Wednesday, September 18, 2013

ஆவி கொலை வழக்கு- 2 (முதல் பொறி)


                               கதவு தட்டப்படும் சப்தம் கேட்டு நஸ்ரியா சென்று திறக்க, அங்கே நஸ்ரியாவின் பக்கத்து பிளாட் தோழி மற்றும் ஒன்றாய் பணிபுரியும்  ஆண்ட்ரியா நின்றிருந்தார். "என்ன ஆண்ட்ரியா, இந்த நேரத்துல? " என்றபடி கதவைத் திறக்க சற்று பதட்டத்துடன் உள்ளே நுழைந்த ஆண்ட்ரியா "இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி உன் ப்ளாட்டுக்குள்ள   யாரோ நுழைய முயற்சி பண்ணிட்டு இருந்தாங்க.. நான் வர்ற சத்தம் கேட்டதும் எட்டிக் குதிச்சு ஓடிப் போயிட்டான்.  ஆனா போகும் போது இந்த பர்ஸ கீழே தவற விட்டுட்டு போயிட்டான்." என்றபடி அந்த பர்சை நஸ்ரியாவிடம் கொடுக்க அதை பிரித்து பார்த்த நஸ்ரியா கொஞ்சம் அதிர்ந்தாள்.



                                 "இவரை எனக்கு நல்லா தெரியும். ஆவி என்கிட்டே இவரை பத்தி சொல்லியிருக்கார். ஆவியின் நண்பர் இவர்." என்று நஸ்ரியா கூறியதை கேட்ட ஆண்ட்ரியா "ஆவியின் நண்பரா? அவர் எதுக்கு இந்த நேரத்துல உன் அறைக்கு வரணும். அதுவும் திருட்டுத்தனமா ஓடிப் போகணும் " என்று கேள்வி மேல் கேள்வி கேட்க "இவர் பேர் ஜீவா.. இவர் கோவை நேரம் ங்கிற வலைப்பூ எழுதிகிட்டு இருக்கார்.  தமிழ் நாட்டில் இவருக்கு தெரியாத உணவகங்களே இல்லைன்னு சொல்லலாம். அது மட்டுமில்ல இவர் வெளியிட்ட புத்தகத்துல  தமிழக கோவில்கள் பற்றிய நல்ல பல தகவல்கள் இருக்கு..இவர் ரொம்ப நல்லவராச்சே.. இவர் எதுக்கு இங்கே?" என்று குழம்பிய நஸ்ரியாவிடம் ஆறுதல் கூறி நன்கு உறங்கும்படி பணித்துவிட்டு வெளியேறினாள் ஆண்ட்ரியா.

                                மறுநாள் காலை நேரத்திலேயே புறப்பட்டு தன் அடுத்த சந்தேக லிஸ்டில் உள்ளவரை பார்த்துவிட்டு ஜீவாவை சந்தித்து உண்மை அறிய வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள். தான் சந்தேகப்படும் நபரின் வீட்டுக் கதவை தட்டிய நஸ்ரியா அவரைப் பார்த்து "மிஸ்டர் சீனு?" என்றாள். "சொல்லுங்க" என்றார் சீனு, தன் மூக்குக் கண்ணாடியை சரி செய்து கொண்டே. "சென்ற மாதம் நடந்த ஆவி கொலை வழக்கைப் பற்றி தெரியுமா?" " நல்லாத் தெரியும் மேடம்.. அவரு "பதிவர் சீனுவைக் கண்டித்து" ன்னு எழுதிய ஒரு பதிவை ஆதாரமா வச்சுட்டு உங்களோட சேர்த்து நாப்பது பேர் வந்துட்டாங்க..விசாரணை ங்கிற பேருல " எனவும், அதற்கு நஸ்ரியா "என்னிடம் ஆவியின் டைரி ஒன்று இருக்கிறது.. அதில், நீங்க சொல்ல விரும்பாத ரகசியம் ஏதோ ஒன்று இருக்கிறதாகவும், அது என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமென்றும் எழுதியிருந்தது." மெல்லியதாய் ஒரு புன்னகை செய்த சீனு, "அது நான் எழுதின தொடர். இன்னும் எழுதி முடிக்காததால அந்த தொடரின் முடிவை தெரிந்து கொள்ள ஆர்வம் ன்னு எழுதியிருக்கிறார்" என்றதும் "சாரி மிஸ்டர் சீனு, தொல்லைக்கு மன்னிக்கவும், இது எங்க தொழிலின் ஒரு பகுதி" என்று கூறிவிட்டு அடுத்த நபரை நோக்கி பஸ்ஸ்டாண்டிற்கு சென்றாள்.

