Thursday, December 26, 2013

புத்தகங்களும் திரைப்படங்களும்-ஒரு பார்வை

பலருக்கும் புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு  நூலகம் இருக்க வேண்டும் என்பார்கள்.
சிலருக்குப் புத்தகம் படிப்பது சுவாசிப்பது போன்றது..  பயணங்களின் போதும் படிப்பது சிலருக்குப் பழக்கம். கண் மருத்துவர்கள் பயணத்தின் போது படிக்கக் கூடாது என்றாலும், படிக்காமல் இருக்க முடியாது.  ஒவ்வொரு பள்ளியிலும், கல்லூரியிலும் மிக அவசியமானது நூலகம். குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தைக் கண்டிப்பாய்ப் பெற்றோர்கள் கொண்டுவர வேண்டும். நல்ல புத்தகம் நல்ல நண்பன் என்பார்கள். நல்ல விமர்சனங்களை கேட்டுப் படிக்க தோன்றும்.


இப்போது எல்லோருக்கும் இணையம்  மிகவும் அவசியம் ஆகி விட்டது. எல்லாவற்றையும் இணையத்தில் தேடிப்படிக்கும் பழக்கம் வந்துவிட்டது. அப்படியும், நூல் வெளியீடுகளும், புத்தககண்காட்சிகள் நடந்து கொண்டு இருப்பது மகிழ்ச்சியான விஷயம்.

தனக்கும்,தன் மகளுக்கும்  வாசிப்பில் ஏற்பட்ட அனுபவங்களை அழகாய்ச் சொல்கிறார் ,”சிறகுகள் நீண்டன” என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் தாரா அவர்கள்.  வாசிப்பும் வசதியும் என்ற பதிவில் தன் சிறுவயதில் புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்ததையும், இப்போது  தனக்கு ஏற்பட்டு இருக்கும் மாற்றங்களையும் சொல்கிறார்:-

//இப்போது மின் புத்தகங்கள், amazon, kindle, Apple, ipad போன்ற நவீன வாசிப்புவசதிகள் பிரபலமாகிவிட்டன. அச்சுப் புத்தகங்களின் மீதான கவனம் குறையத் தொடங்கிவிட்டது. 

ஒரு குழந்தை எப்போது ஒரு அச்சுப் புத்தகத்தைப் படித்து மகிழ வேண்டும் என்பதும், எப்போது ஒரு புதிய நவீன வாசிப்பு வசதியை பயன்படுத்த வேண்டும் என்பதும் பெற்றோர் கையில் தான் இருக்கிறது// என்கிறார்.

//சங்க இலக்கியம் முதல் சயின்ஸ் வரை இசை முதல் இன்டெர்நெட் வரை எல்லாம் எழுதியிருக்கிறார்.

அனைத்துப் படைப்புகளின் பட்டியலையும் இறுதியில் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் எஸ். ராமகிருஷ்ணன். இந்நூல், சுஜாதா ரசிகர்களுக்கு மட்டுமல்ல... தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் நல்ல விருந்து என தைரியமாகப் பரிந்துரைக்கிறேன்.//

இப்படி இந்தப்  புத்தகத்தை ’மதுரை அழகு’ என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் மதுரை அழகு அவர்கள் விமர்சனம் செய்து இருக்கிறார்கள். அதைப் படித்தால் புத்தகத்தை வாங்கிப் படிக்கத் தோன்றும்.


//நீங்கள் அவசியம் படிக்க வேண்டிய பதிவு இது. என் அன்பிற்கினியவர்களே!.
ரெஜினா ப்ரெட் எனும் தொண்ணூறு வயது மூதாட்டி, வாழ்க்கை தனக்கு போதித்த நாற்பத்தைந்து முக்கிய பாடங்களை அழகாக சொல்லியிருக்கிறார்.
இதன் தமிழாக்கமும்,கொஞ்சமே கொஞ்சம் மசாலாத் தூவலும் மட்டும் அடியேன் செய்தது. யான்பெற்ற இன்பம் பெருக இவ்வலையகம்!
இதை எனக்கு  மின்னஞ்சிய என் பாஸுக்கு நன்றி. //
 இப்படி  சொல்வது ,’வானவில் மனிதன்’ என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் மோகன்ஜி அவர்கள்.

