கல்லூரியில் படிக்கும்போது செமஸ்டர் எக்ஸாமுக்கு முன்பாக திடீரென்று மூன்று வாரம் ஸ்டெடீஸ் லீவ் என்று அறிவிப்பார்கள். ஆறுமாத காலம் ஒன்றுமே படிக்காமல் ஜாலியாக ஊர் சுற்றிவிட்டு அந்த மூன்று வாரத்துல வெட்டி சாய்க்கிற மாதிரி பெரிய பெரிய பிளான் எல்லாம் போடுவோம். " மாப்ள எல்லா சிலபஸையும் கவர் பண்ணிடனும்டா " இப்படித்தான் ஹாஸ்டலில் இருந்து ஊருக்கு புறப்படுவதற்கு முன் ஒவ்வொருத்தரும் சொல்லிவிட்டு செல்வோம்..! ஊருக்கு போய்விட்டு முதல் பக்கத்தை திறந்து வெறித்து வெறித்து பார்ப்பதிலேயே மூன்று வாரங்களும் ஓடிப்போய்விடும்.
ஹாஸ்டலுக்கு திரும்பி வந்தவுடன் ரூம்மேட்டிடம் மெதுவாக.." மச்சி எல்லா சிலபசையும் முடிச்சிட்டியா..'' என்று கேட்டால் , " எங்கேடா.. ஊர்ல எங்க சொந்தகாரங்க காதுகுத்து.அதிலேயே நேரம் போச்சுடா.." என்பான். இன்னொருத்தனை கேட்டால், "புத்தகத்தை அப்பத்தான்டா திறப்பேன்.. உடனே எங்கப்பன் கடைக்கு போ... வயலுக்கு போ.. இப்படி ஏதாச்சும் வேலை சொல்லிடுவாருடா மச்சி. ச்சே.. இந்த அப்பன்களே இப்படித்தாண்டா " என்று அப்பா மேல பழியைப் போடுவான். இப்படியே விசாரித்து பார்த்தால், கடைசில ஒருத்தன் கூட படிச்சிருக்க மாட்டான். அப்போ ஒரு சந்தோசம் வரும் பாருங்க. அப்படியே எல்லோரையும் ரெண்டு கையாலையும் அணைத்துக்கொண்டு "நண்பேண்டா..."னு சொல்லணும் போல இருக்கும். நாம நாசமா போறதைப் பற்றிக்கூட கவலையில்லை. ஆனா, நம்மோட சேர்ந்து நாலுபேர் நாசமா போறத நினைச்சி அடையிற அல்ப சந்தோசம் இருக்கு பாருங்க.. அது அனுபவிச்சாதான் புரியும்.
இதிலிருந்து என்ன சொல்ல வருகிறேன்னா, எதை வேண்டுமானாலும் பிளான் பண்ணி பண்ணலாம்.ஆனால், இந்தப் படிக்கிற விசயத்தில் மட்டும் பிளான் பண்ணவே கூடாது. அதுவா தானா நடக்கணும். படிக்கிற விஷயம் மட்டுமில்லைங்க. எழுதுற விஷயமும் கூட.
இரண்டு வாரத்துக்கு முன்பு சீனா அய்யாவிடமிருந்து அழைப்பு வந்தது. நான் உடனே ஒத்துக்கொள்ளாமல்," கருத்தாழமிக்க பதிவுகளை தொகுத்து வழங்க வேண்டும் ஐயா. செறிவு மிகுந்த, அறம் நிறைந்த இலக்கிய கட்டுரைகளை எழுதவேண்டும்.ஆதலால் எனக்கு ஒருவார கால இடைவெளி வேண்டும் ஐயா" என்ற ரீதியில் பதில் அனுப்பினேன். அவரும் போய்த்தொலை என்று ஒருவாரம் கழித்து அனுமதி அளித்தார். நானும் எழுதி நிமிர்த்தி விடுவது போல கம்ப்யூட்டர் முன்னால் உட்காருவேன்..