                               கிழக்கு தாம்பரம் பஸ் ஸ்டாப்பில் T151 பஸ் எடுத்து நகர ஆரம்பித்த போது ஓடிவந்து ஏறிய ரூபக் ராம், வழக்கம்போல் பஸ்சின் உள்ளே கண்களால் அலச, "உள்ளே ஏறி வாங்க ரூபக்" என்று அழைத்து தன்னருகில் இருந்த இருக்கையில் அமர்த்தி ஆவியை பற்றிய கேள்விகளை கேட்டாள். அதற்கு அவரோ "நான் இன்னொசன்ட் ங்க.. என்னைப் பார்த்தா கொலை செய்யுற மாதிரியா தெரியுது?" எனவும் "ஆமாமா, உங்க குள்ளன் சிறுகதை படிச்சப்பவே தெரிஞ்சுது நீங்க ஒரு அப்பாவின்னு..ஆனாலும் நீங்க செஞ்சிருக்கமாட்டீங்கன்னு என் உள்மனசு சொல்லுது. அதிருக்கட்டும் இன்னைக்கு அந்தப் பொண்ணு T151 ல வரலையா.." என்று நஸ்ரியா கேட்டதும் எஸ்கேப் ஆனார் ரூபக்.

                                 பஸ்ஸில் இருந்து இறங்கியவளின் செல்பேசி அலறியது. அதை உயிர்ப்பித்ததும் "துப்பறியும் நிபுணர் நஸ்ரியாவா?" "ஆமா சார், நீங்க?"
"என் பேர் கவியாழி, நான் பல கவிதைகளை என் வலைப்பூவில் எழுதியிருக்கிறேன். தமிழ் மணம் ரேங்கிங்கில் முதல் ஐந்தில் இருக்கிறேன். ஆவி கொலை வழக்கில் என்னையெல்லாம் சந்தேகப் படமாட்டீங்களா?" திடீரென்று அவர் இப்படி கேட்டதும் அதிர்ச்சியடைந்த நஸ்ரியா "என்ன சார் சொல்றீங்க" என்று  கேட்டாள்   அவர் சிரித்துவிட்டு "ஹ்யூமர்..ஹ்யூமர்.. சும்மா விளையாட்டுக்கு கேட்டேன்.. ஆவி என் நண்பர் தான். அவர் வழக்கை சீக்கிரம் துப்பறிஞ்சு கொலைகாரனை கண்டுபிடிங்க.." ஒரு பெருமூச்சு விட்டபடி செல்பேசியை கட் செய்துவிட்டு சில எண்களை அதில் ஒற்றி எடுத்தாள்.

                                லைன் கிடைத்ததும் "ஹலோ மிஸ்டர் ஜீவா?" என்றதும் "ஆமாம், நீங்க?" என்றதும் "நான் டிடக்டிவ் நஸ்ரியா பேசறேன்.. உங்க கூட கொஞ்சம் பேசணும்" என்றதும் "சாரி ராங் நம்பர் " என்று கூறி போன்  வைக்கப்பட அவள் மனதில் சந்தேகம் தீவிரமானது. கோவை சென்று ஜீவாவை நேரில் சந்திப்பது என முடிவு செய்தாள். அடுத்து தன் லிஸ்டில் உள்ள பெயரை பார்த்ததும் கொஞ்சம் தயங்கினாள். அவர் ஒரு பிரபலம் என்பதாலும் ஆவி அவர் மீது பெருமதிப்பு வைத்திருந்ததும் கொஞ்சம் யோசிக்க வைத்தது. இருந்த போதும் தன் கடமை அது என்று சமாதானப் படுத்திக் கொண்டு மேற்கு மாம்பலத்தில் உள்ள அவர் வீட்டு கதவைத் தட்டினாள் .
         
