இனிய வணக்கம் நண்பர்களே...
குட்டிக்
கவிதை
சிறு கூழாங்கல்லை
அன்பானவளின் கீழ் வைக்கும்
அந்த பனிப்பறவையின் காதல்
அடுத்த பிறவியை நம்பச் சொல்கிறது....
அன்பானவளின் கீழ் வைக்கும்
அந்த பனிப்பறவையின் காதல்
அடுத்த பிறவியை நம்பச் சொல்கிறது....
எழுத்தும் அதன் அழகும் : இயல்பு
இயல்பாய் இருக்கும் அனைத்தையும் அதன் போக்கிலேயே சொல்லி செல்லும் எழுத்துக்கள் என்றுமே அழகானவை. இயற்கை, மனிதர்கள்,
அவர்களின் மன உணர்வுகள் எல்லாவற்றையும் சிறிது கற்பனையுடன் வடித்து படைக்கும்
படைப்புகள் பாராட்டுக்குரியவை. .
இன்று என் மனதுக்குப் பிடித்து படித்த சில பதிவுகளைப் பார்ப்போம்.
இன்று என் மனதுக்குப் பிடித்து படித்த சில பதிவுகளைப் பார்ப்போம்.
அன்புடன் மலிக்கா
அழகான கவிதைகளுக்குச் சொந்தக்காரர் இவர். கல்வி என்பது வியாபாரப் பொருளாய் மாறிவிட்டதை சமூக அக்கறையுடன் சொல்கிறார் அன்புடன் மலிக்கா (மலிக்கா ஃபாரூக் ) அவர்கள்.
கட்டு கட்டா நோட்டக்காட்டி
கல்வி கண்ணக்கட்டி
கலர்கலர் கனவுகாணும்
வயிற்றில் நெருப்பைக்கொட்டி
பட்டப்படிப்பு படிச்சி முடிக்க
வயல்வரப்ப வித்துக்கட்டி
பதபதைக்க வைக்குதே கல்வி
பச்சோந்தி பவிசு காட்டி!
கட்டு கட்டா நோட்டக்காட்டி
கல்வி கண்ணக்கட்டி
கலர்கலர் கனவுகாணும்
வயிற்றில் நெருப்பைக்கொட்டி
பட்டப்படிப்பு படிச்சி முடிக்க
வயல்வரப்ப வித்துக்கட்டி
பதபதைக்க வைக்குதே கல்வி
பச்சோந்தி பவிசு காட்டி!
மற்றுமொரு கவிதையில் வெற்றியையும் தோல்வியையும் தோல்வியின் கையில் வெற்றி மாலை என வித்தியாசமாக கவிதை தொடுத்திருக்கிறார் இவரது வலைப்பூவான நீரோடையில்...இன்னும் நிறைய கவிதை சுவாசியுங்கள் தோழி...
கலாகுமரன்
நுண்ணிய விவரங்களை எழுத்தில் வடிக்கும் வல்லமை படைத்தவர் என்பதை இவரின் பதிவுகளில் காணலாம். குகை ஓவியங்கள் பற்றிய பதிவில் பழைய காலத்தில் பிரான்சில் கண்டெடுக்கப்பட்ட ஓவியங்களைப் புகைப்படங்களுடன் பதித்திருக்கிறார்.
வான்கா, ஒகம்போ , பிக்காசோ போன்ற ஓவியர்களின் வரலாற்றை வரைந்திருக்கிறார் புகைப்படங்களுடன் எழுத்துக்களில் கலாகுமரன் தனது வலைப்பூவான இனிய ஒவியாவில்...வாழ்த்துக்கள்...
வான்கா, ஒகம்போ , பிக்காசோ போன்ற ஓவியர்களின் வரலாற்றை வரைந்திருக்கிறார் புகைப்படங்களுடன் எழுத்துக்களில் கலாகுமரன் தனது வலைப்பூவான இனிய ஒவியாவில்...வாழ்த்துக்கள்...
சக்திபிரபா
நிறைய நினைவுகளின் தடங்கள் இவரின் பதிவுகளில். இவரின் முதல் முதல் படித்த இந்துமதி சுஜாதா என்னும் பதிவு என் சிறுவயது புத்தக அனுபவத்தையும் சற்று நினைவுப்படுத்தியது. பள்ளி நினைவுகள் அழகான பள்ளி நினைவுப் பாதையாய் மிளிர்கிறது இவரது மின்மினிப்பதிவுகள் என்னும் வலைப்பூவில்...எழுத்தைத் தொடருங்கள் தோழி...