நாற்பத்தைந்து முக்கிய பாடங்களிலிருந்து மூன்று முத்துக்கள்! உங்கள் பார்வைக்கு :-

//மகிழ்ச்சி ததும்பும் குழந்தைப் பருவத்திற்கு, உங்களுக்கு இன்னும் கூட அவகாசம் இருக்கிறது. இன்னொருமுறை,குழந்தையாய் மாறித்தான்
பாருங்களேன்! ஆனால் ஒன்று! இந்த இரண்டாவது குழந்தைப் பருவத்தின்  மகிழ்ச்சிக்கு நீங்களே பொறுப்பு.

வாழ்க்கையை தணிக்கை செய்துகொண்டிருக்க வேண்டாம். நில்லுங்கள் இந்த நிமிடத்தில்.. இந்த கணத்தில் வாழுங்களேன்.

வாழ்க்கை ஒரு பரிசு.. அந்தப் பரிசின் சுகத்தை முழுக்க அனுபவியுங்கள்.//


திரைப்படங்கள் பார்ப்பதும் நல்ல பொழுதுபோக்காய் இருந்த காலம். தொலைக்காட்சிகள் இல்லாமல் மக்கள் பொழுது போக்க, திரைப்படங்களை பார்த்தார்கள். அறிவியல் முன்னேற்றம் இல்லாத காலத்திலேயே தந்திர காட்சிகளும்,  பிரமாண்டமான காட்சி அமைப்புகளும் வியக்க வைக்கும்.  அப்படி அமைந்த பழைய படங்கள், இப்போது தங்கள் திறமைகளைக் காட்ட இளைஞர்கள்  எடுக்கும் குறும்படங்கள், இவற்றை விமர்சிக்கும் தளங்கள் பற்றிக்காண்போம்..

//நவம்பர் 10. கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் பிறந்த நாள். 
அவருக்கு நிறைய புகழ் தேடித் தந்த  ‘ஔவையார்’ படத்தைப் பற்றிச் சில வரலாற்றுத் தகவல்கள் என் களஞ்சியத்திலிருந்து! 
ஔவையார்' படம் எடுத்ததற்காகத் தமிழ் நாட்டில் 1954-இல் பெரும் விழாக்கள் எடுக்கப் பட்டன. இதில் பேராசிரியர் 'கல்கி' முக்கியப் பங்கு எடுத்துக் கொண்டார்.
அந்த விழாக்கள் தொடர்புள்ள சில 'விகடன்' பக்கங்கள்//

இப்படிப் பல நமக்குத் தெரியாத அரிய தகவல்களைத் தருகிறார்,  ’பசுபதிவுகள்’ என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் திரு. பசுபதி அவர்கள். பழைய விகடன் பத்திரிக்கையில் வந்த படங்களைக்  காலத்தால் அழிக்க முடியாதபடி தன் பதிவில் -தன் களஞ்சியத்தில் தொகுத்து வைத்து இருக்கிறார். நாம் பார்த்துப் படித்து மகிழலாம்.


விவசாயி என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் ராஜா அவர்கள்.மனதைக் கனக்க வைக்கும் உலகப்படம் பார்த்தபின் தன் மனதில் தோன்றிய கதை  ஒன்றைச் சொல்கிறார்.:--
அப்படிக் கதையில் என்ன இருக்கிறது என்று படிக்க ஆவலா? அமெரிக்காவில் இருக்கும் பேரனுக்கும், இந்தியாவில் இருக்கும் தாத்தாவுக்கும் இடையில் ஏற்படும் மொழிப்பிரச்சினையை இக்கதை கூறுகிறது.  தாத்தாவுக்கும், பேரனுக்கும் பாலமாக இருப்பது பாசம் மட்டுமே!  அதை எப்படிப் பேரன் சரி செய்தான்? படித்துப் பாருங்கள். கதையின் தலைப்பு;-
திரைப் படம் - பத்து கட்டளைகள் (THE TEN COMMANDMENTS)

//நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நேரம். எங்கள் வீட்டிற்கு அருகில் பொன்மலை ரெயில்வே தொழிற்சாலையில் தச்சு வேலை செய்த ஒரு கிறிஸ்தவ பெரியவர் இருந்தார். ஒருநாள் அவரோடு பேசிக் கொண்டு இருந்தபோது அவர் ” பத்து

கட்டளைகள்” (THE TEN COMMANDMENTS)  படக் காட்சிகள் பற்றி பிரமிப்போடு சொன்னார். அன்றிலிருந்து அந்த படத்தை பார்க்க ஆவலாக இருந்தேன். பெரியவனாகி கல்லூரி சேர்ந்த பிறகுதான்  அந்த வாய்ப்பு அமைந்தது// 
என்று சொல்வது,’ எனது எண்ணங்கள்’ என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் 
தி.தமிழ் இளங்கோ அவர்கள்..  அழகான  படங்களுடன் கொடுத்து இருக்கும் விமர்சனம் படம் பார்க்காதவர்களையும் பார்க்க வைக்கும்.

நானும் இரண்டு முறை இந்த படத்தைப் பார்த்து இருக்கிறேன்.


ஜெர்சி கர்ல்... //திரைப்பட விமர்சகர்களால் பல்வேறு விதமாக விமர்சிக்கப் பட்ட படம். மனைவியை இழந்த கணவனுக்கும், அவன் மகளுக்கும் இடையேயான பாசப் பிணைப்பை பற்றிய ஒரு உருக்கமான படம்.//



 இப்படி திரைவிமர்சனம் செய்பவர், ’மங்கை’ என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் மங்கை அவர்கள். 

நெய்வேலி புத்தகக்கண்காட்சி நடத்திய குறும்படப் போட்டியில் முதல் பரிசையும், சென்னை வர்த்தக மையத்தில் நடத்தப்பட்ட குறும்படப் போட்டியில் இரண்டாவது பரிசையும் பெற்ற ‘பயணம்' குறும்படம், நாகர்கோயில் பகுதிகளில் அன்றாடம் காணும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப் பட்டது.

வட இந்தியாவில் மனநிலை சரியில்லாத நபர்களை, குறிப்பாக, முதியவர்களைப் பராமரிக்கத் திராணியில்லாதவர்கள், தென்னிந்தியாவிற்கு வரும் இரயில்களில் ஏற்றிவிடுவது வழக்கமாகி வருகிறது. இரக்கமற்ற இந்த செயலின் காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கவனிப்பாரற்றுத் திரியும் பரிதாபத்திற்குரிய ஜீவன்களின் பின்னணி எத்தனை குரூரமானது என்று இப்படம் நிதர்சனமாக்கியிருக்கிறது.

இப்படி இந்த குறும்படத்தை விமர்சனம் செய்கிறார் பாரதிக்குமார். இவர் ”பாரதிக்குமார் ”என்ற வலைத்தளம் வைத்து இருக்கிறார்.
                     
                       எண்ணு, சொல், செய் எல்லோருக்கும் நன்மை தர
                       எண்ணும்படி செய், செய்யும்படி எண்ணு.

                                                         வாழ்க வளமுடன்!
                                                                 ----------------

51 comments:

  1. அருமையான அறிமுகங்கள்.. கோலமும் மிகவும் அழகாக உள்ளது..

    மோகன்ஜி, தமிழ் இளங்கோ சார், பாரதிக்குமார் ( இவர் நிலாமகளின் கணவர்) இவர்களைத்தவிர அனைவரும் புதியவர்கள். பொறுமையாக சென்று பார்க்கிறேன்..

    அனைவருக்கும் பாராட்டுகள்.. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆதி, மங்கை தெரியுமே உங்களுக்கு ! டெல்லியில் இருந்தார்களே.!

      Delete
    2. ஆமாம் அம்மா... மங்கையைத் தெரியும்.. அவர்களது பதிவுகளை வாசித்திருக்கிறேன்...:) சந்தித்ததில்லை... தற்போது டெல்லியில் இல்லை என்று நினைக்கிறேன்... கோவையோ?