அப்போது பார்த்து என் பையன் " அப்பா..லண்டன் பிரிட்ஜ் ஃபாலிங் டவுன் போடு.." என்று என் மேலே ஏறி உட்காருவான்.
" டேய்.. அப்பா ரொம்ப பிசியா இருக்கேண்டா.. அம்மாகிட்ட போய் டிவில போடச் சொல்லுடா.."
" அதெல்லாம் முடியாது. இவ்ளோ நாளு இதுலதான போட்ட.. இப்போ இதிலேயே போடு.."
அவ்வளவுதான். மொத்த நர்சரி ரைம்ஸ் முடியறதுக்குள்ள அவன் தூங்குகிறானோ இல்லையோ, நான் குறட்டைவிட்டு தூங்க ஆரம்பித்து விடுவேன். ஆபிசுக்கு வந்தால், அடுத்த வாரம் சைனீஸ் நியூ இயர் லீவ் வருது. அதனால ஓவர் டைம் பார்த்தாவது வேலை முடிக்கணும்னு மேனேஜர் சொல்லிவிட்டு போய்ட்டார். கடைசியில், ஒருவார இடைவெளியில் நான்கே நான்கு வரிகள்தான் எழுதியிருந்தேன். அதனால் வலைச்சரத்திற்காக எதுவுமே தயார் செய்யவில்லை. என் மனம் போன போக்கில் எழுதுகிறேன். உங்கள் பொன்னான ஆதரவை எதிர்நோக்கியுள்ளேன்..
வெளிநாடுகளில் இணைய வேகம் அதிகம். ஆனால், தூங்கும் நேரத்தைத் தவிர்த்து தொடர்ந்து நான்கு மணிநேரம் ஓய்வு கிடைப்பதரிது. அதிலும் குடும்பத்தோடு வசிப்பவர்களுக்கு தூக்கத்தை தியாகம் செய்தால் மட்டுமே இணையத்தில் உலாவ முடியும்.
போகட்டும்..
முதலில் சிலருக்கு நன்றி தெரிவிக்கும் தருணம்.
நான் பதிவு எழுத ஆரம்பித்த பொழுது என்னை முதன்முதலில் discourage செய்தது என் மனைவிதான். என் ஆரம்பகால பதிவுகளைப் படித்துப் பார்த்துவிட்டு காறித்துப்பாத குறையாக, "இன்னும் ஒரே மாதத்தில் பிளாக்கை மூடிவிட்டு போய் விடுவீங்க பாருங்க" என்று பந்தயம் கட்டினாள்.(ஆனால் சமீபத்தில் சிங்கை கலவரம் பற்றி எழுதியபோது பல ஆங்கில ஊடகங்களில் வெளியான தகவல்களை தொகுத்து எனக்களித்ததும் அவள்தான்). கிட்டத்தட்ட இழுத்து மூடும் சூழல்தான். நிறைய பேரின் பதிவுகளைப் படித்து கமெண்ட் போட்டிருந்தாலும் என் பதிவுகளுக்கு கமெண்ட், ஹிட்ஸ், ஃபாலோயர் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்தது.
இந்நிலையில், என் பதிவுக்கு முதல் பின்னூட்டம் அளித்த பன்னிக்குட்டிக்கு நன்றி. பேஸ்புக்கில் எழுதுவதற்கு 'லைக்' எப்படி உற்சாக டானிக்கோ அதேப்போல் வலைப்பூ எழுதுவதற்கு ஹிட்ஸ். சினிமா சம்மந்தப்பட்ட பதிவு எழுதினால்தான் ஹிட்ஸ் அதிகமாகக் கிடைக்கும் என்கிற சூட்சமம் தாமதமாகத்தான் தெரிந்தது எனக்கு.
