அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பதிவிலும் பிரபலமானவர்களே வந்துள்ளனர். இருப்பினும் அவர்களின் பதிவுகளில் எனக்குப் பிடித்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விருப்பம். படித்துவிட்டு உங்களின் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளுங்களேன் !!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
1) வலையுலகில் இவரைத் தெரியாதவர் யாராவது இருக்க முடியுமா? இவரை நான் அறிமுகம் செய்வதா ? ஆனாலும் என் பார்வையில் நான் சொல்லியே ஆகவேண்டும். தன்னுடையை பெயரிலேயே திண்டுக்கல் தனபாலன் என்ற வலைதளத்தை எழுதுகிறார் இவர்.
தன் மனச்சாட்சியுடன் பேசுவதை கேள்விபதில் முறையில் பதிவாக வெளியிட்டு வருகிறார். ஒவ்வொரு பதிவின் முடிவிலும் வாசகர்களின் முன் ஒரு வினாவை எழுப்புகிறார். இவரது வலைப்பூவில் நுழைந்தால் நீதிபோதனை வகுப்பிற்குள் போனது போலவே இருக்கும்.
நிறைய பதிவுகள் உள்ளன. அனைத்து பதிவுகளையும் நீங்களும் படித்திருப்பீர்கள். அவற்றிலிருந்து ஒன்றிரண்டு பதிவுகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
முயற்சி+பயிற்சி=வெற்றி என்ற தலைப்பில் பள்ளிக் குழந்தைகளின் நகைச்சுவை, கவிதைகள், கட்டுரைகள், பொன்மொழிகள் என அவர்களின் திறமைகளை இங்கே வெளியிட்டு அவர்களின் மனதிலும் மகிழ்ச்சியை விதைத்திருக்கிறார்.
'நம்மையன்றி வேறு யாரால் முடியும்' என்ற தலைப்பில் பள்ளிக் குழந்தைகளின் திறமைகளைத் தொகுத்து இங்கே கொடுத்திருக்கிறார். இதிலுள்ள நகைச்சுவையை விரும்பி படித்தேன்.
உன்னால் முடியும் நம்பு என்ற பதிவிலும் குழந்தைகளின் திறமை வெளிப்படுகிறது. இவற்றைத் தொகுத்துக் கொடுத்ததிலேயே இவரது திறமையும் புலனாகிறது.
இவரது பின்னூட்டத்தால் நான் உட்பட நிறைய பேர் உற்சாகத்துடன் பதிவுகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம். வாழ்த்துகள்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
2) மனம் போன போக்கில் என்ற வலைப்பூவின் ஆசிரியர் என்.சொக்கன். தன் குழந்தைகளுடனான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார். நிறைய புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.
"சினிமா பாடலும் ஒரு கவிதைதான், கலாச்சார தொடர்ச்சிதான். ஒரு சினிமாபாடல் புகழை அடையும்போது இசையையும், பாடியவரையும், அவ்வளவு ஏன் வாயசைத்தவரையும் கொண்டாடும் நாம் ஏன் பாடலாசிரியரை மறந்துவிடுகிறோம் ? " இதற்கு மாற்று என்ன? 'நாலு வரி' என்ற தலைப்பில் ஆசிரியர் என்னதான் சொல்கிறார் என்று இங்கே போய்த்தான் பார்ப்போமே !
'தினம் ஒரு பா' என்ற வலைதளத்தில் இவர் எழுதிய கட்டுரைகள் இதே பெயரிலேயே நூலாக வெளிவந்திருக்கிறது. ஒரு பழைய புத்தக்ககடையில் பத்து ரூபாய்க்கு வாங்கிய ‘குறுந்தொகை : புலியூர் கேசிகன் உரை’ என்ற இந்த நூல்தான் இதை எழுதத் தூண்டியதாக பா(க்கள்) என்ற தலைப்பில் சொல்கிறார்.
வந்தாளே ராக்கம்மா பதிவில் ஆசிரியரும் அவரது மகள் நங்கையும் ஒரு கர்நாடக நாட்டுப்புற பாடலுக்கு தமிழில் வார்த்தைகளைப் போட்டு பாடியதைக் கேட்கும்போது, நம்மையும் அறியாமல் நம் உதடுகளும் அப்பாடலை முணுமுணுக்கத் தொடங்கிவிடுகிறது. அவர் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
3) விழியன் என்ற புனைபெயரில் கதைகளை எழுதுபவர் எழுத்தாளர் திரு.உமாநாத். இவரது வலைப்பூ விழியன் பக்கம். குழந்தைகள் புத்தகத்திற்காக பல விருதுகள் வாங்கியிருக்கிறார். சிறுவர்களுக்கான அறிவியல் கதைகளையும் எழுதியிருக்கிறார்.
