வணக்கம்
உறவுகளே...
நேற்றைய
பகிர்வில் நாம் பகிர்ந்து கொண்ட நண்பர்களின் வலைப்பூக்களுக்கு சென்று
வந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்... சரி வாங்க இன்றும் காலாற சில நண்பர்களில் வலைப்பூக்களுக்கு
ஒரு நடை பொயிட்டு வருவோம்.
எட்டாம் நம்பர் என்றாலே பெரும்பாலானவர்கள்
ராசியில்லாத நம்பர் என்று ஒதுக்கிவிடுவார்கள். வண்டிகளுக்கு நம்பர் வாங்கினால் கூட
கூட்டுத்தொகை எட்டு வராமல் பார்த்து வாங்குவார்கள். சரி கெட்டவனுக்குத்தான் எட்டு
என்பார்களே அது உண்மையா? கொஞ்சம் எட்டைப் பற்றிப் பார்ப்போமா?
கல்லூரியில் படிக்கும் போது எங்கள்
பேராசிரியர் ஒருவரின் ஸ்கூட்டர் எண் ‘0440’ கூட்டுத்தொகை ‘8’. அந்த
ஸ்கூட்டரில்தான் கல்லூரிக்கு வருவார். பெரும்பாலும் தமிழ்த்துறை ஆசிரியர்கள்தான் சோல்னாப்
பை பயன்படுத்துவார்கள். ஆனால் இவரின் தோளிலும் ஒரு சோல்னாப் பை தொங்கத்தான்
கல்லூரிக்கு வருவார்.
ஒருமுறை எங்க சந்தேகத்தை அவரிடம் கேட்கவும்
சிரித்துவிட்டு நம்பரில் என்னய்யா இருக்கு... மனசுதான்யா எல்லாத்துக்கும் காரணம்
என்றவர். எட்டுதான் சிறப்பான எண் என்றார். எப்படி என்று கேட்கவும் ஒன்றிலிருந்து
ஒன்பது வரை எழுதுங்கள் என்றார். ஒரு நண்பனும் கரும்பலகையில் போய் எழுத
ஆரம்பித்தான். அப்போது எல்லாரையும் நன்றாகப் பார்க்கச் சொன்னார். எழுதியதும்
என்னய்யா பார்த்தீர்கள் என்றார். எங்களுக்கு எதுவும் விளங்கவில்லை... எனவே அவரே
விளக்கினார். ஒன்று என்று எழுதினால் மேலிருந்து கீழே வந்துதான் முடிப்போம்...
இப்படியே எல்லா நம்பரும் கீழேதான் முடியும். ஆனால் எட்டு மட்டும்தான் மேலே முடியும்
என்றவர், என்னோட வண்டி எண் கூட்டுத்தொகை ‘8’ தான். அதற்காக நான் கேட்டுவிட்டேனா...
இல்லையே... இதோ இந்தா இருக்கிறதே இந்த சோல்னாப் பையில் பத்து லட்சம் வரை வைத்துக்
கொண்டு இந்த வண்டியில்தான் போயிருக்கிறேன் என்றார்.
எனக்கு எண்கள் மீது அப்படி எதுவும் நம்பிக்கையில்லைதான்.
இருந்தும் எட்டுக்கும் எனக்கும் ஒரு உறவு உண்டு. பத்தாவது அரசுத் தேர்வு எண்ணின்
கூட்டுத்தொகை எட்டு, அப்படியே பனிரெண்டாவது, கல்லூரி வருகைப்பதிவு எண், கல்லூரித்
தேர்வு எண், பிஜிடிசிஏ பண்ணிய போது வரிசை எண், எம்.சி.ஏ. வருகைப்பதிவு எண், தேர்வு
நம்பர், வங்கிக் கணக்கு எண்கள் என எல்லாவற்றின் கூட்டுத் தொகையும் எட்டுத்தான்.
வீடு கட்ட நாள் பார்த்த தினம், பூஜைபோட்ட நாள், நிலை வைத்த தினம், குடிபோன நாள்
எல்லாவற்றின் கூட்டுத் தொகையும் எட்டுத்தான். பாப்பா பிறந்தது-26, விஷால் பிறந்தது-17
– இங்கும் எட்டுதான்.
இவ்வளவு ஏன் இந்த முறை வலைச்சர ஆசிரியனாய்
சீனா ஐயா எனக்களித்த நாள் 02/09/2013 – கூட்டுத்தொகை எட்டு வருதா? நான் முதலில்
எழுதிய பதிவு 2798வது பதிவு என்று காட்டியது அப்படிப்ப பார்த்தாலும் எட்டுத்தான்.
எனக்கு எப்பவும் எட்டு சிறப்பானதாகத்தான் இருக்கிறது. குபேரனாக வைக்காவிட்டாலும்
வாழ்க்கையை வாழ வைத்திருக்கிறது.
என்னைப் பொறுத்தவரை கெட்டவனுக்குத்தான்
எட்டு என்பதெல்லாம் மூடநம்பிக்கையே...
“...கல்லூரி வரைக்கும் கிராமத்து வாழ்க்கை வந்தவர்களை இப்போது அதே கிராமத்தில் போய் நிரந்தரமாக வாழ முடியுமா? என்றால் அவர்களால் நிச்சயம் முடியாது தான் சொல்வார்கள். இரைச்சலும், தூசியும் இயல்பான ஒன்றாக பழகிவிட அமைதி கூட தற்போதைய வாழ்க்கையில் பேரமைதி போல நம்மை பயமுறுத்தும் நிலைக்கு நம் மனம் மாறியுள்ளது. வசதிகளுக்கு பழகிய உடம்பு கிராமத்து வாழ்க்கையை வெறுக்கும்...”
எழுத்தாளரின்
பெயர்
|
ஜோதிஜி
|
வலைப்பூ
|
|
கவர்ந்த பதிவு
|
|
தொடங்கும் போது வீண் முயற்சி என்பார்கள்... வெற்றி பெற்றால் விடா
முயற்சி என்று சொல்வார்கள் என்று சொல்லும் ஜோதி அண்ணனும் எங்கள் மண்ணின்
மைந்தர்தான். தற்போது திருப்பூரில் இருக்கிறார். டாலர் நகரம் என்ற அருமையான
புத்தகத்தின் ஆசிரியர். எதையும் அலசி ஆராய்ந்து எழுதும் அருமையான எழுத்தாளர்.
|
“...ஆளும் தோரணையும் நிச்சயமா பெரிய
எடத்துப் பொண்ணு மாதிரி தான் தெரியுது மாப்ளே... படக்குனு பிடிச்சு செட்டிலாயிரு.
ஒங்கப்பா காச ஒன் விதி எடுத்துக்கிட்டாலும் எப்பபடி திருப்புது பாத்தியா...'
என்று ஏகத்துக்கும் நண்பன் ஏத்திவிட, 'பொன்மகள் வந்தாள்' பாடலை விஜய் ரேஞ்சில் ரீமிக்ஸில்
பாடித் திரிந்தேன்....”
எழுத்தாளரின்
பெயர்
|
பார்வதி
இராமச்சந்திரன்
|
வலைப்பூ
|
|
கவர்ந்த பதிவு
|
|
புத்தகங்கள்
தான் என் முதல் காதல். எழுதுவதும் படிப்பதும் என் பொழுதுபோக்குகளில் சில என்று
சொல்லும் ஆசிரியரின் படைப்புக்கள் 'மங்கையர்
மலர்', 'தீபம்', ‘சிநேகிதி’ முதலிய இதழ்களில் வெளிவந்திருக்கின்றன.
