Friday, September 20, 2013

ஆவி கொலை வழக்கு-4 ( யார் அந்த முகமூடி?)




                                 அவசரத்தில் ஸ்கார்ப்பியோவின் நம்பரை பார்க்க மறந்ததை நினைத்து தனக்குத் தானே திட்டிக் கொண்டாள். செல்போனில் எதோ மெசேஜ் வர அதைப் படித்தாள். அது ஆண்ட்ரியா இன்னும் விசாரிக்க வேண்டிய பதிவர்களின் பெயர்களை அனுப்பியிருந்தாள். ரோஜாக்கள் என்ற பெயரில் காதல், நட்பு, பாசம் என எல்லா வகை கவிதைகளும் எழுதி வரும் பிரஷா, பெண்களை தேவதை என வர்ணிக்கும் சமூகத்தில் "அவன் ஆண் தேவதை" எனும் பெயரில் எழுதி வரும் யாமிதாஷா.. உறவுகள் பற்றிய பல கவிதைகள் இயற்றிய சின்னசின்ன தூறல்கள் அகிலா,  பல்வகையான சுவையான தகவல்களையும் தன் "கரந்தை மலரில்" கொடுக்கும் கரந்தை ஜெயக்குமார். தஞ்சை பெரிய கோவிலின் சிறப்பை  இவர் எழுதிய "யானையை விழுங்கும் பாம்பு" கட்டுரை சிறப்பாக விளக்கியுள்ளார்.
     
                                   இந்தக் குறுந்தகவலைப் படித்த போதும் அதற்கு மேலும் வேறு யாரையும் விசாரிப்பது பலனளிப்பதாய் தெரியாததால் தன்னுடைய விசாரணையை தன் பிளாட்டுக்கு வந்து சென்ற ஜீவாவிடமிருந்து ஆரம்பிக்கலாமென்று முடிவு செய்தாள். அதே நேரம் புத்தகக் கண்காட்சியின் இடையே யாரோ பாடுவது போல் சப்தம் கேட்க உள்ளே சென்று பார்த்தாள். அங்கே சுப்புத்தாத்தா தானே மெட்டமைத்த பாடலை மேடையில் பாடிக்கொண்டிருக்க அங்கே கூடியிருந்த மொத்த கூட்டமும் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தது. அவர் பாடி முடித்ததும் ஒவ்வொருவராய் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க, நஸ்ரியாவும் அவரிடம் சென்று "தாத்தா, ரொம்ப நல்லா பாடினீங்க.. அன்றாட நிகழ்வுகள நகைச்சுவையோட நீங்க எழுதறத படிக்க ரொம்ப நல்லா இருக்கு." என்றாள.

                                      எழில் மேடத்திடம் ஜீவாவின் அலுவலக முகவரி வாங்கிக்கொண்டு காந்திபுரம் சென்றாள். கிராஸ்கட் ரோடில் அம்மணிகளின் அழகை ரசித்தபடியே முகநூல் ஸ்டேட்டஸ் போட்டபடி அமர்ந்திருந்த ஜீவா ஒரு நிமிடம் நஸ்ரியாவை தன் அலுவலகத்தின் முன் பார்த்தபோது சற்று அதிர்ந்து பின் சுதாரித்து "உள்ளே வாங்க" என்றார். "ஜீவா, உங்ககிட்ட பேசறதுக்காக போன் செய்தேன்.. ஆனா ராங் நம்பர்ன்னு கட் பண்ணிட்டீங்க.. எதுக்காக என் வீட்டுக்கு வந்து உளவு பார்த்தீங்க.. சொல்லுங்க" என்றாள். "நானா, உங்க வீட்டுக்கா? என்ன சொல்றீங்க. நான் எங்கயும் போகவே இல்லையே. நான் எதுக்காக வரணும்?" என்று கேள்வி கேட்ட ஜீவாவை நோக்கி தன் கையில் வைத்திருந்த பர்சை மேசை மீது போட்டாள் "இதுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க?" என்று கேட்டாள்.

