் ஒரு கவிதை போதும் மன்னார் அமுதனின் கவிதைகள் வலைப்பூவில். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் தந்தைக்கும் மகனுக்கும் ஆன உறவை மன்னார் அமுதன் அருமையாக விவரித்துள்ளார். 
நல்லுமரமும் ராசாதிண்ணையும் கவிதையில் ஆழம் மனதை தொடுகிறது.  
சரவணகுமரன்

தலைவா படவிமர்சனம், அமெரிக்காவின் 911 எண் பற்றியும் அதனால் அவரின் வீட்டில் நடந்த அனுபவத்தையும் சாதாரணமாந எழுத்துக்களில் பதித்திருக்கிறார் குமரன் குடில் என்னும் தன் வலைப்பூவில்...


சோபியா அன்டன்

குழந்தைகளின் வளர்ப்பு பற்றியும் சிறு குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர் தூக்கம் கொள்ளும் வழிகளையும் இந்த பதிவில் அறிவுறுத்தியிருக்கிறார். 
அம்மாவாய் தன் கடமையை செய்வதுதான் மிக முக்கியம் என்று டாக்டருக்குப் படிப்பதுப் போல் பெற்றோருக்கும் படிக்க வேண்டும் என்கிறார் தன் சிறுவர் உலகம் வலைப்பூவில்....அழகான அம்மா...


பாஸ்கர் லக்ஷ்மன்

ஒரு வாசகனாக பல நூல்களைப் படித்து அவற்றை அழகாய் அலசி இருக்கிறார், புதிய எழுத்தாளர்கள் ராஜ கோபாலன், சுனில் கிருஷ்ணன் ஆகியோரின் கதைகளை விமர்சித்திருக்கிறார். இலக்கிய செய்திகளைத் தொகுத்து அளித்திருக்கிறார். கணிதம் படித்ததால் கணிதப் புதிர்கள், ஜெனோவின் முரண்படு மெய்மை, இன்னும் கணிதம் கொட்டிக்கிடக்கிறது இவரது ஜன்னல் வழியே வலைப்பூவில்....

  


சந்தோஷமா இருங்க...
நாளைக்கு வரேன்...






32 comments:

  1. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்...

      Delete
  2. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்கூல் பையன்...

      Delete
  3. இனிய வணக்கம் சகோதரி...
    இன்றைய அறிமுகங்கள் அனைவரும் எனக்குப் புதியவர்கள்..
    சென்று பார்க்கிறேன்..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. இன்றைய அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா...

      Delete
  5. வணக்கம்

    இன்று வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. அறிமுக எழத்தாளர்களுக்கும் , சகோதரி அகிலாவுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. குட்டிக் கவிதை அருமை... அறிமுகம் செய்யப்பட்ட எழுத்தாளர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சமுத்ரா...

      Delete
  9. இன்றைய அறிமுகமாகியுள்ளவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. நன்றி துறை செல்வராஜு அவர்களே...

      Delete
  10. இன்று வலைச்சரத்தில் இடம் பெற்ற பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கோமதி அரசு...

      Delete
  11. என் வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியதிற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. படித்து மகிழ்ந்தேன் உங்களின் பதிவுகளை...நன்றி உங்களுக்கு..

      Delete
  12. புதிதாய் இன்று பதிவர்களை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி அகிலா அவர்களே!

    !பாட்டு ஒற்றுமை (2)

    ReplyDelete
  13. அன்பின் அகிலா - தள முகவரிக்குச் சுட்டி கொடுப்பதைத் தவிர்த்து பதிவினுக்குச் சுட்டி கொடுக்கவும். தளத்திற்குக் கருத்துக் கூற்வதைஇ விட்டு விட்டு - பதிவினிற்குக் கருத்துக் கூறவும் - இயன்றால் சுட்டிகளை மாற்றவும் - வாசகர்கள் படிப்பதற்குச் சிரமப்படுவார்கள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. உங்களின் ஆலோசனையை ஏற்கிறேன்...நன்றி சீனா அவர்களே...

      Delete
  14. தங்கள் அறிமுகங்கள் அனைத்தும் அருமை...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்களுக்கு...

      Delete
  15. அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

    அறிமுகப்படுத்திய உங்களுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.

    ReplyDelete
  16. சில பூக்கள் புதிது எனக்கு

    நன்றி சகோ

    ReplyDelete
    Replies
    1. நன்றி முத்தரசு...

      Delete