இதழ்களைத் தொட்டாலே கையெல்லாம் மணக்கும் பூ ரோஜாப் பூ. அதோடு மட்டுமின்றி அதிலிருந்து குல்கந்து, மணக்கும் அத்தர், பன்னீர், வாசனை திரவியங்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அதோடு மருத்துவ குணங்களும் நிறைந்தது ரோஜாப் பூ. மலமிளக்கியாகவும் செயல்படும் ரோஜா, மலச் சிக்கலுக்கும் செயல்படும். அதே போல் இங்கே சில வலைப்பூக்கள் நமக்குப் படித்தாலே என்றென்றும் பயன்படும் விதத்தில் உள்ளதோடு அல்லாமல், இன்றைய கடின வாழ்க்கை முறையை எளிதாகக் கடக்கும் முறைகளையும் கற்றுக் கொடுக்கிறது. போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையை எளிதாக்கும் பல்வேறு யோசனைகளை மறைமுகமாகச் சொல்லிக் கொடுக்கின்றனர் பல பெரியவர்கள். அவர்களில் நன்கறிந்த சிலரை இன்று பார்க்கலாம்.
அடுத்துச் சில பெரியவர்களின் வலைப்பூக்கள். சொல்லுகிறேன் என்ற தலைப்பில் எழுதும் காமாட்சி அம்மாள் எனக்குத் தான் புதியவரே தவிர இணையத்தில் பலருக்கும் நன்கு அறிமுகமானவராகவே இருக்கிறார். எங்கள் ப்ளாக் ஶ்ரீராம் அறிமுகம் செய்து நான் அங்கே சென்றேன். இந்த வயதிலும் கணினி கற்றுக் கொண்டு பதிவுகள் எழுதி வரும் அம்மா போற்றுதலுக்கு உரியவர். அவரிடமிருந்து நாம் கற்க வேண்டியவை நிறைய உள்ளது. அவங்களோட வலைப்பூ
காமாட்சி அம்மாள்http://chollukireen.wordpress.com/சொல்லுகிறேன்
இதை அடுத்து இன்னொரு பெரியவங்களோட வலைப்பூ, பாட்டி சொல்லும் கதைகள். இவங்களோட வலைப்பூப் பத்தி வெங்கட் நாகராஜ் சொல்லி அறிந்து கொண்டேன். இவங்க இப்போ ஶ்ரீரங்கத்தில் தான் இருப்பதாகவும் அறிந்தேன். குழந்தைகளுக்கு ஒரு அருமையான பாட்டியாக இவங்க சொல்லும் கதைகள் எல்லாமே மிக அருமையானவை.
http://chuttikadhai.blogspot.in /ருக்மிணி சேஷசாயி பாட்டி சொல்லும் கதைகள்.
அடுத்து என் நீண்ட நாள் நண்பரான திரு நடராஜன் கல்பட்டு அவர்கள். 82 வயதாகும் இவரின் முதுமைக்கால வாழ்க்கை பற்றிய பேட்டியைப் பொதிகைத் தொலைக்காட்சியில் கடந்த வருடம் ஒளிபரப்பினார்கள். மிகச் சிறு வயதிலிருந்தே பறவைக் காதலரான இவரின் வலைப்பூ
http://kalpattaarpakkangkal.blogspot.in/கல்பட்டார் பக்கங்கள்
பறவைகளைப் பற்றி எந்தத் தகவல் வேண்டுமானாலும் இவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். பறவைகள் மட்டுமில்லாமல் பூச்சிகள், பல்லி வகைகள், காட்டு மிருகங்கள் என அனைத்தையும் குறித்து இவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வண்டி வண்டியாகத் தகவல் சுரங்கமாக இருக்கிறார். அதோடு புகைப்படக் கலையிலும் நிபுணர் இவர். அந்தக் காலக் கறுப்பு, வெள்ளைப் படங்களிலிருந்து இக்காலத் தொழில் நுட்பம் வரை நன்கு அறிந்து வைத்திருக்கிறார்.
அடுத்த பெரியவர்
http://gmbat1649.blogspot.in/2013/11/blog-post_3.html/அலைகள் ஓய்ந்த பிறகு
இவரும் பல அரிய பதிவுகளை எழுதி இருக்கிறார். இவரின் பதிவுகளில் அவதாரக் கதையும் ராமாயணம் குறித்து இவர் எழுதியதும் முக்கியமானது. பதிவில் தேட முடியவில்லை. தேடுதலுக்கான ஆப்ஷன் இல்லை. திரு ஜிஎம்பி அவர்களே பின்னூட்டத்தில் அளித்திருக்கும் சுட்டிகளை இங்கே இணைக்கிறேன்.