      Delete
    3. வாங்க ஆதி, வாழ்க வளமுடன்.
      மங்கை இப்போது கோவையில்.தான்.

      Delete
  2. நன்றி! திருமதி கோமதி அரசு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மதுரை அழகு , வாழ்க வளமுடன். உங்கள் வருகைக்கு நன்றி.

      Delete
  3. வாங்க ஆதி, வாழ்க வளமுடன்.முதல் வருகைக்கு நன்றி.
    கோலத்தை பாராட்டியமைக்கு நன்றி. சார் வரைந்த ஓவியத்தை பார்க்கவில்லையா?

    பாரதிக்குமார், நிலாமகள் கணவரா? தகவலுக்கு நன்றி.
    உங்கள் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அடடா! சார் வரைந்த ஓவியத்தை கவனிக்க தவறிவிட்டேனே....:)) முதல் கருத்து இடும் அவசரத்தில்....:)))

      இப்போ தான் பார்த்தேன்... அருமையாக தங்களுக்கு வரைந்து தந்திருக்கிறார்... சாரிடம் தெரிவித்து விடுங்கள்..

      Delete
    2. வாங்க ஆதி வெங்கட், வாழ்க வளமுடன். சாரிடம் தெரிவித்து விட்டேன் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

      Delete
  4. வணக்கம்
    அம்மா
    சிறப்பான அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரூபன், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கு நன்றி.
      உங்கள் தொடர் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது.
      திண்டுக்கல் தனபாலன் அவர்கள் ஊருக்கு சென்று இருக்கிறார்களா? அவர் வீட்டில் எல்லோரும் நலம் தானே!

      Delete
  5. வணக்கம்
    அம்மா.
    தனபாலன்(அண்ணா).தனது வீட்டில்தான் இருக்கிறார் உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் வலைப்பக்கம் வரமுடியாமல் உள்ளது இரவும். இன்று காலையிலும் பேசினேன். வீட்டில் அனைவரும் நலம் தனபால் அண்ணாவுக்கு மட்டுந்தான் உடல் நிலை சரியிலை.....சனிக்கிழமை வலைப்பக்கம் பார்க்கலாம் தனபால்(அண்ணாவை.) நலம் விசாரித்தமைக்கு மிக்க நன்றி அம்மா.


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரூபன், வாழ்க வளமுடன்.
      தனபாலன் அவர்களைப்பற்றிய தகவலுக்கு நன்றி.
      நீங்கள் உரையாடும் போது உடல் விசாரித்தாகச் சொல்லவும்.

      Delete
  6. அன்புடையீர்..
    குருவே சரணம் என்று தொடங்கி,
    அடுத்து நல்லதோர் இசை விருந்தும் நல்கி, புத்தக வாசிப்பினையும்
    திரைப்பட விமர்சனங்களைப் பற்றியும் பதிவிட்டதற்கு மிக்க நன்றி!..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், துரை செல்வராஜூ , வாழ்க வளமுடன்.
      தொடர்ந்து படித்து கருத்து சொல்வது மகிழ்ச்சி.
      நன்றி.

      Delete
  7. மிகவும் பயனுள்ள தளங்களின் அறிமுகங்கள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. வாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்க்களுக்கும் நன்றி.

      Delete
  8. அன்பின் கோமதி அரசு அவர்களே! உங்கள் வலைச்சர தொகுப்பை ரசித்தேன்.. எனது பழைய பதிவொன்றை மறக்காமல் தேர்ந்து அறிமுகம் செய்ததற்கு நன்றி! நான் என் முந்தைய பதிவை வெளியீட்டு ஐந்து மாதங்கள் ஆகின்றது.. உங்கள் அறிமுகத்தைப் பார்க்கும் போது, ‘நீயெல்லாம் ஒரு மனுசனாடா ? ‘ என்று கேட்டது போல் இருந்தது. இன்னும் ஓரிரு நாட்களில் ‘வானவில் மனிதன்’ கடை மீண்டும் திறக்கப் படும் என்று அறிவித்துக் கொள்கிறேன்.. காதைப் பிடித்து திருகியதற்கு நன்றி!
    மோகன்ஜி
    வானவில் மனிதன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் மோகன் ஜி வாழ்க வளமுடன்.
      வானவில் மனிதன் கடை மீண்உம் திறக்கப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. வாசிப்பதும், பகிர்வதும் ஒரு வரபிரசாதம். , உங்களை போன்ற திறமையானவர்கள் நிறைய எழு த வேண்டும். நாங்கள் படிக்கிறோம்.
      உங்கள் வரவுக்கும், தொகுப்பை ரசித்தமைக்கும் நன்றி.