|
*****
"...கடைசியாகத் தன் மடியில் வைத்திருந்த புத்தகப்பை காரின் கதவிடுக்கில் சிக்கி தரதரவென சாலையில் இழுத்துச் செல்லப்பட்டிருக்கும் என்பதையும் புத்தகப்பையின் வாயிலிருந்து புத்தகங்கள் சிதறியிருக்கும் என்பதையும் ஏஞ்சலின் கவனித்திருக்க வாய்ப்பில்லை. காரையும் காரின் சிதறிய பாகங்களையும் அகற்றியவர்கள் அந்தப் புத்தகப்பையை அப்படியே விட்டுவிட்டார்கள்..."
எழுத்தாளரின்
பெயர்
|
கே.பாலமுருகன்
|
வலைப்பூ
|
|
கவர்ந்த பதிவு
|
|
ஊரும் வாழ்க்கை அன்றாடங்களில் தினக்கடமைகளாக நீ நான் அவர்கள்
என்கிற காலப் பிரக்ஞை கடந்து போகும் பொழுதுகளில் எப்பொழுதும் ஏக்கமாய் படர்கிறது
மனம் என்று சொல்லும் இவரின் சிறுகதைகள் கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டியவை.
|
“...காதலுக்கா ஒரு கவிதை
கண்ணீருக்கா இன்னொரு கவிதை
உறவுக்காக ஒரு கவிதை
உரிமைக்காக இன்னொரு கவிதை
மௌனத்துக்கும் ஒரு கவிதை
நிலவுக்காக ஒரு கவிதை
கற்பனைக்கு இன்னொரு கவிதை
விடுதலைக்காக ஒரு கவிதை
விடியலுக்கு இன்னொரு கவிதை...”
எழுத்தாளரின்
பெயர்
|
----------
|
வலைப்பூ
|
|
கவர்ந்த பதிவு
|
|
எல்லாவற்றையும் தொட்டுச் செல்லும் இவர் கவிதைகளில் கூடுதல்
ஆதிக்கம் செலுத்துகிறார். வலைப்பூவில்
இவர் பற்றி குறிப்பிட்டிருந்தாலும் வலைப்பூவின் பெயரில் மிகுந்த ஈடுபாட்டுடன்
இருப்பதால் கிராமத்து காக்கை என்ற பெயரிலேயே பதிவிடுகிறார்.
|
மூழ்காமலிருக்க இயலவில்லை
வற்றிய குளத்தில் வனாந்தரத்தில்
வறண்ட தொண்டைக்குள் சிக்கி
வார்த்தைகள் தற்கொலை செய்ய
கண்ணீரால் கருணைமனு போட்ட
காலம் இன்னும் மறக்கவில்லை..."
எழுத்தாளரின்
பெயர்
|
அனிதாராஜ்
|
வலைப்பூ
|
|
கவர்ந்த பதிவு
|
|
எண்ணங்களே வாழ்க்கையை தீர்மானிக்கும்
என்பதால் மனதில் உதிக்கும் எண்ணங்களை கிறுக்கலாய் இங்கே படைக்கிறேன் என்று
சொல்லும் ஆசிரியர் எண்ன ஓவியத்தில் வரைவதைவிட அவரது மௌனச்சிதறல் என்ற முகநூல்
பக்கத்தில் 1000க்கு மேற்பட்ட குறுங்கவிதைகளைப் பகிர்ந்திருக்கிறார்.
|
"...கொட்டும் மழையின் சில்லிப்பு கூடத்தில்
கிட்டி கிடுகிடுக்கும் பற்களின்
தாளத்தில்
நடுங்கி துணை தேடும் அணுக்களின்
நடுக்கத்தில்
தனித்து நான் நின்ற வேளை
நீரோடும் சாலை கடந்து
நீர் தேடி பைய நடந்து
நனைந்தாடும் சேலை குடையாக
நீர் ஏந்தி சென்றாள் முதிர் அன்னை
ஒருத்தி..."
எழுத்தாளரின் பெயர்
|
தமிழ்ச்செல்வி
|
வலைப்பூ
|
|
கவர்ந்த பதிவு
|
|
பல்சுவையாய் கலந்து எழுதும் இவர், எல்லா விஷயங்களையும் பற்றி
எழுதுகிறார். இவர் எழுதும் தினம் என் பயணம் மிகவும் ரசனையுடன் இருக்கிறது.
நீங்களும் படித்துப் பாருங்கள்.
|
“...அகத்திக்கீரை உடல் சூட்டை தணித்து
உடலுக்கு குளிர்ச்சியை தரும். பித்தத்தை குறைக்கும். நமது உடலுக்கு தேவையான ஜீரண
சக்தியை அதிகரிக்கும். கண் நோய்கள் வராமல்
பாதுகாக்கும். உடலில் உள்ள விஷங்களை முறியடிக்கும் சக்தியும் இதற்கு உண்டு...”
எழுத்தாளரின்
பெயர்
|
செந்தில்வயல்
|
வலைப்பூ
|
|
கவர்ந்த பதிவு
|
|
நான் பார்த்த, படித்த, ரசித்தவற்றை இங்கு பகிர்கிறேன் என்று
சொல்லும் இவர் சமையல் உள்பட நிறைய விஷயங்களைப் பகிர்கிறார். பெரும்பாலும்
பத்திரிக்கைகளில் வந்த சமையல் செய்திகளையே பகிர்ந்திருந்தாலும் இது இவரின்
பதிவாகத்தான் தெரிகிறது.
|
“...மருந்தின் அளவு
தண்ணீரின் அளவு இவைகளை சரியான அளவில் பயன்படுத்த வேண்டும். ஒரு ஏக்கருக்கு கைத்தெளிப்பான் என்றால் 200
லிட்டர் தண்ணீர் கண்டிப்பாக வேண்டும்.
மருந்தின் அளவை குறைத்தால் அதில் இரண்டு நஷ்டங்கள் உள்ளன. ஒன்று பூச்சிகள் சரியான அளவில் சாகாது. இரண்டாவது பூச்சிகள் அந்த மருந்திற்கு
எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்ள வாய்ப்புண்டு.
மருந்தை அதிகமாக்கினால் பணச்செலவு அதிகமாவதுடன் சில நேரங்களில்
செடிகளுக்குத் தீமை பயக்க நேரிடும்...”
எழுத்தாளரின்
பெயர்
|
ரமேஷ்
பாலகிருஷ்ணன்
|
வலைப்பூ
|
|
கவர்ந்த பதிவு
|
|
விவசாயிகள் நிலை குறித்து பேசாதோர் யாரும் இல்லை... ஆனால் பேசும்
அவர்களே விவசாயிகளை மதிக்கிறார்களா? அதுதான் இல்லை.. ஏன் இந்த நிலை.. ? இந்த
நிலைப்பாடு மாற என்ன செய்யலாம் என்று கேட்கும் இவர் விவசாயம் குறித்துப் பதியும்
அரிதான பதிவர்களில் ஒருவர்.
|
"...திடீரென்று
உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள். அந்த வலியானது மேல் கை முதல்
தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் , உங்கள் வீட்டில்
இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்,
ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை
கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது..."
எழுத்தாளரின்
பெயர்
|
இயற்கை
அன்னையின் மைந்தர்கள்
|
வலைப்பூ
|
|
கவர்ந்த பதிவு
|
|
மனிதன்
நோய் இல்லாமல் நீண்ட காலம் வாழ்வதற்கு இயற்கை உணவு எப்படி துணை செய்கிறது என்பதையும் , நோய்
இருந்தால் அதை இயற்கை உணவு மூலம் எப்படி குணப்படுத்தலாம் என்பதை அனுபவப்பூர்வமாகவும் , மருத்துவரே இல்லாமல் மிகப்பெரிய நோய்களை எல்லாம் இயற்கையில் கிடைக்கும் பழங்களை உண்டு எப்படி குணப்படுத்தலாம் என்று சொல்லும் இவர்கள்
குணமானவர்களின் பேட்டியுடன் வெளியிடுகிறார்கள்.
