Sunday, August 4, 2013

தூரிகை கண்ட முத்துக்கள் - நாள் 6

தோழமைகள் அனைவருக்கும் இனிய நண்பர்கள்தின வாழ்த்துக்கள். 



காயத்ரி  : வாங்க விசு சார்..வணக்கம்

விசு        : வணக்கம்மா.. இன்னியோட வலைச்சரத்தில் என் பொறுப்பு முடியுதா..?

காயத்ரி  : ஆமா சார்.  இன்னிக்கு நண்பகள் தினத்தை முன்னிட்டு  நம்ம வலைச்சர மலர்த்தோழமைகள் அனைவருக்கும் சிறப்புப்பரிசு இது....:) (இன்னிலேர்ந்து கொஞ்சம் நிம்மதியா இருப்பாங்க..)

விசு        :நம்ம அன்பின் சீனா ஐயா  இறுதிப் பதிவை வழங்க சரியான நாள்தான் கொடுத்திருக்கார்...நம்மப் பத்திமுன்னாடியே அவருக்குத் தெரிஞ்சிருக்குமோ...?!!

காயத்ரி  : ம்ம்... சார் இன்றைய மலர்களை அறிமுகப்படுத்தும் முன்பு நண்பர்கள் தினத்துக்கு நீங்க ஏதாச்சும் சொல்லனும்னா சொல்லுங்களேன்...ஆவலா இருப்பாங்க நம்ம தோழமைகள்..

விசு       : ஏம்மா, தினமும் என் பாணிலதான் சொல்றமே...இன்னிக்கு ஒரு மாறுதலுக்கு உன் பாணில காயத்ரியா ஏதாச்சும் சொல்லும்மா..நானும் கேட்கறேன்..

காயத்ரி : பாவம் சார் நீங்க.. என் கருத்துக்களையும் கேட்கனும்னு ஆவலா இருக்கீங்களே..!! 

அன்பெனும் அரிதாரம் பூசாது...
தோல்வியில் துவண்டு
துயரத்தில் மூழ்கியிருக்கும்
தோழமைகளுக்கு
கர்ணனின் கவசகுண்டலமாய்
அன்பையணிந்து
உள்ளத்தால் உணர்ந்து
உணர்வால் உணர்த்தி
உடனிருந்து 
தோழமைக்கு தோள்கொடுப்பதே நட்பு..இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள். 

விசு      : எங்க என்னமாதிரியே  நட்பென்பது நட்பெனும் சொல்லில் இல்லை. நட்பை நட்பாக உணர்வதில் இருக்குனு ஏதாவது சொல்லிடுவியோனு நினைச்சேன்மா...நல்லவேள உன்பாணிலயே சொல்லிட்ட. என் சார்பாகவும் நண்பர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.  சரிம்மா அறிமுகத்துக்கு போகலாமா..

காயத்ரி : போகலாம் சார்.  முதல் பதிவரே குளிர்ச்சியான ஒரு அறிமுகம் சார்..

விசு       : என்னம்மா குளிர்ச்சி...ஏதாவது வில்லங்கமா மாட்டிவிடமாட்டியே..?

காயத்ரி : அட என்ன சார்..நம்ம வலைச்சரத்துல உங்களைப்போய் மாட்டிவிடுவேனா....? இவரு நொய்யல் ஆற்றை பாதுகாப்பது பற்றி தன்னோட வலைப்பூவில் எழுதியிருக்கார் அதான் ஆறுன்னதுமே குளிர்ச்சியா உணர்ந்தேன்..

விசு       : இரும்மா நானும் படிச்சுப்பார்க்கறேன்..