gmbat1649.blogspot.in/2011/06/blog-post_11.htm/சாதாரணன் ராமாயணம்
gmbat1649.blogspot.in/2011/10/blog-post_21.html/கிருஷ்ணாயணம்
அடுத்ததாக நாம் அனைவரும் நன்கறிந்த திரு சுப்புத்தாத்தா அவர்கள். அவருடைய மனதுக்குப் பிடித்த வண்ணம் யாராவது பதிவு எழுதினால் தாத்தா விளம்பரம் செய்வார். அதே போல் கவிதைகள் எழுதினாலும், இறைவன் மேலும், இறைவி மேலும் பாடல்கள் எழுதினாலும் சுப்புத்தாத்தா அவர்கள் அதைப் பாடலாகப் பாடி வெளியிடுவார். அப்படி அவர் சமீபத்தில் வெளியிட்டது பார்வதி ராமச் சந்திரனின் தீபாவளிக் கவிதை.
https://www.youtube.com/watch?v=cfSeZSZdUY8/சுப்புத்தாத்தா பாடல்v=cfSeZSZdUY8
http://subbuthatha72.blogspot.in/2013/10/blog-post_29.html/சுப்புத்தாத்தாவின் வலைப்பூ
இதோடு விட்டாரா? சினிமாப் பாடல்களின் ஆதார ராகங்களைக் கண்டறிந்து அது குறித்தும் எழுதி வருகிறார் இங்கே.
http://movieraghas.blogspot.in/Movie Raghas (or) Moving Raghas
இன்னும் நிறையப் பெரியவங்க இருக்கலாம். ஆனால் நானறிந்தவர்களை மட்டுமே குறிப்பிடுகிறேன். மத்தவங்க மன்னிக்கணும்.

இனிய காலைப்பொழுதில் - தொடுக்கப்பட்ட அழகான ரோஜாப்பூக்கள்..அத்தனையும் அருமை!..
ReplyDeleteநன்றி துரை செல்வராஜூ!
Deleteரோஜாப்பூச்ச்சரம் அருமை. காமாட்சி அம்மா எல்லோரையுமே ஆச்சர்யப்படுத்துபவர். மாற்றி வலைத்தளங்களுக்கு வந்து பின்னூட்டம் இட்டும் அசத்துகிறார். எங்கள் ப்ளாக்குக்கும் அந்த பாக்கியம் கிடைத்திருக்கிறது.
ReplyDeleteசுப்பு தாத்தா வயதானவரா... உற்சாகமான இளைஞர். ஜி எம் பி சார் பக்கமும் சென்றிருக்கிறேன்.
வாங்க ஶ்ரீராம், சுப்புத்தாத்தா பத்தி நீங்க சொன்னது அத்தனையும் உண்மையே. உற்சாகமான இளைஞரே அவர். காமாட்சி அம்மாவும் அசத்தத் தான் செய்கிறார். உண்மையில் இவங்களோட திறமையைப் பார்க்கையில் நாமெல்லாம் எதுவுமே இல்லை. :)))
Deleteரோஜாவின் இதழ்களாக அறிமுக ரத்தினங்கள்!
ReplyDeleteநன்றி ஜனா.
Deleteஅருமையான பதிவர்கள். இவர்களின் உற்சாகத்தில் கால் பகுதியவது எனக்கு இருக்கக் கூடாதா என்று ஏக்கம் வருகிறது. நன்றி கீதா.
ReplyDeleteஉண்மை தான் ரேவதி. எனக்கும் தோன்றுவது தான்.
Deleteசூப்பர், நான் எல்லா பக்கமும் ஒரு ரவுண்ஸ் போயிட்டு வரேன்
ReplyDeleteகட்டாயமாய்ப் போய்ப் பாருங்க காயத்ரி தேவி. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தங்கள் திறமையைக் காட்டுகின்றனர்.
Deleteஅழகும் மணமும் குணமும் நிறைந்த ரோஜாப்பூக்களைப் போன்ற அருமையான தளங்களின் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!
ReplyDeleteநன்றி ராஜராஜேஸ்வரி
Deleteதிருமதி காமாட்சி அம்மாள் [சொல்லுகிறேன்]
ReplyDeleteதிருமதி ருக்மிணி சேஷசாயி [பாட்டி சொல்லும் கதைகள்]
ஆகிய இருவரையும் இங்கு இன்று சிறப்பித்துச் சொல்லியுள்ளதற்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.
>>>>>
நன்றி வைகோ சார். எல்லாருமே சிறப்பானவர்களே. :)))
Deleteஇன்று வலைச்சரத்தில் இடம் பெற்று சிறப்பிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகள்.
ReplyDeleteதங்களுக்கு என் நன்றிகள்.
நன்றி. திரு நடராஜன் கல்பட்டு அவர்களுக்கு வரத் தெரியாதுனு நினைக்கிறேன். நான் போய்ப் பார்த்து மெயிலும் கொடுக்கிறேன்.
