வணக்கம் அன்பர்கள் யாவருக்கும் :)
இன்னிக்கு ப்ரோக்ராம் சித்திரகூடமலை.
சஹானா ராகத்துல ஒரு பழைய சினிமா பாட்டு. பார்த்தேன் சிரித்தேன்னு ஆரம்பிச்சு வரிக்கு வரி தேன் தேன்-ன்னு வந்து ”அந்த மலை தேன் இதுவென மலைத்தேன்!” அப்படீன்னு முடியும். அப்ப்டியொரு மலை தேன் இன்றைக்கு!
சித்திரகூடத்தில் மலைக்க வைக்கிற மாதிரி சில பதிவர்கள் வேலை செஞ்சுகிட்டு இருக்காங்க. இன்றைக்கு கிருஷ்ண ஜன்மாஷ்டமி. அதனால் அவரையும் நினைச்சுகிட்ட புண்ணியம் கிடைக்கும் வலைப்பதிவையும் பார்த்தமாதிரி இருக்கட்டுமே அவருடைய சிந்தனைகளை தூண்டுகிற சில வலைப் பக்கங்களைப் பார்க்கலாம்.
நீங்க இங்க பார்க்கிற படம் வெறும் சாம்பிள் மட்டும் தான். பலருக்கு அந்தந்த வலைப்பக்கங்களுக்கு போய் இடுகையை பார்க்க நேரமில்லாமல் போய் விடுதே என்கிற காரணத்துக்காக ஒரு கொல்லஜ் உருவாக்கி கொடுத்திருகிறேன். கண்டிப்பா நேரம் ஒதுக்கி தனித் தனியாகப் பார்த்து ரசிக்க வேண்டிய வர்ண ஓவியங்கள் இவை.
அடடா ! அந்த மரத்தடியில கால் மேல கால் போட்டு என்ன ரிலாக்ஸ்டா தன்னை மறந்து குழல் ஊதறாரு. பேசாமல் நாமும் அங்கேயே போய் உங்காந்துக்கலாம்னு தோணுது
அந்த சித்திரக்காரர் திரு கேசவ். ஹிந்து பத்திரிக்கையில் கேலிச்சித்திரம் வரைபவர் மட்டுமல்ல மிகத் திறமையான அளவில் வர்ண ஓவியங்களையும் வரைபவர். புதுமைகள் புரிந்து பார்க்க விழைபவர். அவர் கிருஷ்ணரை நவீனமாகவும் மரபு முறையிலும் பல விதமான வடிவில் வரைந்து அழகு பார்த்திருப்பதும் அதையெல்லாம் வலையுலகில் பகிர்ந்து கொண்டிருப்பதும் மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
சங்கீதத்துக்கும் ஓவியங்களுக்கும் மொழி தேவையில்லை என்பதாலோ என்னமோ அவரது வலைப்பக்கத்தில் படித்து அறிவதற்கென்று எதுவும் சொல்லப்படுவதில்லை. அவருடைய கிருஷ்ணர் ஸ்பெஷலான வலைப்பூ காமதேனு வுக்கு சென்றால் நூற்றுக்கும் மேற்பட்ட வண்ண வண்ண கிருஷ்ணர்களை காணலாம். இடையிடையே ராமாயணக் காட்சிகளும் பாகவத நிகழ்சிகளும் இடம் பெற்று ஆர்வத்தைகூட்டுகிறது. இவருடைய கேரிகேசர் மற்றும் கார்ட்டூன் துணுக்கு பக்கஙகளும் மிகவும் ரசிக்கத்தக்கவையாகும் ---------------------------------------------------------------------------------------------------------------------------
அடுத்து ருசிக்க இருப்பது ராமரஸம் என்ற பெயரில் உள்ள திரு பட்டாபிராமன் அவர்களின் வலைத்தளம்.
கண்ணா கண்ணா என்று கண்மூடி அழைத்தாலேஎன்று கவிதை பாடி மகிழும் இவர் அவரை ஓவியமாய் வரைந்தும் மகிழ்கிறார். இரண்டாம் வருட நிறைவை நெருங்கி கொண்டிருக்கும் இவரது வலைப்பூவில் சித்திரங்கள் கவிதைகள் மட்டுமல்லாது ஆந்திராவின் வேமன்னாவின் சொல்லமுதம் ராமலிங்க பாகவதர் கீர்த்தனைகள் (19 ஆம் நூற்றாண்டு) கருத்துகள் என அசுர வேகத்தில் எழுதி வருகிறார் இதோ அவருடைய ஓவியங்களின் கொல்லாஜ்
கண் முன்னே வந்து நின்றிடுவான்
கவலைகளைஎல்லாம் போக்கிடுவான்
காலமெல்லாம் உடனிருந்து
கண்ணிமைபோல் காத்திடுவான்
அன்புடன் தினமும் அவன் நாமம்
நாவிலும் நினைவிலும் ஒலிக்க விட்டால்
ஒயாது சலிக்கும் மனமும் ஒடுங்கிவிடும்...
இப்போ ஒரு ஆலிலை கிருஷ்ணர் . இந்த கிருஷ்ணருடைய படத்தை வரைந்தவர் பின்னணி தெரிஞ்சா மிகவும் ஆச்சரியப்படுவீர்கள்
அவரைப்பற்றி அறிந்து கொள்ள இங்கே செல்லவும்
இன்று இந்த சித்திரக்காரர் ஒரு MFPA உறுப்பினர் . அப்படி என்றால் என்ன என்று கேட்கிறீர்களா - இங்கே சுட்டவும்
-----------------------------------------------------------------------------------கீழே இருக்கிற கிருஷ்ணர் என்னுடைய முதல் ஆயில் பெயிண்டிங்.
சொல்லிக் குடுக்க யாருமில்லாம நான் பட்ட கஷ்டத்தை கண்ணாரக் கண்டேன் என் கண்ணனை -ங்கற இடுகையில் பார்த்து படித்துக் கொள்ளலாம், நேரம் இருந்தால் :)
இதை விட சுவாரஸ்யமானது சிலேட்-ல செதுக்கிய கிருஷ்ணன். அதைப் பற்றிப் பார்க்க படிக்க :கிருஷ்ணருக்கு பாலீஷ் போடணும் என்கிற இடுகை.
---------------------------------------------------------------------------------
நான் வசிக்கும் ஜாம்நகர் கிருஷ்ணரின் துவாரகைகு மிகவும் அருகிலுள்ளது. நான்கு முறை தரிசனமும் செய்தாயிற்று. ஆனால் உங்களுக்கெல்லாம் தரிசனம் செய்விக்க ஒரு இடுகையும் எழுதவில்லை. ஆனால் என்ன அந்த குறையை போக்கி விடுகிறார் தேவராஜன் ஐயா . நீங்களும் அவரோடு ஒரு ரவுண்டு தரிசனம் பண்ணிக் கொள்ளுங்கள்
--------------------------------------------------------------------------------
இன்றைக்கு நிறைய பேர் வலைப்பக்கங்களில் கண்ணன் பிறந்த கொண்டாட்டங்கள் கவிதைகள், கதைகள் எல்லாம் வரும். அவர்களுக்கு கண்ணன் அருள் நிறைந்து இருக்கட்டும்.
என்று பாடி மகிழ்கிறார் VSK என்ற பெயரில் ஆத்திகம் வலைப்பூ வைத்திருக்கும் சங்கர்குமார் ஐயா. கவிதையை முழுவதும் படிக்க இங்கே.கோவிக்காத கண்ணன் பிறந்தான்
கோவிக்காமல் என்றும் இருப்பான்
கீதையோடு சேர்ந்து மகிழ்வான்
கீதம் நமக்கு இசைத்து வைப்பான்
கோடி கோடி வந்தனம் செய்வோம்
ஆடிப்பாடி இன்று மகிழ்வோம்
கண்ணன் அவன் புகழ் சொல்லவும் போமோ!
கண்ணன் என்றும் நம்மைக் காப்பான்
அவருடைய மயிலை மன்னாருடைய குறள் விளக்கம் என்றும் திகட்டாது
அதையும் விட்டு விடாதீர்கள்.
----------------------------------------------------------------------------
எல்லோருக்கும் கோகுலாஷ்டமி நல்வாழ்த்துகள். மீண்டும் நாளை சந்திப்போம்.
( நேரமின்மை காரணமாக பின்னூட்டங்களுக்கு பதிலுரைப்பது தாமதம் ஆகிறது அல்லது முடியாமல் போகிறது. பொறுத்து கொள்ளவும்)
இனிய வணக்கம் நண்பரே...
ReplyDeleteகிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பதிவு...
அறிமுகமான பதிவர்களுக்கு வாழ்த்துகள்...
நீங்கள் அறிமுகம் செய்விக்கும் விதம்
மிக அழகு...
உங்கள் வலைச்சரப்பணி சிறக்க வாழ்த்துகள்...
வணக்கம் மகேந்திரன். அறிமுகம் செய்வித்த முறை பிடித்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி. அதையே தொடர முயற்சிக்கிறேன்.
Deleteபாராட்டுகளுக்கு நன்றி.
//பார்த்து ரசிக்க வேண்டிய வண்ண ஓவியங்கள்// ரசித்தேன்; நீண்ட நேரம் மனம் ஒன்றி ரசித்தேன்.
