என் பதிவுகளின் அறிமுகம் இன்னும் முடியலன்னு சொல்லவந்தேன்...
4.நான் எழுதிய முதல் சிறுகதை..வூடு கட்டி அடி.....சிறுகதைக்கு உண்டான எந்த இலக்கணத்தையும் பின்பற்றாமல் மனம் போன போக்கில் எழுதி அதற்கு சிறுகதை என்ற லேபில் கொடுத்தேன். சிலர் படித்துப் பார்த்துவிட்டு இது சிறுகதை போல இருக்கிறது என்று பாராட்டினார்கள். ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதியது. இந்தப் பதிவில்தான் திடங்கொண்டு போராடு சீனுவும், சதீஷ் செல்லத்துரையும் நட்பானார்கள். ஆக்சுவலா நான் , சீனு , சதீஸ் செல்லத்துரை எல்லாம் பதிவுலகில் ஒரே செட் ( பெரிய ஷேவிங் செட்டு..!)
அடுத்து எல்லாமே ரொம்ப ஜாலியான பதிவுகள்... இதுதான் என் இயல்பும் கூட...
5.நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தில விஜய் சேதுபதிக்கு தலையில் அடிபட்டு நினைவு இழந்துவிடுவார். பிறகு என்னாச்சி..? என்கிற விசயம்தான் உங்களுக்கு தெரியுமே. ஒருவேளை அப்படி நம்ம கேப்டன், கலைஞர், மன்மோகன் சிங் , சரத்குமார் இவர்களுக்கு அடிபட்டா என்ன ஆகும் என்பதை கற்பனையாக எழுதியதுதான்.. என்னாச்சி...!?!?!?!?!?.
6.ஸ்ரீசாந்த், கிரிக்கெட் பெட்டிங்கில் சிக்கி கைதாகி, இந்தியாவே பரபரப்பா பேசிக்கொண்டிருந்த சமயம். போட்டோஷாப் பயன்படுத்தி முதன்முதலில் கலாட்டூன் பதிவு ஒன்னு போட்டேன்.. பார்த்துவிட்டு எப்படியிருக்குனு சொல்லுங்க.. என்னய்யா தப்பு பண்ணினான் என் கட்சிக்காரன் ஸ்ரீசாந்த்...?
7.விஜயகாந்த் கட்சியின் ஓவ்வொரு எம்.எல்.ஏ-வும் அடுத்தடுத்து அதிமுகவில் ஐக்கியமாகிக் கொண்டிருந்தத் தருணம். கேப்டனோ, தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார். அப்போ சின்னக் கவுண்டர் ஆலமர பஞ்சாயத்து பாணியில் ஒரு பதிவு இட்டேன்... தாவத் தயாராகும் எம்எல்ஏ வைத் தடுப்பது எப்படி...?
8.மன்மோகன் சிங் பேச்சை அமெரிக்கா ஒட்டுக்கேட்டதாக அப்போது பரபரப்பாக பேசப்பட்ட சமயம். ஆனா நம்ம ஆளு எதுவுமே பேசியிருக்க மாட்டாரு என்கிற விஷயம் நமக்கு மட்டுந்தானே தெரியும்.. அதைக் காலாய்த்து அப்போது ஒரு பதிவு போட்டேன். . மன்மோகன் போனை ஒட்டு கேட்ட அமெரிக்கா -உலகத்தலைவர்கள் வியப்பு.
9. உங்களைப் பிரபலப் பதிவராகக் காட்டிக்கொவது எப்படி... கொஞ்சம் வில்லங்கமான பதிவு.. வேறு எதுவும் சொல்றதிக்கில்ல...
10."தோற்றோர் இயல்" எனும் தமிழ் சொல்லே "Tutorial" என்னும் ஆங்கில சொல்லாக மாறி இருக்கிறது.இப்படியொரு அறிய கண்டுப்பிடிப்பை அண்ணன் சீமான் அவர்கள் வெளியிட்டிருந்தார்கள். அதைக் கலாய்த்து எழுதிய பதிவு. சீமானின் அரிய கண்டுபிடிப்பும் ஒத்த ரூவா ஃபுல் மீல்சும்..
11.காப்பி பேஸ்டுக்கு எதிராக நான் போட்ட "கலாட்டூன்" பதிவு...வடிவேலின் புகழ்பெற்ற ஒரு காமெடியை வைத்து இப்பதிவை இட்டேன். நிறைய பேர் ரசித்த பதிவு இது.... பிரபல பதிவர் வடிவேலுக்கு நேர்ந்த கதி....!
