ஹாய் வணக்கம்...
இன்று அறிமுகமாய் சிலரின் பதிவுகளை பார்ப்போமா...
வெண்புரவி என்ற வலைப்பூவில் இந்த வருடம் மிகச் சில பதிவுகளே எழுதியிருந்தாலும் சிறந்த பதிவுகள் உள்ளது. எங்கள் வீட்டில் ஆனந்த பிரவேசம் என அவர்கள் வீட்டுக்கு அருகில் சிட்டுக்குருவி குஞ்சுகள் பிறந்த கூடு பற்றி எழுதியுள்ளார்.
கலையன்பன் என்ற வலைப்பூவில் பாடல் பற்றிய தொடர்புகள் மற்றும் ஒற்றுமை பற்றி பதிவுகள் உள்ளது. மிகச் சில பதிவுகளே இந்த வலைப்பூவில் எழுதப்பட்டிருந்தாலும் பாடல்கள் ஒற்றுமை பற்றி அறிந்து கொள்ளலாம்.
சிவிகை என்ற வலைப்பூவில் பதிவரின் அனுபவங்களே பதிவாக உள்ளது. மிக சில பதிவுகளே இந்த வலைப்பூவில் எழுதப்பட்டு உள்ளது. முக்கியமாக சாலை விதிகள் பற்றிய பதிவு இயல்பாக எழுதப்பட்டு உள்ளது.
இணையக்குயில் என்னும் வலைப்பூவில் கவிதைகளே பெரும்பாலும் பதியப்பட்டு உள்ளது. அவற்றில் நான் நானாகவே என்ற கவி பதிவில் நமது எண்ணங்களில் பிறர் திணிக்க கூடாது என்பதை அழகாக பதிந்துள்ளார் பதிவர்.
தென்காசித் தமிழ்ப்பைங்கிளி எனும் வலைப்பூவில் இந்த வருடம் மிகச் சில பதிவுகளே எழுதப்பட்டு உள்ளது. அவற்றுள் அப்பா எனும் கவிதையில் மகள் அப்பாவின் செயல்களை வியந்தும், அறியாமல் செய்த குரும்புக்களுமாய் வரிகள் படைக்கப்பட்டுள்ளது
நதியில் விழுந்த இலை என்னும் வலைப்பூவில் கவிதை, கட்டுரை பதிவுகளாக எழுதப்பட்டு உள்ளது. அவற்றில் உருவாகும் அடிமைத் தலைமுறை எனும் கவிதை இக்கால தொழில் முறையை பட்டென தெறிக்கும் வரிகளில் சொல்லப்பட்டு உள்ளது.
ரவி உதயன் என்னும் வலைப்பூவில் பெரும்பாலும் கவிதைகள் பதிவாக வலம் வருகிறது. இந்த வலைப்பூவிலும் இந்த வருடம் மிகச் சில பதிவுகளே எழுதப்பட்டு உள்ளது. அதில் எனக்கான பேருந்துகள் எனும் கவிதையில் காதல் பார்வையால் தவற விட்ட பேருந்து பற்றி அழகாக எடுத்துச் சொல்லப்பட்டு உள்ளது.
படலை எனும் வலைப்பூவில் சிறுகதைகள், கவிதைகள் மற்றும் பல சுவையான பதிவுகள் எழுதப்பட்டு உள்ளது, அதில் சமீபத்தில் மண்டேலா எனும் நெல்சன் மண்டேலா பற்றிய தொகுப்பு அருமையாக எழுதப்பட்டு உள்ளது.
நாளை இன்னும் சில பதிவுகளை தொகுப்பாக பார்க்கலாம்.
சோதனை மறுமொழி...
ReplyDeleteஒரு சுற்று அறிமுகங்களை பார்த்து விட்டு வருகிறேன்...
ReplyDeleteஅரவிந்த் அவர்களின் தளம் (சிவிகை) புதிது...
ReplyDeleteஅறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
நண்பருக்கு வலைச்சர அறிமுகம் தெரிவித்தமைக்கு நன்றி தனபாலன்...
Deleteஅறிமுகங்களுக்குப் பாராட்டுக்கள்..!
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி.....
Deleteநல்ல அறிமுகங்கள்..
ReplyDeleteஅனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.....
Deleteஅறிமுகங்கள் அருமை.
ReplyDeleteஇன்று எனது வலைப்பூவையும் அறிமுகப்படுத்தினீர்கள். நன்றி!
-கலையன்பன்.
(பாடல் பற்றிய தேடல்.)
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.....
Deleteவலைச்சர அறிமுகம் பற்றி எனது வலைப்பூவில் வந்து தகவல் சொன்ன திண்டுக்கல் தனபாலன் சாருக்கு எனது நன்றிகள்!
ReplyDeleteஇன்று என்னுடன் அறிமுகமான சக பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!
சிறப்பான அறிமுகங்கள்...
ReplyDeleteபுத்தாண்டு நல்வாழ்த்துகள்..
அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் அறிமுகப் படுத்திய உங்களுக்கும் என் உளங்கனிந்த வாழ்த்து
ReplyDeleteஇன்று இடம் பெற்றஅனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களுக்கும் வாழ்த்துக்கள்.
கேப் கிடைத்தால் ரேடியோவில் ...நிலைய வித்துவான் வாசிக்க கேட்கலாம் என்பார்கள் !இவ்வாரம் முழுவதும் 'தமிழ்வாசி'யின் கைவண்ணத்தை வாசிக்க ஆவலுடன் இருக்கிறேன் !
ReplyDeleteஇன்று முதலில் வெண்புரவியில் ஏறிவிட்டீர்கள் .இணைய தளம் முழுமைக்கும் சுற்றி வர வாழ்த்துக்கள் !
+1
எனது வலைத்தளத்தைப் (சிவிகை) பற்றி குறிப்பிட்டதற்கு நன்றி. இதன் மூலம் நானும் சில வலைப்பூக்கள் பற்றியும், பதிவர்கள் பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்தது. உங்களை எனக்கு அறிமுகப்படுத்திய திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் நன்றி.
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி.....
Deleteஅருமையான பதிவர்களின்
ReplyDeleteஅற்புதமன பகிர்வுகளை சிறப்பாக
அறிமுகம் செய்தமைக்கு வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
ReplyDeleteதகவல் தந்த திண்டுகல் தனபாலனுக்கு மிக்க நன்றி!
இன்று புதிய, நல்ல அறிமுகங்கள், நன்றி சார்!
ReplyDeleteஅறிமுகங்கள் அனைத்தும் அருமை! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
அறிமுகத்துக்கு நன்றி
ReplyDeleteஅறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.... பலர் எனக்கு புதியவர்கள்.
ReplyDeleteபல தளங்கள்... புதிது , சிறப்பான அறிமுகம்.. பதிவர்களுக்கு வாழ்த்துகள்
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவரும் எனக்கு புதியவர்கள்.அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDelete