கவிதைக்கும் உண்டோ அடைக்கும் தாழ்
அன்பிற்கும் உண்டோ என்று தான் சொல்வார்கள். இவன் என்ன இப்படி சொல்கிறான் என்று தானே யோசிக்கிறீர்கள். படைப்பாளிகளின் மனதில் தோன்றும் கவிதை ஊற்றுக்கு தாழ் போட முடியுமோ. அது வற்றாத ஜீவ நதி அல்லவோ. கவிதைக்கு அழகே அதன் வரிகள் தான். சில வரிகள் படிக்கும் போது நம்மை அட என்று சொல்ல வைக்கும். நமக்கு இது தோன்றவில்லை பார் என்று மனதுக்குள் முறையிட தோன்றும்.
திரைப்பட பாடலாசிரியர் நா.காமராசன் அருவி யை எப்படி குறிப்பிடுகிறார் தெரியுமா "நீரின் வாக்கியம்" என்று. அவரே பனிக்கட்டியை "நீரின் சோம்பேறித்தனம்" என்று குறிப்பிடுகிறார். கவிஞர் அறிவுமதி யின் குறுங்கவிதை ஒன்று "என் பலகீனங்களின் காட்டில் சுள்ளி பொறுக்காதே."
இணைய நண்பர் சி.கருணாகரசு கல் என்ற சொல்லை இப்படி வர்ணிக்கிறார் "சிற்பிக்கு காகிதம் சிலருக்கு ஆயுதம்" என்று.
இப்படி சின்ன சின்ன வரிகளில் ஆச்சரியத்தையும் அதை ரசிக்க வைக்கும் வித்தையையும் பெற்றிருக்கிறார்கள் நம் கவிஞர்கள்
நண்பர் வெற்றிவேல் தளமான இரவின் புன்னகை யில் கொட்டி கிடக்கும் கவிதைகளில் எனை ஈர்த்தது உங்களையும் ஈர்க்கும் அவள் ஆறாவது பெருங்காப்பியம்
அடுத்து கவிஞர் பாரதிதாசன் கவிதைகள் தளத்தில் நிறைந்து கிடக்கும் கவிதைகளில் அவர் பாடிய (எழுதிய) இயற்கையை பாடுவோம் உங்களுக்காக
அடுத்து மலைச்சாரல் தளத்தில் ஹரிணிநாதன் தரும் கிறுக்கல்கள்
கிறுக்கல் அல்ல என்பதை நம்மை ஒப்பு கொள்ள வைக்கிறது
அடுத்து காயத்ரி தேவியின் என்னில் உணர்ந்தவை தளத்தில்
முதல் ஸ்பரிசம் ஒரு தாய்க்கும் மகவுக்கும் உள்ள உணர்வை நமக்கு உணர்த்துகிறது
அடுத்து கீத மஞ்சரி தளத்தில் இல்லுறை தெய்வங்களின் வீதியுலா
கொலு பொம்மைகளை பற்றி கவிதையில் வரிகளை அழகுற அடுக்கியிருக்கின்றார்
அடுத்து நதியில் விழுந்த இலை தலைப்பே நம்மை தளத்திற்க்கு
அழைக்கிறது அதில் நாக சுப்ரமண்யன் எழுதிய ஏதுமறியாத
நான் கவிதையோ மனிதனின் மனத்தை சொல்கிறது
அடுத்து ரூபனின் எழுத்து படைப்புகள் சொல்கிறது மீனவனின் வாழ்க்கையை எப்போது விடிவு காலம் பிறக்கும்
இப்படியே படித்து கொண்டே செல்லலாம் இதுக்கு முடிவில்லை என்பதை தான் கவிதைக்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்று குறிப்பிட்டேன்
"அவளை பற்றி எழுதிட அமர்கையில் மழை ஓய்ந்த வானம் போலாகிறேன் இயலாமையின் வெறுப்பில் காகிதத்தை வீசுகையில் நாலைந்து
வார்த்தைகள் வந்து விழுகின்றன" என்று என் நண்பர் கரைசேராஅலை
அரசன் சொல்வது போல், எனக்கு கவிதைகள் என்பது எப்போதேனும்
அத்தி பூத்தார் போல் தான் பூக்கும்
நான் பள்ளி படிக்கும் காலத்தில் நண்பன் கவிதை எழுதுவதை பார்த்து
நானும் எழுதுகிறேன் பார் வீம்பாக கிறுக்கியது என்ன தெரியுமா
அவளை பார்த்து பாடினேன் ஒரு பாட்டு
மாணவர் மத்தியில் கிடைத்தது பல ஓட்டு
ஆசிரியர் வந்தார் ஹாலில் நடை போட்டு
என் மீது பொறமை கொண்ட மாணவனால்
எனக்கு வந்தது வேட்டு
இதை படித்தவுடன் உங்களுக்கு சிரிப்பு வந்திருக்குமே. எனக்கும்
தான் சிரிப்பு வருகிறது. இருந்தும் அதை இப்போது எழுதியிருந்தால் நான் எப்படி எழுதியிருப்பேன் அதையும் பார்ப்போமே
என்னவளை பார்த்து நான் பாடினாலும்
மாணவர்கள் அதற்கு கை தட்டினாலும்
விஷமம் செய்த மாணவனால்
விஷயமறிந்து
ஆசிரியர் குட்டினாலும்
அந்த வலி மறந்து போனது
ஏனெனில் என்னவள்
அப் பாடலுக்கு திருப்தியுடன்
கண் சிமிட்டியதால்
நாளை நகைச் சுவைக்க தயாராகுங்கள். நான் சிரிக்க வைக்க
முயற்சிக்கிறேன் இணைய நண்பர்களின் துணையோடு
ஆர்.வி.சரவணன்
வணக்கம்
ReplyDeleteஇன்றைய வலைச்சர அறிமுகத்தில் கவிதையின் இனிய தென்றல் வீசுகிறது அறிமுகங்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
விசேட அறிவித்தல்
ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டிக்கான காலம் முன்பு-20.10.2013 என்று இருந்தது.பின்பு பல இணையத்தள உறவுகள் கேட்டதற்கு ஏற்ப 31.10.2013 என்று நீடிக்கப்பட்டுள்ளது
கவிதை எழுதுங்கள் பரிசு அள்ளிச்செல்லுங்கள்
கவிதை எழுதுங்கள் பரிசு அள்ளிச்செல்லுங்கள்
இது சம்மந்தம்மான விளம்பரப் பதிவைப்பார்வையிட. இதோ முகவரி
1)http://ranjaninarayanan.wordpress.com/2013/10/15/%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf/
2)http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Rupan-Diwali-Special-Poetry-Contest.html
3)http://2008rupan.wordpress.com/2013/09/05/%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/
4)http://www.veesuthendral.blogspot.com/2013/10/blog-post_2941.html
5)http://tnmurali.blogspot.com/2013/10/pettikadai-puzzle-answer-sachin.html
6.http://ilayanila16.blogspot.com/2013/10/blog-post_15.html
7.http://yaathoramani.blogspot.com/
என் கவிதைப் போட்டிக்கு ஆதரவு தரும் உள்ளங்களின் வலைப்பூக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
வணக்கம்
ReplyDeleteஎன்னுடைய வலைப்பூவையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரூபன்
Deleteகவிதைக்கும் உண்டோ அடைக்கும் தாழ்
ReplyDeleteஅருமையான கவிதைத்தளங்களின
அறிமுகங்களுக்கு பாராட்டுக்கள்..!
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteஅறிமுகங்கள் அனைத்தும் முத்துக்கள்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteஅனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துகள்! அழகாக அறிமுகம் செய்த உங்களுக்கும் வாழ்த்துகள் சரவணன்! உங்கள் கவிதைகள் இரண்டுமே அருமை!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteகவிதையால் பின்னப்பட்ட வலைத் தளங்களைக்
ReplyDeleteகாட்டிய விதமே - ஒரு கவிதை!..