T.ராஜேந்தரைப்பற்றி முதன்முதலில் ஒரு சினிமா பதிவு எழுதினேன். முதன்முதலில் தமிழ் மணத்தில் இணைத்த பதிவும் அதுதான். அதைத் தனது 'படித்ததில் பிடித்தது' பகுதியில் பிலாசபி பிரபாகரன் குறிப்பிட்டிருந்தார். தவிரவும், தனது புதிய பதிவர்கள் பகுதியில் என் வலைப்பூவைக் குறிப்பிட்டு எழுதியிருந்தார். அதன் பிறகுதான் பிரபல பதிவர்களின் பார்வை கிடைத்தது. அவருக்கும் நன்றி..
மற்றும் எனக்கு தொடர்ந்து பின்னூட்டமிட்டு ஊக்கமளித்து வரும் மற்ற வலைப்பூ நண்பர்களுக்கும் என்றென்றும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.. (அவர்களைப் பற்றி தனித்தனியாக அடுத்தடுத்து வரும் பதிவுகளில் தெரிவிக்கிறேன்)
பின்னூட்டம் என்றபோது ஒரு விஷயம் ஞாபகம் வருகிறது. ஒரு பதிவு எப்பொழுது பதிவு ஆகிறது...?
குழப்பமாக இருக்கிறதா..? தெளிவாகச் சொல்கிறேன். ஒரு பதிவு எப்பொழுது முழுமையடைகிறது..?
பாக்யராஜ் பாணியில் சொல்லவேண்டுமானால், ஒரு பதிவை எழுதி பப்ளிஷ் செய்யும் போது அது 25 சதவிகித பதிவாகத்தான் இருக்கிறது. அப்பதிவை தமிழ்மணம், இண்ட்லி உள்ளிட்ட திரட்டிகளில் இணைத்து மற்றவர்களின் பார்வைகளுக்காக வைக்கும்போது 50 சதவிகித பதிவாகிறது. பிற்பாடு, அப்பதிவின் தலைப்பு, சொல்லப்பட்ட விசயத்தைப் பொறுத்து சுமார் 200 ஹிட்ஸ்களுக்கு மேல் கிடைக்கும்பொழுது அது 75 சதவிகித பதிவாக மாறுகிறது. அதற்கு பின்னூட்டம் அல்லது மறுமொழி என்கிற விஷயம் கிடைக்கும் போதுதான் அது 100 சதவிகித பதிவாக முழுமையடைகிறது.
இப்ப சொல்லுங்க... பின்னூட்டம் இல்லாத பதிவு, ரோஜா இல்லாத நேரு போல... சசிகலா இல்லாத ஜெயலலிதா போல.. அண்ணியார் இல்லாத கேப்டன் போல.. மஞ்சள்துண்டு இல்லாத கலைஞர் போல.. விக் இல்லாத பவர்ஸ்டார் போல... பவர்கட் இல்லாத தமிழகம் போல... இல்லையா...?
அதனால் எனக்கு பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் நன்றி..
பதிவுலகத்தில் எனக்கு மிக ஆச்சர்யமான ஒரு விஷயம் திண்டுக்கல் தனபாலன். எந்தப் பதிவு போனாலும் அவர் பின்னூட்டம் அங்கே இருக்கிறது. ஏதாவது புதிய பதிவர்களை அறிமுகப்படுத்தலாம் என்று தேடினால் இவர் எல்லா இடத்திலேயும் ஏற்கனவே துண்டைப் போட்டு இடம்பிடித்து வைத்திருக்கிறார். முன்பு மனசாட்சி முத்தரசு, வரலாற்று சுவடுகள் , தளிர் சுரேஷ் போன்றோர் திண்டுக்கல்லாருக்கு போட்டியாக இருப்பார்கள். தற்போது அவர்கள் சிறிது ஓய்வெடுக்கிறார்கள் போல.. ஆனால் நிலைத்து நின்று ஆடும் இந்தப் பதிவுலக டெண்டுல்கருக்கு வாழ்த்துக்கள்.
போதும் இத்தோட முடிச்சிக்கிறேன்...
அடுத்து என் பதிவுகளைப் பற்றிய அறிமுகம்.
