இனிய காலை வணக்கத்துடன்
சத்தம் கேட்டு ஓடி வந்த கணவன் பெயர் (ரசிகன்) ஏன்டி உனக்கு இம்பூட்டு கோபம் வருது எனக்கு போன் வந்தா ?
ஆமாம் என் கோவத்த சொல்லுங்க.. கோபம் வந்த இந்நேரத்துக்கு போன் பண்ண அவள... என்று நறநறவென பல்லைக் கடித்தால்.
அடிப்பாவி ரிங் டோன் வைத்தது ஒரு குத்தமா ? இந்த பாடலை கேட்க எத்தனை இனிமையா இருக்கு தெரியுமா ? நீ தான் ஆசையா மாமானு கூப்பிட மாட்ட செல்லாவது கூப்ட்டு போகுது விடேன்.
அய்யோடா ஆசையப்பாரு ...
ஏன்டி நான் ஆசைப்படக்கூடாதா ? நீங்க தான் புடவை வேனும். நகை வேனும்னு ஆசைப்படனுமா ? நானாவது பரவாயில்ல என்று சிரிக்க.
என்ன சிரிப்பு அங்க.. ம் என்ன சொல்ல வந்திங்க சொல்லுங்க .
என்னத்த சொல்ல நானாவது அம்சமா ஒரு பாட்டை ரிங்டோனா வைச்சேன். உன்னைய மாதிரியா அந்த பாட்டை கேட்டா எனக்கு வருது பாரு கோபம்.
என்னவாம் அந்த பாட்டுக்கு.. ஆஹா என்ன இனிமையான பாடல் "அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையிலே " நீங்க தான் பாட மாட்டிங்க அதுவாவது பாட கேட்கிறேன். உங்களுக்கு என்னவாம் ம் என்று முகத்தை திருப்பிக்கொண்டு உள்ளே செல்கிறாள்.
ஆமா அதை விடுங்க இவ்ளோ நேரமா போன் அடிக்குதே அப்படி என்ன தான் செய்றிங்க எடுக்காம ?
என்று எட்டிப்பார்த்தவள் முகத்தை கடுகடுவென வைத்துக்கொண்டு தெரியுமே எனக்கு இந்த கம்பூட்டரை கண்டு பிடித்தவனை காளை மாடு முட்ட... என்று சொடுக்கினாள்.
ஏன்டி...ஏன்டி சாபமெல்லாம் விடாதடி இங்க பாரேன் தென்றல் தான் இந்த வாரம் வலைச்சரம் ஆசிரியர். அதான்டி படிச்சிட்டு இருக்கேன். உன்னை மாதிரி அவங்க வாயாடி இல்ல என்ன அழகா...?
எவ அவ என்னை விட அழகு ?
ஏய... அவசரக்காரி அவங்க எழுத்தை சொன்னேன்டி.
அவங்க கவிதை படிச்சி பாரு பதிவர் சந்திப்பில் தென்றலின் கனவு புக் வாங்கிட்டு வந்தேனே.
ஏன் பசை காயுமுன்னே தூக்கிட்டு வந்திட்டிங்களா ?
அடியேய் உன்ன..
சரி சரி அப்படி என்ன தான் சொல்றாங்க ?
தமிழ் ஆர்வம் இருக்கிற எல்லோரும் கதை கட்டுரை சினிமா இப்படி பல்சுவையில் எழுதுபவர்களை இவங்க வலைச்சரத்தில் அறிமுகம் செய்து புதிதாக எழுதுபவர்களை ஊக்கப்படுத்துறாங்க. அப்படியே எங்களை மாதிரி ரசிக்கிறவர்களையும் போங்க ஐயா போய் அவர்களை இன்னும் நல்லா எழுதும்படி உற்சாகப்படுத்த சொல்றாங்க.
நல்ல விஷயம் தான் . எனக்கும் இப்படி எதாவது ஆரம்பித்து கொடுங்க மாமா.
என்ன ..? என்ன.. சொன்ன. மாமாவா.
ஆமா இப்ப தான அப்படி கூப்பிட்டா பிடிக்குமென்று சொன்னிங்க.
நீ இப்படி கொஞ்ச ஆரம்பிச்சா ? நான் கம்பூட்டர கனவுல தான் தொட முடியும். அதனால தாயி நீ போயி வாங்கி வா சமைக்க காயி.