Deleteரோஜா மலர்களோடு இந்த நாரையும் சேர்த்துக் கொண்டதற்கு கீதா அம்மாவுக்கு நன்றி.
Deleteநன்றி ஐயா, உங்கள் இரண்டாவது பின்னூட்டம் சரியாக வந்திருக்கிறது. :)))
Deleteஇன்று பாராட்டிப் பேசப்பட்டுள்ள மேற்படி ஐவருக்கும், நானே அவர்களின் பதிவுகளுக்குப்போய், தகவல் அளித்து விட்டேன்.
ReplyDeleteஇது தங்களின் தகவலுக்காக மட்டுமே. VGK
மிக்க நன்றி,
Deleteஅழகும் மணமும் குணமும் நிறைந்த ரோஜாப்பூக்களைத் தாங்கள் தொடுத்துள்ளது அழகோ அழகாக நிறைவாகத்தான் உள்ளது.
ReplyDeleteமிகக்குறுகிய அறிவிப்பில், இந்த வார வலைச்சர ஆசிரியராக பதவி ஏற்றுக்கொண்டு, ஆறு நாட்களை அழகாக முடித்துள்ளதற்கும் பாராட்டுக்கள்.
நாளை மீண்டும் சந்திப்போம்.
நன்றி வைகோ சார், வீடு நிறைய விருந்தினர்களையும் வைத்துக் கொண்டு முன் கூட்டியே தயாரித்துக் கிடைத்த குறைந்த அவகாசத்தில் ஒவ்வொரு நாளும் அப்லோட் பண்ணினேன். :))))
Deleteகீதாம்மா, என் வலைப்பூவை அறிமுகப் படுதியதற்கு நன்றி. என் சாதாரணன் ராமாயணம்
ReplyDeletegmbat1649.blogspot.in/2011/06/blog-post_11.html என்னும் சுட்டியிலும் கிருஷ்ணாயணம்
gmbat1649.blogspot.in/2011/10/blog-post_21.html எனும் சுட்டியிலும்படிக்கக் கிடைக்கும். மற்றும் அவதாரக் கதைகள் 2011- ம்வருடம் ஏப்ரல் முதல் ஓரிரு மாதப் பதிவுகளில் கிடைக்கும். அறிமுகமானாலும் சுட்டி இல்லாததால் வாசகர்கள் படிக்கும் வாய்ப்பினை இழக்கக்கூடாதே என்றே சுட்டிகள் கொடுத்திருக்கிறேன்.
நன்றி ஜிஎம்பி சார். இந்தச் சுட்டிகளை நான் பதிவில் இணைத்துவிடுகிறேன்.
Deleteஜிஎம்பி ஐயா, தாங்கள் அளித்துள்ள சுட்டிகளை இணைத்துள்ளேன். நேரம் இருக்கையில் வந்து பார்க்கவும். நன்றி.
Deleteஎன்னைப்பற்றி அறிமுகப் படுத்தியுள்ளமைக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எனக்கு இதைப் பற்றிக் கூறிய திரு வை.கோ ஐயா அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteநன்றி அம்மா. தங்கள் விலாசம் தெரிந்தால் நேரம் கிடைக்கையில் வந்து பார்க்கிறோம்.
Deleteஎப்போதுமே வலைச்சர அறிமுகங்களுக்குப் போய் படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.. கணினியைத் திறந்தால் எங்கோ ஆரம்பித்து எங்கேயோ போய் எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்துவிட்டு,
ReplyDeleteஎப்படியெல்லாம் பதிவுகள் என்று ஆச்சரிய மனத்துடன் , வந்த காரியத்தைக் கோட்டை விட்டு விட்டு, பழயபடி
கிராமஃபோன் ப்ளேட்டாக இப்படியே நாட்கள் தள்ளிக்கொண்டு போகி.றது முதலில் வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் தகவல் சொல்லியதற்கு நன்றி.
கீதா சாம்பசிவம் உங்களை நான் அறிவேன். ஒரு முறை பின்னூட்டமிட்டு இருக்கிறீர்கள்.
ஸ்ரீராம்,அவர்கள், மிகவும் மனதினால் தெரிந்தவர். எனக்கு.என் சொல்லுகிறேனைப் பாராட்டி எழுதியதற்கு
மிக்க நன்றிகளைத் தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.
பாராட்டுகள் என்னைப் போன்ற வயதானவர்களுக்கு ஸந்தோஷத்தைக் கொடுக்கிரது. எனக்கும் அப்படியே.
மற்றும் தொடுத்திருந்த ரோஜாப்பூக்கள் மிகவும்,அழகு,நருமணமுடையவை. அவர்களுக்கு என் பாராட்டுகள்.திரும்ப ஒருமுறை என்னை அறிந்த எல்லோருக்கும்,நன்றியும் ஆசியும்.