என் பதிவுகளில் சிறந்தப் பதிவுகள் என்று வகைப்படுத்தினால், எதுவுமே என்னளவில் முழுத் திருப்தி ஏற்படுத்தவில்லை என்றுதான் தோன்றுகிறது. போன வாரம் ரசித்து எழுதிய பதிவு இந்த வாரம் திரும்பப் படித்தால் பிடிக்க மாட்டேங்கிறது. இன்னும் வளரவேண்டும் என்று உள்மனது சொல்கிறது. ஆதலால் மற்றவர்கள் பாரட்டியபதிவு, பின்னூட்டம் அதிகம் கிடைத்தப் பதிவு என்கிற வகையில் தொகுக்கிறேன்.
1.2013 ஆம் வருடம் நான் எழுதிய பதிவுகளில் ஓரளவு திருப்தியளித்த பதிவு சிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்... சிங்கையில் சில மாதங்கள் வேலைபார்த்துவிட்டு சிங்கப்பூருக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ தூதர் போல ஒரு பேஸ்புக் பிரபல பதிவர் சிங்கையைப் பற்றி அடிக்கடி பேஸ்புக்-ல் பதிவார். சிங்கை கலவரம் நடந்தபொழுது "அய்யய்யோ சிங்கப்பூரில் கலவரம்.. எல்லா இந்தியர்களையும் வெளியேற்றப் போறாங்க... இனி இந்தியர்களுக்கு சிங்கப்பூரில் வேலையே கிடைக்காது.. இனி அவ்வளவுதான்.. என்கிற ரீதியில் ஸ்டேடஸ் போட்டு எல்லோரையும் பீதிக்குள்ளாக்கியிருந்தார். அதனால் வேறு வழியில்லாமல் கலவர நேரத்தில் அங்கிருந்த சில நண்பர்களிடம் விசாரித்தும், ஊடகங்களை அலசியும் இந்தப் பதிவு போட்டேன்.
2.என்னை பதிவுலகில் வெளிச்சத்துக்கு கொண்டுவந்த பதிவு. சமீபத்தில் விகடன் இணைய தளத்தில் இந்தப் பதிவை அப்படியே காப்பி பேஸ்ட் செய்திருந்தார்கள்,என் தளமும் பெயரும் குறிப்பிடாமல். அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை.காப்பி பேஸ்ட் செய்யம் அளவுக்காவது என் பதிவு இருக்கிறது என்ற சந்தோசம் போதும். சமகால சினிமா ரசிகர்கள் நிறைய பேருக்கு T.ராஜேந்தரைப் பற்றி அவ்வளவாக தெரியாது. வெறும் வீராசாமி படத்தை மட்டும் வைத்து அவரை எடை போடுகிறார்கள். அவர் 80-90 களில் தமிழ்த்திரையில் ஏற்படுத்திய தாக்கத்தைப்பற்றிய பதிவுதான் தமிழ் திரையுலகின் அஷ்டாவதானி T.ராஜேந்தர் ஒரு சகாப்தம்.... . பதிவு எழுதவந்த புதிதில் எழுதியது. ஏதோ ஓரளவு எனக்குத் தெரிந்த மொழியில் அப்போது எழுதினேன் .