      Delete
  9. ”வாசிப்பவர்களே சுவாசிப்பவர்கள்” என்பதை வெகு அழகாக இன்றைய பதிவினில் எடுத்துரைத்துள்ளீர்கள்.

    என்னுடைய அருமை நண்பர் திருச்சி தி. தமிழ் இளங்கோ அவர்களை இன்று அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    மிக்க நன்றி, மேடம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

      Delete
  10. //எண்ணு, சொல், செய் எல்லோருக்கும் நன்மை தர
    எண்ணும்படி செய், செய்யும்படி எண்ணு.//

    இந்தச்சொற்களும், அதன் மேல் தாங்கள் வரைந்துள்ள கலர் கோலப்படமும், மேலே சார் வரைந்துள்ள வீட்டு லைப்ரரி படமும் மிகவும் அருமையாக உள்ளன. உங்கள் இருவருக்கும் என் அன்பான பாராட்டுக்கள்.

    அன்புடன் VGK

    ReplyDelete
    Replies
    1. மகரிஷியின் பொன்மொழி உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.

      சார் இரண்டு படம் வரைந்து இருக்கிறார்கள். திரையரங்கு படமும் அவர்கள் வரைந்தது தான். எங்கள் இருவருக்கும் உங்கள் பாராட்டுக்கள் மிகவும் மகிழ்ச்சியை தருகிறது.
      நன்றி.

      Delete
    2. கோமதி அரசு Thu Dec 26, 05:26:00 PM

      //மகரிஷியின் பொன்மொழி உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.

      சார் இரண்டு படம் வரைந்து இருக்கிறார்கள். திரையரங்கு படமும் அவர்கள் வரைந்தது தான். எங்கள் இருவருக்கும் உங்கள் பாராட்டுக்கள் மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. நன்றி.//

      //திரையரங்கு படமும் அவர்கள் வரைந்தது தான்.//

      ஆஹா, அப்படியா மேடம். மிக்க மகிழ்ச்சி. அந்த இரண்டாவது படம் கையால் வரைந்தது என என்னால் நினைக்க முடியவில்லை. அதிலும் அந்த இரண்டு [ஜெமினி ஸ்டுடியோ] குழந்தைகள் படம் அப்படியே தத்த்ரூபமாக உள்ளன. என்னுடைய மனம் நிறைந்த இனிய பாராட்டுக்களை தங்கள் கணவருக்கு ஸ்பெஷலாகச் சொல்லிடுங்கோ.

      Dear Sir, My Heartiest Congratulations & Best Wishes to you, Sir. Excellent Art Work. I appreciate your Special Talents. - VGK

      Delete
    3. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
      திரையரங்க படம் சார் வரைந்தது நடுவில் திரையில் உள்ள ஜெமினி குழந்தைகள் மட்டும் கூகுளில் இருந்து எடுத்து ஒட்டியது.
      ஜெமினி வரையவில்லை.
      உங்கள் வாழ்த்துக்களுக்கு சார் தன் நன்றியை தெரிவிக்க சொன்னார்கள்.

      Delete
  11. நல்ல அறிமுகங்கள். மோகன்ஜியை மீண்டும் கடை திறக்க வைத்து விட்டீர்களே...

    அரசு ஸார் வலைச்சரத்தில் தினமொரு ஓவியம் வரைந்து வழங்கியிருந்திருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன். மோகன் ஜி மீண்டும் கடை திறப்பது மகிழ்ச்சிதான்.
      அரசு சாரை தினம் கேட்டேன் நேற்று கருத்துக்கு ஏற்ற மாதிரி இரண்டு படம் வரைந்து தந்துவிட்டார்கள் . ஸ்ரீராம் விருப்பத்தை சொல்லிவிட்டேன். .
      உங்களுக்கு நன்றி.

