Saturday, September 7, 2013

மனசு பேசுகிறது - பிரபலங்கள்...

வணக்கம் உறவுகளே...

நேற்றைய பகிர்வு தாமதமாகப் பதிவு செய்ய வேண்டியதாகிவிட்டது. காரணம் எங்கள் அறையில் இருந்து உறவினர் ஒருவர் ஊருக்குப் போனதால் அவருக்கு பெட்டி கட்டி அனுப்பி வைத்துவிட்டு வந்துதான் பதிவை தயார் செய்ய முடிந்தது. அதன் பிறகு பதிவிட்டுவிட்டு படுக்கும் போது இங்கு மணி இரவு இரண்டரைக்கு மேலாகிவிட்டது. இன்று விடுமுறைதானே என்பதால் மதியம் பதிவை தயார் செய்து மாலைக்குள் பதிவிட திட்டமிட்டிருந்தேன். காலையில் எழும்போதே கழுத்தில் பிடித்துக் கொண்டு வலியிருந்தது. அது இப்போ கூடுதலாகி இருபுறமும் திரும்பினால் நெருஞ்சி முள் குத்தியது போல் வலிக்கிறது. அதனால் வழக்கமான பாணியில அறிமுகம் செய்ய நிறைய நேரம் வேண்டும் என்பதாலும் அவ்வளவு நேரம் கணினியில் அமர எனது கழுத்து இடம் கொடுக்காது என்பதாலும் வழக்கமான அறிமுகம் நாளை (இப்போ அபுதாபியில் இரவு 10:50 மணி) கழுத்து சரியாகும் பட்சத்தில் இரண்டு பதிவாக பகிர்கிறேன். இன்று சில அறிமுகங்கள் உங்களுக்காக... இவர்கள் எல்லாம் எல்லாருக்கும் பரிட்சயமான எழுத்தாளர்கள்தான்... 


பிரபலங்கள்

முதலாமவர் தூரிகைச்சிதறல் கவிக்காயத்ரி அக்கா...

தனித்ததொரு பெருவெளியில் மௌனத்தின் பக்கங்களை மோனமாய் வாசிக்கிறேன். மொழியாய் சுவாசிக்கிறேன் என்று சொல்லும் இவர், சில வாரங்களுக்கு முன்னர் வலைச்சர ஆசிரியராய் வலம் வந்தவர், விசுவோடு இணைந்து அந்த வாரத்தை அற்புத வாரமாக, எல்லாருக்கும் பிடித்த வாரமாக கொண்டு சென்றவர். இவரை ஒரு கவிஞராக எல்லாருக்கும் தெரியும் ஆனால் நல்ல கதையாசிரியராக சிலருக்குத்தான் தெரியும். அந்த வகையில் அக்காவின் கதைகள் சில உங்கள் பார்வைக்கு…

“அடிப்பாவி பெண்ணே, எவ்வளவு பெரிய கொடுமை நடக்கவிருக்கு இதைப்போய் நான் வருத்தப்படுவேன்னு மறைக்கப்பாத்தியே.. நீ ஒன்னு செய்..உம்புருசனுக்கு போனப்போட்டு நான் ரொம்ப சீரியசா இருக்கிறதா சொல்லி வர வை..அய்யோ எதுக்கு அத்த இப்படி சொல்ல சொல்றீங்க..ஒரு நேரம் போல இல்லாம பலிச்சுடப்போவுது. அதெல்லாம் ஒன்னும் ஆவாது...” 

