வணக்கம் வலைச்சர நண்பர்களே,
இன்றைய அறிமுக வலைப்பதிவுகள் பற்றிய தொகுப்பைப் பார்ப்போமா?
வலிப்போக்கன் என்னும் வலைப்பூவில் அனுபவ பதிவுகளும், சில சமூக பதிவுகளும் எழுதப்பட்டு வருகிறது. இதில் அருணா ஆசிப் அலி எனும் சுதந்திரப் போராட்ட பெண்ணின் வாழ்வில் நடந்த ஒரு விஷயம் பற்றி பதிவாக எழுதியுள்ளார். என்ன விஷயம் என்பதை அறிந்து கொள்ள பதிவை வாசியுங்கள்.
மலரின் நினைவுகள் எனும் வலைப்பூ கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு மிகச் சில பதிவுகளே எழுதப்பட்டு உள்ளது. அதில் பாம்பின் கால் என்ற பதிவில் அவரது அலுவலகத்தில் நுழைந்த பாம்பை பிடிக்க அவர் எடுத்த முயற்சி பற்றி சுவாரஸ்யமாக எழுதியுள்ளார். என்ன சுவாரஸ்யம் என்பதை பதிவில் வாசியுங்கள்.
பூரியம் என்னும் வலைப்பூ கடந்த ஆண்டு ஆரம்பிக்கபட்டு மிகச் சில பதிவுகள் எழுதப்பட்டு உள்ளது. அந்த வலைப்பூவில் ராமாயணத்தில் உள்ள ராமர் பற்றிய ஓர் அலசல் தொடராக எழுதப்பட்டு வருகிறது. ராமன் இறுதிக் கட்டத்தில் இறப்பதைப் பற்றி ராமன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற தலைப்பில் எழுதப்பட்டு வரும் இந்த தொடர் நேரமிருப்பின் வாசித்துப் பாருங்கள். இதுவரை ஐந்து பாகங்கள் எழுதப்பட்டு உள்ளது.
அவை நாயகன் என்னும் வலைப்பூ ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் ஆனாலும் மிகச் சில பதிவுகளே எழுதப்பட்டு உள்ளது. இந்த வலைப்பூவில் பெரும்பாலும் சாலை விதிகள் கடைபிடித்தல், சாலை பாதுகாப்பு பற்றியே பதிவுகள் எழுதப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பு வாரம் பற்றி இவரது பதிவை வாசியுங்கள். சாலை விதிகளை கடைபிடியுங்கள். உங்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்.
நீர், நிலம், மனிதன் என்னும் வலைப்பூ கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு மிகச் சில பதிவுகளே எழுதப்பட்டு உள்ளது. இந்த வலைப்பூவில் பெரும்பாலும் விவசாயங்கள் பற்றியும், இயற்கை வளங்கள் பற்றியும் எழுதப்பட்டு உள்ளது. பயிர்கள் நோயின்றி வளர உதவி புரியும் அமிர்த கரைசல் எவ்வாறு தயாரிப்பது என பகிர்ந்து உள்ளார்கள். நீங்களும் அமிர்த கரைசலை பயன்படுத்தி உங்கள் வீட்டுச் செடிகளை நோய் தாக்காமல் காப்பாற்றுங்கள்.
வத்திக்குச்சி என்னும் வலைப்பூ கடந்த ஆண்டு ஆரம்பித்து கதைகள், சினிமா பற்றிய பதிவுகள் எழுதப்பட்டு வருகிறது. இதில் சுமதி டீச்சரின் மாணவர்கள் என்ற சிறுகதை பதிவு பள்ளியில் ஆண், பெண் ஆசிரியர்கள் கிசுகிசு தொடர்பும், அதனால் மாணவர்கள் செய்த குறும்பு பற்றியும் எழுதப்பட்டு உள்ளது.
கனவும் கமலாவும் என்னும் வலைப்பூ ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் ஆனாலும் இதுவரை 25 பதிவுகள் மட்டுமே எழுதப்பட்டு உள்ளது. இதில் சமீபத்தில் முருகனுக்கோர் ஓர் முகில் என்ற தலைப்பில் எழுதப்பட்ட பதிவில் முருகக் கடவுளைப் பற்றி அழகாக கவிதை வடிவில் எழுதியுள்ளார். வரிகள் வாசிக்க மிக அருமையாக உள்ளது. இன்னும் நிறைய பதிவுகள் எழுத வேண்டும் என இந்தப் பதிவரிடம் கேட்டுக் கொள்கிறேன்.
நண்பர்களே, இன்றைய வலைப்பதிவு அறிமுகங்களை விரும்பி வாசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். நாளை மற்றுமொரு பதிவுகள் அறிமுகத்தில் உங்களை சந்திக்கின்றேன்....
சோதனை மறுமொழி.....
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஇன்று எல்லாம் சிறப்பான அறிமுகங்கள் அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா...
Deleteஇன்று நீங்கள் குறிப்பிட்ட அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள். படிக்க வேண்டும் அனைத்தையும்.
ReplyDeleteவாழ்த்துக்கள், நன்றி பிரகாஷ்.
வருகைக்கு நன்றி... சுட்டிகளை வாசித்து அங்கேயும் கருத்திடுங்கள்... நன்றி.
Deletegood collection of intros!
ReplyDeleteவருகைக்கும், கருத்திற்கும் நன்றி வவ்வால்
Deleteபூரியம் + கனவும் கமலாவும் - இரு தளங்களும் புதியவை...
ReplyDeleteஅறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ஆகா, தனபாலனுகே புதிதா??? அப்போ வாழ்த்துக்கள் எனக்கும் சொல்லணும்... ஹா ஹா...
Deleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருகைக்கும், கருத்திற்கும் நன்றி நேசன்...
Deleteவலைச்சர குழுவிற்கு மனமார்ந்த நன்றி....
ReplyDeleteவருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி... தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே...
Deleteபுதிய அறிமுகங்கள் ! வாழ்த்துக்கள் அண்ணா
ReplyDeleteவருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி...
Deleteவலைச்சர குழுவிற்கும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய “தமிழ்வாசி பிரகாஷ் ”அவர்களுக்கும். அறிமுகப்படுத்தப்பட்டதை
ReplyDeleteஎன் வலைப்பூவிற்கு வருகை தந்து தெரிவித்த “திண்டுக்கல் தனபாலன்” அவர்களுக்கும் நன்றி! நன்றி! நன்றிகள்.!
வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி... DDக்கும் நன்றி
Deleteசிறப்பான அறிமுகங்கள் - அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநிறைய அறிமுகங்கள்.
ReplyDeleteபுதியன. அறிமுகம் தந்தமைக்கு நன்றிகள்.
"வத்திக்குச்சி" வலைப்பூவை அறிமுகப்படுத்திய “தமிழ்வாசி பிரகாஷ்" அவர்களுக்கும், அறிமுகப்படுத்தியதை எனக்கு தெரியப்படுத்திய திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் நன்றிகள்.
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.... வாழ்த்துகள் அனைவருக்கும்.
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்...
ReplyDeleteஅனைத்து பதிவர்களுக்கும் நல் வாழ்த்துக்கள்..
பூரியம் அருமை. அறிமுகத்துக்கு நன்றி.
ReplyDeleteநன்றி!!
Deleteநண்பர்கள் இருவர், கோவையை சேர்ந்த பதிவர்கள். அவைநாயகன் கவிஞர், சமூக ஆர்வளர், எழுத்தாளர், வனத்தை பற்றிய 'காடுறை உலகம்' கவிதை தொகுப்பு பற்றி எனது பதிவொன்றில் எழுதி இருக்கிறேன். பல பணிகளுக்கு இடையேயும் வலைப்பதிவுகள் எழுதி வருகிறார்.
ReplyDeleteஇன்னொருவர் வின்சென்ட், நீர் நிலம் மனிதன் _ இந்த வலையில் அபூர்வமான பல குறிப்புக்களையும், தகவல்களையும் படிக்கலாம். தமிழில் இத்தகைய வலைத்தளத்தை காண்பது அறிது. மூலிகைகள், மாடியில் காய்கறித் தோட்டம் படங்களோடு காட்சி படுத்தி எழுதி வருகிறார், இயற்கை ஆர்வளர்.
நன்றி பிரகாஷ்.
வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி...
Delete"அவைநாயகன்" வலைப்பூவை அறிமுகப்படுத்திய “தமிழ்வாசி பிரகாஷ்" அவர்களுக்கும், அறிமுகப்படுத்தியதை தெரியப்படுத்திய திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் நன்றிகள்.
ReplyDeleteமகிழ்ச்சியில் "வாய்" பேச முடியவில்லை! "கை" தட்டச்சு செய்ய முடியவில்லை!! நன்றிகள்! பல.....!!
ReplyDelete"பூரியம்" வலைப்பூவை அறிமுகப்படுத்திய "தமிழ்வாசி பிரகாஷ்" அவர்களுக்கும்,
'வலைச்சர குழு"விற்கும், அறிமுகப்படுத்தப்பட்டதை என் வலைப்பூவிற்கு வருகை தந்து தெரிவித்த “திண்டுக்கல் தனபாலன்” அவர்களுக்கும், வலைச்சரம் வழியே என் வலைப்பூவிற்கு வந்து வாழ்த்திய "அப்பாதுரை" மற்றும் "தனிமரம்" அவர்களுக்கும் நன்றிகள்.... பல கோடிகள்!!!
---- பூரியம்
நீர் நிலம் மனிதன் என்ற எனது வலைபூவை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.இயற்கை வளங்களினை எதிர்கால சந்ததியினருக்கும் விட்டுச்செல்ல வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடே இத்தகைய வலைப்பூ.இதனை படித்தவர்களில் ஒருவராவது இயற்கையினை பாழ்படுத்துவதை குறைத்தால் அதுவே நமக்கு பெருமை.பிளாஸ்டிக் பயன்பாட்டினை குறைப்போம் இயற்கையினை பாதுகாப்போம்.நன்றி
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள். அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎனது கனவும் கமலாவும் என்ற வலைத்தளத்தை வலைச்சரத்தில் அறிமுகபடுத்திய" தமிழ்வாசி பிரகாஷ்"
ReplyDeleteஅவர்களுக்கும்,வலைச்சர குழுவிற்கும், என் மனமார்ந்த நன்றிகளை தெரியபடுத்திக்கொள்கிறேன். என்னை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியதை, எனது வலைத்தளத்திற்கு வந்து தகவலும் வாழ்த்தும் அளித்த சகோதரர் "திண்டுக்கல் தனபாலன்" அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி! கமலா.ஹ