Monday, August 19, 2013

கோவையிலிருந்து அகிலா...



வலைச்சரத்தின் இனிய வாசகர்களுக்கும் அன்பான பதிவர்களுக்கும் என் வணக்கங்கள். இந்த இனிய வாரம் எனக்கே என்று சொன்ன வலைச்சரத்தின் பொறுப்பாசிரியர் சீனா அவர்களுக்கும் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கும் என் நன்றி.

ஆசிரியர் பொறுப்பு...
மிகப் பெரிய வேலைதாங்க இது. நாம பாட்டுக்கு பதிவு போட்டமா காணாம போனமான்னு இல்லாம தீயா வேலை செய்ய வைக்குது....

இந்த வாரம் முழுவதும் தேடிப் பிடிச்சு நிறைய வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தலாம்ன்னு இருக்கிறேன். என்னையும் இந்த வலைச்சரத்தில் தான் இதற்கு முன் ஆசிரியர் பொறுப்பு ஏற்றவர்கள் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். ஒரு சிறிய வட்டத்தில் பிரபலமாய் இருக்கும் நம்மை பெரிய வட்டத்தில் இன்னும் பிரபலமாக்கி விடுகிறது இந்த அறிமுகம்.

இதில் நமக்கு என்ன பயன் என்றால், சும்மா கிறுக்கிட்டு இருப்போம். நாலு பேர் கவனிக்கிறாங்கன்னு தெரிந்தவுடன் கிறுக்கல்களை எழுத்துக்களாக உருப்படியாக்குவோம்.

என்னை பற்றி...
நண்பர் சீனு எல்லோரையும் பற்றி சொல்லும் முன் என்னை பற்றி சொல்லனும்ன்னு சொன்னார். பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை.

நான்தான் அகிலா.
என் பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் புனைப் பெயர் எதுவும் வைத்துக் கொள்ளவில்லை.
படித்தது பொறியியலும் கணினி மேற்படிப்பும். பிடித்துச் செய்யும் தொழில் ஓவியம் வரைவது.
அப்புறம் கவிதை எழுதுவது, சமையல் செய்வது (இது பெண்கள் செய்யும் வேலைதானேன்னு முணுமுணுக்கக் கூடாது....அதையும் பிடித்தால் தான் செய்வோம் நாங்கள்...)
அவ்வளவுதாங்க....  

தமிழில் என் வலைப்பதிவு நான்கு...
இவற்றில் பிரதானமாய் இருப்பது சின்ன சின்ன சிதறல்கள் தான்.
நிறைய கற்பனை, கொஞ்சமாய் கவிதை, அதில் இன்னும் கொஞ்சமாய் சமூக அக்கறை, பெண்ணாக இருப்பதால் கொஞ்சம் அதிகமாய் பெண்ணீயம் இது எல்லாம் சேர்ந்ததுதான் என் வலைப்பதிவு.

கவிதைகளாய்...
ஆச்சிரியப்படுத்திய இரவின் நிசப்தங்கள்...

கண்ணீருடன் காதலின் வலிகள்...

அக்கறையுடன் சமூக விஷயங்கள்...

என் ரயில் பயணங்களின் பதிவுகள்...

பெண்களைப் பற்றிய பதிவுகள்...

திரை விமர்சனம்...

இது போதும் என்று நினைக்கிறேன்...

இனி நாளை முதல் வரும் இந்த ஆறு நாட்களும் வலை போட்டுத் தேடி தமிழ் வலைபதிவர்களின் அழகான எழுத்துக்களைக் கோர்த்து உங்களுக்குக் கவிதையாக்கித் தருகிறேன். ஆனால் தினமும் அதனுடன் கண்டிப்பாக என் குட்டி கவிதை ஒன்றையும் உங்களுக்கு இலவசமாகத் தருவேன்....வேற வழி...படிச்சுத் தானே ஆகணும்...ஹாஹா...