மரப்பாச்சியுடன் விளையாடும் குழந்தை அறியாது அதற்கு உணர்வில்லை என. அது ஒருபோதும் கேட்டதுமில்லை, உனக்கு என்ன பிடிக்குமென்று..? பொம்மையின் விருப்பமறியாமலேயே அதுமட்டும் சந்தோசமாக விளையாடும்,  ஆனால் இந்த மரப்பாச்சிப்பெண்களுடன் விளையாடுபவர்களுக்குத் தெரியாதா என்ன..?? இவளும் உணர்வுள்ளவள் மனமென்ற ஒன்று இவளுக்கும் உண்டென்பதையே மறந்தும் விடுகின்றனர் பலநேரம்.  மரப்பாச்சியாக இருப்பதையே விரும்புகின்றனர் பலர். மரப்பாச்சியாக இருக்கும்வரை மட்டுமே குல விளக்கு, குத்துவிளக்கு பட்டங்கள்...மரப்பாச்சியும் பேசத்துவங்கினால்.....??" 
 *******

அடுத்தவர் எனது இனிய நண்பர் இதயச்சாரல் தமிழ்க்காதலன்

காலதேவனின் கைக்குழந்தை பூமித்தாயின் மடியில் தமிழ்த் தேடி....தவமிருக்கிறேன் என்று சொல்லும் இவன்(ர்) தமிழ்க்கவிதைகளை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும் இளைய கவிஞர்களில் ஒருவன், இவன(ர)து வரிகளில் தமிழ்த்தாய் சொக்கிப் போய் நிற்கிறாள் என்பதை படித்ததும் புரிந்து கொள்வீர்கள்…. தமிழ்க்குடில் அறக்கட்டளை நூலகப் பணியால் சிலமாதங்களாக கிராமத்தில் இருப்பதால் எழுதவில்லை… நூலகத் திறப்புவிழா இன்னும் சில தினங்களில் நடக்க இருப்பதால் அதன்பிறகு மீண்டும் இதயச்சாரலில் தமிழ்ச்சாரல் அடிக்கும் என்று நம்புகிறேன்… நண்பனின் கவிதைகள் சில உங்கள் பார்வைக்கு…

“குறுஞ்சிரிப்பில் குறுந்தொகை கண்டேன் - உன்

குவிந்த புருவத்தில் திருப்பாவை கண்டேன் - என்

அகம்விழுந்த உன்னகத்தில் அகநானூறும் இன்னும்

ஆற்றுப்படையும் ஆயிரமாயிரம் செந்தமிழ் செழுமையும்…” 

“கருக சம்மதிக்கா நானும்தான் எரிகிறேன்...

காட்டுச்சிங்க முனை கட்டுவிறகா தகிப்பது...?!

காட்டிய இடத்தில் நீட்டிய தீயில்

கருகுமுயிர் உருகுவது உனையன்றி யாரறிவார்..?!...” 
 *******

அடுத்தவர் எனக்குள் இருப்பவை சகோதரி இந்து…

நமக்கான வாழ்வுக்காய் உருவாக்கிய உயிரின் சில துளிகள் என்று சொல்லும் இவர் பதிவிடும் போது ஷானி (Shaani) எனவும் பின்னூட்டங்களுக்கு பதிலளிக்கும் போது இந்து எனவும் இடுகிறார். பெரும்பாலும் நான்கு ஐந்து வரிகளுக்குள்தான் இவரது கவிதைகள் இருக்கும்... அழகாக எழுதுவார்... கொஞ்சம் சிரத்தை எடுத்தால் இன்னும் இவரது பதிவுகள் மெருகேறும்... உங்கள் ஊக்கத்தை இந்தச் சகோதரிக்கு அளித்து நிறைய எழுத வையுங்கள்...

"உன் காத்திருப்பின் பயனாய் நான் இருந்தேனோ அறியேன்

ஆனால் என் கனவுகளின் உருவமாய் நீ வந்தாய்..

இன்னும் கூட நெஞ்சம் நம்ப மறுக்குதடா

நீ எனக்கு உன் மீது தந்த உரிமைகளை எண்ணி..."

