Thursday, November 7, 2013

முல்லைப் பூவைத் தொடுக்கிறேன்!

முல்லைப்பூக்கள் பார்க்கச் சிறியவையாக இருந்தாலும் காத தூரத்துக்கு மணம் வீசுவதோடு விரைவில் வாடாது.  அது போல சில மணம் வீசும் வலைப்பூக்களை இப்போது பார்க்கலாம்.  இவர்களில் திரு இன்னம்பூராரும் சரி, சுபாவும் சரி, கண்ணனும் சரி மற்றும் மிருதங்க வித்வான் திரு ஈரோடு நாகராஜன் அவர்களும் சரி, பார்க்கச் சாதாரணமானவர்களாகவே இருந்தாலும் அவர்கள் செய்யும் செயல்கள் அரியவை, அபாரமான ஒன்று.

ஏற்கெனவே திரு இன்னம்புராரைக் குறித்து என்னோட பதிவிலே எழுதி இருக்கேன். கும்பகோணத்துக்கு அருகிலுள்ள இன்னம்பூரைச் சொந்த ஊராகக் கொண்ட இவர் தந்தையின் வேலை நிமித்தம் சுற்றியது பல ஊர்களில்.  பிறந்தது அரியக் குடியில்.  சமீபத்தில் அரியக்குடி சென்று தான் பிறந்து வளர்ந்த வீட்டைப் பார்வையிட்டு வந்தார். 81 வயசிலும் சுறுசுறுப்பாகத் தமிழ் கற்றுக் கொள்வதோடு காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. மாணவராகவும் சேர்ந்திருக்கிறார்.  யாப்பருங்கலக் காரிகையும், நற்றிணையையும் ஒரு கை பார்த்துட்டார். மத்திய அரசில் தணிக்கையாளராக மிகப் பெரிய பதவியில் பணியாற்றிய இவர் தற்சமயம் லண்டன்வாசி.  அங்கே சென்ற பின்னரே வலைப்பதிவு ஆரம்பிச்சார்னு நினைக்கிறேன்.  தணிக்கைத் துறையில் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து வந்த இவர் இந்த வலைப்பதிவு மூலமும் அரிய பல செய்திகளைத் தருகிறார்.

http://innamburan.blogspot.co.uk/  அன்றொரு நாள்

என்ற தலைப்பிலே ஒவ்வொரு ஒவ்வொரு தேதியிலும் நடைபெற்ற குறிப்பிட்ட பிரபலமான சம்பவங்களையும், நினைவுகளையும் அருமையாகப் பகிர்ந்து வருகிறார்.  உன்னதமான எழுத்து.  உணர்வு பூர்வமாகவும் இருக்கும். இதைத் தவிரவும்

http://innamburan.blogspot.de/view/magazine/    பலபட்டறை

என்ற பெயரில் பல்வேறு விஷயங்களையும் தொகுத்து அளிப்பதோடு தமிழை ஒலி வடிவிலும் அளிக்க முயன்று வருகிறார்.

http://www.olitamizh.com/

அங்கே ஒரு முறை சென்று பாருங்கள்.  நாதஸ்வர இசை மனதை மயக்கும். உள்ளே சென்றும் கேட்கலாம்.


அடுத்ததாக தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைத்தளம்.

http://tamilheritagefoundation.blogspot.com/வலைப்பூங்கா

இங்கே என்னதான் கிடைக்காது!  எல்லாமும் கிடைக்கும்.  பல்வேறு எழுத்தாளர்களின் பகிர்வுகள், இலக்கியப் பகிர்வு, ஆன்மிகப் பதிவு, வரலாறு, நாட்டார் வழக்கங்கள் குறித்த பதிவுகள் என அனைத்தையும் காணலாம். மலேசியாவில் பிறந்து, வளர்ந்து, படித்து சில காலம் வேலை பார்த்துப் பின்னர் எம். எஸ்.சி படிப்புக்காக ஜெர்மனி வந்து பணியாற்றிப் பின்னர் திருமணம் மூலம் ஜெர்மனியில் வந்து குடியேறி இருக்கும் திருமதி சுபாஷிணி ட்ரெம்மலும்,

http://subaillam.blogspot.in/ மலேசிய நினைவுகள்

http://subahome2.blogspot.com/  ஜெர்மனி நினைவலைகள்


கொரியாவில் பணியாற்றித் தற்சமயம் மலேசியாவில் பணியாற்றி வரும் விஞ்ஞானி

 நா. கண்ணன்   http://emadal.blogspot.in/ கவினுலகம்

காசுமிசான்  http://nakannan.subaonline.net/poem/philk2.html 

அவர்களும் இணைந்து ஆரம்பித்தது தமிழ் மரபு அறக்கட்டளை
இவர்கள் இருவரின் சுறுசுறுப்பும், உழைப்பும் ஈடு இணையற்றது.  தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் தொடங்கப்பட்ட வலைப்பூக்கள் தான் கீழே உள்ளவை.யும் மேலே சொன்னதும். அறக்கட்டளையின் மடலாடல் குழுமம் மின் தமிழ்.

http://voiceofthf.blogspot.in/ மண்ணின் குரல்

பல்வேறு நபர்களின் பேட்டிகளையும் தமிழ் மண்ணின் குரலாக இங்கே ஒலிப்பதிவாகக் காணலாம்.  இதிலே சைகோன் மாரியம்மன் கோயில் பூசாரியின் ஒலிப்பதிவும் அடங்கும்.  பிரபலக் கல்லூரியின் தலைவரின் ஒலிப்பதிவும் பற்பல தமிழ் ஆன்றோர்களின் ஒலிப்பதிவுகளும் அடங்கும்.

http://video-thf.blogspot.com/ விழியக் காட்சிகள்


இங்கே பல வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களின் முக்கியத்துவங்களையும் தமிழ் மண்ணுக்கே உரிய பல கலாசாரங்களின் பதிவுகளையும் கோயிலின் திருவிழா நிகழ்வுகளையும் படக்காட்சிகளாகக் காணலாம்.

http://image-thf.blogspot.in/ மரபுப் படங்கள்

மரபு சார்ந்த படங்கள், வரலாற்றுச் சின்னங்கள், அரிய சிற்பங்கள், சிலைகள் ஆகியவற்றின் நிழற்படங்களை இங்கே காணலாம்.  இதைத் தவிர அரிய பல பழைய புத்தகங்கள், ஓலைச்சுவடிகள் ஆகியன சுபாஷிணியாலும், கண்ணனாலும்  மின்னாக்கம் செய்யப்பட்டும் வெளியிடப் படுகின்றன.

http://erodenagaraj.blogspot.in/2013/09/blog-post.html/எல்லாப் பூக்களையும்

மிருதங்கக் கலையில் வல்லவரான ஈரோடு நாகராஜ் அவர்கள் கவிதைகள் எழுதுவதிலும் வல்லவர். பல்வேறு விஷயங்களையும் நுணுக்கமாகக் கவனித்து அதை விவரிப்பதில் தேர்ந்ததொரு எழுத்தாளர் எனலாம்.  தன் குருநாதரின் மறைவைக் குறித்துத் தனக்கு ஏற்பட்ட உள்ளுணர்வை வார்த்தைகளில் வடிப்பதைப் பாருங்கள்.

த்யானம் செய்ய பெரியவாளின் எதிரில் அமர்ந்ததும் ஏதும் கோவையாகச் செய்ய விடாமல் முற்றிய இரவொன்றில் அடர்வனத்தின் ஆழ்ந்த கருமை, இமை மீது ஏறிப் படர்ந்ததைப் போன்ற உறக்கம் வந்து தள்ளியது. விளக்கேற்ற விடாமல், மந்திரத்தில் மனம் லயிக்க விடாமல், மயங்கிக் கிடக்கையிலும் ப்ரக்ஞை தோன்றும் நன்கறிந்த ஒரு பாராயணத்தின் வரிகளை மறந்துபோய் மலங்க மலங்க விழிப்பதைப் போன்று, தைல தாரையொன்று நீர்த்துப் போய் குழாய் ஜலமாய்த் தெறிப்பதைப் போல நிலைபடாமல் தவித்தது.

27 comments:

  1. பொக்கிஷங்களான வலைப்பூக்களின் தொகுப்புகளுக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராஜராஜேஸ்வரி, உண்மையில் இவை அனைத்தும் பொக்கிஷங்களே. நன்றி.

      Delete
  2. வலைப்பூங்கா - அறியாத தளம். நன்றி.

    கடைசி பாரா உண்மையிலேயே புரியலிங்க. கவிதையாத் தான் இருக்கணும்.

    ReplyDelete
    Replies
    1. வலைப்பூங்காவைத் தெரியாதுன்னா மற்றவற்றைப் பார்த்திருக்கீங்களா? ஆச்சரியம் தான். :)))))

      கடைசி பாராவில் அவரின் உள்ளுணர்வைக் கிட்டத்தட்டக் கவிதையான வரிகளில் வெளிப்படுத்தியிருக்கார். திரு ஈரோடு நாகராஜ்.

      Delete
  3. பாரம்பர்யப் பழைமையின் வசமாக - முல்லைச்சரம்!...

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை செல்வராஜூ, உண்மையில் இவை வலையுலகம் அறிய வேண்டிய வலைப்பூக்கள். பொக்கிஷங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

      Delete
  4. கனாக்கண்டேன், தோழி நான்!
    ஒரு நிமிடத்தற்கு கையும் ஓடல்லை; காலும் ஓடல்லை. திருமதி கீதா சாம்பசிவம் என்னை தூக்கி வைத்த இடத்தை காபந்து செய்து கொள்ளவேண்டும். மிக்க நன்றி, கீதா. உங்கள் பதிவு எனக்கு மேலும் சிறப்பாக தமிழ்ப்பணி ஆற்றவேண்டும் என்ற ஆவலை தூண்டி விடுகிறது. அவரவர்களுக்கு ஒவ்வொரு கனவு. நமது தமிழ் மாணவ/மாணவி சமுதாயத்தை தாய்நாட்டின் நிர்வாகப்பணியில் ஈடுபடுத்தவேண்டும்; அதற்கு அணில் போன்ற என் சிறிய உழைப்பு பயன் அளிக்க வேண்டும் என்பது என் கனா.

    ஆம். நான் தமிழில் எழுதுவதே சமீபத்து நிகழ்வு. அதற்கு வித்திட்டது தமிழ் மரபு அறக்கட்டளை.

    எத்தனை சொன்னாலும் (கீதாவுக்கு நன்றி) போதாது.
    இன்னம்பூரான்
    07 11 2013

    ReplyDelete
    Replies
    1. "இ" சார், வாங்க, வாங்க, நீங்க இங்கே வரணும்னு தான் + விட்டேன். வருகைக்கும் படித்ததுக்கும் நன்றி நான் தான் சொல்லணும். உங்க கிட்டே இருந்து நாங்க கத்துக்கவேண்டியது எத்தனையோ இருக்கு. :)))

      Delete
  5. அப்பாதுரையின் கவிதை நன்றாக இருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. அப்பாதுரையின் கவிதை??? ஶ்ரீராம்?? இது என்ன புதுக் கரடி? :))))

      Delete
  6. தொகுப்புக்குப் பாராட்டுக்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வைகோ சார், அந்தப் பதிவுகளைப் போய்ப் பார்த்தீர்களா? வரவுக்கு நன்றி.

      Delete
  7. அற்புதமான அறிமுகங்கள்.. வாழ்த்துக்கள் அனைவருக்கும்..

    ReplyDelete
    Replies
    1. வாங்க பார்வதி, நன்றிம்மா.

      Delete
  8. கீதா அம்மா..
    இன்றைய அறிமுகங்கள் அருமை..அனைவருக்கும் வாழ்த்துகள். ...தமிழ்மணத்தில் ஓட்டும் போட்டு விட்டேன்...

    ♥ ♥ அன்புடன் ♥ ♥
    S. முகம்மது நவ்சின் கான்.(99likes)
    www.99likes.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. வாங்க நவ்சின்கான், உங்க ஓட்டுக்கும் நன்றி. வரவுக்கும் நன்றி.

      Delete
  9. மணம்வீசும் முல்லைப் பதிவர்களுக்கு வாழ்த்துகள்.

    அழகாக தொகுத்து தந்துள்ளீர்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாதேவி, நன்றிம்மா.

      Delete
  10. முல்லைப்பூக்கள் பார்க்கச் சிறியவையாக இருந்தாலும் காத தூரத்துக்கு மணம் வீசுவதோடு விரைவில் வாடாது. //

    நன்றாக சொன்னீர்கள் மணம் வீசும் வலைத்தளங்களை படிக்கிறேன்.
    எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
    அருமையான வலைத்தளங்களை தொகுத்து தந்தமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி அரசு, மெதுவா வந்து படிச்சுக் கருத்துச் சொல்லுங்க. வரவுக்கு நன்றிங்க.

      Delete
  11. அனைத்துமே புதிய தளங்கள் ..
    அறிமுகப்படுத்தியமை நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நிஜாமுதீன்.

      Delete
  12. அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  13. அழகாக சரம் தொடுக்கிறீர்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி குமார். இதுக்கு + போட்ட அளவுக்குப் பின்னூட்டங்கள் வரலை. மக்களுக்குச் செய்தி போய்ச் சேர்ந்தால் சரி. :))))

      Delete