சந்தோஷமா இருங்க...
நாளைக்கு பட்டியலோடு வரேன்...

நன்றி...




59 comments:

  1. வணக்கம் சகோதரி... சீனு அல்ல சீனா என்று மாற்றிக்கொள்ளவும்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி சரவணன்...

      Delete
    2. நான் கூட ஒரு நிமிடத்தில் குயம்பி(எழுத்துப் பிழை இல்லை) விட்டேன்...
      விம் போட்ட ஸ்பைக்கு நண்ணி

      Delete
  2. அன்பு சகோதரி அகிலா...
    தங்களின் வலைச்சரப்பணி சிறக்க
    மனமார்ந்த .வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. சுருக்கமான ஆயினும்
    நிறைவான அருமையான அறிமுகம்
    இவ்வார வலைச்சர ஆசிரியர் பணியிலும் சிறக்க
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா...

      Delete
  4. சகோதரிக்கு வணக்கம்...

    அசத்துங்க...

    ReplyDelete
    Replies
    1. செய்கிறேன் தனபாலன்...நன்றி...

      Delete
  5. அழகான அறிமுகம். நன்று!.. வருக.. வருக.. என்று தங்களை - தங்களின் கவிதைகளை வரவேற்கிறேன்!..

    ReplyDelete
    Replies
    1. உங்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்வேன் என்கிற நம்பிக்கையில் என் நன்றி...

      Delete
  6. வாழ்த்துக்கள் அகிலா வாருங்கள் வளமான பதிவுகளைத் தாருங்கள் கோவையா? சென்னையா? என்பது முக்கியமல்ல

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி நண்பா...

      Delete
  7. என்னைப்பற்றி என்று நீங்கள் உங்களைப்பற்றி சொல்லியிருப்பதும் உங்களின் கவிதை போல மிக சுருக்கமாகவும் அழகாகவும் தெளிவாகவும் சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா...

      Delete
  8. வலைசர பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. ஒரு வலைப்பதிவை சிறப்பாக எழுதுவது என்பதே பெரிய விசயம். பல வலைத்தளங்களை எழுதுகிறீர்கள் (ஆங்கிலம், தமிழ்). அகிலா என்றால் சுறுசுறுப்பின் மறுபெயரா? உங்க கவிதை நூல் பற்றி சொல்லவில்லை உங்க தன்னடக்கம் கண்டு வியக்கேன்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கலாகுமரன்....
      என் கவிதை நூல் பற்றி நீங்கள் குறிப்பிட்டதற்கு என் நன்றி...என் சுயவிவரமே அதிகமாய்ப் பட்டது எனக்கு...அதனால் தான்...

      Delete
  10. வாழ்த்துகள் அகிலா. நிச்சயமா நல்லா செய்விங்க. அசத்துங்க, ’சின்னச் சின்ன சிதறல்கள்’ நூலாக வெளியிட்டிருப்பதை குறிப்பிடாமல் விட்டுட்டிங்களே,

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி என்னை ஊக்கபடுத்தியதற்கு குமார்...

      Delete
  11. வாழ்த்துக்கள் தங்களின் கவிப்பணி சிறக்க...
    முகநூலில் தெரிவிக்கவேண்டுமா வலைப்பதிவின் விவரத்தை அல்லது வலைப்பதிவில் உள்ள ஒவ்வொரு படைப்பையும் பதிவாக போடவேண்டுமா ? விளக்கம் கொடுத்தால் நலம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தேவாதி ராஜன்...

      Delete
  12. வணக்கம் அகிலா
    சின்னசின்ன சிதறல்களின் நீண்ட நாளைய ரசிகை நான்.
    சின்னசின்ன சிதறல்களை நானும் என் வலைச்சர ஆசிரியர் வாரத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

    உங்களுடைய இன்னொருதளம் அடுப்படியும் தெரியும். மற்ற இரண்டு தளங்கள் தெரியாதவை. வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள். உங்கள் அறிமுகங்களை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.
    அன்புடன்,
    ரஞ்சனி

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் போன்றோரின் அறிமுகம் தான் என்னை போன்றோரை அரவணைத்தது மேம்...மிக்க மகிழ்ச்சி...

