நண்பர்களே, சகோதர சகோதரிகளே
கவிஞர்களை மட்டும் நம்மால் ஒரே நாளில் அறிமுகப்படுத்திவிட முடியாது. இதோ, வலைச்சர நிறைவு நாளில் கலக்கல் கவிஞர்களின் அணிவகுப்பு.
கோவை மு சரளா
சுதந்திரம் பெற்று இத்தனை வருடங்களாகியும் இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கும் இன்னல்களை வரிசைப்படுத்திக் கூறிவிட்டு சுதந்திர தின வாழ்த்து தெரிவிக்கிறார், சகோதரி சரளா.
சே.குமார்
சுதந்திர நாட்டின் இழிநிலையை விவரித்து நமக்குள்ளும் சுதந்திரதின வாழ்த்து கூறுகிறார்.
நெல்லை பாஸ்கர்
கட்டிடங்களாக மாறிக்கொண்டிருக்கும் விளைநிலங்களையும் விவசாயியின் ஆதங்கத்தையும் விவரித்துக் கூறுகிறார்.
நளன் கவிதைகள்
ஒரு பெண்ணுக்கான அறிவுரையாக வரும் பெயர் சூட்டப்படாத இக்கவிதை அவள் ஏமாறுவது முகம் தெரியாதவர்களிடம் அல்ல, நன்கு பழகக்கூடிய உடனிருப்பவர்களே என்று கூறுகிறார்.
எழில்
ஒரே கவிதையை கவிதைத் துளிகளாய் தந்திருக்கிறார். ஒவ்வொரு துளியும் அருமை.
இளமதி
வெளிநாட்டில் வசிப்பவர்களின் மனது இப்படித்தான் இருக்குமோ என்று எண்ண வைக்கும் இவரது கவிதை
பிரசாந்த்
இவரது தளம் முழுவதும் கவிதைகளாய் நிரம்பிக்கிடக்கிறது.
இந்திராவின் கிறுக்கல்கள்
வித்தியாசமான கவிதைகளை இவரது தளத்தில் காணலாம். நம்மைச் சுற்றி எத்தனை தேவதைகள் இருக்கிறார்கள் பாருங்கள்.
எழுத்துக்கள் பேசட்டுமே
கவிதைகளால் நிரம்பிக்கிடக்கும் இவரது தளத்தில் எனக்குப் பிடித்த கவிதை. படித்துப்பாருங்கள், நெகிழ்ந்து போவீர்கள்.
அரா தமிழ் செல்வா
தமிழ் சரணாலயம் என்ற பெயரில் எழுதிவரும் இவரது கவிதை ஒன்று:
கணேசன் மோகன்ராஜி
தமிழ்க் கவிதைகள் என்ற தளத்தில் எழுதிவரும் இவரது கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்த இது
ராஜி (கற்றலும் கேட்டலும்)
நம் சக பதிவர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க சகோதரி எழுதியிருக்கும் கவிதை. அனைவருக்கும் பிடிக்கும்
நன்றி...
இரு தளங்கள் புதியவை... நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteமுதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா..
Deleteஏய்.. வயிறே.. மற்றும் விடுதலை வேண்டி.. - கவிதைகளின் தாக்கம் மிக அதிகம்!.. அறிமுகத்திற்கு மிக்க நன்றி!..
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா...
Deleteஅருமையான தொகுப்பு
ReplyDeleteநன்றி அண்ணே...
Deleteவணக்கம்
ReplyDeleteதிரு,சரவணன்(அண்ணா)
இன்று இறுதி நாளில் வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் எனது அன்பு கனிந்த வாழ்த்துக்கள்
அத்தோடு 1வார காலமும் சிறப்பாக தனது கடமையினை கண்ணும் கருத்தும்மாக திறம்பட செய்து முடித்த திரு,சரவணன் (அண்ணா) அவர்கட்கு எனது மனமார்ந்த நன்றியை கூறுகிறேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்....
Deleteநிச்சயம் கலக்கல் அறிமுகம்தான்
ReplyDeleteஅனைவரும் நான் விரும்பித் தொடரும் பதிவர்கள்தான்
அறிமுகமானவர்களுக்கும் அருமையாக அறிமுகம் செய்த
தங்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
நன்றி ஐயா... தங்களது தவறாத வருகைக்கும் கருத்துக்கும்....