அடப்பாவி மனுசா .. அவங்கள மாதிரி நானும் எழுதலாம்னு ஆசையா வந்தா ?
ஹஹ நீயா என்னடி எழுதுவ ?
என்ன வேனா எழுதுவேன் உங்களுக்கு என்னவாம். சரி சரி வாங்க புதுசா எழுதுறவங்க என்ன எழுதியிருக்காங்க பார்க்கலாம்.
இனி அறிமுகங்களைப் பார்ப்போமா ?
இயற்கையா கிடைப்பதை எல்லாம் இந்த நண்பர் இலவசம்னு சொல்றாரு அதோட அவற்றை எந்த வித எதிர்ப்பும் இல்லாம தமக்குனு எடுத்துட்டு அப்படியே தனக்கான பாதையில் வரும் பெண்ணை எப்படியெல்லாம் வர்ணிக்கிறார் தெரியுமா ? வா அங்கயே போய் பார்த்துவிட்டு வரலாம்.
அடுத்து இவங்க சொல்ற நண்பர் ஆன்மீகம் அரசியல் சினிமா இப்படி நிறைய விடயங்களைப்பற்றி எழுதுகிறார் என்றாலும் . நீ டிவியல சீரியல் பார்க்கிறியே அதில் தொடரும் தொடரும் போட்டா உனக்கு எம்பூட்டு கோபம் வருது அது போல இவர் ஒரு கதை எழுதுகிறாராம் அதை படிக்கும் நபர்களுக்கு அடுத்து என்ன ஆகுமோ என்று பதைக்குமாம் அந்த மாதிரி கதை எழுதுபவராம். த்ரில் திகில் எல்லாம் கண் முன்னே தெரியுதாம் புள்ள.
அடுத்து இவங்க சொல்ற வலை உனக்கு அவசியம் தெரியனும்டி கேட்டுக்க நீதான் எங்க அப்பா உங்கள மாதிரியில்ல. எங்க மாமா இப்படி அப்படினு ஜம்பம் பேசுறவ.. உனக்கு பிடித்த தலைப்புல தான் இவங்க எழுதுறாங்களாம். வா போய் பார்க்கலாம்.
பதிவுகளை தேடிப்படித்ததில் பசிக்கிற மாதிரி இருக்கா ? சாப்பிட நம்ம அனைவரையும் தான் அழைக்கிறாங்க. நம்மை மட்டுமில்லாமல் கோவைலிருந்து தில்லி வரை இருக்கும் அனைவரையும் அழைக்கிறாங்க. வா இனிமயாவது ருசியா எப்படி சமைக்கிறதுன்னு கத்துக்க.
அடுத்து இந்த முறை பதிவர் சந்திப்புல ஆவி ஆவின்னு எல்லோரையும் பதற அடிச்ச ஆவியோட அறிமுகமாம்டி. இவரும் வலைச்சர ஆசிரியரா இருந்தார். உனக்கு தெரியாது இல்லையா ? அதனால மறுபடி இவங்க அறிமுகம் செய்றாங்க. இவர் நல்லா பாடுவாராம். கதை விமர்சனம் நகைச்சுவை அப்படின்னு பல்சுவையா எழுதுபவராம். ரெடியா போலாமா ?
சரிங்க மாமோய் நான் எல்லார் பதிவையும் படிக்கனும் அதனால இன்னைக்கு சமையலுக்கு விடுமுறை சரியா ?
நாளை சந்திப்போம்.
அட..!
ReplyDeleteஇசை பாடியதை
வசை பாடியதோடு
சமையலுக்கும் விடுமுறையா..
வாழ்த்துகள்..!
அருமையான அறிமுகங்களுக்குப் பாராட்டுக்கள்..!
தங்கள் முதல் வருகை கண்டு மிகவும் மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteஅருமை..
ReplyDeleteசுவாரசியமா பதிவை எழுதி இருக்கீங்க வாழ்த்துக்கள்..
நான் என் கணவனை மாமா என்று தான் அழைப்பேன் :)
அறிமுகங்களும் அருமை. வாழ்த்த்ுக்கள்
அப்படியா உறவு முறை என்றால் மாமா என்று அழைக்க எளிதாக வரும் நான் என் கணவரை வாங்க போங்க தான்.. ஹஹ நன்றிங்க. அறிமுகத்தில் தாங்கள் எனக்கு கிடைத்த அறிமுகம். தொடர்பில் இருப்போம். நன்றிங்க.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஉறவு முறையில் அல்ல அவருக்கு பிடிக்கும் என்பதால் அழைக்கிறேன் :).
ReplyDeleteஉங்கள் அறிமுகத்திற்க்கும் சந்தோசம் . கண்டிப்பா தொடர்பில் இருப்போம்
நீங்க ப்ளாக் எதுவும் எழுதவில்லையா ? ஆவலுடன் சென்றேன். மகிழ்ச்சி தென்றல் பக்கம் வாங்க தொடர்பில் இருப்போம்.
Deleteவலைச்சரத்தில் என்னையும் அறிமுகம் செய்து வைத்ததற்கு மிக்க நன்றி.
ReplyDeleteவெறுமனே அறிமுகம் செய்துவிட்டு போய்விடாமல் அதை மிகவும் சுவாரஸ்யமாகவும் செய்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
சுவாரஸ்யம் என்று சொல்லி உற்சாகப்படுத்தியமைக்கு மிக்க நன்றிங்க.
Deleteபதிவின் பெயரைக் குறிப்பிடாது
ReplyDeleteசிறப்பை மட்டும் சொல்லி
பார்த்துக் கொள்ளட்டும் என
அறிமுகம் செய்தது அருமை
பதிவுலகில் எதையும் வித்தியாசமாகவும்
சிறப்பாகச் செய்பவர்களுக்குமென ஒரு
ஒரு போட்டிவைத்தால் நிச்சயம் நீங்கள்தான்
முதலில் வருவீர்கள்
தொடர வாழ்த்துக்கள்
பதிவின் பெயர் குறிப்பிட்டால் அது ஏற்கனவெ அவங்க படித்ததாக இருந்தால் போக மாட்டாங்க அதனால இப்படி..
Deleteஐயா இவள் மிகவும் சிறியவள் நினைப்பதை எழுதுகிறேன். தங்கள் ஆசியுடன் தொடர்கிறேன். மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் ஐயா.
hahaha.. nalla idea, aavee ya mattum veliya sollitteenga.. varaama poyida poraanga.. :-)
Deleteஅப்படி சொன்னா தான் வேகமா வருவாங்க.
Deleteவலைத் தளங்களை வித்தியாசமாக அறிமுகம் செய்தது - சிறப்பு. தொடர்க!..
ReplyDeleteசிறப்பு என்று வாழ்த்தியமைக்கு மிக்க நன்றிங்க.
Deleteநான் தொடரும் தளங்கள்...
ReplyDeleteஅனைத்தும் அருமையான தளங்கள்...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
தங்களுக்கு அறிமுகம் இல்லாத தளமும் உண்டா ? ஹஹ
Deleteநன்றிங்க.
sennaiyil inaiya vasathi kuraivu enbadhaal alaipesiyil taippugiren.. arumaiyaana arimugangal.
ReplyDeleteடைப்புங்க ..ஹஹ
Deleteஇதோ என் blog முகவரி
ReplyDeletehttp://harininathan.blogspot.com/
உங்க பெயர் க்ளிக் செய்தால் அதில் ப்ளாக் போக வழிவகையில்லையே. இதன் மூலம் கண்டிப்பாக வருகிறேன். நன்றிங்க.
Deleteஅன்பு சசி,
ReplyDeleteநாலுபேரை அறிமுகம் செய்தாலும் நறுக் அறிமுகங்கள்! அதிகமான பேரை ஒரே நாளில் அறிமுகம் செய்தால் எல்லா தளத்திற்கும் போக முடிவதில்லை. இன்று உங்கள் அறிமுகத்திலிருந்து தான் கோவைtoதில்லி திருமதி ஆதி சமையல் குறிப்பு எழுதுவது தெரிந்தது.
வலைத்தளங்களின் பெயர்களைச் சொல்லாமல் சஸ்பென்ஸ் வைப்பதும் நன்றாக இருக்கிறது. கலக்குங்க என்று முதல் நாள் சொன்னேன். உண்மையில் கலக்கிக்கொண்டிருக்கிறீர்கள்! வாழ்த்துகள்!