"சீண்டிச் செல்லும் உன் பார்வை

மின்னல் கீற்றுக்களாய் - உள்ளுக்குள்

எதிர்பாராமல் இடியென தாக்குதல் நடத்துவதாய்

உன் செல்லக் குறும்புகள்
நான் நனையும் மழைத்துளிகளாய் இடைவெளி இன்றி எனை
ஆள வேண்டுமடா உன் முத்த மழையும்
வெளியில் தான் தேவை காலநிலை மாற்றம்
உள்ளுக்குள் நீ என்றுமே வேண்டுமெனக்கு
மழைக்காலமாய் ............"
*******

அடுத்தவர் பூமகளின் பூக்களம் அன்புத்தோழி பூமகள்...

இது வண்ணத்துப் பூச்சிகளின் வீடு என்று சொல்லும் எழுத்தாளர் பூமகள், பூக்கள்  நடுவில் அமர்ந்து கொண்டு முட்கள் பற்றியும் யோசிப்பவள், மழைச்சாரல் தந்த ஈரம் கொண்டு வெயில் பற்றியும் பயில்பவள், குடிசையில் அமர்ந்து கொண்டு செவ்வாய் நோக்கி சிந்திப்பவள், நல்லவை தந்த தைரியம் கொண்டு அல்லவைகளைக் கொல்பவள் என கவிதையாய் தன்னைப் பற்றி சொல்கிறார். இவரது படைப்புக்களிலிருந்து சில உங்கள் பார்வைக்கு… 

"பாதி எழுதிய பல்பம்..

எழுதாமலே பழுதான ஃபவுன்டன் பேனா..

தொலைந்து போன பொம்மை அழிப்பான்..

தேடிப் பிடித்தேன் அம்மா வீட்டில்.. - நான்
உன்னில் தொலைந்ததை அறியாமல்..!!  "

"பகிர்தல் நட்பிற்கழகாம்..

பகிர ஏதுமில்லையெனினும்..

பகிராமலே பாத்திரம் நிரம்புவது

நட்பில் மட்டுமே சாத்தியம்..!!"
 *******

அடுத்தவர்  நண்பர் முனைவர் வேர்களைத்தேடி இரா.குணசீலன்..

மொழியின் எல்லையே சிந்தனையில் எல்லை எனச் சொல்லும் இந்தத் தமிழாசிரியர் காரைக்குடிக்காரர். தமிழ் இலக்கியம் பருக இவரது தளத்திற்கு வரலாம்… ஒவ்வொன்றும் அருமையான கட்டுரைகள், இடையிடையே மாணவர்களின் எழுத்துக்களையும் இங்கே பகிர்ந்து அவர்களை ஊக்கப்படுத்தும் சிறந்த ஆசிரியன்…அவரது படைப்புக்களில் சில உங்கள் பார்வைக்கு….


"19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து, தமிழ் இலக்கியத்தின் பரப்பிலும் வடிவத்திலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. அச்சுப்பொறியின் பயன்பாட்டினாலும், ஆங்கில மொழியின் செல்வாக்கினாலும் தமிழ்ச் சிறுகதை வழக்கில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டது.  வாய்மொழியாக வழங்கி வந்த கதைகள் பல நூல் வடிவில் அச்சுப் பெற்று வெளியிடப்பட்டன.  இவ்வகையில் முதன்முதலில் அச்சில்வந்தது வீரமாமுனிவரின் ‘பரமார்த்த குருவின் கதை’ அதைத் தொடர்ந்து ஈசாப்பின் நீதிக்கதைகள், திராவிட பூர்வகாலக்கதைகள், தெனாலிராமன் கதைகள் போன்றவைத் தமிழில் அச்சாயின.  இதனால் தமிழ்நாட்டில் கதை கேட்பது மட்டுமல்ல படிக்கும் வழக்கமும் அதிகமானது."

"மன்மதன் கரும்பை வளைத்து வில்லாக வைத்திருப்பானாம்
அவனுடைய தோள்களில் தொங்கும் அம்பறாத்துணியில் மலர்கள் நிரம்பி வழியுமாம்

அந்த மலர்களை அம்புகளாக (கணைகளாக)  ஆண்களின் மீதும் பெண்களின் மீதும் எய்துகொண்டிருப்பானாம்.

