என் இனிய தூரிகை கண்ட முத்துக்களுக்கு இதமான காலை வணக்கம். என்ன எல்லாரும் அலுவலகம் சென்றபின் பதிவுன்னு பார்க்கறீங்களா..? சரி அலுவலகத்தில ஓய்வு நேரம் இருக்கும்போது அப்படியே இந்தத் தூரிகை கண்டெடுத்த முத்துக்களின் ஒளியில் அவர்கள் பூந்தோட்டம் சென்று மலர்களின் மணம் நுகர்ந்து வாழ்த்திட்டு வாங்க.
இன்று பிரமிக்க வைக்கும் இயற்கைய ரசிச்சுட்டு தொடர்ந்து மற்ற மலர்களைக் காண்போம்.
கண்முன்னே இருப்பதை
காணவிடாது மறைத்து..
வளர்ந்ததை வீழ்த்தியும்
வீழ்ந்திருப்பதை
உயரத்தில் அமர்த்தியும்
இடம்மாற்றித்
தடம் மாற்றித் தடுமாறவைக்கும்
ஆடிமாதக்காற்று...
பிரமிக்க வைக்கும் இயற்கை...!!!
ஹிஷாலி அவர்களின் கவரிமானின் கற்பனை காவியம் பெயருக்கேற்ப வலைத்தளமும் அழகு. அழகு
வலைத்தளத்தில் மட்டுமல்ல நேர்த்தியாக பல்சுவையாய் பகிர்ந்திருக்கிறார் தன்
சிந்தனைகளை. கவிதை, சமூகக்கவிதை, பெண்ணியக்கவிதை, ஜோக்ஸ், சிறுகதை ஹைக்கூ...இன்னும்
நிறைய. அவற்றில் ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல ஒரே ஒரு சமூகக்
கவிதை பகிர்கிறேன்
//அய்யோ என்றாலும்
ஆருயிர் திரும்பாது
அதற்குள் அறிந்துகொள்
இதுவே ஆரம்பம்
அதுவே உலகின்
ஓரின்பம் ...!//
இவரின் மற்ற பதிவுகளைகளையும் சென்று பார்வையிடுவோம். ஹிஷாலியின் பதிவுகள் தொடர்ந்திட மனமார்ந்த
வாழ்த்துக்கள்.
*****
சகோதரர் திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வலைத்தளம் அனைவரும் அறிந்த ஒன்றே. அனைவரையும் எப்பொழுதும் ஊக்கப்படுத்தியும், தன் பல்வகைப்பட்ட பதிவுகளால் நமையெல்லாம்
மகிழ்வித்தும்
வரும் இவரது
தளத்தில் பேசுங்கள்..பேசுங்கள்...ஆனால்..? இதில் பேச்சின் தன்மையைப்பற்றி அழகா
விளக்கியிருக்கிறார். மனிதனின் பிரச்சினைக்கு காரணமான குணம் என்ன..? (அவரின் பதிவில் குறிப்பிட்ட சில வரிகள் இங்கே
பகிர்வதற்கு எண்ணினேன் இயலவில்லை..) அவரது தளத்தில் சென்று
பார்வையிடுவோம்.
இவரது தளம்
ஏற்கனவே அறியப்பட்ட தளமாக இருப்பினும் புதிதாக வலைச்சரத்தில்
அறிமுகமாகியிருக்கும் வலைப்பூ நண்பர்களும் அறியும் எண்ணத்தில்
பகிர்ந்துள்ளேன்.
சகோதரருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
*****
தேவா. சு அவர்களின் வாரியர் (Warrior) ஜெயிக்கப்பிறந்த
இவர் ஆன்மீகப்பயணம் செய்து, அனுபவத்தையும் பகிர்ந்து சமூகத்தைப்பற்றிய
கட்டுரைகள் தொகுத்து காதல் கவிதையில் மூழ்கி கதையும் சொல்லி சமூகக்கதையின் மூலம்
நமக்கு நம் சமூகத்தில் நடப்பனவற்றைப் படம்பிடித்துக்காட்டுகிறார். இவரின் சமூகக்கதையில் பைத்தியம்
கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.
//"பைத்தியக்காரனுகள பாரேன்....பசிச்சுதுன்னா குப்பைத்
தொட்டியில இருந்து ஏதோ ஒரு எச்சில் எலைய எடுத்து தின்னுட்டு சொகமா சுத்திட்டு
இருக்கானுக....நம்ம பொழப்ப பாத்தியா நாய் படாத பாடு...."
யாரோ யாரிடமோ
சொல்லிக் கொண்டு பைக்கில் பறந்து கொண்டிருக்க....//
பைத்தியம்
அல்லாதவரைக்கூட பேசிப்பேசி பைத்தியமாய் மாற்றிவிடும் சமூகம்...இவரின் எழுத்துக்கள்
கண்ணெதிரே ஒரு பைத்தியம் நிற்பதுபோல் தோன்றுகிறது.
தோழருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்களுடைய எழுத்துப்பணிகள்..
*****
வாழும் வரை நன்மைக்காக வாழ்ந்து பார்க்கவிரும்பும் R.V.Saravanan அவர்களின்
குடந்தையர்... வலைப்பூவின் முகப்பே மனதைக்கவரும் படியாக அமைத்துள்ளார்.
இவரது தளத்தில் அனுபவம் பேசுது, கவிதை சோலை, சிரிப்பு, ஓவியம், சிறுகதைகள் எனப்
பல்சுவையான பகிர்வுகள் காட்சியளிக்கின்றன.. சோழர்கால அற்புதம் ஐராவதேஸ்வரம்
பதிவில் சோழர் காலத்தின் புகழை இன்றளவும் உலகுக்கு உணர்த்தும் வகையில்
அமைந்திருக்கும் தாராசுரம் ,கோவிலை பற்றிய சிறப்பு தகவல்களை அழகிய
கோயிலின் தோற்றங்களுடன் பகிர்ந்துள்ளார்.
//தாரன் என்பவன் வழிபட்டதால் தாராசுரம் எனவும்,இந்திரனின் பட்டத்து யானை ஐராவதம், தன் சாபம் தீர வந்து
வழிபட்டு பேறு பெற அருளிய இறைவன் ஐராவதேஸ்வரர் எனவும் இந்த ஸ்தலம் ஐராவதேஸ்வரம் எனவும் பெயர் பெற்றிருக்கிறது//
கோயிலை தரிசித்து வருவோம் வாங்க..
தோழர் சரவணன்
அவர்களுக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள்.. நாளை வேறு சில மலர்களைக் கண்டு ரசிப்போம் தோழமைகளே.
காயத்ரியின் தத்துவத்துடன் இன்றைய நாள் இனிதே அமைய வேண்டுகிறேன்.
சிரிப்பில் ஒளிந்திருக்கும் அழுகை
அழுகையில் ஒளிந்திருக்கும் சிரிப்பு
அன்பில் ஒளிந்திருக்கும் கயமை
இரக்கத்தில் ஒளிந்திருக்கும் ஏளனம்
கோபத்தில் ஒளிந்திருக்கும் பொறுமை
சகிப்புத்தன்மையில் ஒளிந்திருக்கும் வெறுப்பு
பசியில் ஒளிந்திருக்கும் வறுமை
பணத்தில் ஒளிந்திருக்கும் கருணை
முரண்கள் அனைத்தையும்
முடிவின்றி கற்கின்றோம்..!!
அறிமுகமாகும் நண்பர்களுக்கும் வலைச்சரத்தின் மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துகளும். தங்கள் அனைவரது எண்ணங்களும் எழுத்துக்களாய் எண்ணற்று வெளிவர வலைச்சரத்தின் மலர்கள் தொடர்ந்து தங்கள் பூந்தோட்டத்தில் மணம் வீசுவோம்.
அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி... _/\_
வாழ்க வளமுடன்... J
சிறப்பான அறிமுகங்கள்..பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!
ReplyDeleteஇன்றைய தூரிகை சிதறலில் தெறித்த முத்துக்கள் அருமை!
ReplyDeleteஅனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்!
இன்றய தினம் தூரிகையின் முத்துமாலையில் ஜொலித்துக்கொண்டிருக்கும் முத்துக்கள் அனைத்திற்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteதினமொரு ததுவத்துடன் வலையில் ஆங்காங்கே இருக்கும்
முத்துக்கள் அனைத்தையும் கண்டெடுத்து அற்புதமாக பட்டைதீட்டி அதனை ஜொலிக்கச்செய்துகொண்டிருக்கும் கவி காயத்ரி அவர்களுக்கும்
நன்றியையும், வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கிறேன்.
வலைச்சரத்தில் என்னை பற்றி என் தளத்தை பற்றி குறிப்பிட்டு அறிமுகபடுதிய கவி காயத்ரி அவர்களுக்கு நன்றி. மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்களின் தூரிகையால் தீட்டப்படுவது ஓவியமா!.. காவியமா!.. தனித்துவமான அறிமுக வர்ணனை.. சிறப்பினைச் சிறப்பிக்கும் வண்ணம் திரு. தனபாலன் அவர்களுடையது!.. ஆக எல்லாமே ஒளிரும் முத்துக்கள்!.. வாழ்க!.. வளர்க!..
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDelete@இராஜராஜேஸ்வரி...நன்றி தோழி.
ReplyDelete@இளமதி..தூரிகைச்சிதறல் தேர்ந்தெடுத்த முத்துக்களை கண்டு ரசித்தமைக்கு நன்றி தோழி..:)
ReplyDelete@anandsweetkani, தங்களின் கருத்துக்களால் முத்துக்கள் அனைத்தையும் ஒளிரச்செய்யும் தங்களுக்கு மனமார்ந்த நன்றி...:)
ReplyDelete@R.V.Saravanan, வலைச்சரத்திற்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் தங்கள் வலைப்பூவில் பூத்திருக்கும் மலர்களை கண்டு ரசிக்க எமக்கு ஒரு வாய்ப்பு..வாழ்த்துகள் தோழர்..:)
ReplyDelete@துரை செல்வராஜூ, ஒளிரும் முத்துக்கள் தங்கள் தொடர்வருகையினால் மேலும் ஒளிர்கின்றன..நன்றி தோழர்..:)
ReplyDelete@S.Suresh,..வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி தோழர்..:)
ReplyDeleteஎனது தளம் அறிமுகத்திற்கு மிக்க நன்றி சகோதரி... மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDelete@திண்டுக்கல் தனபாலன்...வாங்க சகோ..மிக்க நன்றி..
ReplyDeleteஇருவர் புதிது நன்றி
ReplyDelete@S.Prem...உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி...:)
ReplyDeleteஎனது அன்பு நண்பர் ஆர்.வி.சரவணன் அவர்களது குடந்தையூர் தளத்தை இங்கு
ReplyDeleteஅறிமுகம் செய்து வைத்ததில் எனக்கு அளவிலா மகிழ்ச்சி. என் நன்றிகளை தங்களுக்குத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
@Nizamudin..மிக்க மகிழ்ச்சி தோழர்..நண்பருடைய வலைத்தளம் கண்டதில் எமக்கும் மகிழ்ச்சியே..:)
ReplyDelete@Nizamudin..மிக்க மகிழ்ச்சி தோழர்..நண்பருடைய வலைத்தளம் கண்டதில் எமக்கும் மகிழ்ச்சியே..:)
ReplyDeleteஎல்லோருக்கும் அறிமுகமான தனபாலன் சார், எழுத்தில் வசீகரிக்கும் தேவா அண்ணா, கலக்கல் பதிவர் RVS அண்ணா ஆகியோர் நான் விரும்பிப் படிப்பவர்கள்... ஹரிஷாலி அவர்களைப் படிக்கிறேன்...
ReplyDeleteகலக்கல் அறிமுகங்கள்... வாழ்த்துக்கள் அக்கா...
சே.குமார்...நன்றியும், மகிழ்ச்சியும் தம்பி..:)
ReplyDelete