3.திருவாரூர் என்றால் கலைஞரை தவிர்த்துவிட்டு எழுதிவிடமுடியுமா...? நான் வருடத்திற்கு ஒருமுறை ஊருக்கு செல்லும்போது குடும்பத்துடன் ஒரு 'சமத்துவ ட்ரிப்' அடிப்பேன். எங்களது குடும்பத்துடன் எட்டுக்குடி முருகன் கோவிலுக்கு சென்றுவிட்டு, அப்படியே நாகூர் தர்கா, வேளாங்கண்ணி சர்ச் என்று ஒரு வட்டப்பாதையில் சுற்றிவிட்டு வருவோம். எட்டுக்குடிக்கு முன்பாக இருக்கிறது திருக்குவளை. கலைஞர் பிறந்த இடம். மற்றவர்களுக்கு அதெல்லாம் கோயில் என்றால் எனக்கு கலைஞர் வீடு கோயில் (யப்பா...இது வலைச்சரம் இங்க வம்புக்கு வராதீங்க... எதுவா இருந்தாலும் என் தளத்தில் பொங்கல் வையுங்க). அதைப்பற்றி ஒரு பதிவு தான் கலைஞரின் 'குடியிருந்த கோயில் '. அங்கு ஒரு காவலாளி இருப்பார். அவரிடம் கேட்டால், " இதோ இப்ப மூணு மாசத்துக்கு முன்னதான் தலைவர் வந்துவிட்டு போனார்... இதோ இங்கதான் உட்கார்ந்திருந்தார் என்பார். உடனே அங்கே நின்று ஒரு போட்டோ எடுத்து பிறவிப்பலனை(!) அடைவேன்..
மன்னிக்கவும்...இது இன்னும் முடியவில்லை.நிறையப் பதிவுகளைக் குறிப்பிடவேண்டும் ... பதிவு மிகப் பெரிதாகிவிட்டது. அடுத்தடுத்தப் பதிவுகளில் அதைப்பற்றி எழுதுகிறேன்..
(அப்புறம் ஒரு விஷயம்... அப்படியே என் வலைப்பூ போனோமா.. படித்தோமா.. வந்தோமானு இருக்கக் கூடாது. சைடுல "பதிவுலக நண்பர்கள்" என்று ஒரு பகுதி இருக்கு.. அப்படியே அதில உங்களையும் இணைத்துக் கொள்ளுங்க... இல்லேனா நைட் தூங்கும் போது கனவுல வந்து கத்திய காட்டி மிரட்டுவேன் ஆமா .. :-)))))
வழக்கம் போல உங்கள் பின்னூட்ட ஆதரவை அளிக்க வேண்டுகிறேன்..
அன்புடன்
மணிமாறன்..
நன்றி...
ReplyDelete3 பதிவிற்கும் சென்று பிறகு வருகிறேன்...
முதல் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி .
DeleteT. R. ஒரு சகாப்தம் + குடியிருந்த கோயில் - படிக்கவில்லையாதலால் இரு பகிர்வுக்கும் நன்றி...
ReplyDeleteஉதவி செய்த துணைவியாருக்கும், பல சிரமங்கள் இருந்தாலும் ஆசிரியர் பொறுப்பை எடுத்துக் கொண்டதற்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி DD .
Deleteஉங்க பதிவுகள சென்று பாக்கிறேன் மணிமாறன் சார்!
ReplyDeleteஅதுக்கும் முன்னால தமிழ்மண வாக்கும் அளிச்சிட்டேன்.
நெஞ்சார்ந்த நன்றி சார் .
Deleteஅண்ணே சூப்பர், கொஞ்சம் காமெடியாவும் கலக்கலாவும் எழுதியிருக்கீங்க.... செம...
ReplyDeleteமிக்க நன்றி தம்பி .
Deleteரொம்ப தமாசா இருக்குது உங்க பதிவு. ?
ReplyDeleteஆமா ..
உங்க வலைக்கு வந்து பாலோயார்ஸ் லே ஒரு குத்து வச்சுட்டு போங்க அப்படின்னு சொல்றீகளே...
எதுவும் ஒரு காப்பி தண்ணி கிடைக்குமா ?
திருவாரூர் கமலாம்பிகா ஹோட்டல்லே காபி குடிச்சு,
அப்பாடி, 25 வருஷத்துக்கு மேலே ஆயிடுச்சே..
சுப்பு தாத்தா.
ஹா ஹா மிக்க நன்றி சார் . இப்படியாவது பாலோயர்ஸ் எண்ணிக்கையை கூட்டிடலாம் என்கிற அல்ப ஆசைதான்
Delete//இல்லேனா நைட் தூங்கும் போது கனவுல வந்து கத்திய காட்டி மிரட்டுவேன் ஆமா!..//
ReplyDeleteஇது வேறயா!..