Delete'வகுப்பறையில்' முதலில் நுழைந்து ,கடைசியில் 'கற்றலும் கேட்டலும் 'என்று நிறைவு செய்ததில் இருந்து நீங்க நல்ல ஸ்கூல் பையன் ,ரொம்ப சமத்து என்று தெரிகிறது ...வாழ்த்துகள் !
ReplyDeleteஹா ஹா... நான் கவனிக்கவே இல்லை, வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி ஐயா..
Deleteஅனைவருக்கும் வாழ்த்துகள், வலைச்சர ஆசிரியர் பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறீர்கள்....
ReplyDeleteவாழ்த்தியமைக்கு மிக்க நன்றி வெற்றிவேல்..
Deleteநல்ல அறிமுகங்கள்.
ReplyDeleteநன்றி அக்கா...
Deleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கவியாழி ஐயா..
Deleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள் சகோ உங்களுக்கும் தான் .
ReplyDeleteதொடர் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரி...
Deleteஉங்கள் ஆசிரியப் பணி இனிதே நிறைவெய்துகொள்ளும் சமயத்திலும்
ReplyDeleteஎன்னையும் இன்றிங்கு அறிமுகஞ் செய்தமைக்கு
மனமார்ந்த இனிய நன்றி சகோதரரே!
என்னுடன் இங்கு அறிமுகமாகும் அனைத்துப் பதிவர்களுக்கும் உங்களுக்கும் என்
மனங்கனிந்த இனிய நல் வாழ்த்துக்கள்!
த ம.3
நன்றி சகோதரி...
Deleteமூன்றாவது முறையாக பெருமைப் பட வைத்துவிட்டீர்கள்!
ReplyDeleteஅளித்து வரும் ஆதரவுக்கு நன்றி!
நெல்லை பாஸ்கர்.
http://nellaibaskar.blogspot.in/
நன்றி நண்பரே...
Deleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சிவ நேசன்....
Deleteதோன்றித் புகழோடு தோன்றுக.....!
ReplyDeleteஎடுத்துக் கொண்ட பணியை இனிதே நிறைவேற்றி மனமகிழ்வுடன் விடைபெறும் ஸ்கூல் பையனுக்கு உளம்கனிந்த நன்றியை தெரிவித்து இன்றைய கலக்கல் கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள் ,வரும் வலைபதிவு பொறுப்பாளரையும் உளமார வரவேற்கின்றேன் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் த ம 5
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே....
Deleteவணக்கம்.
ReplyDeleteஎன்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி குமார்...
Deleteஎன் சில எழுத்துத் துளிகளை கவிஞர்கள் வரிசையில் அறிமுகப்படுத்தியமை கொஞ்சம் அதிகமோ எனத் தோன்றினாலும் மிக்க நன்றி....அனைத்துக் கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteஎனக்கு பிடித்த கவிதைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறேன்... அதில் தங்களதும் இருப்பது மகிழ்ச்சி... வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி சகோதரி...
Deleteஒரு வார ஆசிரியப் பணியை சீரிய முறையில்
ReplyDeleteசிறப்பாய் செய்து முடித்தமைக்காக
தங்களுக்கு என் வாழ்த்துக்கள் ஸ்கூல் பையன்!
வணக்கம் ஸ்கூல் பையன்
ReplyDeleteஎன்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி. அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் .
எனக்கு அறிமுகம் இல்லாத ஒருவர் என்னை மற்றைய முகம் தெரியா நபர்களுக்கு அறிமுகம் செய்வது என்பது மிகவும் சந்தோசம் தருகிறது... உண்மையில் நான் கிறுக்குபவன் அது உங்கள் கண்ணை குருடாக்காமல் மனது வரை சென்றது நன்மைக்கே ..உங்கள் அனைவரது ஆதரவு பார்த்ததும் இனி கிறுக்காமல் அழகாக எனது கவிதைகளை வரைய வேண்டும் என்ற பொறுப்பினை தருகிறது
எனது புனை பெயர் சொல்லி அழைத்தாள் நன்றாக இருக்கும் " Heart beat -Santh
அனைவருக்கும் எனது நன்றிகள்
என் மகளுக்கு எழுதிய கவிதையை ரசித்து, மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி தோழரே...
ReplyDeleteஎனது கவிதையை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி தோழர்
ReplyDelete