|
“...இதற்கென்று எந்தவொரு ஃபயர்பாக்ஸ்
எக்ஸ்டன்ஷனையும் தேடி அலைய வேண்டாம். நான் உதாரணத்துக்கு அடோபி ஃபிளாஷ் பிளக்கின்
பற்றி சொல்லி இருந்தாலும், ஃபயர்பாக்ஸ் Plugins அனைத்திற்கும் இது பொருந்தும் என்று நினைக்கிறேன்...”
எழுத்தாளரின்
பெயர்
|
மென்பொருள்
பிரபு
|
வலைப்பூ
|
|
கவர்ந்த பதிவு
|
|
எளிய தமிழில் கணிப்பொறி தகவல்களைத் தரும்
ஆசிரியரின் வலைப்பூவை அதிகமானோர் பின்தொடர்வதில் இருந்தே தெரிகிறது இவரது பதிவு
மூலம் பயன்பெற்றவர்கள் எவ்வளவு பேர் என்பது.
|
"...மதுரை
கதைக்களம் என்றால் சும்மாவே வெளுத்து வாங்கும் நடிகர் சசிக்குமார் முந்தய
படங்களைவிட இதில் தனித்து நின்று ஒற்றைப்புலியாக வெளுத்து வாங்குகிறார். வேட்டி -
லுங்கியில் வந்து அவர் போடும் அதிரடி சண்டைகளாகட்டும், லட்சுமிமேனனுக்கு
காதல் கடிதம் கொடுத்துவிட்டு ஓடுவது..."
எழுத்தாளரின்
பெயர்
|
பரிதி.முத்துராசன்
|
வலைப்பூ
|
|
கவர்ந்த பதிவு
|
|
என் உணர்வுகளின் பிரதிபலிப்பு என்று சொல்லும்
ஆசிரியர் கவிதை, வாழ்க்கை, கருத்துக்கணிப்பு, விமர்சனம் என எல்லாவற்றையும்
எழுதினாலும் சினிமா விமர்சனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுடன் அழகாக,
வித்தியாசமான முறையில் விமர்சனம் எழுதுகிறார். தங்க மீன்கள் படத்துக்கு இவரின்
விமர்சனம் அருமை.
|
பதிவைப் பார்த்து வந்திருப்பீங்க...சரி கொஞ்சம் இளைப்பாருங்க... இனி உங்களுக்காக...
“பச்சிலை தின்றேன் பத்தியம் காத்தேன்
உச்சியில் எண்ணெய் ஒழுங்காய்த் தேய்த்தேன்
வேரை அரைத்து நீரில் கலக்கி
மோரைப் போல மூச்சில் குடித்தேன்
தோல் நோய் வல்லார் சொன்ன அனைத்தும்
வாணாள் முழுதும் பார்த்துச் சலித்தேன்’’
என்று அவர் எடுத்த மனித முயற்சிகள்
யாவையும்
பட்டியலிட்டு எழுதிய பின்,
“தாடி வளர்த்தேன் தலையில் மொட்டை
கோடி அடித்தேன் குணம் வரவில்லை
உள்ளூர் வாழும் ஒருபெருந் தெய்வம்
சொல்லாயி உன்றன் திருவடி விட்டுப்
பல்லூர் சென்றேன் பயனில்லை
பொல்லாப் பிணியைப் போக்கிடு தாயே’’
|
-கவிஞர் முனைவர் திரு.அரசிங்காரவேலன் என்ற அரசி
தமிழ்த் துறைத் தலைவர் (பணி நிறைவு)
ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி, தேவகோட்டை
|
கண்ணதாசனின் கவிதைகள் குறித்து தமிழருவி மணியனின் பேச்சு. கேட்டுப்பாருங்கள்... ரசிப்பீர்கள்...