நல்லாதானே ஐயா.. போய்க்கிட்டு இருக்கு?..
ஹா ஹா மிக்க நன்றி சார் .
Deleteதங்களின் நகைச்சுவையான எழுத்து நடை எனக்கு பிடிக்கும் ஒரு வாரமும் பட்டைய கிளப்புங்க வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி சார் .
Deleteஇல்லேனா நைட் தூங்கும் போது கனவுல வந்து கத்திய காட்டி மிரட்டுவேன் ஆமா .. :-)))))
ReplyDelete// ஐயோ ஜில்லா சீடி அனுப்பினாலே போதும்!ஹீ
ஐயோ இது அதைவிட பெரிய தண்டனை யாச்ச . :-) மிக்க நன்றி
Delete//அது 100 சதவிகித பதிவாக முழுமையடைகிறது.// எப்படி சார் இப்படிஎல்லாம் :-)
ReplyDeleteபல புதியவர்களை கலக்கலாக அறிமுகப்படுத்த வாழ்த்துக்கள் சார்
மிக்க நன்றி சீனு .
Deleteஇப்ப சொல்லுங்க... பின்னூட்டம் இல்லாத பதிவு, ரோஜா இல்லாத நேரு போல... சசிகலா இல்லாத ஜெயலலிதா போல.. அண்ணியார் இல்லாத கேப்டன் போல.. மஞ்சள்துண்டு இல்லாத கலைஞர் போல.. விக் இல்லாத பவர்ஸ்டார் போல... பவர்கட் இல்லாத தமிழகம் போல... இல்லையா...?//
ReplyDeleteஇதெல்லாம் ரெம்பவே ஓவருய்யா...
ம்ம்ம் வாழ்த்துக்கள்...
ஹா ஹா .... மிக்க நன்றி மனோ ...
Deleteசூப்பருப்பா... நம்ப தி.த. பத்தி சொல்லோக்கினியேபா... அத்து மெய்தாம்பா... தடுக்கி வியுந்தா அவ்ருகாண்டி தான் வியுந்தாவனும்...
ReplyDeleteசோக்கா ஆரம்பிசுகீற... வாய்த்துக்கள்பா...
அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...
மிக்க நன்றி தல ...
Deleteசுவாரசியமான எழுத்து. வாழ்த்துக்கள் மணிமாறன்
ReplyDeleteமிக மிக நன்றி மேடம் ...
Deleteசிங்கை கலவரம் பற்றி தகவல்கள் அளித்தமைக்கு நன்றி..!
ReplyDeleteதங்களின் கருத்துக்கு மிக்க நன்றி மேடம்
Deleteடி.ஆர் பற்றிய பதிவு மிகவும் நன்றாக இருந்தது
ReplyDeleteமிக்க நன்றி பாஸ்...
Deleteபடிக்கப் படிக்க சுவை கூடியது. ‘விறு விறு’ நடை.
ReplyDeleteமிக்க நன்றி பாஸ்..
Deleteநல்ல சுய அறிமுகம். இனிமேல் தான் உங்கள் பதிவுகள் படிக்க வேண்டும். படிக்கிறேன்....
ReplyDeleteவாழ்த்துகள் மணிமாறன்.
மிக்க நன்றி சார் .
Deleteஎன்னை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி! வேளைப்பளு கொஞ்சம் அதிகமாகிவிட்டதால் சில தளங்களுக்கு மட்டுமே செல்ல முடிகிறது! பின்னூட்ட புலியோடு எல்லாம் போட்டியிட முடியுமா? எனக்கும் அவர்தான் ரோல் மாடல்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி சுரேஷ்... நீங்கள் பதிவுகள் அதிகமாக எழுதுவதால் பின்னூட்டங்கள் இடுவது குறைந்திருக்கலாம். ஆனால் நிறைய பேரை ஊக்கப்படுத்தியுள்ளீர்கள்..
Delete