இனிய காலை வணக்கம்
இன்று நாம் சிங்கப்பூரில் வாழும் கவிஞர்களின் படைப்புகளை சுவைக்கப் போகிறோம். திருமணம் முடித்து மும்பை சென்ற போது, இந்தி தெரியாமல் முழித்து, தப்பு தப்பா பேசி சமாளிச்சு, ஒரு வழியா இந்தி கத்துகிட்ட கதையை ஒரு பெரும் நாவலாகவே எழுதலாம். மும்பையிலேயே வசிக்க முடிவு செய்த போது தான் தீடீரென்று சிங்கப்பூர் பயண வாய்ப்பு வந்தது. ஒரு வித பயத்தோடு தான் இங்கே காலடி வைத்தேன். ஆனால் நம்மூரில் இருப்பது போல் தான் இருக்கிறது உறவுகள் இல்லாத குறையை மட்டும் நீக்கிவிட்டால். தமிழ் இங்கொரு ஆட்சிமொழி என்பதால் எல்லா அறிவிப்புகளிலும் தூய்மையான தமிழை கேட்கமுடிகிறது. மும்பையில் தமிழைத் தேடி சோர்ந்த மனசு இங்கே தமிழில் நீந்தி களிப்புறுகிறது. இன்னும் சிங்கப்பூர் பத்தி பேசரதுக்கு முன்னால் நான் 40 -50 வயதை (சுமைதாங்கி காலம்) பார்த்துட்டு வந்துடலாம் வாங்க.
இந்த காலகட்டத்தில் குழந்தைகளின் படிப்பு , உறவுகளை அரவணைத்தல் , பெற்றோர்களை பேணிக்காத்தலென்று காலம் விறுவிறுவென்று ஓடிக்கொண்டிருக்கும். தீடீரென்று மனது முதிர்ச்சியடைந்து விட்டது போல் தோன்றும். பலரும் ஆலோசனை கேட்டு வேறு வந்து வரிசையில் நிப்பாங்க(காலரை மனசுக்குள்ள தூக்கிவிட்டுட்டு எனக்கென்னப்பா தெரியுமுனு ஆரம்பித்து 1 மணி நேரம் அட்வைஸ் பண்ணர சுகமே தனிதான் போங்க). குழந்தைகளின் விருப்பங்கள் அவர்களின் எதிர்கால திட்டங்கள் மட்டுமே மனசுக்குள்ள எப்பவுமே படமா ஓடிட்டு இருக்கும். குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக நம்ம பர்ஸ் இளைத்தலைக் கூட பொருட்ப்படுத்தாமல் வெளிநாட்டுப் பயணங்களும் மேற்கொள்ள படும்.
சிங்கை வரும் நண்பர்களுக்கு சொல்ல விரும்புவது ஒன்றுதான். கண்டிப்பாக நூலகத்திற்கு சென்று வாருங்கள். சிங்கப்பூரில் என்னை மிகவும் கவர்ந்தது அவர்களின் புத்தகம் வாசிக்கும் பழக்கம் தான்.
ஏப்ரல் மாதம் முழுவதும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல போட்டிகளும், கருத்தரங்குகளும் நடைபெறும். “தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம், தமிழோடு வாழ்வோம்” என்ற வரிகளை கேட்கும் போது பெருமிதத்துடன் தலைநிமிர தோன்றும் இங்குள்ளவர்களின் தமிழ்பற்றைப் பார்த்து
தீபாவளி இங்கே களைகட்டும். அந்த மாதம் முழுவதும் வண்ண விளக்குகளால் “லிட்டில் இந்தியா” பகுதி மிதக்கும். தீபாவளி சந்தை இங்கே புகழ் பெற்ற ஒன்று. தைபூசமும் இங்கே வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அலகு குத்துதல், காவடி எடுத்தல் என்று நமது பாரம்பரிய முறையில் கொண்டாடி அசத்துவார்கள்
சிங்கப்பூரில் வசிக்கும் நமது கவிஞர்கள் தங்களது அதிகப்படியான வேலைச் சுமைக்கிடையிலும் தமிழ்மீதுள்ள ஆர்வத்தால் மாதம் ஒருமுறை பல குழுக்களாக கூடி தங்களது புலமையை பட்டைத்தீட்டிக் கொள்கிறார்கள். சென்ற வாரம் சிங்கப்பூர் அரசாங்கம் நடத்திய “எழுத்தாளர் மாநாட்டில்” பலரை சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது. எழுத்தாளர் இமயம், சல்மா அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். எழுத்தாளர் இமையம் அவர்களின் எதார்த்தமான பேச்சு அனைவரின் மனதையும் ஆட்கொண்டது.