அன்பின் நல் வாழ்த்துக்கள்!..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteஅழகான அறிமுகத்தொகுப்பு அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteதங்களால் அறிமுகம் செய்யப்பட்ட அனைத்துக் கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteஅனைத்து அறிமுகங்களுக்கும் என் வாழ்த்துகள்..
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteகவிதையால் நிறைந்த வலைத்தளங்களின் அறிமுகம் நன்றாக இருக்கிறது.
ReplyDeleteஅறிமுகம் ஆனவர்களுக்கும், அறிமுகம் செய்த உங்களுக்கும் பாராட்டுகள்!
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்....
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteஅறிமுகங்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteரசனைக்குரிய பதிவு.....
ReplyDeleteஅறிமுக பதிவர்களையும்... தங்களது கவிதையையும் ரசித்தேன்...
அடுத்து நகைச்சுவையா... கலக்குங்க...
அறிமுக பதிவர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteஎனது தள அறிமுகத்திற்கும் நன்றி அண்ணா.. தொடர்ந்து சிறப்பாக எழுதுங்கள்...
ReplyDeleteஎன்னை இங்க அறிமுகபடுத்தியதுக்கு நன்றி... தொடர்ந்து எல்லோரும் ஆதரவு தரணும்னு வேண்டிக்குறேன்
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்
ReplyDeleteசுவாரஸ்யமான தங்கள் கவிதையோடு
மிகவும் ரசித்தோம்
தொடர வாழ்த்துக்கள்
கவிதையினை சிலாகித்துப் படிப்பதே தனி சுகம்தான்...
ReplyDeleteஅதனை அழகுற இரசிக்கும் வண்ணம் தொகுத்து, பதிவர்களை
அறிமுகப்படுத்தியதற்கு பாராட்டுக்கள் நண்பரே!
ReplyDeleteவணக்கம்!
சரவணப் பொய்கை போன்றே
தந்துள பக்கம் கண்டேன்!
அருமணப் பூக்கள் போன்றே
அளித்துள வலைகள் கண்டேன்!
திரள்மன அன்பால் உன்னை
திறமுற வாழ்த்து கின்றேன்!
சரவணத் தமிழா! மின்னும்
சரமென ஆக்கம் தா!தா!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துகள்!
ReplyDeleteஅருமையான கவிஞர்களின் அறிமுகம்...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
அருமையான அறிமுகங்கள். நன்றி
ReplyDeleteஎன்னுடைய வலைப்பூவையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி...
ReplyDeleteஅறிமுகப்படுத்தியதற்கு பாராட்டுக்கள்
என்ன நண்பரே கவிதைக்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்று கவிதைப் பக்கங்களை அவிழ்த்து விட்டு விட்டீர்கள்! அருமை.!! தங்களது கவிதையும் கூட ஏன் கிறுக்கியதும் கூட நன்றாகத்தான் இருக்கிறது! ஆல் இன் ஆல் அழகு ராஜா?!!!!!
ReplyDeleteஅருமையான தளங்கள்! அறிமுகத்திற்கு நன்றி!
ReplyDeleteநல்ல கவிதை தளங்களை அறிமுகம் செய்ததற்கு நன்றி.
ReplyDeleteசற்று வேலைப்பளுவால் வாரமொருமுறை மட்டுமே வலைப்பூவின் பக்கம் வர இயல்கிறது. தங்களுடைய அறிமுகப்பதிவர்களில் ஒன்றாக என் வலைப்பூவும் இருப்பது அறிந்து மிகவும் மகிழ்ச்சி. தாமத வருகைக்கு மன்னிக்கவும். தகவல் தெரிவித்த தங்களுக்கும் ரூபன், வை.கோ.சார் இவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. அறிமுகப்படுத்தப்பட்ட சக பதிவர்கள் அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள்.
ReplyDeleteதென்றலாக கவிதை படைத்து எம்மை எல்லாம் மகிழ்வுறவைக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDelete