இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற - ஆதி வெங்கட் - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த ஆர்வத்துடனும், பொறுப்புணர்வுடனும், ஈடுபாட்டுடனும் - நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார்.
இவர் எழுதிய பதிவுகள் : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 070
அறிமுகப் படுத்திய பதிவுகள் : 099
பெற்ற மறுமொழிகள் :165
வருகை தந்தவர்கள் : 1527
நல்ல பதிவர்களைத் தேடிப் பிடித்து - அவர்களீன் நல்ல பதிவுகளை அறிமுகப் படுத்தி உள்ளார்.
பதிவுகளை அறிமுகப் படுத்தும் போது அப்பதிவுகள் பற்றிய கருத்துகளையும் கூறி இருக்கிறார். பதிவர் பெயரும் பதிவின் பெயரும் சுட்டிகளும் கொடுத்து அறிமுகப் படுத்தி இருக்கிறார்.
ஆதி வெங்கட்டினை அவரது கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
சுபத்ரா நாளை முதல் ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார்.
இவர்
பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே திருநெல்வேலியில் தான். (இளமறிவியல், கணிதம்). பாரத ஸ்டேட் வங்கியில் வேலைபார்த்து வந்த இவர் கடந்த ஒருவருடமாகக் குடிமைப்பணிகள் தேர்வுக்காகத் தயார்செய்து இப்பொழுது பரீட்சை முடிந்த நிலையில் முடிவுகளுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். வாசிப்பிலும் எழுதுவதிலும் மிகுந்த ஆர்வம் இருந்ததால், வலைத்தளம் இவருக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. ஏராளமான நண்பர்களையும் பெற்றுத்தந்தது. இவர் 2010-விநாயகச் சதுர்த்தி தினத்திலிருந்து எழுதிவருகிறர. இவரது வலைத்தளம் http://subadhraspeaks. blogspot.in/
நல்வாழ்த்துகள் ஆதி வெங்கட்
நல்வாழ்த்துகள் சுபத்ரா
நட்புடன் சீனா
சோதனை மறுமொழி
ReplyDeleteதமிழ்மணத்தில் என் பதிவுகளை இணைக்க முடியவில்லை. கடவுச்சொல் மாறி விட்டது போல வேறு கடவுச்சொல் இமெயிலில் வருகிறது. அதிலும் இணைய முடியவில்லை. தயவு செய்து உதவுங்கள்.
Deleteசுபத்ரா அவர்களை, சிறப்புடன் பணி செய்(ய வரு)க என்று அன்புடன் வரவேற்கிறோம்.
ReplyDeleteபாராட்டுக்கள் திருமதி ஆதி வெங்கட் அவர்களுக்கு!
நன்றி :-)
Deleteநல்வாழ்த்துகள் ஆதி வெங்கட்
ReplyDeleteநல்வாழ்த்துகள் சுபத்ரா
நன்றி :-)
Deleteசிறந்த முறையில் தனது ஆசிரியைப் பொறுப்பை நிறைவு செய்து
ReplyDeleteவிடைபெறும் தோழி ஆதி வெங்கட்டுக்கும் இன்று புதிதாக தனது
ஆசிரியைப் பொறுப்பைப் பதவியேற்கும் தோழி சுபத்திரா அவர்களுக்கும்
என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதில்
மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன் .வருக வருக தோழி சுப்பத்திரா அவர்களே
வாரம் முழுவதும் மகிழ்ச்சி பொங்கிட அள்ளித் தருக தருக சிறந்த அறிமுகங்ககளை !
நன்றி அக்கா :-)
Deleteஅட! சுபத்ராவா.. வாருங்கள் வணக்கம்
ReplyDeleteவணக்கம் சீனு :-)
Deleteசிறப்பாகப் பணியாற்றி இன்றுடன் விடைபெறும் இந்த வார வலைச்சர ஆசிரியர் அவர்களுக்கும், நாளை பதவி ஏற்க உள்ள அடுத்தவார வலைச்சர ஆசிரியர் அவர்களுக்கும் பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி! :-)
Deleteஅட! சுபத்ராவா.. வாருங்கள் வணக்கம்!
ReplyDeleteவணக்கம் கௌதமன் சார் :-)
Deleteவாழ்த்து கூறிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...
ReplyDeleteநாளை முதல் ஆசிரியப் பொறுப்பேற்கும் சுபத்ரா அவர்களை வரவேற்கிறேன்...
நன்றி ஆதி வெங்கட். தங்கள் வாழ்த்துகளுடன் தொடங்குகிறேன் :-)
Deleteசிறந்த முறையில் நிறைவு செய்த ஆதி வெங்கட் அவர்களுக்கும்
ReplyDeleteபுதிதாகப் பொறுப்பை ஏற்கும் சுபத்ரா அவர்களுக்கும்
நல் வாழ்த்துக்கள்!..
நன்றி :-)
Deleteசுபத்ரா ஆண்ட்டியா? (அக்கா? சின்னப் பொண்ணா?.. அது உங்க வயதைப் பொருத்தது..என்னை ஏன் முறைக்கிறேள்?) ..
ReplyDeleteரொம்ப நன்னா கதையெல்லாம் எழுதுவாளே?!
நல்ல அறிமுகம், சிதம்பரம் ஐயா.
கதை கிதைனு எவனாவது போட்டி நடத்தினால் சுபத்ரா ஆண்ட்டி பொதுவா இரக்கமே இல்லாமல் முதல் பரிசையெல்லாம் அள்ளிண்டு போயிடுவா.. இங்கே என்ன சொல்றானு பார்க்கலாம்..
பாருங்கோ.. :-)
Deleteவணக்கம்
ReplyDeleteகடந்த வாரம் சிறப்பாக பணியை செய்த திருமதி ஆதிவெங்கட் அவர்களுக்கு பாராட்டுக்கள் இந்த வாரம் வலைச்ர பொறுப்பு ஏற்றிருக்கும் தங்களின் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்...ஐயா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
ReplyDeleteகடந்த வாரம் சிறப்பாக பணியை செய்த திருமதி ஆதிவெங்கட் அவர்களுக்கு பாராட்டுக்கள் இந்த வாரம் வலைச்ர பொறுப்பு ஏற்றிருக்கும் தங்களின் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி! :-)
Deleteஇருவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி! :-)
Deleteவாங்க... அசத்த வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி! :-)
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteதங்கள் பணி சிறக்க வாழ்த்துகளோடு தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..
மிக்க நன்றி! :-)
Delete