      Delete
  13. வணக்கம் தோழி!

    அழகிய சுருக்கமான உங்கள் சுய அறிமுகம் அருமை!

    இவ்வார ஆசிரியப்பணி சிறப்பாக அமைய நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. வணக்கம் சகோதரி. வாருங்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies

    1. வலைசர பயணம் இனிதே சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

      Delete
    2. நன்றி இராஜ முகுந்தன்...

      Delete
    3. நன்றி நண்பா (தனிமரம்)...

      Delete
  15. வாங்க வாங்க அசத்துங்க.

    ReplyDelete
    Replies
    1. செய்றேன் சசி...நன்றி..

      Delete
  16. வாழ்த்துக்கள் அகிலா... இன்றைக்கே ஆரம்பித்திருக்கலாமே உங்கள் கவி மழையை...

    ReplyDelete
    Replies
    1. செய்திருக்கலாம் தான் எழில்...முதலில் கொஞ்சம் காற்றைச் சுவாசிக்கவிட்டு பின் கவிதையைச் சுவாசிக்கச் செய்யலாமே என்ற நல்ல எண்ணம்தான்...
      நன்றி எழில்...

      Delete
  17. கோவையிலிருந்து இணையத்தின் மூலம் கவிச்சேவை செய்து வரும் உங்கள் பணி வலைச்சரத்திலும் தொடரட்டும்..

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் சகோதரி ,
    ஆசிரியர் பொறுப்பு தலைமை தாங்க வருக !வருக ! என வரவேற்று பெருமையுடன் வரவேற்கிறோம் .

    ReplyDelete
  19. வணக்கம்

    இந்தவாரம் வலைச்சரப்பொறுப்பு ஏற்றதை இட்டு மிக மகிழ்ச்சியாக உள்ளது இந்தவாரம் சிறப்பானவாரமாக அமைய எனது வாழ்த்துக்கள் உங்கள் வலைப்பூவை நான் நன்கு அறிந்தநான்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சியும் நன்றியும் ரூபன்...

      Delete
  20. வாழ்த்துககள்

    ReplyDelete
  21. வலைச்சர ஆசிரியர் பணிக்கு இனிய வாழ்த்துக்கள் அகிலா.

    ReplyDelete
  22. வலைச்சர ஆசிரியர் பணியை சிறப்பாகச் செய்ய வாழ்த்துக்கள்..
    நீங்க கலக்கிருவீங்கன்னு தெரியும்.... ஜமாய்யுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. சரிங்க...நல்லா செயறேன்...நன்றி குமார்..

      Delete
  23. சுருக்கமாய் சுய அறிமுகங்கள்!
    பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  24. சிறந்த பதிவுகளை எதிர் நோக்கி காத்திருக்கிறோம்...வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. சிறப்பாகவே செய்ய நினைத்திருக்கிறேன்...நன்றி ...

      Delete
  25. வெல்கம் அகிலா மேடம்...

    சிறப்பான பதிவுகளை பகிர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி பிரகாஷ்...

      Delete
  26. வருக சகோதரி...., சிறப்புடன் ஆசிரியப்பணியாற்ற வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  27. ஆசிரியர் பொறுப்பேற்றிருக்கும் தங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்களுக்கு...

      Delete
  28. தங்கள் வரவே அசத்தலாகத்தான் இருக்கு தங்கள் பணி சிறக்க உளம் கனிந்த வாழ்த்துக்கள் போனவாரம் ஸ்கூல் பையனை வழியனுப்பும் போதே உங்களை வரவேற்று விட்டேன் அவ் அவ்.... நன்றி

    ReplyDelete
    Replies
    1. பார்த்தேன்...நன்றி சீராளன்...

      Delete