அடுத்து மேல்மாடி சமாச்சாரம்.
இன்றைய நவீன விஞ்ஞான யுகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறைக்கு அடுத்ததாக எல்லோராலும் வியப்பாகப் பார்க்கப் படுவது CAD-CAM சம்மந்தப்பட்ட CNC துறை. இது இயந்திரவியல் தொழில் நுட்பத்தின் உச்சம். நீங்கள் ஓட்டும் மிதிவண்டியிலிருந்து ஆகாய விமானம் வரை உள்ள அனைத்து இயந்திர அமைப்பின் பாகங்களும் தற்போது CNC MACHINE-ஆல் தான் உருவாக்கப்படுகிறது. கிட்டத்தட்ட ROBOT தொழில்நுட்பம்.
அதை இயக்கப் பயன்படும் புரோக்ராம் செய்யும் சாப்ட்வேர் தான் MASTERCAM. 15வருடங்களுக்கு முன்பு சென்னையில் ஒரே ஒரு இடத்தில்தான் சொல்லிக் கொடுத்தார்கள். அது முடித்தாலே, சிங்கை,ஆஸ்திரேலியா ,நியூசிலாந்து உள்ளிட்ட அனைத்து வெளிநாடுகளிலும் அப்போது சுலபமாக வேலை கிடைக்கும். அப்போது நான் சென்னையில் படித்துவிட்டு அங்கேயே வகுப்பெடுத்து பிறகு சிங்கையிலும் வகுப்பெடுத்தென். திருமணத்திற்குப் பிறகு அப்பணியைத் தொடர முடியவில்லை. அதனால்தான் வலைப்பூவில் தொடராக எழுதினேன். நான்கு பதிவுகளோடு நின்றுவிட்டது.
12. CAD -CAM PROGRAMMER ஆக வேண்டுமா?
தற்போது தனியாக ஒரு வலைத்தளம் உருவாக்கி MASTERCAM, SOLIDWORKS, SOLIDCAM மூன்றையும் திரும்பவும் எழுதலாம் என்றிருக்கிறேன்.. வலைச்சர பணி முடிந்தபிறகு அவ்வேளை தொடங்கும்.. பின்ன..சும்மா எவ்வளவு நாள்தான் மொக்கைப் போடுறது..?
இத்தோடு என் பதிவுகளின் அறிமுகம் முடிந்தது... நாளை முதல் எனக்குப் பிடித்தப் பதிவர்கள் , நான் ஆசானாக நினைப்பவர்கள்,என்னை உருக வைத்தப் பதிவுகள் எல்லாவற்றையும் தொகுத்து வழங்குகிறேன்.. நன்றி..
உங்கள் பேராதரவுக்கு நன்றி..
படிக்காத பதிவுகளை முதலில் எதுவென்று பார்க்கிறேன்... நன்றி...
ReplyDeleteMASTERCAM, SOLIDWORKS, SOLIDCAM பற்றிய பகிர்வுகளை மிகவும் எதிர்ப்பார்க்கிறேன்...
ஜில்லாவா...? சாமீ...!
மிக்க நன்றி DD . விரைவில் அத்தளத்தை ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன்
Deleteஉங்கள் பல பதிவுகளை நான் ஏற்கனவே படித்திருக்கிறேன். இன்று குரிப்பிடவற்றில் ஒரு சிலவற்றை மட்டும் படிக்கவில்லை.
ReplyDeleteநன்றி தொடர்க
மிக்க நன்றி பாஸ்...
Delete//எக்ஸ்கியுஸ்மீ எங்கே கிளம்பிட்டீங்க..//
ReplyDeleteஹலோ சார் நாங்கதான் கிளம்பிட்டோமே? நாங்க கிளம்பினப்புறம் நீங்க 'ஜில்லா'வைப் போடுங்க...
நீங்களே பாருங்க...
எழுந்து ஓடுங்க...
எங்களுக்கு என்ன கவலை அதைப் பத்தி..? ம்?
ஹா... ஹா...!
மிக்க நன்றி பாஸ்...
Delete//இல்ல நைட் கனவுல //
ReplyDeleteஓஓஹோ கனவுலயா?
அட... இது நல்லா இருக்கே? கனவுலேயே ஈசியா ஓசியா பார்த்திடலாமே?
ஹா..ஹா.. கனவுல கூட பாத்துடுவீங்களா.. நல்ல தைரியம் உங்களுக்கு ..;-)
Delete//இல்ல நைட் கனவுல //
ReplyDeleteஓஓஹோ கனவுலயா?