ஆமாங்க நமக்கு தேவை சமையல் குறிப்பு தானே வாங்க பார்க்கலாம். நன்றிங்க.
Deleteபுதுமையாய் இனிமையாய் ஈர்ப்பதாய் அறிமுகப்பதிவு செய்துள்ளீர்கள் சசிகலா! அந்த இனிமையில் மேலும் இனிமையாய் என் தள அறிமுகம்! உள்ளம் நிறைந்த மகிழ்ச்சியுடன் நன்றி சசிகலா! வாழ்த்திய அனைவருக்கும் நன்றி உரித்தாக்கி அறிமுகமான மற்றவர்களுக்கு வாழ்த்துகளைச் சொல்லிக்கொள்கிறேன்!
ReplyDeleteதங்கள் வருகையும் மகிழ்வாக வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றிங்க.
Deleteaahaa! ennaiyum arimugam seiythu vaithamaikku nandringa. thodarnthu kalakkunga.
ReplyDeleteநன்றி மட்டும் தானா ? சாப்பிட ரெடியா இருக்கோமே நாங்க..
Deleteவாங்க தடபுடலா விருந்து வெச்சிட்டா போச்சு. ....:)
Deleteடெல்லிக்கா ? ஆத்தி..
Deleteபுதுமையான அறிமுகங்கள்! படித்து மகிழ்ந்திட...
ReplyDeleteதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteமிக மிக அருமை! முதலில் உங்களுக்கு வாழ்த்துக்கள் தோழி!
ReplyDeleteநல்ல கிராமத்துச் சம்பாஷனையுடன் அறிமுகப் பதிவர்களை அறிமுகம் செய்கின்ற நுட்பம் அற்புதம்! எப்படியாயினும் இப்படியாவது அவர்கள் வலைக்கு ஒருமுறை போய்ப் பார்க்கட்டும் என போக வைத்த எண்ணம் மிகச் சிறப்பு!
இனிய நல்ல உள்ளம் உங்களுக்கு...மனமார்ந்த வாழ்த்துக்கள்!
அறிமுகங்கள் ஒருவரின் தளம் `என்னுலகம்’ என் கட்டுப்பாட்டுக்கு வரமாட்டேன் என்று கணினியில் துள்ளுகிறது. பார்வையிட முடியவில்லை...:).
இன்றைய அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் என் நல் வாழ்த்துக்கள்!
இம்மாதிரி வாழ்த்துரைகள் கிடைக்கும் என்பதற்காகவே புதுப்புது நுட்பங்களை யோசிக்கலாமே.. மிகவும் மகிழ்ச்சிங்க.
Deleteவணக்கம்
ReplyDeleteசசி(சகோதரி)
இன்று அறிமுகம் செய்த தளங்கள் அனைத்தும் அருமை வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் அத்தோடு அழகாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு பாராட்டுக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் வருகை கண்டு மகிழந்தேன். நன்றிங்க.
Deleteசசிகலா அம்மா.. நல்ல அறிமுகங்கள்...அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
ReplyDelete♥ ♥ அன்புடன் ♥ ♥
S. முகம்மது நவ்சின் கான்
www.99likes.blogspot.com
தங்கள் வருகை கண்டு மகிழந்தேன். நன்றிங்க.
Delete
ReplyDeleteசௌம்மிய தேசத்து சீராளனின் என்னுயிர் கவிதைகளோடு போட்டியிடும் எழில் படங்கள்.
சீனியர் வலைப் பதிவர் டிபிஆர் ஜோசப்பின் என்னுலகம். கிரேஸின் தேன் மதுரத் தமிழ்.
சாப்பிட வாங்க என்று அழைக்கும் அன்பு சகோதரிகள்.
ஆனந்த ராஜா விஜயராகவன் என்ற ஆவி!
- அனைவரும் நல்ல அறிமுகம். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்! உங்களுக்கும்தான்!
எந்த எந்த தளம் இன்று அறிமுகம் என்று அனைவருக்கும் விளக்கி சொல்லும் விதமாக இருக்கிறது தங்கள் பின்னூட்டம் . மிக்க மகிழ்ச்சி நன்றியுங்க.
Delete(ஆர்வமா யாரோட தளமாக இருக்கும் என்று ஆவலில் செல்வார்கள் என்றே பெயரும் பதிவின் பெயரும் குறிப்பிடவில்லை.)