                                         மேசை மீது கிடந்த பர்சை பார்த்ததும் முகம் கருத்த ஜீவா, சேரினின்றும் எழுந்து சிறிது தூரம் நடந்து பின் நஸ்ரியாவை நோக்கி "ஸோ, இந்த பர்சையும், நீங்க கூப்பிட்ட போது ராங் நம்பர்ன்னு சொன்னதாலையும் என்னையே குற்றவாளின்னு நினைச்சுட்டீங்க.. அப்படித்தானே? " "உங்ககிட்ட இதுக்கு வேற ஏதாவது விளக்கம் இருக்கா? அதான் கையும் களவுமா மாட்டிகிட்டீன்களே?" என்றாள் நஸ்ரியா..ஜீவா தன் மேசையை திறந்து ஒரு காகிதத்தை எடுத்து அவளிடம் நீட்டினான். அதைப் படித்த நஸ்ரியாவின் கண்களில் குழப்பம் வியாபித்திருந்தது. தன்னுடைய பர்சும், செல்போனும் திருடு போனதை காவல்துறையில் ரிப்போர்ட் கொடுத்ததற்கான அத்தாட்சி அது.

                                       மீண்டும் தான் துவங்கிய இடத்திற்கே  வந்துவிட்டதாய் எண்ணினாள். ஜீவாவை அநாவசியமாக சந்தேகப்பட்டதற்கு அவரிடம் மன்னிப்பு கேட்டாள். அவளுக்கு குடிக்க குளிர்பானம் வாங்கிக் கொடுத்து சாந்தப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தார் ஜீவா. ஆவியின் கொலைக் கேஸில் தன்னால் ஒரு படி கூட தாண்ட முடியவில்லையே என வருத்தத்துடன் மாடிப் படியிறங்கி வந்தாள். கீழே இறங்கியதும் அவள் ஒரு ஆட்டோவை அழைக்க, அப்போதுதான் எதேச்சையாய் அதை கவனித்தாள். அது- ஜீவாவின் அலுவலகத்தின் முன் நின்றிருந்த அந்த வெள்ளை நிற ஸ்கார்ப்பியோ..

தொடரும்..



43 comments:

  1. அழகாக சென்று கொண்டிருக்கும் கதைக்களம்...

    அனைவருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தம்பி. முதல் வருகைக்கும் கருத்துக்கும்..

      Delete
  2. திரும்ப திரும்ப திருப்பங்கள் கலக்குங்க ஒரு நல்ல நாவல் படிக்கிற உணர்வு

    ReplyDelete
    Replies
    1. ட்விஸ்ட் இருந்தால் தானே மர்மத் தொடரில் சுவை இருக்கும்.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

      Delete
  3. வணக்கம்
    கோவை ஆவி(அண்ணா)

    இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கு எனது வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. செமைத்தனமா அசத்துறீங்க... பாராட்டுக்கள்...

    இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. நன்றி ஐயா.
    புதிய பாணியில் தங்களின் எழுத்துக்கள் அருமை

    ReplyDelete
  6. இது வரை வலைச்சரத்தில்
    வந்தவற்றுள் தங்கள் பாணி வித்தியாசமாகவும்
    அசத்தலாகவும் உள்ளது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. அசத்தல் ஆனந்த்(ஆவி)...நன்றியும் கூட...

    ReplyDelete
  8. சுப்பு தாத்தாவை ஒரு ஆவி வந்து உலகுக்கு காட்டி இருக்கிறது.

    ஆ வி .

    ஆனந்தம்.
    வினயத்துடன்

    ஆகாசத்துலே பறக்கிற உணர்வு.

    மனசு சொல்லுது.
    எலே , உன்னையும் ஒத்தரு கண்டுக்கிறாரு பாரூ. அது ஆவியாச்சே அப்படின்னு பயப்படாதே.
    அது சாக்ஷாத் சிவபெருமான் தான். நேரே அவர் வூட்டிலேந்து மேக் அப்லே வந்ந்திருக்காறு.

    அதனாலே தான் சொல்றேன்.
    சிவ பெருமான் பெருமையை தினமும் நீ சொல்லு.