நாம் குழந்தைகளுக்கு ஒரு கதையைச் சொல்லும்போது அது இருவருக்குமான உரையாடலாக அமைய வேண்டும். அவர்களின் கற்பனைத் திறனையும், மொழித் திறனையும் வளர்ப்பதாக இருக்க வேண்டும். நீதியை அவர்களிடமும் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதை பாட்டி வடை சுட்ட கதையைக் கொண்டு விளக்குகிறார்.
பெற்றோர் பெரிய காதுகளை வளர்த்துக்கொள்ள வேண்டுமாம், ஏன்? "சற்றே பெரிய காதுகள்" என்ற தலைப்பில் விளக்கம் சொல்கிறார் இங்கே ! முடிவில் நாமும் வளர்க்க ஆரம்பித்துவிடுவோம் என்பது உண்மை.
இதுமட்டுமல்லாமல் இந்த பக்கத்திற்கு சென்றால் நல்ல தெளிவான புகைப்படங்களைப் பார்த்து ரசிக்கலாம். அதில் வண்ணத்துப்பூச்சி, /மழைத்துளிகள் இவையெல்லாம் அழகு.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
4) திருமதி ஆதிவெங்கட் அவர்களின் வலைப்பூ கோவை2தில்லி. இவரும் பன்முக எழுத்தாளர். சமையல் மட்டுமல்லாது பயணக் கட்டுரைகள், புத்தக விமர்சனங்கள், அனுபவம் என அனைத்திலும் கலக்குகிறார்.
தற்போது தன் மகளின் மழலைப் பள்ளி வாழ்க்கையைப் படம் பிடித்துக்கொண்டிருக்கிறார். இவை எல்லாம் நினைதுநினைத்து மகிழ வேண்டிய நினைவுகள். இவற்றைப் படிக்கும்போது நம் ஒவ்வொருவரின் நினைவுகளும் அந்த பசுமையான நாட்களில் மூழ்குவது உறுதி.
நம்வீட்டு அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் பொருள்களை வைத்து மறந்தேபோன கஷாயம் செய்யும் முறையை இங்கே சொல்லித் தருகிறார்.
இங்கே தான் படித்த புத்தகங்களைப் பற்றிய விமர்சனமும் உண்டு.
சமீபத்தில் தான் மேற்கொண்ட இன்ப சுற்றுலாவைப் பற்றி இங்கே சுவைபடக் கூறுகிறார்.
இவரது கணவரின் வலைப்பூ வெங்கட்நாகராஜ். நிறைய பயணக் கட்டுரைகள்,புத்தக விமர்சனங்கள் எழுதுகிறார். வெள்ளிக் கிழமைகளில் இவர் தரும் ஃப்ரூட் சாலட் பிரசித்தமானது.
இவர்களது மகள் ரோக்ஷ்ணியும் வெளிச்சக் கீற்றுகள் என்ற வலையில் தான் வரைந்த கணினிப் படங்களைப் பதிவேற்றுகிறார்.
வரும் காலங்களில் இவர்கள் மூவரும் ஒரே இடத்திலிருந்து பதிவுகளை வெளியிட வாழ்த்துவோம்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
5) திருமதி அதிரா அவர்களின் வலைப்பூ என்பக்கம். இவரும் ஒரு பன்முகத் திறமையாளர். சமையல், கதைகள், பயணக்கட்டுரைகள்,கைவேலை என அனைத்திலும் திறமையானவர். இவரது வலைப்பூவில் கலகலப்புக்கு பஞ்சமிருக்காது. சோர்வாக இருக்கும் நேரத்தில் இங்கே சென்று வந்தால் புத்துணர்ச்சி வந்துவிடும். இவர் தளத்திற்கு போய் பதிவுகளைப் படித்துவிட்டு சத்தம் போடாமல் பூனை மாதிரி வெளியேறி விடுவேன்.