அட... இது நல்லா இருக்கே? கனவுலேயே ஈசியா ஓசியா பார்த்திடலாமே?
குறிப்பு: உங்கள் சொந்த வலைப்பூவில் இப்படி நீங்கள் கலாய்க்கலாம். ஆனால், வலைச்சரத்தில் செய்வதால் விஜய் ரசிகர்களின் வருகை, பின்னூட்டம், வாக்குகள் கிடைக்காமற்போகலாம்; தயவுசெய்து தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தவறாக நினைக்க வேண்டாம்.
Deleteநிச்சயம் விஜய் ரசிகர்கள் தவறாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள் என்கிற நம்பிக்கைதான்... ஜில்லா படத்துக்கு இணையத்தில் முதல் விமர்சனம் அதுவும் படம் சூப்பராக இருக்கு என்று எழுதியது நான் மட்டும்தான். அதற்காக பலபேரிடம் வாங்கிக் கட்டிக்கொண்டது வேறு விஷயம்.. :-)
வணக்கம்
ReplyDeleteஇன்று வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன்
Delete//..இத்தோடு என் பதிவுகளின் அறிமுகம் முடிந்தது... //
ReplyDelete..!?..
//..எக்ஸ்கியுஸ்மீ!.. எங்கே கிளம்பிட்டீங்க..//
நான் எங்கேயும் கிளம்பலையே... இப்பதானே வாறேன்!.. ஏன்.. என்னாச்சி!?..
ஆமா என்னாச்சி...? :-))) மிக்க நன்றி சார்
Deleteவணக்கம்
ReplyDeleteநான் நினைத்தேன் வேறு வலைப்பூக்கள் என்று எல்லாவற்றையும் பார்த்தால் தங்களின் பக்கத்தை அறிமுகம் செய்துள்ளிர்கள்... தொடரட்டும்.... தங்களின் பணி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மீண்டும் நன்றி
Deleteநேரம் ஒதுக்கி படிக்கின்றேன் ! ஜில்லாவா?, ஐயோ சுறாவே போதும் சாமி .அவ்வ்வ்வ்வ்வ்
ReplyDeleteமிக்க நன்றி பாஸ்..
Deleteஅருமையான சுவாரஸ்யமான சுயஅறிமுகம்
ReplyDeleteபகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
(இந்தப் பின்னூட்டம் ஜில்லாவுக்கு பயந்து இல்லை )
கருத்துக்கு மிக்க நன்றி அய்யா..
Deleteபட்டைய கிளப்புங்க ஜில்லா வசூல் மாதிரி...ஹா ஹா ஹா ஹா...
ReplyDeleteமிக்க நன்றி மனோ....
Deletecadcam mastercam தெரிந்து கொள்ள உங்கள் பதிவுக்கு போனேன்.
ReplyDeleteநானும் அந்த காலத்துலேயே பேசிக் லே ஆரம்பிச்சு, கோபால், போர்ட்ரான், ஸீ , ஸீ ப்ளஸ் என்று யூனிக்ஸ் என்விரொன்மெண்ட் லே ப்ரோக்ராம் எழுதி அடடா. அடடா. என்று என் முதுகை நானே ஒரு
தட்டு தட்டிகொண்டவர் களில் ஒருவன் தான்.
ஆரகிள் , எஸ், க்யூ, எல் என்று வரும்போது போதும்டா சாமி, என்று ரிடயரும் ஆயிட்டேன். திருவாசகம் . படிக்கத் துவங்கி விட்டேன்.
உங்களைப் போன்ற இந்த காலத்து காளைகளை பார்க்கும்போது பெருமிதமாக இருக்கிறது. நாட்டின் எதிர்காலம் சிறப்பாகவே இருக்கிறது.
வாழுங்கள். வளருங்கள்.
அது சரி.
ஜில்லா போடறத்துக்கு பதிலா, பில்லா போடுங்களேன்.
சுப்பு தாத்தா.
where is your email id?
www.subbuthatha72.blogspot.in
www.Sury-healthiswealth.blogspot.com
இந்த காலத்து காளையா..? ஹா..ஹா...
Deleteமிக்க நன்றி சார்..
த.ம. +1
ReplyDeleteஒவ்வொன்றாய் படிக்கிறேன் மணிமாறன்....
தொடர்ந்து சந்திப்போம்...
மிக்க நன்றி சார்
Delete