கோயம்புத்தூர் நகரை கடக்கும்போது நகரின் கழிவுகளும், திருப்பூரை கடக்கும்போது அந்நகரின் சுத்திகரிக்கப்படாத சாயப்பட்டறைகளின் கழிவுகளும் கலந்து நொய்யல் ஆற்றை  மாசுபடச்செய்கின்றன.  நொய்யல் பாதுகாப்பு அமைப்பு (பதிவர் பற்றிய விபரங்கள் பகிரப்படவில்லை) என்ற  தளத்தில் நொய்யல் ஆற்றைப் பாதுகாப்பது எப்படி...?
மழை நீர் சேகரிப்பு என  நீர் சேமிப்பு, நீர் மாசுபடுதல் போன்ற பதிவுகளாகப் பகிர்ந்துள்ளார். 
//காலத்துக்குக் காலம் இயற்கையைப் பார்க்கும் பார்வை மாறி மாறி வந்தாலும், மாற்றம் ஏதுமின்றியே இருக்கிறது இயற்கை!
மனித அறிவு எவ்வளவு குறுகலானது என்பதை வெளிச்சம் போட்டதைத் தவிர நவீன அறிவியல் வேறெதையும் சாதிக்கவில்லை.//
பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள். தலைப்பே வித்தியாசமா இருக்கு இல்ல..ஏன் பொண்ணு கொடுக்க மாட்டேங்குறாங்களாம்..வாங்க பார்ப்போம். 
அவசியம் அனைவரும் படித்து உணரவேண்டிய பதிவாத்தான் எனக்கும் தோணுதும்மா.  இதுபோன்ற விழிப்புணர்வூட்டும் பதிவுகள் தொடர பதிவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

காயத்ரி அடுத்த பதிவர்.. இணையத்தில் ஒரு பிரபளம் சார்.  நம்ம திண்டுக்கல் தனபாலன் சகோதரர் மாதிரியே இவருக்கும் அறிமுகம் தேவை இல்லை..இருந்தாலும் திரும்ப நாம அறிமுகப்படுத்தும்போது இவரையும், இவரது வலைப்பூவையும் அறிந்திருந்தாலும் இதுவரை படிக்காதவங்க படிச்சு அறியவேண்டியதை அறிவாங்க என்ற எண்ணத்தில்தான் இவரையும் இன்று சேர்த்திருக்கிறேன்.

விசு       : என்னமா பீடிகையே பலமா இருக்கு..

காயத்ரி : நீங்களே இவரைப்பற்றியும், இவரோட தளத்தையும் படிச்சுப்பாருங்க சார்..உங்கள்ளுத் தெரியும்.
நகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேரான ஈரோடு கதிர் அவர்களின் கசியும் மௌனம் தளத்தில் கவிதைகட்டுரைவிமர்சனம்விவசாயம்சிறுகதைகள் என பல்வகைப்பதிவுகள் கொடுத்து அனைவரையும் அசத்திவருகிறார்.  இவரை வலைப்பதிவுலகில் அறியாதவர்கள் மிகக்குறைவே எனினும்புதிதாக இணைந்திருக்கும் பலருக்கு பயனுள்ளதாக இருக்குமென்பதாலும், எம்மைக்கவர்ந்த வலைப்பூக்களில் இவரது கசியும் மௌனமும் ஒன்று என்பதாலும் அறிமுகப்படுத்துகிறேன். தலையை விட வால்தான் அதிகம் ஆடுகிறது..!!  இதில் பல துணுக்குகள் நகைச்சுவையாய் பகிர்ந்துள்ளார். நகைச்சுவைத் தோற்றத்தில் காணப்படும் உண்மைகளாய் திகழ்கின்றன..
//எதைச் சொன்னாலும் நம்புவதற்கு ஒரு கூட்டம் இருப்பதுபோல்எதைச் சொன்னாலும்நம்பாததற்கும் ஒரு கூட்டம் இருப்பதுதான் உலகின் 
விந்தை! //
//சில விசயங்கள் புரிபடாமலே இருப்பதற்குஅது குறித்த ’எதிர்ப்பு’ 
மனோநிலையும்காரணமாக இருக்கலாம்.//