ஒரு மனத்தக்காளி செடிக்காக இங்கே இவர் படும்பாட்டை பாருங்களேன்.
இவர் நகைச்சுவையாக எழுதுவதோடு மட்டுமல்லாமல் 'கங்கையிலே என் படகு மிதந்து கொண்டிருக்கிறது!!!' என்ற தலைப்பில் ஒரு உண்மை சம்பவத்தை கதையாக்கி வாசகர்களை குடம்குடமாக கண்ணீர் சிந்தவும் வைத்துவிடுகிறார்.
'அப்பாவின் அட்வைஸ்....' என்ற பதிவில் இவரது அப்பா இவர்மேல் கொண்டிருந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்.
இப்படியே தொடர்ந்து கலகலப்பாகப் பதிவுகளை வழங்க வாழ்த்துவோம்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
6) சமையல் அட்டகாசங்கள் என்ற வலைப்பதிவின் ஆசிரியர் சகோதரி ஜலீலாகமால். சைவ,அசைவ உணவு வகைகள், குழந்தை வளர்ப்பு, அவர்களுக்கான உணவு முறை, தையல் டிப்ஸ் என பலவற்றிலும் தன் பங்களிப்பை வழங்கியுள்ளார். எல்லாவற்றையும் ஒருசேர பார்க்க அவரது வலைதளத்திற்குள் சென்று வந்தால்தான் முடியும். அவ்வளவு கொட்டிக் கிடக்கிறது !
டயட்டில் இருப்பவர்களுக்காக நிறைய குறிப்புகள் இங்கேயுள்ளன. கர்ப்பிணி பெண்கள், பிள்ளை பெற்றவர்களுக்குமான சமையல் குறிப்புகளும் உள்ளன.
சகோதரி பல்வேறு சமையல் போட்டிகளில் கலந்துகொண்டு வாங்கிய பரிசுகளையும், விருதுகளையும் பார்க்க வேண்டுமா? இங்கே சென்று பார்த்துவிட்டு வாருங்களேன். இவரது திறமைக்கு இதுவே சான்று.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
பதிவுகளைப் படித்துவிட்டு, கருத்துகளைப் பகிர்ந்துகொண்டு, நாளை நடக்கும் பிரிவுபசார விழாவிற்கு தவறாம வந்திடுங்க, கடையைக் கட்டுவதற்குள் போனால்தான் நிதானமாகப் பார்த்து வாங்க முடியும், அதாங்க 'கிஃப்ட்'ஐச் சொன்னேன். மறக்காம, கையோடு எடுத்திட்டும் வந்திடுங்க.....!! நன்றி !
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

இன்றைய அறிமுகங்களில் எங்களது பெயர்களும்.....
ReplyDeleteநன்றி சித்ரா சுந்தர்.....
அறிமுகம் செய்யப்பட்ட மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.
த.ம. 1
உங்க குடும்பத்தை அறிமுகம் செய்து வைத்ததில் எனக்கும் மகிழ்ச்சிங்க. வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.
Deleteஎங்கள் குடும்பத்தையே இங்கு அறிமுகப்படுத்தியது குறித்து மகிழ்ச்சியும், நன்றிகளும்...
ReplyDeleteமற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...
வாங்க ஆதிவெங்கட்,
Deleteஎனக்கும் உங்களை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சிங்க. உங்க வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.
வணக்கம்
ReplyDeleteவலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க ரூபன்,
Deleteவாழ்த்துகளுக்கும், தொடர்வதற்கும் நன்றிங்க.
எனது தளம் அறிமுகத்திற்கு நன்றிகள் பல...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
வாங்க டிடி,
Deleteஉங்களை அறிமுகப்படுத்தி வைத்ததில் எனக்கும் நிறைய சந்தோஷம். வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.
அருமையான அறிமுகங்கள். என் வலைப்பதிவையும் இதில் இணைத்தமைக்கு நன்றி நண்பரே!
ReplyDeleteவாங்க நாகா சொக்கநாதன்,
Deleteவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.
இதோ.. வந்து விட்டேன்!..
ReplyDeleteநல்ல தளங்கள் அனைத்தையும் - சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி!..
துரை செல்வராஜு,
Deleteவாங்க வாங்க. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.
அல்லாரையும் சோக்கா இன்றோடசன் பண்ணிட்டீங்கோ...
