Sunday, January 26, 2014

Manimaran கீதமஞ்சரியிடம் இருந்து வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்கிறார்.

அன்பின் சக பதிவர்களே ! 

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற - கீதமஞ்சரி   - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த  ஆர்வத்துடனும்,  பொறுப்புணர்வுடனும்,  ஈடுபாட்டுடனும்  - நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார். 

இவர் எழுதிய பதிவுகள்                         : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள்            : 073
அறிமுகப் படுத்திய பதிவுகள்              : 079
பெற்ற மறுமொழிகள்                            :316
வருகை தந்தவர்கள்                              : 1453

 கீதமஞ்சரி   பல் வேறு தலைப்புகளில் பதிவுகள் இட்டிருக்கிறார். பொதுவாக அனைத்துப் பதிவுகளிலும் - பதிவர்களை - ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் அறிமுகப் படுத்துவதை தலையாய கடமையாகச் செய்திருக்கிறார்.   

நல்ல பதிவர்களைத் தேடிப் பிடித்து - அவர்களீன் நல்ல பதிவுகளை அறிமுகப் படுத்தி உள்ளார். 
பதிவுகளை அறிமுகப் படுத்தும் போது அப்பதிவுகள் பற்றிய கருத்துகளையும் கூறி இருக்கிறார். பதிவர் பெயரும் பதிவின் சுட்டிகளும் கொடுத்து அறிமுகப் படுத்தி இருக்கிறார்.
கீதமஞ்சரியை    அவரது   கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். 

Manimaran  நாளை முதல் ஆசிரியப் பொறுப்பேற்க  அன்புடன் இசைந்துள்ளார். 

இவரது சொந்த ஊர் திருவாரூருக்கு  அருகில் மாங்குடி என்ற கிராமம். பதினைந்து ஆண்டுகளுக்கு முன் திருச்சி மண்டலப் பொறியியற் கல்லூரியில் இயந்திரவியல் துறையில் இளங்கலை முடித்துவிட்டு,  பத்து ஆண்டுகளுக்கு மேலாக  சிங்கப்பூரில் வசித்து பணிபுரிந்து வருகிறார். 2011 டிசம்பரிலிருந்து மனதில் உறுதி வேண்டும் என்ற வலைப்பூவில் தொடர்ந்து எழுதி வருகிறார்.

இவரது  வலைத்தளம் 
http://manathiluruthivendumm.blogspot.com/

மணிமாறனை வருக வருக என வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் கீதமஞ்சரி
நல்வாழ்த்துகள் மணீமாறன்   

நட்புடன் சீனா 

19 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete

  2. இந்தப் பொறுப்பு அளித்ததற்கு மிக்க நன்றி... சிறப்புடன் செயல்படுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது... நாளை காலை எனது அறிமுகப் பதிவு...

    ReplyDelete
    Replies
    1. அன்பின் மணிமாறன் - தங்களுக்கு அனுப்பிய அழைப்பினை இன்னும் ஏற்றுக் கொள்ள வில்லையே - ஏற்றுக் கொண்டால் தான் தங்களீன் டேஷ்போர்டில் வலைச்சரமும் வரும். தங்களீன் சொந்தத் தளம் போல பதிவுகள் இடலாம் - அழை[ப்பினை உடன் ஏற்றுக் கொள்க .
      நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா -

      Delete
    2. http://www.tamilvaasi.com/2013/10/tips-for-valaicharam-blog-authors.html - வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்பவர்களுக்கு உட்ர்ஹவும் பதிவு - தேவை எனில் படித்துப் பார்க்கவும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

      Delete
  3. வாங்க தல.... புதியவர்களை அறிமுகம் செய்யுங்கள்... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. சின்ன எழுத்துப் பிழை... அதனால் மறுமொழி...

    ஒவ்வொரு நாளும் சிறப்பான முறையில் பல தளங்களை அறிமுகம் செய்த கீதமஞ்சரி அவர்களுக்கு நன்றிகள்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    மணிமாறன் அவர்களை அன்புடன் வாழ்த்தி வரவேற்கிறேன்... அசத்துங்க...!

    ReplyDelete
  5. மணிமாறன் அவர்களை முழு மனதுடன் வாழ்த்தி வரவேற்கிறேன்

    ReplyDelete
  6. இந்த வாரம் வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பை ஏற்க மனதில் உறுதியோடு வரும், சகோதரர் மணிமாறன் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. நாளும் நல்ல முறையில் பல தளங்களை அறிமுகம் செய்த கீதமஞ்சரி அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்!...

    அன்பின் மணிமாறன் அவர்களுக்கு நல்வரவு!..

    ReplyDelete
  8. கீதமஞ்சரி அவர்களுக்கு பாராட்டுக்கள்!
    மணிமாறன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  9. வணக்கம்
    சிறப்பாக ஒருவார காலம் பணியை செய்து முடித்த கீத மஞ்சரிக்கு பாராட்டுக்கள்
    புதிதாக வருகிற மனிமாறன் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. வரவேற்கிறேன்; வாழ்த்துகிறேன்.,,,ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் உங்கள் பதிவுகளை படிக்க.... நன்றி..

    ♥ ♥ அன்புடன் ♥ ♥
    www.99likes.in
    S. முகம்மது நவ்சின் கான்.

    ReplyDelete
  11. சிறப்பாக பணியாற்றிய கீதமஞ்சரிக்கு நன்றிகள்

    ReplyDelete
  12. மனிமாறன் அண்ணாச்சி சிறப்பாக கலக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இந்த வார ஆசிரியப் பொறுப்பேற்கும் மணிமாறன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. எப்படி எழுதவேண்டும் என்பதற்கு அடிக்கடி இந்த வார ஆசிரியையின் தளத்தை பார்ப்பதாக எனது தோழி சொல்வார்

    இந்த வார ஆசிரியப் பொறுப்பிற்கு பின்னர் தான் எப்படி படிக்கவேண்டும் என்பதையும் இவர் காட்டியிருகிறார்
    மிரட்டலான வாசிப்பு

    வாழ்த்துக்கள் ,

    ReplyDelete
  15. அசத்திட்டீங்க கீதமஞ்சரி! வாழ்த்துகள்!
    மணிமாறன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. சென்ற வார ஆசிரியர் கீதமஞ்சரி அவர்களுக்குப் பாராட்டுகள்.
    இந்த வார ஆசிரியர் மணிமாறன் அவர்களுக்கு வாழ்த்துகள்....

    ReplyDelete