நிறைய நினைவுகளின் தடங்கள் இவரின் பதிவுகளில். இவரின் முதல் முதல் படித்த இந்துமதி சுஜாதா என்னும் பதிவு என் சிறுவயது புத்தக அனுபவத்தையும் சற்று நினைவுப்படுத்தியது. பள்ளி நினைவுகள் அழகான பள்ளி நினைவுப் பாதையாய் மிளிர்கிறது இவரது மின்மினிப்பதிவுகள் என்னும் வலைப்பூவில்...எழுத்தைத் தொடருங்கள் தோழி...
இந்தியன்
ஆங்கில எழுத்துக்களின் அகரவரிசையில் A வரிசை முதல் Z வரிசை வரை தமிழ்ச் சொல்லாக்கம் கொடுத்திருக்கிறார்.
வீடியோ என்பதற்கு விழியம், சாப்ட்வேர் என்பதற்கு சொவ்வறை என்றும் அழகான ஒரு தொகுப்பு
மொத்தமாய் 1910 சொற்கள் தமிழ்ச் சொல்லாக்கம் என்னும் இந்த வலைப்பூவில்...
நன்று...
அபுல் கலாம்
கலாமின் கவிதைகள் என்னும் இவரின் வலைப்பூவில் வளைகுடா வாழ்க்கை கவிதையாய்...அது வரமா சாபமா என்றே கேட்டிருக்கிறார். உண்மைதான்...
அம்மா என்னும் அன்பை நேசி என்னும்
கவிதையில்
அன்புக்கு முகவரியை உலகில்
கேட்டால்
......அம்மாவின் முகத்தைத்தான் உலகம் கூறும்
......அம்மாவின் முகத்தைத்தான் உலகம் கூறும்
என்று அழகாய் சொல்லிச் செல்கிறார்...இவரின் கவிதைகள் நேர்த்தியான ஒரு வாழ்வு முறையை சொல்லிச் செல்கின்றன....வாழ்த்துக்கள்...
படிச்சுப் பார்த்து உங்க
கருத்தைச் சொல்லுங்க...
சந்தோஷமா இருங்க...
நாளைக்கு வரேன்...
ஹாய் அகிலா, நலமா? நீண்ட நாட்களாகி விட்டது. நல்ல எழுதி அசத்திட்டிங்க. நல்ல வலைசர வலைதளம்.
ReplyDeleteவிஜிஸ்வெஜ்கிச்சன்.
நலமே...நன்றி விஜி...
Deleteவணக்கம்
ReplyDeleteஇன்று வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க மகிழ்ச்சி...
Deleteஅனைத்தும் நல்ல தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி நண்பா...
Deleteவணக்கம்
ReplyDeleteஇன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்த வலைப்பூக்களில் 3 புதியவை அறிமுகம் செய்தமைக்கு எனது வாழ்த்துக்கள் சகோதரி
சிறிய குட்டிக்கவிதை அருமை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்...
Deleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி...
Delete"அன்புக்கு முகவரியை உலகில் கேட்டால்
ReplyDelete......அம்மாவின் முகத்தைத்தான் உலகம் கூறும்" மனதில் நிற்கும் வரிகள்
அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்
ஆமாம்...அழகான கவிதை..
Deleteநன்றி அவைநாயகன்...
அவைநாயகனையும் அறிந்து வைத்திருக்கிறீர்களே நன்றி.
Delete''பட்டப்படிப்பு படிச்சி முடிக்க
வயல்வரப்ப வித்துக்கட்டி
பதபதைக்க வைக்குதே கல்வி'' இன்றைய கல்வியின் நிலையைப் படம் பிடித்துக் காட்டும் வரிகளை தேர்ந்தெடுத்து காண்பித்துள்ளமைக்கு பாராட்டும் நன்றியும்
மகிழ்ச்சி...
Deleteநேர்த்தியான அறிமுகங்கள்.. பாராட்டுக்கள்..
ReplyDeleteநன்றி தோழி...
Deleteஎல்லோருமே எனக்குப் புதியவர்கள். நிச்சயம் போய் படிக்கிறேன். அறிமுகம் ஆனவர்களுக்கும், உங்களுக்கும் பாராட்டுக்கள்.
ReplyDeleteமகிழ்ச்சி ரஞ்சனி மேம்...
Deleteஅருமையான பதிவர்களின் அறிமுகங்கள்..
ReplyDeleteவாழ்த்துக்கள்
நன்றி சகோ...
Deleteஇனிய ஓவியாவில் குறைவான பதிவுகளை மட்டுமே எழுதி இருக்கிறேன். இத்தளம் முழுக்க முழுக்க நான் ரசித்த ஓவியங்களை காட்சி படுத்தி உள்ளேன். ஒவியங்களை இப்படியும் ரசிக்கலாம் என்பதை வெளிப்படுத்துகிறேன் அவ்வளவே. வலைச்சர அறிமுகம் இன்னும் பல பேருக்கு சென்று சேர்வதில் மகிழ்ச்சி என்னோடு கூட அறிமுகப்படுத்தப்பட்ட மற்ற பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும், ஓவியர் அகிலா அவர்களுக்கும் எனது நன்றி.
ReplyDeleteநன்றாகவே எடுத்துரைதிருக்கிறீர்கள் உங்களது பதிவில். ஓவியர்களின் வாழ்க்கை வரலாறுகள் தமிழில் தெரிந்துக் கொள்வது அவசியமே...நன்றி நண்பா...
Deleteஅழகிய குறுங் கவிதை! அருமை!
ReplyDeleteஇன்றைய அறிமுகங்களும் சிறப்பு!
அனைவருக்கும் வாழ்த்துக்கள் தோழி!
நன்றி இளமதி...
Deleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்!!
ReplyDeleteநன்றி ஜீவன்...
Deleteவலைச்சர அறிமுகத்துக்கு மிக்க நன்றி.
ReplyDeleteஅனைத்துப் பெருமையும் திரு இராம.கி அவர்களுக்கே சாரும். அவரின் வலைப்பதிவு வளவு(http://valavu.blogspot.in அல்லது http://valavu.blogspot.com ). அவரின் வலைத்தளத்தில் தொடர்ந்து வழங்கி வரும் தூய தமிழ்ச் சொற்களைத் நான் தொகுக்க மட்டுமே செய்கிறேன்.
அய்யா இராம.கி அவர்களின் இடுகைகள் (blog post) அறிவியல், பண்பாடு, வரலாறு, தமிழ்த்தொன்மம் சார்ந்த புதையல். நாம் அறிந்துள்ள பல விஷயங்களில் அவரின் புதிய/மாற்றுப் பார்வை காணக் கிடைப்பது உறுதி.
பொதுப்பயன்பாட்டில் உள்ள சுமார் 2000 ஆங்கிலச் சொற்களுக்குத் தனியொருவராக மாற்றுத் தமிழ்ச்சொற்களைப் பரிந்துரைத்திருக்கிறார். என்னுடைய வேண்டுகோள் எல்லாம் வலைச்சர வாசகர்கள் அவரின் இடுகைகளைப் படித்து ஊக்குவிக்க வேண்டும் என்பதே.
மேலும் இயன்றவரையில் தமிழ்ச்சொற்களை இடுகைகளில் பயன்படுத்துவது அவரின் முயற்சிக்கு நாம் வழங்கும் அங்கீகாரமாகும்.
வளவு வலைப்பூவைப் படித்தேன். அவரின் சேவைப் பாராட்டுக்குரியதே. அருமை. அதில் தமிழ்ச் சொற்களை மட்டும் நீங்கள் தொகுத்திருப்பது எளிதாய் உள்ளது. நன்றி...
Deleteஇனிய அறிமுகங்கள்.. நயமான கவிதைகள்.. நன்று!..
ReplyDeleteநனறி உங்களுக்கு...
Deleteஅனைத்துமே புதிய அறிமுகங்கள். சிறப்பான கவிதை!
ReplyDeleteஇன்று:!பாட்டு ஒற்றுமை (3)
மகிழ்ச்சியே...
Deleteநல்ல தள அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஅன்பு சகோதரிக்கு, நீரோடையையும் வலைச்சரத்தில் நீந்தவைத்தமைக்கு
ReplyDeleteஎனது அன்புகலந்த நெஞ்சம் நிறைந்த நன்றி.
கல்வி, காசாகி நாளாகிவிட்டது. ஆனாபோதும் விடுவதாயில்லை,கல்வியையும், அதனை பெற பாடுபடும் ஆதங்கத்தையும்..
மேலும், வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ள நெஞ்சங்களுக்கு வாழ்த்துகள். மீண்டும் சகோதரிக்கு எனது நன்றிகள்..