இந்த வாரத்தில் உங்களுடன் நான்.....
தட்டில் பூக்களைக் கொட்டி வைத்து வரவேற்பார்கள்... ஏதோ என்னால் முடிந்தது இந்த ஒற்றைப் பூவைக் காண்பித்து வரவேற்கிறேன்....
வலைச்சர ஆசிரியப் பணிக்கு என்னை அழைத்த சீனா அய்யா அவர்களுக்கு என் நன்றிகள்.
என்னைப்
பற்றி வலைச்சர அறிமுகத்திலேயே அறிந்திருப்பீர்கள். கல்லூரிக் காலங்களில்
பத்திரிக்கைகளில் எழுதுவதில் இருந்த ஆர்வம் காரணமாய் கல்லூரி தனிச்சுற்றான
"குயிலிசை" யில் இரண்டாண்டுகள் ஆசிரியர் குழுவில் இருந்தேன்.எழுத்துலகில்
என் ஆர்வத்தை உணர்ந்த என் தோழி வலைப்பக்கத்தில் எழுதச் சொன்னாள்.
அப்படியாக எல்லோரும் மறந்து போன பெரியாரை அவரின் கடவுள் மறுப்பு எனும்
கொள்கையல்லாமல் மற்ற கொள்கைகளும் தெரிய வேண்டும் என்பதாக அவரைப் பற்றி
எழுதி வருகிறேன். வலைத்தளத்தில் எழுதிக் கொண்டிருந்த என்னை "ஆனந்தம்" மாத
இதழில் மக்கள் தொடர்பாளராக பணியாற்ற அழைத்தார்கள்... வலைத்தளத்தால்
எனக்குக் கிடைத்த பெரும் வாய்ப்பு. ஆறு மாதங்களுக்குப் பின் நிர்வாகக்
காரணத்தால் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது அந்த இதழ். இன்னமும் இணைய இதழ்
ஆரம்பிக்க வேண்டும் என் ஆர்வம் என்னுள்ளே கனன்று கொண்டுதான் இருக்கிறது
என்பதை என் நண்பர்கள் அறிவார்கள்..
ஏற்கெனவே
செய்து கொண்டிருக்கும் சமூக வேலைகளைச் செய்ய என் பார்வையைத் திருப்பிய
தருணம் இதோ வலைச்சர ஆசிரியர் அழைப்பு. நம் ஆழ்மன ஆசைகள் ஏதாவது ஒரு
விதத்தில் நிறைவேற்றப்பட்டுக்கொண்டுதான் இருக்குமோ? அதனால் தான் நேரமின்மை
எனும் போதும் நிராகரிக்காமல் நேரம் கேட்டு பெற்றுக் கொண்டேன். அதற்கு
இசைவு தெரிவித்த சீனா அய்யா அவர்களுக்கு மீண்டும் நன்றிகள்.
"தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்".... எனக்குப் பிடித்த
பாடல் வரிகள்... அப்படியான என் தேடலில் நான் சந்தித்த ,பாதித்த
நிகழ்வுகளை பிப்ரவரி 2012 லிருந்து பகிர்ந்து கொள்கிறேன். என் வலைப்பக்கம்
குறித்து பல நண்பர்களிடம் தெரிவித்த கிட்டத்தட்ட மக்கள் தொடர்பாளராக
இருந்த நண்பர் சுப்புவிற்கும் , என் ஆர்வத்தை ஊக்குவிக்கும் என்
கணவருக்கும் , என் பக்கத்தில் பல மாற்றங்களை அவ்வப்போது செய்து கொடுக்கும்
என் மகன் முகிலுக்கும் என் நன்றிகள்.
நானாக எழுதிக் கொண்டிருந்த என்னை வலைப்பதிவர்கள் இணைப்பில் கொண்டு வந்தவர்கள் சங்கவி , கோவை நேரம் இருவருக்கும் என் நன்றிகள்.
அக்டோபர்
மாதம் 2012 -ல் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியவர் சிவஹரி அவர்கள்.
அவருக்கும் என் நன்றிகள். என் சமீபப் பதிவுகளை பலர் படித்திருப்பர் . சில
பதிவுகள் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதன் வாயிலாக பார்வைக்கு
வந்திருக்கும் ..யாரும் படித்திராத எனக்குப் பிடித்த சில பதிவுகள் இங்கே
உங்கள் பார்வைக்கு.....
என் ஆவேசம் காட்ட முடியா தருணங்களை எடுத்துக்காட்டிய பதிவு. சிறுமை கொண்டு பொங்குவாய் வா வா வா
பால்ய காலத்துக்கு அழைத்துச் செல்லும் நினைவில் நின்றவை
வாழ்க்கையையும் அதற்குப் பின்னான தேடலையும் பகிர்ந்த பதிவு... வாழ்வின் தேடல் -1
அவ்வப்போது கவிதை கிறுக்கும் எனக்குப் பிடிப்பதுண்டு . அப்படியான கிறுக்கல்களில் ஒன்று இதோ நான்.... நான்
என்
தோழி கீதா இளங்கோவன் அவர்களின் வலி தரும் படைப்பு அக்ரிணைகள் அதையும்
கண்டு திரு நங்கைகளின் வலி உணருங்கள். அவர்களை சமூகத்தின் அங்கமாக்க
நம்மால் என்ன செய்ய முடியும்? ஆவணப்படம் ஒரு பார்வை
நாளை சந்திப்போம்.....
சுருக்கமான ஆனால் பளிச் சுய அறிமுகம்... நினைவில் நின்றவை மனம் கவர்ந்தது.... வாழ்த்துக்கள் மேடம்...
ReplyDeleteதிண்டுக்கல் தனபாலன் சாரை முந்திக்கொண்டுவிட்டீர்களே....வாழ்த்திற்கு நன்றி ஸ்கூல் பையன்
Deleteஇரு நண்பர்களையும் குறிப்பிட்டது உட்பட சுய அறிமுகம் அருமை... நன்றி... தொடர்ந்து அசத்த வாழ்த்துக்கள்....
ReplyDeleteவாழ்த்திற்கு நன்றி தனபாலன் சார்...
Deleteரோஜாவாய் மணக்கும் வலைச்சர வருகைக்கு வாழ்த்துகள்..!
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்...
Deleteவலைச்சர பொறுப்பினை ஏற்றிருக்கும் தங்களுக்கு அன்பின் நல்வாழ்த்துக்கள்!..
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி துரை செல்வராஜ் சார்
Deleteவருக வருக சகோதரி..
ReplyDeleteவாசமலர்களால்
வண்ண வண்ண வலைச்சரம்
தொடுத்திடுங்கள்..
வாழ்த்துக்கள்..
கவிதையாலான உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மகேந்திரன் சார்
Deleteவலைச்சர வாரத்துக்கு நல்வாழ்த்துகள்!
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி..
Deleteவலைச்சரம் ஆசிரியை (பொறுப்பு) பணி அமர்ந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துகள் எழில்!
ReplyDeleteமிக்க நன்றி கிரேஸ்..
Deleteவலைச்சர ஆசிரியர் பொறுப்பிற்கும், சுய அறிமுகத்திற்கும் வாழ்த்துகள், எழில்.
ReplyDeleteஉங்களது தூப்புக்காரி விமரிசனத்தையும் இணைத்திருக்கலாம் என்று தோன்றியது. இந்த மாதிரியான விஷயங்களை உங்கள் தளத்தில் மட்டுமே பார்க்க முடியும், அதனால் இந்த யோசனை.
வலைச்சர வாரம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள்!
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மேடம்.... நீங்கள் கூறியதையும் யோசித்திருக்கலாம்...விதத்தில் ஒன்றாய் இருக்க வேண்டுமென்று எண்ணினேன். அதற்காகவே திரு நங்கைகள் குறித்த ஆவணப்படம்....
Deleteவாழ்த்துக்கள்... தொடர்ந்து புதியவர்களை அறிமுகப்படுத்துங்கள்..!
ReplyDeleteபுதியவர்களா என்பதில் உறுதி கொடுக்க முடியாதென நினைக்கிறேன் ஆனால் நிச்சயமாக வித்தியாசமான என் கண்ணோட்டத்தில் இடம்பெறும்...உஷா..
Deleteவலைச்சர ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்....
ReplyDeleteசுய அறிமுகம் அருமையாக இருந்தது...
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஆதி...
Deleteஅறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள்
ReplyDeleteமிக்க நன்றி ஜீவா ராஜசேகரன்
Deleteவாழ்த்துக்கள் ...
ReplyDeleteமிக்க நன்றி மீரா...
Deleteவலைச்சர வருகைக்கு வாழ்த்துகள்!
ReplyDeleteமிக்க நன்றி கே.பி.ஜனா.
Delete2008லிருந்து எழுதிக் கொண்டிருந்தாலும் என் எழுத்துகளுக்கு பெட்ரோமேக்ஸ் லைட் போட்டது கோவை நேரம் ஜீவாவும் ஜீவா மூலம் அறிமுகப் படுத்தப்பட்ட நட்பு வட்டங்களும்தான்.. உங்க ஆசிரியப்பணி சிறக்க என் வாழ்த்துகள்..
ReplyDeleteமிக்க நன்றி ஆவி...ஜீவாவிற்கு சிலை வெச்சிடலாமா....
Deleteநம்ம ஊர்ல பீச் இல்ல..அதில்லாம ஏற்கனவே அவினாசி ரோட்ல அண்ணா சிலை இருக்கு.காந்திபுரத்துல வேற ஒரு சிலை இருக்கு....அதனால்ல ஒன்னு பண்ணுங்க...சிலை செய்யற காச கைல கொடுத்திடுங்க..புண்ணியமா போகும்..
Deleteஎன்னை அறிமுகம் செய்தமைக்கு நன்றிங்கோவ்...பேசின படி அமெளண்ட் வந்துடும்....
அறிமுகம் அருமை வாழ்த்துக்கள். ...
ReplyDeleteபுது ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்!இனி உங்கள் படைப்புகளை வாசிக்கத் தொடங்குகிறேன்.,, நன்றி..
♥ ♥ அன்புடன் ♥ ♥
S. முகம்மது நவ்சின் கான்.(99likes)
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நவ்சின் கான்
Deleteதங்களின் ஆசிரியப்பணி சிறக்க என் வாழ்த்துகள்..
ReplyDeleteமிக்க நன்றி சரவணன் சார்..
Deleteஎல்லாரையும் short and sweetஆ அறிமுகப்படுத்திட்டீங்க.... சூப்பர்
ReplyDeleteஉங்களுக்கு என்னோட வாழ்த்துகள்
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.இன்னம் என் அறிமுகங்களை ஆரம்பிக்கவில்லை ... காயத்ரி தேவி
Deleteஅறிமுகம் சிறப்பு! வலையில் எழுதுவதை குறைத்துவிட்டீர்களே! தொடர்ந்து எழுதுங்கள்! நன்றி!
ReplyDeleteநன்றி சுரேஷ். வேலைப் பளு காரணமாக எழுதுவதில்லை. எப்போதும் போல் வாரம் ஒரு பதிவிற்கு முயல்கிறேன்.
Deleteஅன்பின் எழில் - பதிவு நன்று - அறிமுகங்களூம் அருமை - சென்று பார்த்து படித்து மக்ழிந்து இரசித்து மறுமொழிக்ளூம் அங்கேயே இட்டு விடுகிறேன். நல்வாழ்த்துக: - நட்புடன் சீனா
ReplyDeleteஅன்பின் எழில் - சொன்னதைச் செய்து விட்டேன் - அனைத்துமே அருமையான பதிவுகள் - மறுமொழிகள் அங்கேயே எழுதி விட்டேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Deleteஅன்பின் எழில்
ReplyDeleteவிதிமுறைகளில் ஒன்றான லேபிள் இடுவது பற்றிய விதிமுறைகள் :
தங்கள் பதிவுகள் "எழில் " என்றோ அல்லது தங்களுக்குப் பிடித்த முறையிலோ லேபிள் இடப்பட வேண்டும். நாளை இந்த லேபிளைச் சொடுக்கினால் தங்களின் பதிவுகள் வரவேண்டும். அதற்காகத்தான்.
லேபிள் இப்பதிவினிற்கு இடுக, அடுத்தடுத்த பதிவுகளுக்கு அவ்வப்போது லேபிள் இடுக
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
உங்களின் கருத்துரைகளுக்கு மிக்க நன்றி ஐயா. லேபிள் இட்டு விட்டேன்
Deleteஅன்பின் எழில் - த.ம 5 - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteசுருக்கமான சுய அறிமுகம்.
ReplyDeleteபணி சிறக்க நல்வாழ்த்துக்கள்.
வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றுக்கொண்டிருக்கும் உங்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள் எழில்!!
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரி....
ReplyDeleteகலக்குங்க...
தொடர்ந்து வருகிறோம்..
வணக்கம்
ReplyDeleteஇன்று வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வலைச்சர ஆசிரியப் பணி சிறக்க நல் வாழ்த்துக்கள் தோழி!..
ReplyDeleteசுய அறிமுகம் சிறப்பு!..
ஜீவாதான் உங்களை எனக்கு அறிமுகப்படுத்தினார் என்பதும் அவரா(னா)ல்தான் உங்களின் பல சிறந்த படைப்புகளை நான் படித்து ரசிக்கவும், உங்களின் சேவை மனதை அறிந்து கொள்ளவும் வாய்ப்புக் கிடைத்தது என்பது என் நினைவில் பசுமை! இனிதாக வலைச்சர வாரத்தைத் துவக்கியிருக்கும் உங்களுக்கு அன்பும், மனம் நிறைய நல்வாழ்த்துகளும்!
ReplyDeleteஇந்த வாரத்தின் ஆசிரியைப் பணியை ஏற்றுக் கொண்டமைக்கு எமது
ReplyDeleteநன்றி கலந்த வாழ்த்துக்கள் .மென்மேலும் தங்களின் இப்பயணம் சிறப்பாகத்
தொடர வேண்டும் .