என் வலைப்பூ வந்தமைக்கு மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா ..!
Deleteஅறிமுகம் தந்த தென்றலுக்கும் மனமார்ந்த நன்றிகள்
அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்கள் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete//என்னவாம் அந்த பாட்டுக்கு.. ஆஹா என்ன இனிமையான பாடல் "அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையிலே " நீங்க தான் பாட மாட்டிங்க அதுவாவது பாட கேட்கிறேன். உங்களுக்கு என்னவாம் //
ReplyDelete//இந்த கம்பூட்டரை கண்டு பிடித்தவனை காளை மாடு முட்ட...//
ரஸித்தேன், சிரித்தேன். ;))))) பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
மிக்க மகிழ்ச்சிங்க ஐயா. ரசித்து படித்து கருத்திட்டமைக்கு . தங்களின் பின்னூட்டங்களினாலே அடுத்து என்ன தருவது என்ற யோசனை வந்து விடுகிறது. மிக்க நன்றிங்க ஐயா.
Deleteபுதிய நுட்பமாய் அறிமுகங்கள் தந்து சிறப்பைச் சொல்லி வந்த
ReplyDeleteபதிவு...-க்கு வாழ்த்துக்கள்.
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteநன்றிகள் ..என்று ஒற்றைவரியில் சொல்ல மனது இடம் தரவில்லை...
ReplyDeleteவாழ்த்துக்கள்..என்று சொல்வதற்கும் வயதில்லை..
வாழ்த்துங்கள் வளர்கின்றேன்... என்று மட்டும் மனது கேட்கதுடிக்கிறது ஆனால் தங்களின் ஆசி என்றுமே என்னில் என்று மட்டும் நினைவில் தோன்றுகின்றது..
அன்புடன்.
நன்றிகள்..
தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.
Deleteவலைச்சர வானில்
ReplyDeleteமீண்டும் தென்றலின் வாசம்...
தென்பொதிகைத் தென்றலே
நின் மண்வாசம்
சுமந்துவரும் மேன்மைமிகு
விரல்கசிந்த எழுத்துக்களை
வாசிக்க வந்தேன்...
சுவாசித்து எனை மறந்தேன்...
==
வாழ்த்துக்கள் பல தங்கை சசி...
பணிசிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
அறிந்திராத பதிவர்களை நிச்சயம்
சென்று பார்க்கிறேன்...
அண்ணா எப்படி இருக்கிங்க. இந்த முறை அறிமுகத்திலும் தங்கள் பெயரை குறிப்பிட நினைத்தேன். எங்கே தேடி வந்து திட்டுவிங்களோ என்று மனதில் மட்டும் நன்றியை சொல்லியபடி இருந்து விட்டேன்.
Deleteவீட்டில் அண்ணி குழந்தைகள் அம்மா அனைவரும். இந்த தங்கையையும் அவ்வப்போது நினைவில் வைத்துக்கொள்க. நன்றிங்க அண்ணா.
தென்றல் என்ற பெயரிலே
ReplyDeleteமென்மையாக சற்றே கருத்தெனும்
வேகத்தை எழுத்திலே காட்டி அனைவரையுமே
மகிழ்ச்சியால் திக்குமுக்கு ஆடவைப்பதை
தொடர்ந்து செய்ய வேண்டி வாழ்த்துகிறேன்
என்றுமே வளம் வாருங்க சசிகலா மாறாத
மண்வாசனையோடு என அன்போடு மீண்டும் வாழ்த்தியே...
வருக வருக தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றிங்க.
Deleteஎன்னுடைய வலைப்பூவினையும் அறிமுகம் செய்தமைக்கும் /தகவல் தந்தமைக்கும் மிக்க நன்றி சசிகலா ..! ( ஆமா முதலில் நம்மதானா மாட்டியது )
ReplyDeleteஅத்தோடு இன்று தென்றல் தொட்ட வலைப்பூக்களின் வாசம் எல்லாம் நுகர்ந்தேன் அழகிய அறிமுகம் புதிய பரிணாமம்,வித்தியாசமான அணுகுமுறை , தொடரட்டும் தென்றலின் பணி ( தொடராவிட்டால் விடுவோமா என்ன )
வாழ்த்துக்கள்
வாழ்கவளமுடன்