                                    கதவை திறந்து வெளியே வந்த பாலகணேஷ் எதிரே நஸ்ரியா நிற்பதை பார்த்ததும் "மின்னல் வரிகளின் இல்லம் தேடி வந்த மின்னலே வா, அழைக்காமல் வந்த அழகே வா" என்று உள்ளே அழைக்க அதற்குள் உள்ளிருந்து "யாருங்க அது?" என்ற குரல் கேட்க,  "யாருமில்ல சரிதா, யாரோ சேல்ஸ் கேர்ள் ன்னு நினைக்கிறேன்.. (நஸ்ரியாவிடம் மெதுவாக) யாரும்மா நீ" என்கிறார்.  நஸ்ரியா சிரித்துவிட்டு "ரெமோ, நானும் உங்க விசிறிதான். நான் இப்போ உள்ளே வந்தா நீங்க இன்னொரு சரிதாவின் சபதம் எழுத வேண்டியிருக்கும். நான் அப்புறமா வர்றேன்" என்று கூறிவிட்டு தனக்கு தானே "இவரைப் போய்  சந்தேகப்பட்டோமே, நல்ல மனிதர்" என்று எண்ணிக்கொண்டே நடக்க ஆண்ட்ரியாவிடமிருந்து போன். "நஸ்ரியா, நான் ஆவியோட செல்பேசி கடைசியா பேசிய எண்களை சோதனை செய்த போது அதில் சம்பவ தினத்தன்று பதிமூன்று முறை ஜீவாவுக்கு கால் போயிருக்கு. இன்னொரு அதிர்ச்சியான தகவலும் இருக்கு." என்று அவள் கூறிய தகவல் கேட்டு இடிந்து உட்கார்ந்தாள் நஸ்ரியா..அது..


தொடரும்..

                               

52 comments:

  1. வணக்கம்
    கோவை ஆவி(அண்ணா)

    இன்று வலைச்சர அறிமுகங்கள் அனைருக்கும் எனது வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன்.. மற்ற பதிவர்களின் வலைதளத்துக்கும் சென்று அவர்களின் அறிமுகம் குறித்து தெரிவித்ததற்கும் நன்றி,,

      Delete
  2. வணக்கம்
    கோவை ஆவி(அண்ணா)

    இன்று வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. ச­ரி­தான்... ஹீ­ரோ­வா­க ­ஆ­சைப்­பட்­­ற­வனை ­இப்­ப­டி ­அ­நி­யா­யத்­துக்­கு ­வில்­ல­னாக்க்­கிட்ட்­டி­யே ­ஆ­வி! ­­ஆ­வி­யோ­ட ­அ­ரா­ஜ­கத்­துக்­கு ­அ­ள­வே ­இல்­ல ­போ­ல...! ­நேத்த்­திக்­கு ­ஆ­வி­கிட்­ட ­நஸ்­ரி­யா ­கா­த­லச் ­சொல்­ல ­நி­னைச்­சி­ருந்­தான்­னு ­சொல்­லி ­கா­து­ல ­பு­கை­வ­ர ­வெச்­ச­துக்­குப் ­ப­ரி­கா­ர­மா ­இன்­னிக்­கு ­என் ­வீட்­டுக்­கே ­அ­னுப்ப்­பிட்­ட­து­ல கூ­லாக்க்­கிட்­டே. நீ ­பொ­ழைக்க்­கி­ற ­புள்­ள­தான்! (ச­ரி­தா ­இல்­லா­த ­நே­ர­மா ­அ­னுப்­பி­யி­ருக்­கக் ­கூ­டா­தோ?) என்­னைச் ­சேர்ர்ந்­த ­அ­­னை­வ­ரோ­ட­யும் ­­என் ­த­ள­மும் ­பே­சப்­பட்­ட­து­ல ­ட­புள் ­சந்­தோ­ஷம்!

    ReplyDelete
    Replies
    1. பாஸ், அவரு எதிர்கால சூப்பர் ஸ்டார்.. வில்லனா ஆரம்பிச்சு ஹீரோவா மாறி அப்புறமா அரசியலுக்கு வர்ற யோகம் அவருக்கு இருக்கு..

      //(ச­ரி­தா ­இல்­லா­த ­நே­ர­மா ­அ­னுப்­பி­யி­ருக்­கக் ­கூ­டா­தோ?)..//

      சரிதான், அக்காவுக்கு பூரிக்ககட்டை பார்சல் பண்ணவேண்டிய நேரம் வந்திடுச்சுன்னு நினைக்கிறேன்.. (இதெல்லாம் என்ன பெருமையா, இல்ல கடமை ஸார்..;-) )

      Delete
    2. என்னது என்னை பார்க்க நஸ்ரியா வராங்களா...ஹையா ஜாலி....

      Delete
    3. புடிச்சிட்டு போக போலிஸ் வரும்போதும் பயபுள்ள சந்தோசத்த பாரு.. இந்தக் கலவரத்துலயும் உனக்கு கிளுகிளுப்பு கேட்குது.. ம்ம்.. நடத்து மாப்ளே நடத்து..

      Delete
    4. ஒரு உணவகத்தையும் பாக்கி விடுவதில்லை போல.. ஜீவா.

      Delete
    5. உணவகத்தையும் விடுவதில்லை...-----

      Delete
  4. நான் தவறாது தொடரும்
    அருமையான பதிவர்கள்
    அறிமுகம் செய்த விதமும் சிறப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா.. அந்த பதிவர்கள் வரிசையில் கடைசியில் அடியேனும் இடம் பெற துடிக்கிறேன் ஐயா..

      Delete
  5. ஹலோ மிஸ்டர் ஆவி, ஆண்டிரியாவையும் விட்டு வைக்கலையா.... கவியாழி எதுக்கு சம்மன் இல்லாம ஆஜராகுறாரு?

    ReplyDelete
    Replies
    1. அதுதான் அவரே சொல்லிட்டாரே, ஹ்யூமர்.. ஹ்யூமர்..

      Delete
  6. அனைத்தும் அருமையான தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்... கலக்கல் தொடரட்டும்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்..

      Delete
  7. அன்பின் ஆவி - அறிமுகங்கள் அனைத்தும் அருமை - துப்பு துலக்கும் நஸ்ரியா கடுமையா வேலை செய்யறாப்ல இருக்கு - இன்னும் 4 நாள் இருக்கே - அதுக்குள்ளே கண்டு பிடிச்சுடுவாரா - பலே பலே - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா.. கண்டுபிடிச்சாகணுமே.. அப்படித்தானே ஸ்க்ரிப்ட்ல இருக்கு..

      Delete
  8. தொடர்ந்து படிக்கும் வலைப்பூக்களின் சொந்தக்காரர்களை இன்று நஸ்ரியா மூலம் அறிமுகம் செய்தமை நன்று.

    வாழ்த்துகள் அனைவருக்கும்.....

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட் சார்..

      Delete
  9. விறுவிறுப்பான
    வித்தியாசனான
    வேகமான துப்புத்துலக்கலுடன்
    அருமையான அறிமுகங்கள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. நன்றி அம்மா.. நாளைக்கு இன்னும் கொஞ்சம் விம் போட்டு துலக்கிடுவோம்.. ;-)

      Delete
  10. "ரெமோ கணேஷ் " பேரு நல்லாருக்கே. ஜீவாதான் என்கிற எவிடன்ஸ் சிக்கிருக்கு. எனக்கு லெக் பீசும் சுவையான சூப்பும் செஞ்சு குடுத்து இருக்காரே அவரா இருக்காதுன்னு உள் மனசு சொல்லுது. நஸ்ரியாவுக்கும் இது மாதிரி ஏதுனா செஞ்சு போட்டு வழக்கிலிருந்து தப்பிச்சுக்குவாருன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு...பார்போம்.

    ReplyDelete
    Replies
    1. "ரெமோ கணேஷ்" நான் கொடுத்த பேர் இல்ல.. அது பதிவுலகம் அவருக்கு பாசமா கொடுத்த பேரு.

      Delete
    2. அது முதல் பொறி மட்டுமே.. இன்னும் பல தடயங்கள் காத்திருக்கு.. தொடர்ந்து வாங்க..

      Delete
  11. அட இது வித்தயாசமாக இருக்கே......அருமை....!

    ReplyDelete
    Replies
    1. வாங்கண்ணா.. வணக்கங்கண்ணா..

      Delete
  12. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... எப்படியோ நஸ்ரியா , ஜீவா படத்து ஹீரோயினாகப் போறாங்க.....