அப்படி எய்யப்படும் மலர்(க்கணைகள்) அம்புகள் எவர் மீது விழுகின்றனவோ, அவர்களுக்குக் காதல் அரும்புமாம். இது பழந்தமிழர் நம்பிக்கை..."
******* 

நண்பர்களே இவர்கள் எல்லாரும் நீங்கள் அறிந்தவர்களாகத்தான் இருப்பார்கள்… கொடுத்த பொறுப்பு ஏழு நாட்கள்… தினமும் ஒரு பகிர்வு போட்டால்தான் ஏழு பகிர்வாவது போடலாம்… நாளை புத்துணர்ச்சியுடன் புதியவர்களோடு வருகிறேன்… இந்தப் பிரபலங்கள் எல்லாம் அருமையான எழுத்தாளர்கள் என்பதில் சந்தேகத்திற்கே இடமில்லை… சில பேரை பார்க்கப் பார்க்க பிடிக்கும் என்பது போல இவர்கள் படிக்கப் படிக்க பிடிப்பவர்கள்… படியுங்கள் உங்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும்…

அப்புறம் உங்களுக்காக சில...


எதுகை மோனை ஓசை நயங்கள்
இலங்கும் கவிதை இனிக்கும் - ஒரு
புதிய கருத்தும் அதற்குள் இருப்பின்
பொலியும் கவிதை நிலைக்கும்

இலக்க ணங்கள் இழந்த கவியை
சிலரின் இதயம் ரசிக்கும் - அது
கலக்கல் சரக்கைப் போல மதிப்பைக்
காலப் போக்கில் இழக்கும்

வரட்டுத் தனத்தில் பிறக்கும் கவிதை
மலட்டுத் தனத்தின் வடிவம் - அதில்
முரட்டுத் தனத்தில் வார்த்தை இருப்பின்
சிறப்புப் பெறுதல் கடினம்

கவிதை நயமும் கருத்தும் திகழும்
கவிதை உயர்ந்த கவிதை - இதில்
எதுவும் அற்றுத் திகழும் கவிதை
கவிதை யல்ல கழுதை!

-கவிஞர் முத்துலிங்கம்
திரைப்பட பாடலாசிரியர்
கடபங்குடி, சிவகங்கை மாவட்டம்




இன்று பதிவர்கள் அறிமுகம் அதிகமில்லாததால் பாரதி குறித்து தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன் அவர்களின் நீண்ட பேச்சைக் கேளுங்கள்... கண்டிப்பாக தமிழ் அமுதம் பருகி... ரசித்து... ருசிப்பீர்கள்...








உன் அழைப்புக்காக
காத்திருக்கும்
நேரங்களிலெல்லாம்
என் மனசு போல
கனத்துக் கிடந்தது 
கையிலிருக்கும்
செல்போன்..!

சரிங்க... நாளை காலையில் புதிய பதிவுடன் சந்திப்போம்... நண்பர்களைப் பார்த்து வாசித்து வாருங்கள்...

நன்றி.

மனசு தொடர்ந்து பேசும்...
-'பரிவை' சே.குமார்.

30 comments:

  1. அறிமுகங்கள் அருமை.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.தொடர்ந்து கணினியில் அமர்வதால் கழுத்து வலி ஏற்படுவது சகஜம்.ஓய்வு எடுத்துவிட்டு நாளைய பகிர்வுகளை பகிரவும்.

    ReplyDelete
    Replies
    1. கணிப்பொறியோடுதானேக்கா 24 மணி நேரமும் கழிகிறது... தங்கள் அன்புக்கு நன்றி.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      Delete
  2. வணக்கம்
    இன்று வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      Delete
  3. தொகுத்தவிதம் சிறப்பு... வாழ்த்துக்கள்... சகோதரி இந்து அவர்களின் தளம் புதிது... நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      Delete
  4. வலைச்சர அறிமுகம் தங்களுக்கே உரிய தனித்துவமான நடையில் மிகவும் நன்றாகவுள்ளது நண்பரே.