    சுப்பு தாத்தா.
    www.vazhvuneri.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. தாத்தா, உங்களை அறிமுகம் செய்யறதுல எனக்குதான் பெருமை.. நான்கைந்து வருடங்களா நான் பதிவெழுதினாலும் உங்களை சில மாதங்களுக்கு முன் தான் தெரிந்தது. அதுவும் நீங்க ஒரு நண்பருக்கு போட்ட பின்னூட்டத்தினால் ஈர்க்கப்பட்டு உங்க வலைப்பூ வந்தேன். எனக்கு கிடைத்த போக்கிஷஷத்தை உலகுக்கும் பகிர எண்ணினேன்.. அவ்வளவுதான்.. :-)

      கண்டிப்பா உங்க அறிவுரையை தினமும் பின்பற்றுறேன்..

      Delete
  9. ஒவ்வொரு பதிவும்... ‘அடடே!!!’ என ஆச்சரியக்குறிகள் தொடர்ந்தாலும்...
    எப்படி முடியப்போகிறது?என்ற கேள்விக்குறியும் தொடவது சுவாரஸ்யப்படுத்துகிறது.

    ReplyDelete
    Replies
    1. இயக்குனரின் பாராட்டு கிடைத்ததே இந்த தொடருக்கு வெற்றியாக கருதுகிறேன்..மிக்க நன்றி சார்.

      Delete
  10. அருமையாக கொண்டு செல்கிறீர்கள்...
    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. //தன்னால் ஒரு படி கூட தாண்ட முடியவில்லையே // இதன் மூலம் ஆவி சொல்ல வருவது நஸ்ரியா ஒரு படிதாண்டா பத்தினி என்றா

    அறிமுகங்களும் துப்பறியும் கதையும் சுவாரசியம் ஆவி பாஸ்

    ReplyDelete
    Replies
    1. தம்பி, அதுல இருந்த ஒரு டைரக்டர் "டச்"ச நீங்க கவனிக்கல..

      ///ல் தன்னால் ஒரு படி கூட தாண்ட முடியவில்லையே என வருத்தத்துடன் மாடிப் படியிறங்கி வந்தாள்//

      தான் ஏறிய மாடியிலிருந்து (கொலைக் கேஸ்) ஒவ்வொரு படியாக கீழிறங்குகிறாள். (அதாவது தோல்வியையே தழுவுகிறாள்)ன்னு சிம்பாலிக்கா காமிக்கறோம்..

      Delete
    2. //இதன் மூலம் ஆவி சொல்ல வருவது நஸ்ரியா ஒரு படிதாண்டா பத்தினி என்றா //

      ஆமா எங்க போனாலும் லிப்டுலதான் போவாப்புல.. ஹிஹிஹி..

      Delete
    3. //ஆமா எங்க போனாலும் லிப்டுலதான் போவாப்புல.. ஹிஹிஹி.//

      எப்படி உங்களால மட்டும் இப்படி முடியுது

      Delete
  12. விஸ்வரூபம் எடுக்குது கதை...ஸ்கார்ப்பியோ ஏன் வெள்ளைகலர்ல இருக்குது..?

    ReplyDelete
    Replies
    1. பார்த்துப்பா, கதைய தடை பண்ணிடப் போறாங்க.. அப்புறம் கதை எழுத நான் மறுபடியும் அமெரிக்கா போக வேண்டி வரும்.. :-)

      அது வெண்சிங்கமய்யா!!

      Delete
  13. ஹஹ தங்கள் எழுத்தும் அதற்கு வரும் பின்னூட்டங்களும் ரசிக்கும் படியாக இருக்கிறது. வாழ்த்துகள். தொடருங்கள் தொடர்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க.. நானும் பின்னூட்டங்களை ரசித்து மகிழ்ந்தேன்..

      Delete
  14. ஒவ்வொருத்தரிடம் ஒவ்வொரு திறமை! அதில் உங்கள் திறமை கனகச்சிதமான அருமையான கதாசிரியர் தகைமை! அட்டகாசமாய் அசத்துகிறீர்கள்! உண்மையாகவே சொல்கிறேன்.. நல்ல கற்பனை வளமும் சொல்லாடற் திறமையும் நிறையவே உங்களிடம் உள்ளது. உங்கள் எழுத்துகள் அனைவரையும் ஈர்க்கின்றது!...
    நல்ல எதிர்காலம் உண்டு உங்களுக்கு... பாராட்டியே ஆகணும்! வாழ்த்துகிறேன் சகோ!