    ReplyDelete
    Replies
    1. ஜீவா தயாரிக்கற படத்தை தானே சொன்னிங்க..அதுல ஹீரோ யாருன்னு நீங்க சொல்லலியே.. என்னது நானா.. என்ன மேடம் என்னையே நடிக்க சொல்றீங்க.. சரி நீங்க கேட்டுக்கிட்டதுனால நான் ஒத்துக்கறேன்.. ஹிஹி..

      Delete
  13. விருவிறுப்பான அறிமுகங்கள் சுவாரஸ்ய நடை கலக்குங்கள் நண்பரே வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழி.. வருகைக்கும் உங்கள் மேலான கருத்துக்கும்..

      Delete
  14. வித்தியாசமான முயற்சி தலைவா ... செம கலகலப்பு ... அடிச்சி விளையாடுங்க ...

    ReplyDelete
    Replies
    1. நன்றி அரசன். யார அடிக்கலாம் சொல்லுங்க.

      Delete
  15. ஹஹ சிரித்தபடி படிக்க நல்லா இருக்கு.. இவர் காமெடி ஆசிரியர் போல.. ஹஹ ..

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு பதிவுக்கப்புறம் இப்பதான் உங்களுக்கு தெரியுது.

      Delete
  16. நல்லா போய்கிட்டு இருக்கு...

    அப்டியே, நஸ்ரியாவ சாளையக்குறிச்சிக்கும் ஒரு ரெண்டு நாள் அனுப்பி வையுங்களேன்... உங்களுக்கு புண்ணியமா போகட்டு. நானும் ஊற சுத்திக்காட்டுவல்ல....

    விறு விருப்பான புது முயற்சி அண்ணா... தொடர்ந்து கலக்குங்க...

    ReplyDelete
    Replies
    1. தம்பி நீ கேக்குற தொனியே சரியில்ல. உன்னை நம்பி எல்லாம் அந்தப் புள்ளைய அனுப்பி வைக்க முடியாது.

      Delete
  17. வெகு நாட்களுக்குப் பின் நல்ல துப்பறியும் நாவல்!.. நன்றி!.. அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  18. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. செம அட்டெம்ப்ம்ட் தலைவரே.. keep rocks

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் ஹாரி.

      Delete
  20. இந்த வார வலைச்சர ஆசிரியர் நீங்களா? அடிக்கடி வெளியூர் போவதால் சரியாக பார்க்கவில்லை. Anyway, இனி தினமும் உங்களின் அறிமுகங்களைப் பார்க்கிறேன்; படிக்கிறேன். இன்றைய அறிமுகங்கள் எல்லோருமே தெரிந்தவர்கள் தான்.அவர்களுக்கும்
    ஆசிரியர் பணி சிறப்பாக அமைய உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கம்மா.. உங்க கருத்துகளையும் சொல்லுங்க..

      Delete
  21. T151இல் எந்தப் பொண்ணும் வரலையேன்னு எங்கன என்னைத் தேடி நஸ்ரியாவா... அருமை :)

    குள்ளன் கதையை இங்கு அறிமுகம் செய்த ஆவிக்கு என் மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
    Replies
    1. வாப்பா, ரொம்ப லேட்டு.. அடுத்த பார்ட் போட்டாச்சு பாரு..

      Delete
  22. கதையோடு அறிமுகங்கள் அருமை
    அசத்தலான நகர்வுகள்

    வாழ்த்துக்கள் அனைவருக்கும்
    வாழ்கவளமுடன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சீராளன், வருகைக்கும் கருத்துக்கும்..

      Delete
  23. // தன் மூக்குக் கண்ணாடியை சரி செய்து கொண்டே.// இம்புட்டு க்ளோசாவா வாட்ச் பண்றது

    //ஹ்யூமர்..ஹ்யூமர்.. சும்மா விளையாட்டுக்கு கேட்டேன்.. ஆவி என் நண்பர் தான்.// ஹா ஹா ஹா

    சொல்ல விரும்பாத ரகசியம் தூசி தட்டனும்.. இப்போதைக்கு முடியாது.. இருந்தாலும் அதை அறிமுகம் செய்த ஆவிக்கு கோடான கோடி நன்றி

    ReplyDelete
  24. சீனு, தன் மூக்குக் கண்ணாடியை சரி செய்து கொண்டே. நல்லாத் தெரியும்

    ReplyDelete