    எனது பதிவையும் அறிமுகம் செய்துவைத்தமைக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      Delete
  5. ஆசியா சொல்வது போல் தொடர்ந்து வெகு நேரம் கணினி முன் அமர்ந்து இருப்பதால் கழுத்துவலி வந்து இருக்கலாம், கழுத்து இறுக்கத்தைப் போக்கும் பயிற்சிகள் செய்து பாருங்கள். சரியாகி விடும் குமார்.
    இன்றைய வலைச்சரத்தொகுப்பு வெகு அருமை.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்புக்கு நன்றி அக்கா.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      Delete
  6. அறிமுகமாகியிருக்கும் அனைத்து நட்புகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.. தம்பி சே.குமார்(பாரதிராஜா)எமது கிறுக்கலை கதையெனக் கூறியிருப்பதோடு இல்லாமல் பிரபலங்கள்னு வேற அறிமுகப்படுத்தியிருப்பது நட்புகள் கொண்ட நம்பிக்கையின் பொறுட்டு எம்மை மெறுகேற்றிக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தையே ஏற்படுத்துகிறது. தங்கள் அனைவரது ஊக்கத்தினாலும், வழிகாட்டலிலும் எண்ணங்களை எழுத்துக்களாய் தொடர முயற்சிக்கிறேன். தம்பிக்கு மனமார்ந்த நன்றி..
    தோழர் கவிஞர். திரு.தமிழ்க்காதலனின் கவிமழை இதயசாரலில் தொடர்ந்து பொழிந்திட வேண்டுகிறோம்.

    தம்பி ஆசிரியராகப் பொறுப்பேற்ற நாள்முதல் இன்னும் தம்பியின் பதிவுகளைப் பார்வையிடவில்லை. அனைத்து இணைப்பினையும் சேமித்து வைத்திருக்கிறேன். தமிழ்க்குடில் நூலகதிறப்புவிழாப் பணிகளின் காரணமாக வர இயலவில்லை.. இருநாட்களில் அனைத்தையும் பார்வையிடுகிறேன்..கதாசிரியரான தம்பியின் பொறுமை தொகுத்து வழங்கியிருக்கும் விதத்திலேயே தெரிகிறது. எனக்கு எழுதும் நேரம் ஏதேனும் சந்தேகம் எனில் உடனுக்குடன் தீர்த்துவைக்கும் ஆசிரியர் இந்தவாரம் பொறுப்பாசிரியராக கலக்கிக்கொண்டிருப்பது மகிழ்ச்சி.. தம்பியின் எழுத்துமழை தொடர்ந்து வலைப்பூவை குளிரசெய்யட்டும். வாழ்த்துகள். வாழ்க வளமுடன். :)_/\_

    ReplyDelete
    Replies
    1. அக்கா ரொம்ப புகழாதீங்க... எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்துப்போம்...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      Delete
  7. அன்பின் குமார்!.. கழுத்துவலி சரியாகி விடும் .கவலை வேண்டாம். உங்கள் நலன் குறித்து பிரார்த்திக்கின்றேன். தாங்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.. வாழ்க.. வளமுடன்!..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்புக்கு நன்றி...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      Delete
  8. அருமையான எழுத்தாளர்கள் அறிமுகங்களுக்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    கழுத்துப்பிடிப்புக்கு
    கழுத்துக்கு அடியில் தானியம் அளக்கும் படியை வைத்து படுப்பது கிராமத்துவைத்தியம் ..

    ஆச்சரியப்படும் அளவில் கழுத்து நரம்புப்பிடிப்பு குணமாவதை உணரலாம்..

    ReplyDelete
    Replies
    1. இங்க எங்க அக்கா போறது படிக்கு...
      இப்போ கொஞ்சம் பரவாயில்லை...
      தங்கள் அன்புக்கு நன்றி.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      Delete
  9. முதன் முதலில் உங்கள் மூலமாகத் தான் திரு. நெல்லைக்கண்ணன்
    அவர்கள் அறிமுகமாகி உள்ளார் . அசந்து விட்டேன். பொங்கி வரும் அவர்
    தமிழ் அருவியில் நனைந்து மகிழ்ந்தேன். மிக்க நன்றி.
    பதிவில் பெரிய இழப்புகள் இல்லாமல் வழக்கம் போலவே சுவையாக
    இருக்கிறது.
    உடல்நலத்தைப் பேணிக் கொள்ளவும். நம் நாட்டில் இதற்கு
    ' மூவ் ' என்ற ஆங்கில மேல்பூச்சு மருந்தும் அரோமா தெரப்பியில்
    லெமன் கிராஸ் ஆயிலும் நன்றாக இருக்கின்றன.
    அங்கு எப்படி எனத் தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. மூவ்தான் வாங்கி தேய்த்து வருகிறேன்.... தலைமுழுவதும் வலியாக இருப்பது எரிச்சலடைய வைக்கிறது...
      தங்கள் அன்புக்கு நன்றி.

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      Delete
  10. அன்பின் குமார் - உடல் நலம் பேணுக - ஓய்வெடுத்துக் கொள்க.

    அறிமுகங்கள் அத்தனையும் அருமை - காயத்ரி வைத்யநாதன், தமிழ்க் காதலன், இந்து @ ஷானி, பூமகள், குண சீலன் - அனைத்தையும் சென்று பார்க்கிறேன்.

    கவிஞர் முத்துலிங்கத்தின் கவிதை நன்று - பகிர்வினிற்கு நன்றி

    காணொளி நன்று - நெல்லைக் கண்ணன் - 75 நிமிடங்கள் - கொஞ்சம் கேட்டேன் - நேரம் கிடைக்கும் போது மீதத்தினையும் கேட்கிறேன்.

    குருங்கவிதை நன்று - அழைப்பு வர வில்லை எனில் கைபேசியினைத் தட்டிக் கொண்டே இருப்போம் அல்லவா - கனக்கத்தான் செய்யும் - கவிதை நன்று.

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா



    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா...

      Delete
  11. நல்ல அறிமுகங்கள் குமார்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      Delete
  12. அனைத்து அறிமுகங்களும் அருமை!

    யாவரிடமும் செல்வதற்கு கணினி இன்னும் சரி ஆகவில்லை. விரைவில் செல்வேன்.
    உங்கள் உடல் நலனையும் கனித்துக் கொள்ளுங்கள். சுவர் இருந்தாற்தான் சித்திரம் வரையலாம்...

    உங்கள் பயணம் தடையின்றித் தொடரவும் அனைத்து அறிமுகப் பதிவர்களுக்கும் நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்புக்கு நன்றி.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      Delete
  13. "இலக்க ணங்கள் இழந்த கவிதை
    கலக்கல் சரக்கைப் போல மதிப்பைக்
    காலப் போக்கில் இழக்கும்"
    நான் ரசித்த கவிதை வரிகள்

    ReplyDelete
  14. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    ReplyDelete
  15. அருமையான அறிமுகங்களுக்கு நன்றி..

    ReplyDelete
  16. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  17. சே. குமார் அவர்களுக்கு
    தாங்கள் தந்த பாராட்டுக்கும் அறிவுரைககும் மிக்க நன்றி தோழரே தங்கள் அறிமுகம் இன்னும் சிரத்தை எடுத்து பல பதிவுகள் எதிர்காலத்தில் பதிவிட இன்னும் இன்னும் ஊக்கம் தருகின்றது ...:)

    ReplyDelete