எங்கு மழைப்பெய்திடினும் நம் ஊரின் மீதான பாசத்தில்நம்ம ஊரிலும் மழைப்பெய்திருக்குமா என்ற எண்ணத்தையே ஏற்படுத்த வைக்கும்.  அதுபோலத்தான்  இவர்கூட தன்னுடை மனசும் தழையும் மழையில்.. பதிவில் நம்ம ஊரிலும் மழை பெய்திருக்குமான்னு நடுசாமத்தில் ஊரில் இருக்கும் தாத்தாவை அழைத்துக் கேட்கலாமா என எண்ணிக்கொண்டிருக்கிறார். தொடர்ந்த அவரின் எண்ணங்களை அறிய மேற்கொண்டு படிப்போம் வாங்க. :)
//காலையில் எழுந்து கைபேசியில் ஃபேஸ்புக்கைப் பார்க்க எங்கள் ஊருக்குப் பக்கத்து ஊர்ப்பெண் “ Its raining after 5 mnths... Thank GOD”  எனத் தகவல் இட்டிருந்தார். நேரத்தைப் பார்த்தேன்இரவு 10 மணி எனக் காட்டியது. மனசில் மழை பெய்தது போலிருந்தது.//

விசு: யதார்த்தமா மண்ணின் மணத்தை மணமாய் மனதால் வழங்கியிருக்கிறார். தோழர் ஈரோடு கதிர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
***
காயத்ரி :   சாப்பாடே வாழ்க்கையென சிலர்...வாழ்க்கையே சாப்பாடு என சிலர்...சுவைத்து உண்பவர் சிலர்..உண்பதற்காக உண்ணவேண்டுமே என சிலர்..

விசு     : இதை ஏன்மா இப்ப சொல்ற..??!!

காயத்ரி: இப்ப நீங்க அறிமுகப்படுத்தப்போகும்    Asiya Omar அவர்களின் சமைத்து அசத்தலாம்..  வலைப்பூவில் அனுபவம் பேசுகிறதுவ்கை வகையான உணவு வகைகள் என வலைப்பூவின் பெயர் போலவே அசத்தியிருக்காங்க.

மிகவும் எளிமையான வெஜ் ஓட்ஸ் கிச்சடி ஓட்ஸ் தேங்காய் லட்டு என பலவகைப் பதார்த்தங்களைப் பகிர்ந்து உடனே செய்துபார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது இவரது பதிவுகள்.  செய்து பாருங்க..(ஆனா முதல் சோதனை நீங்கதான் யாரையும் சாப்பிட்டுப்பார்க்க சொல்லி வம்பு செய்யக்கூடாது) அது மட்டுமா எங்க வீட்டு பத்மினியும்தோட்டமும்... அவங்க வீட்டு பத்மினியப்பற்றி என்னமா பெருமையா பேசிக்கிறாங்க..யாருங்க அந்த பத்மினி அவளையும் பார்த்துட்டு வருவோமே அவங்க வீட்டுக்குப்போகலாம் வாங்க..

விசு    : அட ஆமாம்மா.. இதையெல்லாம் இப்பவே சாப்பிடனும்போல இருக்கே...நான் எப்படிம்மா மேற்கொண்டு அறிமுகப்படுத்துவேன்...

காயத்ரி : இதைப்பார்த்ததும், எனக்கு சம்சாரம் மின்சாரதுல நீங்க உங்க மனைவி கோதாவரிகிட்ட காஃபி எப்படி செய்யனும், கேசரி எப்படி செய்யனும்னு சொல்வீங்களே அதைக்கேட்டவுடனே நாங்க  சாப்பிட ஹோட்டலுக்கு எழுந்து போயிடாம படம் பார்த்தோமே அந்த நினைவுதான் சார்...:)

விசு    : தோழமை Asiya Omar அவர்களின் பசித்தூண்டும் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள். 