    அறிமுகப் பதிவர்களும் சிறப்பு! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி இளமதி அவர்களே.. ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் அவனுடைய எழுத்துகளுக்கு கிடைக்கும் பாராட்டுகளும், அங்கீகாரங்களுமே ஊக்கப் படுத்தும் அருமருந்தாகும்.என் எழுத்துகளை வாசகர்கள் இரசித்து, இவ்வாறு போடும் மறுமொழிகள் என்னை சந்தோஷப்படுத்துவதோடு மேன்மேலும் எழுத தூண்டுகிறது..

      இவண்,
      உங்கள் பாராட்டில் மனம் குளிர்ந்த ஒரு சிறு எழுத்தாளன்..

      Delete
  15. அழகாகத் தொடருங்கள்... வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்திடுவோம்..

      Delete
  16. நல்ல விறுவிறுப்பு!.. சிறந்த கைவண்ணம்!.. வாழ்க..

    அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. //சிறந்த கைவண்ணம்!.. //

      இணையத்தில் எழுதும் ஒவ்வொருவரையும் படித்து நாளுக்கு நாள் மெருகேற்றிக் கொண்டது தான்!!

      Delete
  17. ஒவ்வொரு நாளும் ட்விஸ்ட்.... :)

    அறிமுகங்களையும் உங்கள் பாணியையும் ரசித்தேன் ஆவி. தொடரட்டும்....

    ReplyDelete
    Replies
    1. நமக்கு ஒரு கார் ஓட்டும் போதே நீண்ட நெடிய நேர்கோட்டில் உள்ள சாலை சிறிது நேரத்தில் சலிப்படைய வைக்கும். ஆனால் திருப்பங்கள் அதிகம் உள்ள சாலை நம்மை கவனமாக இருக்க வைப்பதோடு ஓட்டுவதற்கு ஆர்வத்தை தூண்டும்.. மறுபுறம் என்ன இருக்கு என்று தெரிந்து கொள்ளும் ஆவல் மனதில் பொங்கும், அல்லவா?

      Delete
  18. ஆனந்த்..,உங்கள் எழுத்துக் கோர்வை எனக்கு தமிழ்வாணன் அவர்களை ஞாபகப் படுத்துகிறது சங்கர்லால் துப்பறியும் கதைகள் தமிழ் நாவல்களில் ஒரு சிறப்பான இடத்தை பெற்றது. லைப்ரரியில் அவரின் நாவல்களை தேடித் தேடி படித்தேன். ஆபாசம் கலக்காத ஒரூ சிறந்த எழுத்தாளர். கீப் இட் அப்.

    ReplyDelete
    Replies
    1. தமிழ்வாணன் என்னுடைய பேவரைட்டும் கூட.. பாராட்டுக்கு நன்றி சார்..

      Delete
  19. வலைச்சரத்தில் இதுவரை யாரும் இம்மாதிரியான ஒரு துப்பறியும் கதை தொடரில் பதிவர்களை இணைத்து அறிமுகப்படுத்தியதில்லை என்றே கருதுகிறேன். இதுவரை துப்பறியும் கதைகளை படித்திராதவர்களையும் படிக்கவைத்த திறமை அசாத்தியமானது.

    ReplyDelete
    Replies
    1. துப்பறியும் கதை, அதில் பதிவர் அறிமுகம் செய்து, அதே சமயம் லாஜிக்கையும் மீறாமல் செல்ல முயற்சித்திருக்கிறேன். முதல்ல கொஞ்சம் சிரமமா இருந்தது. ஆனா இரண்டாவது நாளிலிருந்தே எனக்கே ஒரு ஆர்வம் வந்திடுச்சு.. உங்க எல்லோருடைய பின்னூட்டமும் எனக்கு ஆர்வத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது.. நன்றிகள் பல..

      Delete
  20. ஆவியின் அறிமுகங்கள் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது தொடர்வோம்

    ReplyDelete
    Replies
    1. நன்றி முரளிதரன்..

      Delete