ReplyDeleteவண்ண ஓவியம் வரைந்தவர்களுக்கும், கவிதை ஓவியம் தீட்டியவர்களுக்கும், உங்களுக்கும் என் பாராட்டுகள்.
//நீண்ட நேரம் மனம் ஒன்றி ரசித்தேன்.//
Deleteரசித்து போற்றியதை அந்தந்த வலையாசிரியர்களுக்கும் மறக்காமல் சொல்லி விடுங்கள். அதனால் வலைச்சரத்தின் பெருமை கூடும்.
இடுகையை ரசித்தமைக்கு மிக்க நன்றி
இன்று கோகுலாஷ்டமி நாளில் கண்ணன் கழல் போற்றும் பதிவுகள் மிக நன்றி. இன்று நீங்கள் குறிப்பிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎல்லோரும் நலமாய் வாழ கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்..
ஒவியங்கள் பாடல்கள் எல்லாம் மிக அருமை.
நீங்கள் கொடுத்த வலைத்தளங்களுக்கு எல்லாம் ஊர் திரும்பி நிதானமாய் லயித்து படிக்க வேண்டும். இப்போது மகன் ஊரில் பேரனை கொஞ்சிக் கொண்டு இருக்கிறேன். அவன் தூங்கும் போது தான் வலை பக்கம் வருகிறேன்.
உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள்.
///இப்போது மகன் ஊரில் பேரனை கொஞ்சிக் கொண்டு இருக்கிறேன். அவன் தூங்கும் போது தான் வலை பக்கம் வருகிறேன்.
Deleteஉங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள்.///
நேரம் கிடைக்கும் போது மறவாமல் படியுங்கள். என் முயற்சியைப் பாராட்டியதற்கும் மெத்த நன்றி
வண்ண ஓவியம் வரைந்தவர்களுக்கும், கவிதை ஓவியம் தீட்டியவர்களுக்கும், உங்களுக்கும் என் பாராட்டுகள்.
ReplyDeleteதங்களது பாராட்டுரைகள் புது தெம்பு அளிக்கின்றன ஜெயகுமார் ஐயா.
Deleteதவறாமல் வந்து உற்சாகப்படுத்துவதற்கு மிக்க நன்றி
கோலாகல
ReplyDeleteகோகுலாஷ்டமி வாழ்த்துகள்..!
அருமையான அறிமுகங்கள்..பாராட்டுக்கள்..
வாழ்த்துகளுக்கு நன்றி இராஜராஜேஸ்வரி மேடம். தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் கண்ணன் அருள் பெருகட்டும். நன்றி
Deleteஅறிமுகமும் அறிமுகப்படுத்திய விதமும்
ReplyDeleteமிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
மிகவும் ரசித்துப் பாராட்டியதற்கு நன்றி ரமணி சார். தொடர்ந்து கருத்து சொல்ல வேண்டுகிறேன்
Deleteஎல்லாருக்கும் கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள்!..
ReplyDeleteதங்களுக்கும் குடும்பத்தாருக்கும் கண்ணன் அருள் நிறைந்திருக்கட்டும் எனப் பிரார்த்திக்கிறேன் துரை செல்வராஜு ஐயா. வாழ்த்துகளுக்கு நன்றி
Deleteஎல்லா படங்களையும் விட ஜனா அவர்களின் ஆலிலை கிருஷ்ணனே என்னைக் கவர்ந்த படம். அவரைப்பற்றிய பதிவின் இணைப்பை தந்தமைக்கு நன்றி!
ReplyDeleteநல்வரவு நடனசபாபதி ஐயா, இந்த இடுகையின் முக்கிய நோக்கமே ஜனாவின் போராட்டத்தையும் சாதனையையும் (மறைமுகமாகக்) குறிப்பிடத்தான். தங்களுக்கு அது பிடித்தது கண்டு மிக்க மகிழ்ச்சி. சாதனையாளர்களைப் பற்றிப் படிப்பதை விட வேறு நல்ல கல்வி இருக்க முடியாது என்பது என் தாழ்மையான கருத்து. அதனால் என் இடுகைகளில் ஏதேனும் ஒருவிதத்தில் அதை எடுத்துச் சொல்ல விழைகிறேன்.
Deleteஇந்த பதிலை எழுதும் வண்ணம் தங்கள் பின்னூட்டம் வந்ததற்கு மிக்க நன்றி.
இப்போ tha. ma 3 ஆயிடுச்சு :)). தங்களுடைய பங்களிப்புக்கு மிக்க நன்றி
ReplyDeleteலயித்துப் பாராட்டி எழுதி உள்ளீர்கள். விஎஸ்கேயைத் தவிர மற்ற வலைப்பூக்கள் அறியாத ஒன்று. அருமையான வைரச் சரம்.
ReplyDelete