      Delete
  12. என் வலைப்பூவை ( பசுபதிவுகள்) அறிமுகம் செய்ததற்கு என் மனமார்ந்த நன்றி. ரசிகர்கள் அனுபவித்து மகிழ மேலும் பல பதிவுகளை இட உங்களைப் போன்றவர்கள் தரும் ஊக்கச்சொற்கள் துணை புரியும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பசுபதி சார் ,வாழ்க வளமுடன்..
      உங்கள் பதிவுகள் மிகவும் சிறப்பு பெற்றது.படிக்க வேண்டிய ஒன்று ..அந்தக்கால விஷயங்களை இளையவர்கள் தெரிந்து கொள்ள ஏற்ற பதிவு.
      உங்கள் வரவுக்கு நன்றி.

      Delete
  13. அறிமுகத்திற்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராஜா, வாழ்க வளமுடன்.

      Delete
  14. சிறப்பான தளங்களின் அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்!

    நேர்த்தியான ஓவியம். கோலமும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி..
      ஓவியம், கோலம் இரண்டையும் பாராட்டியதற்கு நன்றி.

      Delete
  15. புத்தக விமரிசனப் பதிவுகள் அறிமுகம் மிக்க நன்று!

    ReplyDelete
  16. வாங்க அ.முஹம்மது நிஜாமுத்தீன், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  17. இன்றைய வலைச்சரத்தில் எனது வலைப் பதிவை அறிமுகப்படுத்திய , இந்தவார, வலைச்சர ஆசிரியை சகோதரி கோமதி அரசு அவர்களுக்கு நன்றி!

    நான் இன்று ( 26.12.2013) அதிகாலையிலேயே திருக்கடையூர் சென்று விட்டு, இப்பொழுதுதான் வீடு திரும்பினேன். இந்த தகவலை எனக்கு செல்போன் மூலம் முதன் முதல் எனக்குத் தெரியப்படுத்திய மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி! மேலும் எனது பதிவினில் வந்து சேதி சொன்ன வலைச்சர ஆசிரியை கோமதி அரசு அவர்களுக்கும், சகோதரர் ரூபன் அவர்களுக்கும், சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் எனது உளங்கனிந்த நன்றிகள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், தி.தமிழ் இளங்கோ, வாழ்க வளமுடன்
      உங்களுக்கு செய்தி சொன்ன எல்லோருக்கும் நன்றி..

      Delete
  18. Replies
    1. வணக்கம் அப்பாதுரை சார், வாழ்க வளமுடன்.
      ஒளவையார் படம் தொழில்நுட்பத்தில் ஆச்சிரியப்படவைத்த படம் தான். வரவுக்கு நன்றி.

      Delete
  19. நல்ல அறிமுகங்கள் அம்மா...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க குமார், வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      Delete
  20. புத்தகங்கள் பகிர்வு பற்றிய பார்வை நன்றாகயிருக்கிறது கோமதிக்கா. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஆசியா, வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      Delete
  21. சிறப்பான அறிமுகங்களுக்கு வாழ்த்துக்களும் ,ஆசிரியைக்கு எனது பாராட்டுக்களும் !

    ReplyDelete
  22. வாங்க அம்பாளடியாள் வாழ்க வளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்கலூக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.
    தொடர் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது.

    ReplyDelete
  23. அருமையான தளங்கள். சில தளங்கள் நான் தொடர்ந்து வாசிப்பவை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட் நாகராஜ, வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      Delete
  24. மிக்க நன்றி கோமதி அரசு அவர்களே என்னுடைய வலைப்பூ அறிமுகத்திற்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாங்க பாரதிக்குமார், வாழ்க வளமுடன்.
      உங்கள் வருகைக்கு நன்றி.

      Delete
  25. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    நன்றாக அறிமுகம் செய்துள்ளீர்கள்.

    ReplyDelete
  26. வாங்க மாதேவி, வாழ்க வளமுடன்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ReplyDelete