இப்ப சிங்கை கவிஞர்களின் கவிதைகளில் மூழ்கித்திளைக்கலாம் வாங்க
1) பிச்சினிக்காடு இளங்கோ
இவர் சிங்கையின் மூத்த கவிஞர். சுமார் 15 நூல்கள் வெளியிட்டுள்ளார். “கவிமாலை கணையாழி” இலக்கிய விருதை துவங்கியவர். கவிமாலை என்ற குழுமத்தை தோற்றுவித்தவர். இன்றும் சிங்கையில் மாதமொருமுறை கவிமாலை நட்புகள் சேர்ந்து கவிதை போட்டிகள் நடத்தி பரிசும் வழங்குகிறார்கள். “எழுத்தாளர் விழாவில்”தான் இவரை சந்தித்தேன். இவரது வழிகாட்டலில் பல துளிர்கள் உருவாகி பெருமைசேர்க்கும் என்பதில் ஐயமில்லை. இவரின் கனிவான பேச்சும், அமைதியான அணுகுமுறையும் இவர் மீது பெரும் மதிப்பை உருவாக்கிவிடும்.
இவரின் வலைப்பக்கத்தில் ஒரு பதிவுதான் இருக்கிறது என்றபோதும் இவரை எல்லோரும் அறியவேண்டுமென்பதால் இந்த பக்கத்தை இங்கே பகிர்கிறேன்.
பிச்சினிக்காடு இளங்கோ
---------------------------------------------------------------------------------------------------------------
2) ஷா நவாஸ்
கவிதை கட்டுரை சிறுகதைகள் எழுதிவருகிறார். சிங்கப்பூர் கிளிஷே என்ற இணைய இதழின் ஆசிரியர் துண்டு மீனும் வன்முறைக்கலாச்சாரமும் ஒரு முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டவும் கட்டுரை தொகுதிகளும் மூன்றாவது கை என்ற சிறுகதைத்தொகுப்பும் இதுவரை வெளி வந்துள்ளன தொடர் ந்து உயிரோசையில் இவர் எழுதிவரும் அயல்பசி என்ற கட்டுரைத்தொகுப்பு 2012 ஆண்டுக்கான சிற ந்த பண்பாட்டுக் கட்டுரையாக திரு எஸ் ராமக் கிருஷ்ணன் அவர்ர்களால் தேர் ந்தெடுக்கப்பட்டது.
இவரையும் “எழுத்தாளர் மாநாட்டில்” தான் சந்தித்தேன். வாசகர்வட்டம் என்ற குழுமத்தை வழிநடத்தி வருகிறார். மாதம் ஒருவரின் படைப்புகளை வாசித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டு தங்களது அறிவாற்றலையும் பெருக்கிக் கொள்ளுகிறது வாசகர் வட்டம். இவரின் எளிமையான ,இனிமையான பழகுமுறை சட்டென்று நட்புக்கள் வட்டத்தில் இழுத்துக்கொள்ளத் தோன்றும். சகோதர வாஞ்சையுடன் கவனித்துக் கொள்ளுவதில் இவருக்கு நிகர் இவரே.இவரின் சில படைப்புகள் உங்கள் பார்வைக்கு
நீ சிரித்தால் இந்த சிறுகதையில் தீபாவளிக்கு ஊருக்கு போக முடியாததால் ஏற்படும் உணர்ச்சி போராட்டத்தை அழகாக வார்த்தைகளால் வடித்திருக்கிறார். இளமைக்கால தீபாவளையைப் பற்றி கூறுகையில் நாமும் நமது இளமை தீபாவளிப்பருவதிற்கு சென்றுவிடுகிறோம்.
“வளர்கிற பிள்ளை கொஞ்சம் பெரிசா தைத்தால்தான் நல்லது” இது அப்பா
எனக்குத்தெரிந்து எல்லா அப்பாக்களும் இப்போதும் சொல்லும் வார்த்தையாகவே படுகிறது.
எல்லாருடைய பாதத்திலும் கடைசி வரை ஊரின் மண் ஒட்டிக் கொண்டுதானிருக்கிறது. இது எத்தனை உண்மையான வரிகளென்று ஊரைவிட்டு வந்தவர்களுக்குத்தான் தெரியும்.
ஊருக்கு வராத மகனிடம் அம்மா காண்பிக்கும் கோபம் இரசிக்கும்படியாகவே இருக்கிறது.
ஆன்ட்டி கேத்தரின் மோதிரத்தை நீட்டி “கேன் யூ பை பார் மீ” என்றார்.நான் அவருக்குத் கொடுப்பதாக இருந்த அங்பாவ் கவரை வெளியிலெடுத்து “எஸ் ஐ வான்ட் டு பை” என்று மோதிரத்தை வாங்க கையை நீட்டினேன்.எதிர்பாராத ஆச்சரியத்துடன் மோதிரத்தை சின்னதாக நீட்டினார்
நான் வாங்கிக்கொண்டு அங்பாவ் கவரை கொடுத்தேன்.”தேங்க் யூ ,தேங்க் யூ’” என்று சொன்னாள்.லிப்டில் ஏறும்போது திரும்பிப் பார்த்தேன்.ஆன்ட்டி கேத்தரின் கவரிலிருந்து இரண்டு பத்து வெள்ளித்தாள்களுடன் மோதிரமும் இருந்ததைப் பார்த்துவிட்டு என்னைப் பார்த்து இதுவரை நான் சந்தித்திராத ஒரு சிரிப்புடன் “ஹேப்பி தீபாவளி” என்றார்.
இந்த வரிகள் மனதை நெகிழவைத்து விட்டன.
வலி இந்தக் கவிதை சட்டென கவனத்தை ஈர்த்தது. இதில் வலிகளை அழகாக பதிந்து இருப்பார். நான் மிகவும் இரசித்த வரிகள்
இன்னும் இறுதி வலி உணரப்படாததால்
புதிய வலியும் மறத்தலும்
நீண்டு கொண்டேயிருக்கின்றன!
-------------------------------------------------------------------------------------------------------------
3) கவிஞர் நெப்போலியன்
எழுத்தாளர், கவிஞர் & திரைப்படப் பாடலாசிரியர். காதலின் விழுந்தேன் திரைப்படத்தில் "உன் தலைமுடி உதிர்வதைக்கூட தாங்கமுடியாது அன்பே... " முதல் திரைப்படப்பாடல். "நானும் என் கருப்புக்குதிரையும்" முதல் கவிதைத் தொகுப்பு. ”பிக்கிள்” என்ற சிங்கப்பூர் தமிழ்ப்படத்திற்கு இரண்டு பாடல்களை எழுதியுள்ளார்.
இவரையும் “எழுத்தாளர் மாநாட்டில்” தான் பார்த்தேன். இமயத்தின் எல்லா படைப்புகளையும் அழகாக எடுத்து கூறி அசரவைத்தார் அனைவரிடமும். துளியும் கர்வமில்லாத அன்புடன் பழகக்கூடிய மனிதர்.
ஆடு புலி ஆட்டம் இந்தக் கவிதையில் பொய் சாமியார்களின் முகமூடியை கிழித்து இருப்பார். நான் மிகவும் இரசித்த வரிகள்
இன்றைய அருளுரையில் குரு சொன்ன வெள்ளாட்டுக்குட்டிக் கதையை பயபக்தியுடன் செவிமடுத்துக்கொண்டிருந்தனர் , ஆற்றில் அடித்து வரப்படாத சீடர்களும்... சரணாகதி ஜனங்களும்... அருகில் அமர்ந்திருந்தாள்
ரத்தம் தோய்ந்த நினைவுகளுடன்... சேவகி !
ஒலிவாங்கி யைப் பற்று அழகாக விவரித்து இருப்பார். எத்தனை பேசினாலும் அவர்களின் எண்ணங்களை மட்டும் ஒலிபரப்பி விட்டு மெளனமாய் நிற்கும் ஒலிவாங்கி என்று குறிப்பிட்டு கவிதையை முடித்த விதம் அருமை
நீ
ஒரு நாளில்
சபையேறி
எம் முகம் பார்த்து
தனியாளாய்
உரையாற்றும்
மொழி கேட்க
காத்திருப்பேன்...
முன் வரிசை
அமர்ந்திருப்பேன் !
எதிர்காலத்தில் பிரபல பாடலாசிரியராக வர வாழ்த்துக்கள்
---------------------------------------------------------------------------------------------------------------------
4) கோபாலக் கண்ணன்
நினைவில் காதல் உள்ள மிருகம் என்ற வரிகளோடு சத்ரியனாக வலைப்பக்கத்தில் அவதரித்திருப்பார். கவிமாலை குழுமத்தில் முக்கிய பிரமுகராக இருக்கிறார். பழகுவதற்கு மிகவும் இனிமையான நபர்.
"கண்கொத்திப் பறவை" என்ற கவிதை நூலின் ஆசிரியர். இவரது பக்கங்கள் காதல் கவிதைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தாலும என்னை மிகவும் கவர்ந்தது இவரது கதையும், கட்டுரையும் தான்.
செவத்தா கதையில் தன் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை அழகாக பதிந்து இருப்பார். எச்.ஐ.வி நோயைப் பற்றி கிராமத்தில் விழிப்புணர்வு இல்லாததை வருத்தத்துடன் பதிந்து இருப்பார் இக்கதையில். இவரது எழுத்துநடை என்னை மிகவும் கவர்ந்தது.
வானம் பாத்த பூமியில் விவசாயம் செய்வது எத்தனை வலிவாய்ந்தது என்பதை சிறு உரையாடல் மூலம் உணர்த்திய விதம் அருமை
நான் நோயற்றவள் என்று யாருக்கு நிரூபிக்க வேண்டும்? என்ற கேள்வியுடன் எளிமையாக மறுத்துவிடுவாள்..... இந்த வார்த்தைகளின் கனம் தனிமையின் வெறுமையை அழகாக சொல்லிவிடுகிறது.
காதல் திருமணங்களை ஆதரியுங்கள் என்ற கோரிக்கையுடன் கதையை முடித்து இருப்பார்.
வீரர்களைக் காப்போம் கட்டுரையில் இலங்கையில் இராணுவ முகாமில் அவதிப்படும் குழந்தைகளைப் பற்றி விவரித்து இருப்பார். இதைக் குறித்தி விமர்சிக்கும் தெம்பில்லை எனக்கு. படித்து பாருங்கள், நீங்களும் வாயடைத்து போவீர்கள் என்னைப்போல்.
கண்ணன் மேன்மேலும் புகழ் பெற்று எல்லா வளத்தோடும் வாழ வாழ்த்துக்கள்
------------------------------------------------------------------------------------------------------
5) கோவி.கண்ணன்
காலம் என்ற வலைப்பக்கத்தில் , தன்னைச் சுற்றி நடப்பதையும், தான் அறிந்ததையும் பதிந்துள்ளார். சிங்கப்பூரில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளையும் இவரது வலைப்பக்கத்தில் பதிந்துள்ளார். சிங்கப்பூரைப் பற்றியும், இங்கு நடப்பது பற்றியும் அறியவேண்டுமா???? இவரது வலைப்பக்கத்துக்கு சென்றுவிடுங்கள்.
சிங்கப்பூர் கோவில்கள் தானாக எழுந்தவையா இக்கட்டுரையில் தீமிதிப்பதில் ஆரம்பித்து சிங்கையில் வாழும் தமிழர் சமூகத்தை பற்றி விரிவாக எடுத்து உரைத்திருப்பார்.
முகவரிடம் பணம் கட்டி தனியாக வேலைக்கு வந்தவர்கள் தவிர்த்து, சிங்கப்பூரில் குடும்பமாக வசித்தவர்கள் இந்தியாவில் சொத்துவாங்காமல் இங்கேயே முதலீடு செய்திருந்தால் இந்திய சமூகம் தன்னிறைவு அடைந்திருக்கும், ஆனால் எங்கு கடைசிகாலம் என்பதை குழப்பி குழப்பி இந்தியாவில் சொத்து வாங்கி அங்கேயும் சென்று வசிக்காமல், தானும் அனுபிக்காமல் சொந்தக்காரனை சொத்து அனுபவிக்கவிட்டவர்களால் தான் நம்மால் பெரிய அளவில் சமுக உயர்வை பெற முடியவில்லை என்பதை இங்குள்ள பெரிசுகள் ஒப்புக் கொள்கிறார்கள்.
இது மறுக்க முடியாத உண்மை
வெளிநாடுகளில் எங்கேயாவது நம் பண்பாட்டு சார்ந்த வழிபாட்டுத் தளங்களுக்கு சென்றால் அங்கு உள்ள கடவுளை கும்பிடுவதற்கு முன் இவற்றை நமக்காக ஆக்கி வைத்திருப்பவர்களையும் நன்றியோடு நினையுங்கள். நான் சொல்வது சென்னைக் கூட பொருந்தும்,
இதுவரை செய்ததில்லை...ஆனால் இனிமேல் கண்டிப்பாக செய்வேன்
தமிழறிவோம் படித்துவிட்டு அசந்து போய்விட்டேன். இனிமேல் சுத்தம், சுகம்,சுகாதாரம், சிந்தனை போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதில்லை என்று முடிவு செய்து இருக்கிறேன்.மிகவும் அருமையான கட்டுரை. அனைவரும் படியுங்கள். வடமொழி சொற்கள் என்று தெரியாமலேயே பல சொல்களை நாம் தமிழென்று எண்ணி பயன்படுத்தி வருகிறோம். இக்கட்டுரை நல்ல விழிப்புணர்வை தரும்.
------------------------------------------------------------------------------------------------------
6) சி. கருணாகரசு
அன்புடன் நான் வலைப்பக்கத்தில் எழுதிவருகிறார். காதல் தின்றவன் என்ற தலைப்பில் நிறைய கவிதைகளை வடித்துள்ளார்.
மரபாச்சி என்னை மிகவும் கவர்ந்த கவிதை. என்னிடமும் ஒரு மரபாச்சி பொம்மை இருந்த காரணத்தினால் இருக்குமோ???
மரப்பாச்சியை
பொய்யாய்க் குளிப்பாட்டி
தலைவாரிப் பூச்சூடி
உணவூட்டி உறங்கவைக்கும்
குழந்தைகளுக்கு,
அறவே வருவதில்லை
அம்மா நினைவும்
அந்த வேளை பசியும்.
பழைய நினைவுகளை மீட்டிய வரிகள்
தேடலைச்சுவாசி என்ற இவர் நூலில் இருந்து தேடல் என்ற கவிதையிது. என்னை மிகவும் கவர்ந்த வரிகள்
தேடல்
விடியலைக் கற்பிக்கும்
வியர்வைப் பாடம் .
வெற்றிக் கனி பறிக்க
வித்திடும் ஏணி .
-------------------------------------------------------------------------------------------------------------
7) ஜெயந்த்
வெட்டிப்பய என்ற வலைப்பக்கத்தில் "தொலைத்த நினைவுகளை வார்த்தைகளில் தேடுபவன்" என்ற வரிகளோடு அறிமுகப்படுத்திக் கொள்ளும் இவர் கவிதைகளால் நம்மை வரவேற்கிறார்.
நான் படித்தவரை நிரைய காதல் தோல்வி கவிதைகளை எழுதி இருக்கிறார். எனக்கு பிடித்த சில கவிதைகளை பார்க்கலாம் வாங்க
ஒற்றைச் சருகு “ஒற்றை” என்ற வார்த்தை எங்கிருந்தாலும் என்னை ஈர்க்கும் வல்லமை வாய்ந்தது. இந்த சொல்லின் ஈர்ப்பினால் இக்கவிதைக்குள் பயணமானேன். தனிமையை அழகாக விவரித்து இருக்கிறார். என்னை கவர்ந்த வரிகள்
காதல் கொன்று ராகம் தின்பவள் காதல் வலியை இதைவிட வார்த்தைகளால் வடிக்க இயலுமா எனத்தெரியவில்லை.
இன்னும் பெயர் வைக்கப்படாத அந்த
இசைக்கருவியில் என்
மூளையிலிருந்து இதயத்திற்கு வரும்
நரம்புகளை மட்டும் தனியாய்
பிரித்தெடுத்து நேர்த்தியாய்
வரிந்து கட்டியிருக்கிறாள்,
இவ்வரிகளில் இருந்து மீளவே நெடும்நேரமானது எனக்கு
இவர் கடைசி கவிதைகள் என்ற தலைப்பில் பதிந்துள்ள கவிதைகள் மிகவும் அருமையாக உள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------
இன்று விடைபெறுகிறேன் நண்பர்களே. நாளை கடைசி நாளென்பதால் என் நண்பர்களின் வலைப்பக்கத்தோடு உங்களை சந்திக்கிறேன். நன்றி...வணக்கம்

இன்றைய அருளுரையில் குரு சொன்ன வெள்ளாட்டுக்குட்டிக் கதையை பயபக்தியுடன் செவிமடுத்துக்கொண்டிருந்தனர்

தேட நினைப்பதும் நான் தொலைத்த
என்னை மட்டுமே..காதல் கொன்று ராகம் தின்பவள் காதல் வலியை இதைவிட வார்த்தைகளால் வடிக்க இயலுமா எனத்தெரியவில்லை.
இன்னும் பெயர் வைக்கப்படாத அந்த
இசைக்கருவியில் என்
மூளையிலிருந்து இதயத்திற்கு வரும்
நரம்புகளை மட்டும் தனியாய்
பிரித்தெடுத்து நேர்த்தியாய்
வரிந்து கட்டியிருக்கிறாள்,
நரம்புகளை மீட்ட
விரலிடுக்குகளில்
என் நாவின் நுனியை
இதய வடிவில்
கத்தரித்து கவ்வியிருருக்கிறாள்
விரலிடுக்குகளில்
என் நாவின் நுனியை
இதய வடிவில்
கத்தரித்து கவ்வியிருருக்கிறாள்
இவ்வரிகளில் இருந்து மீளவே நெடும்நேரமானது எனக்கு
இவர் கடைசி கவிதைகள் என்ற தலைப்பில் பதிந்துள்ள கவிதைகள் மிகவும் அருமையாக உள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------
இன்று விடைபெறுகிறேன் நண்பர்களே. நாளை கடைசி நாளென்பதால் என் நண்பர்களின் வலைப்பக்கத்தோடு உங்களை சந்திக்கிறேன். நன்றி...வணக்கம்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றிங்க தனபாலன்
Deleteஅனைவரும் அறிந்த முகங்களே. வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றிங்க........அனைவரும் நல்ல எழுத்தாளர்களென்பதால் அறிந்து இருப்பதில் ஆச்சரியம் இல்லை தோழரே
Deleteகோபால் கண்ணன், கருணாகரசு, ஜெயந்த் நான் படிக்கும் கவிஞர்கள்... மற்றவர்கள் புதுசு... சென்று படிக்கிறேன்....
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்... அனைத்துக் கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.
நன்றி குமார்.....படிச்சுட்டு சொல்லுங்க
Deleteமிக அருமை. சிங்கப்பூரிலிருந்து கொண்டு தமிழ் தொண்டாற்றும் அத்தனை அறிஞர்களுக்கும் என் அன்பு கலந்த வணக்கம்
ReplyDeleteநன்றி சுமன்..தொடர்ந்து படித்து கருத்திடுவதற்கு....நண்பேண்டா.......
Deleteஅருமையான அறிமுகங்கள்... அனைவருக்கும் வாழ்த்துகள்
ReplyDeleteநன்றிங்க ஜீவா
Deleteஉங்களுக்கும் அறிமுகமானவர்களுக்கும் வாழ்த்துகள்!
ReplyDeleteநன்றிங்க கிரேஸ்
Deleteஎல்லாம் போய் பாத்துட்டு வந்துட்டேன் அக்கா, ஒவ்வொருத்தரும் ஒரு விதம். சூப்பர் அறிமுகம் (y)
ReplyDeleteநன்றிடா........நாளையோடு கடைசி......நாளை சந்திக்கிறேன்
ReplyDeleteதமிழின் முன்னணி, முக்கிய, சிங்கைவாழ் படைப்பாளிகளின் அறிமுகங்கள் கண்டு ஆனந்தம் கொண்டேன்.
ReplyDeleteநன்றிங்க கலையன்பன்
Deleteஅருமையான அறிமுகங்கள்..வாழ்த்துகள்
ReplyDeleteநன்றிங்க கான்
Deleteசிங்கையில் வாழும் தங்கக்கவிஞர்களின் அறிமுகம் அனைத்தும் அருமை அதில் குழந்தை பருவத்தை நினைவூட்டும் மரப்பாச்சி மிகவும் அருமை. கடைசியில் இப்படி ஒரு குண்டை தூக்கி போட்டிருக்கிறீர்கள் நாளை கடைசி.யா? இன்னும் ஒரு வாரம் தொகுத்து வழங்குங்கள் அனிதா நீங்கள் தொகுத்து வழங்கும் விதம் மற்றும் தாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள எழுத்தாளர்கள் யாவும் மிகவும் பிடித்திருக்கிறது.
ReplyDeleteநன்றி ஆனந்த். வாரம் ஒருவர் தான் ஆனந்த்..இதுவே என் எல்லா வேலைகளையும் ஒதுக்கி விட்டு செய்யவேண்டியதாக இருக்கிறது.
Deleteஆழ்ந்த தேடலும் , வாசிப்பு ஆர்வமும் கொண்ட சகதோழியாய், நல் விமர்சகியாய் வலம் வரும் அணிதாவின் வலைப்பதிவும் இன்ன பிற படைப்பும் இனிதே தொடர... என்றும் உயர வாழ்த்துக்களுடன்... எழுத்தாளர் - கவிஞர் - திரைப்படப்பாடலாசிரியர் . நெப்போலியன்
ReplyDeleteநன்றிங்க நெப்போலியன்
Deleteஊர் கடந்தும் மூத்த மொழியாம் தமிழை மறக்காது தமிழ்த்தொண்டாற்றும் சிங்க கவிஞர்களான சிங்கை கவிஞர்களை எழுவரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.. இந்த கவிஞர்கள் ஆழ்ந்து இனி கவனிக்கப்படுபவர்களாக தமிழகத்தில் பார்க்கும் நிலை வரும் என நினைக்கிறேன்... நல்ல தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி ...
ReplyDeleteநன்றிங்க......இன்னும் நிறைய கவிஞர்கள் இருக்கிறார்கள். அனைவரது தகவலையும் குறுகிய காலத்தில் திரட்ட முடியவில்லை.
Deleteமிக்க நன்றி, இன்று தான் (கனடாவில் இருந்து) வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ReplyDelete