விசு    : உங்க அளவிற்கெல்லாம் எனக்கு பொறுமை இல்லம்மா. நான் தம்பி கில்லாடிக்கிறுக்கனும், ராகவன் தளத்தையும் அடுத்தடுத்து அறிமுகப்படுத்திட்டு கிளம்பறேன்..நண்பர்கள் தினம் கொண்டாடுவது அவசியமான்னு ஒரு பட்டிமன்றம் போகனும்..அதோட காஃபி குடிக்கனும்னு நீயே நினைவு படுத்திட்ட..

காயத்ரி :நானேதான் வாயக்கொடுத்து உங்கள விரட்டிட்டேனா..?!

விசு    : கில்லாடிக்கிறுக்கன் கலைச்செல்வன் என்றபெயரில் எழுதிவரும் வலைத்தளத்தில் சின்ன சின்ன சிந்தனைகளை சிந்திக்கும்படி வழங்கியிருக்கிறார்.  இந்த சின்னவயதில் இவருக்குள் இவ்வளவு திறமையா என வியக்கும் வகையில் சமூகசிந்தனை சற்றே கூடியிருக்கும் இவரது பதிவுகளில்.
//சங்கூதப் போன இடத்திலே
சங்கூதிட்டாங்க
குத்தாட்டம் போட்ட இடத்திலே
குத்திட்டாங்க
புதைக்கப்போன இடத்திலே
எரிச்சிட்டாங்க
உடலை எரிக்க
போனவங்க
ஊரையே எரிச்சு
வந்தாங்க
என்னமோ குல வழக்கமாம்...//
இதுபோன்ற சிந்தனைகள் சிதறியிருக்கும் அவர் தளம் செல்வோம்.
தம்பி கில்லாடிக்கிறுக்கனின் சமூக சிந்தனை விதைகள் தொடர்ந்து முளைத்துத் தோட்டமாய் மாறிட வாழ்த்துக்கள்.
 *********
 ராகவன் வலைத்தளத்தில் இசைசிறுகதைஅனுபவக்கதைகவிதைகள் நினைவலைகள் என்று பலவிதமான பதிவுகளும் பதிந்திருக்கிறார்.  இவரது கதைகள் உயிர்ப்புடன் கதை மாந்தர்கள் பேசுவதைவிட கதையே பேசுவதை நம்மால் காண இயலும். இவரின் சிறுகதையான பரிவர்த்தனை யில் "பத்தர் கடை விவரணைகள் இயல்பான எழுத்து நடையில் மண்ணின் மணம் வீசச்செய்திருக்கிறார்.
பகலில் மிச்சம் இருக்கிற இரவு என்ற பதிவில் இவர் கூறியிருக்கும் கருத்துக்களை பலரும் உணர்ந்து அனுபவித்திருப்பார்கள் என்றே கருதுகிறேன்.

//அதுவாய் வந்து விழும் வார்த்தைகள் சில சமயம் ஞாபகத்தின் அலமாரிக்குள் குடையும் போது வந்து விழுகிறது கவிதைகள்  அதன் மேல் படிந்து போன தூசிகளுடன். ///
 //தொடர்ந்து எழுதுகிறேன் பன்படுமா என்று பார்க்கலாம்...கால் பதிந்து பதிந்து வழுக்கலான பாறைகளில் ரேகைகள் இன்னும் மிச்சமிருக்கின்றன,.. // 
நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.  மண்ணின் மணம் தொடர்ந்து மணக்கட்டும். 

காயத்ரி : என்னுடைய அழைப்பை ஏற்று இத்துனை நாளும் உங்க பணிகளுக்கு இடையில் நேரம் ஒதுக்கி வலைச்சரம் வந்தமைக்கு வலைச்சர மலர்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் விசு சார்.

விசு    : ரொம்ப மகிழ்ச்சிம்மா..எனக்கும் பல்வேறுபட்டத் தளங்களை அறிய வாய்ப்பு கிடைத்தது.  எப்பவும் மேடைப்பேச்சு, சினிமா, நாடகம்னு இருந்துட்டு ஒரு வித்தியாசமான அனுபவம்.   இத்துனை நாள் நம்ம அரட்டையைப் பொறுமையா சகிச்சுக்கிட்டு இருந்த வலைச்சர தோழமைகளுக்கும், உனக்கு வாய்ப்பளித்து அதன்மூலம் எனக்கு வாய்ப்பு கிடைக்க காரணமாயிருந்த அன்பின் சீனா ஐயாவிற்கும் நன்றிகள். அறிமுகமாகும் அனைத்து தோழமைகளின் எழுத்துக்கள் எண்ணற்று வெளிவர மனமார்ந்த வாழ்த்துக்கள்.

காயத்ரி  : தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி சார்.  தோழமைகளுக்கும் மனமார்ந்த நன்றிகளும், வாழ்த்துகளும்.  _/\_
***
எமது பதிவுகளை சற்றே மாறுபட்ட கோணத்தில் வழங்கிடவே இப்படிப்பட்ட ஒரு  முயற்சி.    இந்தப்பதிவுகள் மூலம் எவரையும் காயப்படுத்தும் எண்ணம் இல்லை.  அறியாது எவர் மனமேனும் வருந்துவதற்குக் காரணமாயிருப்பின் மன்னிக்கவேண்டுகிறேன். 





10 comments:

  1. அக்கா...

    அறிகமுகங்களில் சிலர் புதியவர்கள்...
    சென்று பார்க்கிறேன்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்... அறிமுகப்படுத்திய தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    சிறப்பானதொரு பணியை விசுவை வைத்து அழகாக கொண்டு சென்றீர்கள்...

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வலைச்சரத்தில் வாரம் முழுவதும் விசு அவர்களுடன் சேர்ந்து பதிவர்களை அறிமுகம் செய்தது நன்று.... வாழ்த்துகள்....

    ReplyDelete
  3. @சே.குமார்...மிக்க நன்றி தம்பி..தங்கள் அனைவரின் தொடர்ந்த ஊக்கமே இதற்குக்காரணம்..:)

    ReplyDelete
  4. @வெங்கட் நாகராஜ்...வாழ்த்திற்கு நன்றி தோழர்...

    ReplyDelete
  5. வித்தியாசமான நடையில் நிறைய புதிய அறிமுகங்கள் . தேங்க்ஸ் மேடம்ஜி...

    ReplyDelete
  6. @ஜீவன் சுப்பு...தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி..:)

    ReplyDelete
  7. வலைத் தளங்களை வித்தியாசமாக அறிமுகம் செய்த தங்களுக்கும், கூட இருந்து நல்ல ஒத்துழைப்பு கொடுத்த ’விசு’ அவர்களுக்கும் நன்றி!.. அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  8. @துரை செல்வராஜூ..மிக்க மகிழ்ச்சி தோழர்..தாங்களும் பொறுமையாக எங்களது உரையாடலைக்கண்டு ரசித்து அறிமுகமான முத்துக்களை வாழ்த்தியமைக்கு நன்றியும், மகிழ்ச்சியும். :)

    ReplyDelete
  9. வித்தியாசமாக பதிவர்களை அறிமுகப்படுத்தி அசத்திட்டீங்க.நான் பயணத்தில் இருப்பதால் என்னால் தற்சமயம் தங்களின் அனைத்துப் பகிர்வுகளையும் பார்வையிட முடியாத சூழல்.என் பகிர்வுகளை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. மகிழ்ச்சி.

    ReplyDelete
  10. @Asiya Omar...மிக்க மகிழ்ச்சி தோழமையே.. நோன்பு சிறக்க வாழ்த்துகள்.

    ReplyDelete