ReplyDeleteஅல்லாத்துக்கும் வாய்த்துக்கள்பா...
வாங்க முட்டா நைனா,
Deleteபாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றிங்க.
அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துகள்..!
ReplyDeleteராஜேஸ்வரி,
Deleteவாங்க, வந்து வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டமைக்கு நன்றிங்க.
இன்று அறிமுகம் ஆகியிருக்கும் எல்லாருமே தெரிந்தவர்கள். எல்லோருக்கும் வாழ்த்துக்கள். குடும்பத்துடன் வலைபதிவு செய்து அசத்தும் வெங்கட் தம்பதிகளுக்கு சிறப்பு வாழ்த்துகள்.
ReplyDeleteபுதிய செய்தி: நாலுவரி நோட்டு வரும் பிப்ரவரியில் புத்தகமாக வெளிவருகிறது.
இன்றைய பணியை செம்மையாக செய்திருக்கிறீர்கள், சித்ரா, வாழ்த்துக்கள்!
நேரம் கருதாது வந்து ஒவ்வொரு அறிமுகங்களைப்பற்றியும் கூறிவிட்டு, வாழ்த்தியும் சென்றது மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றிங்க.
Deleteஆசிரியப் பணியை சிறப்பாக செய்கிறீர்கள் சித்ரா.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.
Deleteசித்ராசுந்தர், ஆஹா என் அனைத்து பக்கங்களையும் பட்டியலிட்ட அழகாக அறிமுகப்படுத்தி உள்ளீர்கள் ,மிக்க நன்றி + உங்களுக்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteஅட நம்ம பூஸாரும் மேலே இருக்கிறாரே, \\
வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதை வந்து தெரிவித்த ருபனுக்கு மிக்க நன்றி.
வாங்க ஜலீலா,
Deleteநீங்க சொல்லும்போதே எவ்வளவு சந்தோஷமா இருக்கீங்கன்னு தெரியுது. வந்து உங்கள் கருத்தைப் பகிர்ந்துகொண்டு, வாழ்த்துகளையும் கூறியதற்கு நன்றிங்க.
பிரபல பதிவர்களிடமிருந்து முக்கிய பதிவுகளை மட்டும் இங்கு பகிர்ந்து கொண்டது... மிக்க மகிழ்ச்சி...
ReplyDeleteவாங்க அ. முஹம்மது நிஜாமுத்தீன்,
Deleteஉங்கள் பாராட்டுகளுக்கும் நன்றிங்க.
அழகாக எல்லா அறிமுகங்களும் மிக்க நன்றாக இருக்கிறது. எல்லோருமே ப்ரலமானவர்கள். மிக்க நன்றாக
ReplyDeleteஇதுவரை யாவரையும் விவரமாக அறிமுகம் செய்திருக்கிராய். ஒவ்வொருவரது பாணி தனிரகம். அதில் உன்னுடையதும் தனிரகம். மொத்தத்தில் அபாரம். இன்று வலைப்பதிவின் எல்லா பதிவருக்கும் பாராட்டுகள். இன்டர்நெட் வேலை செய்ய வேண்டுமே என்ற நோக்குடன் முடித்துக் கொள்கிறேன். அன்புடன்
காமாக்ஷிம்மா,
Deleteவாங்க, உங்கள் பின்னூட்டம் சந்தோஷத்தைக் கொடுக்கிறது. நேரம் ஒதுக்கி, வந்து பார்ராட்டியும், வாழ்த்தியும் சென்றது மகிழ்ச்சிம்மா. அன்புடன் சித்ரா.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...கூடவே என்ன பரிசோ??
ReplyDeleteவாங்க தனிமரம்,
Deleteஇது நல்லாருக்கே, பரிசை நீங்கதான் வாங்கிட்டு வரணும். யாரும் கவனிக்கலையோன்னு நெனச்சேன், நல்லவேளை, ஒரு பரிசாவது தேறிடும்
அருமையாய் அறிமுகப் படுத்தியுள்ளீர்கள்! உங்களுக்கும் அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துகள்!
ReplyDeleteகே. பி. ஜனா,
Deleteவாங்க. உங்களுடைய பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.
அறிமுகங்கள் சூப்பர்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாங்க ஆஸியா ஓமர்,
ReplyDeleteதங்கள் பாராட்டுக்கும், வழ்த்திற்கும் நன்றிங்க.