உங்ளுக்கு ஸ்பெஷலாக. அன்புடன்
ரொம்ப நன்றி அம்மா. உங்கள் வலைப்பூவை அவ்வப்போது படித்து வந்தாலும் தொடர்ந்து பின்னூட்டம் கொடுக்க முடிவதில்லை. மன்னிக்கவும். மற்றபடி உங்களிடமிருந்து தெரிந்து கொள்ள நிறைய இருக்கிறது. தெரிந்து கொள்கிறேன். உங்கள் அன்புக்கு என்றென்றும் கடமைப் பட்டிருக்கிறேன்.
Deleteசரத்தில் தொடுக்கப்பட்ட முத்தான பதிவர்கள்.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
நன்றி குமார்.
Deleteஅத்தனை ரோஜாக்களின் மணமும் மனதைக் கொள்ளை கொள்கிறது.
ReplyDeleteவாங்க அமைதி, எல்லாம் ஊட்டி ரோஜாக்களாக்கும். அதன் மணமும், நிறமும் மனதைக் கவர்கிறது. :))))
Deleteஅத்தனையும் அபார மணம் வீசும் பன்னீர் ரோஜாக்கள்.. அருமையான தளங்கள்.. திரு.கல்பட்டு நடராஜன் அவர்களின் வலைப்பூவை இன்று தான் தெரிந்து கொண்டேன். சிறப்பிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.. சிறப்பித்த தங்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.. நெஞ்சார்ந்த நன்றிகள்...
ReplyDeleteவாங்க பார்வதி, நம் மின் தமிழின் மரபு விக்கியிலும் இவரின் பறவைகள், மிருகங்கள் குறித்த கட்டுரைகளைக் காணலாம். தொகுத்து வருகிறேன்.
Deleteரோஜா பூச்சரங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteநல்ல அறிமுகங்களைத் தந்துள்ளீர்கள்.
இதழ்களைத் தொட்டாலே கையெல்லாம் மணக்கும் பூ ரோஜாப் பூ. அதோடு மட்டுமின்றி அதிலிருந்து குல்கந்து, மணக்கும் அத்தர், பன்னீர், வாசனை திரவியங்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்//
ReplyDeleteஆம், உண்மை. ரோஜாவை பார்க்கும் போது பரவசபடுத்துவதுடன். பலவகைகளில் நமக்கு உதவகிறது.
நீங்கள் இன்று குறிப்பிட்ட மூத்த பதிவர்கள் அனைவரும் வாழ்க்கையை அழகாய் வாழ தெரிந்தவர்கள். நமக்கு நிறைய விஷயங்களை கற்றுத்தருபவர்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ரோஜா இதழ் வாசம்போல் மணம் பரப்பிடும் நல்பதிவர்களின் சில பதிவுகளைக் குறிப்பிட்டமைக்கு நன்றி!
ReplyDeleteகீதா அம்மா..
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் அருமை..அனைவருக்கும் வாழ்த்துகள். .
♥ ♥ அன்புடன் ♥ ♥
S. முகம்மது நவ்சின் கான்.(99likes)
www.99likes.blogspot.com
காமாட்சி அம்மா மும்பையிலிருந்து எழுதியவர் என்று ஞாபகம். ஆனால் இப்போது எல்லாம் ஞாபக மறதி. மறதி என்று சொன்னால் போறாதோ? தொட்டுக்கிறத்துக்கு ஞாபகம் வேணுமா? என்ன?
ReplyDeleteவாங்க "இ" சார், அவங்க மும்பையிலிருந்தும் எழுதுவாங்க, ஜெர்மனியிலிருந்தும் எழுதுவாங்க, ஸ்வீடனில் இருந்தும் எழுதுவாங்க. உலகம் சுற்றும் வாலிபி! :)))))
Deleteநான் ஜெனிவாவில் பிள்ளையுடன் வசித்து வந்தேன். இவ்விடம் மற்றொரு பிள்ளையுடன் 2வருடங்களாக இருக்கிறேன். அதற்கு முன் 10 வருடங்கள் ஜெனிவா. கணவரின் உடல்நலம் காரணமாக இவ்விடம்.
ReplyDeleteநேபாளத்தில் 26 வருஷங்கள் இருந்திருக்கிறேன். வயதானகாலத்தில், உப்பு,புளி என்று எழுதிக்கொண்டு அதுவே,கிருஷ்ணா ராமா என்ற நிம்மதியைச் சற்று கொடுப்பதுபோல உணரும் வ்யக்தி. மற்றதை நீங்களாகவே கற்பனை செய்து கொள்ளலாம். அன்புடன்
ஒரு வலைப்பூ மட்டும் இன்னும் படித்ததில்லை! அதையும் இனிமேல் படிக்க ஆரம்பிக்கிறேன்.....
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்....