வணக்கம் வலை நண்பர்களே,
இன்றுடன் முடிகிற வாரத்திற்கு பொறுப்பேற்றிருந்த சுபத்ரா அவர்கள் தம் ஆசிரியர் பணியை ஆர்வமுடன் ஏற்று, மிகச் சிறப்பாக செய்துள்ளார். அவர் எழுதிய பதிவுகள், கிடைத்த மறுமொழிகள், பக்கப்பார்வைகளை கீழே உள்ள படத்தில் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
தமது பணியை சிறப்பாக செய்த சகோதரி சுபத்ரா அவர்களை மகிழ்ச்சியுடன் வாழ்த்தி வழியனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
நாளை முதல் தொடங்கும் வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க, கீதமஞ்சரி எனும் வலைப்பூவை எழுதி வரும் சகோதரி கீதா அவர்களை அழைக்கின்றேன். இவர் ஏற்கனவே 2012-ம் ஆண்டிலும் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றிருந்தார். எனவே அவரைப் பற்றிய அறிமுகம் உங்களுக்கு தெரிந்திருக்கும் என்றாலும், அவரைப் பற்றி சில வரிகள் முந்தைய அறிமுகப் பதிவிலிருந்தே தருகிறேன்.
இவர் பெயர் கீதா மதிவாணன். பதிவுகளில் கீதா என்றே குறிப்பிட்டுக் கொண்டிருந்தவர், பதிவுலகில் பலருடைய பெயர் கீதா என்றிருப்பதால் குழப்பம் தவிர்க்க கீதமஞ்சரி என்னும் இவரது வலைப்பூவின் பெயரையே இவரது பெயராகவும் பயன்படுத்தத் துவங்கியுள்ளார். மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்துள்ளார்.
வீட்டிலிருந்து ஒரு நல்லதொரு இல்லத்தரசியாக குழந்தைகளையும் குடும்பப் பொறுப்புகளையும் கவனித்துக் கொள்கிறார். இவருக்கு தமிழின்மீது தீராத காதலே உண்டு. தமிழ் மொழி, கலாச்சாரம், பாரம்பரியம், கலைகள் மீது அளவிலாப் பற்றுக் கொண்ட போதும், குடும்பநலனை முன்னிட்டு, தற்சமயம் ஆஸ்திரேலியாவில் வசித்துவருகிறார்.
கணவர் இயந்திரப் பொறியியலாளர். மகள் பன்னிரண்டாம் வகுப்பிலும், மகன் ஏழாம் வகுப்பிலும் படிக்கிறார்கள். கைவேலைப்பாடுகளில் இவருக்கு விருப்பம் உண்டு என்றாலும், அதைவிட எழுதுவதிலும் படிப்பதிலும் ஆர்வம் அதிகம் உடையவர்.
இவரை வாழ்த்தி வரவேற்று ஆசிரியர் பணியில் அமர்த்துவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
நல்வாழ்த்துக்கள் சுபத்ரா....
நல்வாழ்த்துகள் கீத மஞ்சரி....
நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்....
சோதனை மறுமொழி
ReplyDeleteஅறிவிப்புக்கு நன்றி பிரகாஷ்.
Deleteநிறைவுடன் பணியாற்றிச் சென்ற சகோதரி சுபத்ராவுக்கு பாராட்டுக்கள்!
ReplyDeleteமீண்டும் பணியேற்கும் சகோதரி கீதமஞ்சரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
நன்றி அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
Deleteஇன்றுடன் விடைபெற்றுச்செல்லும் இந்த வார வலைச்சர ஆசிரியர் அவர்களுக்கும், நாளை முதல் புதிய பொறுப்பேற்க உள்ள வலைச்சர ஆசிரியர் அவர்களுக்கும் என் அன்பான இனிய பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி வை.கோ.சார்
DeleteWELCOME TO திருமதி கீதா மதிவாணன் [கீத மஞ்சரி] ;)))))
ReplyDeleteALL THE BEST TO YOU Madam ! ;)))))
மகிழ்வான நன்றி சார். உங்களுடைய பரிந்துரையின் பேரில்தான் எனக்கு முதல் வலைச்சர வாய்ப்பு கிடைத்தது. அந்த நன்றி என்றும் என்னுள்.
Deleteவருக வருக என் அருமைத் தோழியே தங்களின் ஆசிரியப்
ReplyDeleteபணி சிறந்து விளங்க என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !
இதுவரைக் கடமையாற்றிய தோழிக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும்
வாழ்த்துக்களும் .
நன்றி தோழி.
Deleteவாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...
ReplyDeleteநன்றி குமார்.
Deleteகீதமஞ்சரி அவர்களுக்கு நல்வரவு..
ReplyDeleteநன்றி துரை செல்வராஜூ
Deleteகீதமஞ்சரிக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி நேசன்
Deleteசகோதரி கீதமஞ்சரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாழ்த்துகள் கீதமஞ்சரி!
ReplyDeleteகீதமஞ்சரி அக்கா வருக வருக.
ReplyDeleteபிரகாஷ்க்கும் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி! கீதா அக்காவுக்கு வாழ்த்துகள்!
ReplyDeleteசென்ற வார ஆசிரியருக்குப் பாராட்டுகள்.
ReplyDeleteஇந்த வார ஆசிரியர் கீதமஞ்சரி அவர்களுக்கு வாழ்த்துகள்.....