அழகு
ஆபத்து...
சிறகிழந்தது
வண்ணத்துப்
பூச்சி..!
விவசாயம்
தொடர்பான பதிவுகளை தேடிக் கண்டுபிடிப்பதில் ஏற்படும் சிரமத்தைப் பார்க்கும் போது
விவசாயம் சம்பந்தமான பதிவுகள் அதிகம் இல்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. முடிந்தவரை
முயற்சிக்கிறேன். இல்லையேல் நண்பர் டினேஷ்சாந்த் கேட்டிருப்பது போல் விளையாட்டு
மற்றும் இதரத் துறைகள் சிலவற்றைப் பார்க்கலாம்...
என்ன
ரொம்பத்தூரம் நடந்துட்டோமா... சரி கொஞ்சம் உக்காந்து இளைப்பாறிட்டு அப்புறம்
மறுக்கா ஒரு ரவுண்டு பொயிட்டு உங்க கருத்தைப் பதிஞ்சிட்டு வாங்க. அதுக்குள்ள
நானும் என்னோட வேலை எல்லாம் முடிச்சிட்டு புதுசா சில நண்பர்களைக் கூட்டிக்கிட்டு
வாறேன்.
நன்றி.
மனசு தொடர்ந்து பேசும்...
-'பரிவை' சே.குமார்.
மிக நல்ல பதிவுகளை கடுமையான சிரமத்துடன்
ReplyDeleteதொகுத்துள்ளீர்கள் நன்று!
th.ma.2
ReplyDeleteவாக்களித்தமைக்கு நன்றி...
Deleteரொம்ப நாளாச்சு நீங்க பதிவெழுதி.... தொடர்ந்து எழுதுங்க நண்பரே...
அறிமுகம் செய்த விதம் புதுமை... இரு தளங்கள் புதியவை... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாங்க தனபாலன் சார்...
ReplyDeleteஇரு தினங்களுக்கு முன்னர்தான் நினைத்தேன்... என்ன நம்ம ஏரியாப்பக்கம் தனபாலன் சாரைக்காணோம் என அப்புறம் தான் தோன்றியது பதிவர் விழாவிற்காக தாங்கள் பரபரப்பாக செயலாற்றுவது...
சிறப்பாக விழாவை முடித்ஹ்டு மீண்டும் வந்துவிட்டீர்கள்... நன்றி
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
அருமையான முயற்சி சூப்பர் குமார்
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
Deleteஅருமையான பதிவுகளை தேடி தேடி தந்த உங்களுக்கு வாழ்த்துக்கள். இன்று வலைச்சரத்தில் இடம்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅருமையாகப் பதிவர்களை அறிமுகம் செய்கின்றீர்கள் குமார்!
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்!
திறம்பட செயலாற்றிக்கொண்டிருக்கும் உங்களுக்கும் மனமுவந்த நல் வாழ்த்துக்கள் சகோ!
த ம.4
வலைச்சரத்தில், என் 'தொகுப்பு' வலைப்பூவை அறிமுகம் செய்ததற்கு என் மனமார்ந்த நன்றி. அறிமுகப்படுத்தப்பட்ட சக வலைப்பதிவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள். சில தளங்கள் புதிது. அவற்றையும் சென்று பார்க்கிறேன்.
ReplyDeleteஅறிமுகப்படுத்தியதற்கு நன்றி குமார்.
ReplyDeleteவித்தியாசமான பதிவுகள் மற்றும் அழகான வடிவமைப்பு. நன்றி குமார்.
ReplyDeleteநீங்கள் பிறந்ததும் எட்டில் தானோ ?
ReplyDeleteகாணொளி காவியம்!
அறிமுகங்கள் ஓவியம் !
இல்லை சகோதரி...
Deleteமற்ற எல்லா நாட்களுமே எட்டில்தான் அமைகிறது....
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சே.குமார் அண்ணேன்....எல்லா வலைப்பதிவர்களையும் தாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள விதம் புதுமையாக இருக்கிறது அதில் தாங்கள் என்னையும் அறிமுகப்படுத்தியது கண்டு மகிழ்ந்தேன்...அதே நேரம் தங்களின் அனைத்து துறைகளிலும் உள்ள நல்ல ஆர்வத்தையும் கண்டு வியந்தேன்...வாழ்த்துக்கள்
ReplyDeleteநண்பரே என் வலைப்பூவை பகிர்ந்தமைக்கு நன்றி. இப்போது கீழ்க்கண்ட என் கூகுள் பிளஸ் பக்கத்திலும் கணினி சம்பந்தமான செய்திகளை அதிக அளவில் பகிர்கிறேன். படித்து பகிர்ந்து பயன்பெறலாமே!
ReplyDeleteமென்பொருள் பிரபுவின் கூகுள் பிளஸ் பக்கம்
கண்டிப்பாக இந்தப் பக்கமும் வருகிறேன்...
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அன்பின் குமார்
ReplyDeleteபதிவு அருமை - வடிவமைப்பு கண்ணைக் கவரும் வண்ணம் புது விதமாக இருக்கிறது.
சிறு பகிர்வு - எட்டின் மகிமையை எடுத்துரைத்தமை நன்று.
காணொளி - தமிழருவி மணியனின் கண்ணதாசனைப் பற்றிய - ஒரு ஆழமான அமைதியான நீரோட்டம் போன்று கருத்தினைப் பதிவு செய்வதென்பது அவரின் சிறப்பு. பாரதி மற்றும் பாரதி தாசனின் புற உணர்வுக் கவிதைகளுக்கு மாற்றாக கண்ணதாசனின் தன்னுணர்வுக் கவிதைகளீல் அக உணர்வுக் கவிதைகளை அழகாக வெளிப்ப்டுத்தியவன் என்று அவர் சுட்டிக் காட்ட்டியது மேற்போக்காக கண்ண தாசனின் திரைப் பாடல்களை மட்டும் வைத்துக் கொண்டு அவனுடைய திறமையைப் படம் பிடிப்பதென்பது இயலாது என்றது அவர் உரையின் சிறப்பு. அதிலும் அனுபவன் என்பதே ஆண்டவன் என்பதை கவிஞன் வெளிப்படுத்திய வாறே பேச்சாளரும் சுட்டிக்காட்டியது மிகவும் சிறப்பாகும்.
காணொளியினை அறிமுகப் படுத்திய நன்று.
குறுங்கவிதை மிக மிக அருமை.
மற்ற அறிமுகங்கள் அனைத்துமே தேர்ந்தெடுத்து இடப்பட்ட அறிமுகங்கள்.
பதிவரின் பெயர், தளத்தின் பெயர், கவர்ந்த பதிவுகளின் சுட்டிகள், பதிவில் இருந்த கவர்ந்த சில வரிகள், பதிவினைப் பற்றிய கருத்து - என எழுதியது தங்களீன் ஈடுபாட்டினைக் காட்டுகிறது.
அறிமுகப் படுத்தப் பட்ட பதிவுகளுக்குச் சென்று பார்த்து படித்து மகிழ்ந்து மறு மொழி இடுகிறேன்.
நல்வாழ்த்துகள் குமார்
நட்புடன் சீனா
தங்களின் நீண்ட கருத்துமடல் உற்சாகம் தருகிறது...
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அன்பின் குமார் - கவிஞர் அரசியின் கவிதை அருமை - இரசித்தேன் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteபகிர்வுகள் அருமை.பகிர்ந்த விதம் அதை விட அருமை.
ReplyDelete