அன்பு வணக்கங்கள் எல்லோருக்கும்..
இயந்திர வாழ்வில் எழுந்தோமா குளித்தோமா வேலைக்கு ஓடினோமா மாலை வீட்டுக்கு வந்தோமா டிவி ரிமோட்டை கையில் வைத்துக்கொண்டு சேனல்களை மாற்றிக்கொண்டே மணியாகிவிட்டதா சாப்பிட்டு படு… என்று ஓடிக்கொண்டிருக்கும் இதில் இருந்து விடுப்பட்டு நம்மை நாமே ரிலாக்ஸ் பண்ணிக்கொள்ள, நம் திறமைகளை வளர்த்துக்கொள்ள, நம் உணர்வுகளை பகிர்ந்துக்கொள்ள, ஆங்காங்கே காணும் நிகழ்வுகளை அப்படியே படம் பிடிப்பது போல் மனதில் பதிய… மனதில் பதிந்ததை எழுத்தாகவோ கதையாகவோ கவிதையாகவோ கட்டுரையாகவோ… இனிமையான பாடல்களை கேட்டுக்கொண்டு, நமக்கு பிடிச்ச சமையலை செய்து சாப்பிட்டு, குழந்தைகள் படிப்பை அருகிருந்து கவனித்து, வீட்டில் வயதானவர்கள் இருந்தால் அவர்கள் வாய்க்கு சுவையான பலகாரங்களை செய்துக்கொடுத்து அவர்கள் பேசும்போது உட்கார்ந்து கேட்டு… இப்படி நிறைய நிறைய….. அவசர வாழ்வில் இதை எல்லாம் இழக்கிறோமா? இல்லை என்று தான் சொல்வேன். எப்டின்னு கேட்கிறீங்களாப்பா? வலைப்பூவில் அசத்தலான பதிவுகள் போட்டு வாசகர்களை தன் பக்கம் திரும்பிப்பார்க்க வைக்கும் என்மனம் கவர் பதிவுகளைப் படித்துப்பார்த்ததால் தான் இப்படி சொல்கிறேன்.
கண்ணனைப்பற்றி மனமுருகி பல வருடங்களாக அன்புத்தோழி கீதா எழுதும் தொடர் படிக்க படிக்க இனிமை.
ஆன்மீகப்பயணத்தில் பல்லாயிரம் மைல்கள் கடந்த அன்புத்தோழியின் இந்த வலைப்பூ எல்லோரையுமே கோயிலுக்குள் கர்ப்பக்கிரஹத்தினுள் அழைத்துச்சென்று தரிசனம் செய்யவைக்கும் அற்புதமான வலைப்பூ.
கதை, கவிதை, கட்டுரை, சமையல் என்று அசத்தும் அன்புத்தோழி தேனம்மை லட்சுமணனின் வலைப்பூவில் எப்போதும் ருசிகரமான தகவல்களுடன் இருக்கும்.
அழகுத்தமிழில் மனதை கொள்ளைக்கொள்ளும் கவிதைகள் எத்தனை எழுதினாலும் அதை வாசிக்கும்போது அலுப்பதே இல்லை என்பது மட்டுமல்ல, ஒவ்வொரு முறையும் பிரமிப்பில் இருந்து மீள சமயம் எடுக்கும் எனக்கு.. அத்தனை அழகான கவிதைகளின் சொந்தக்காரர் இவர்.
முத்துப்பல்வரிசை புன்னகையரசி அநன்யாவின் பதிவுகள் எது படித்தாலும் கண்டிப்பா சிரிச்சுட்டே இருக்கலாம். அத்தனை க்யூட் பதிவுகளின் சொந்தக்காரி… இவர் எழுதிய மை மதர் தெரெசாவின் பைக் மெமரீஸ் ஒரு துளி.
மனதில் தோன்றும் நேர்மையான சிந்தனைகளை தைரியமாக முன்வைக்கும் அற்புதமான பெண் ஆயீஷாஃபாரூக் என் அன்புச்சகோதரி. இவரின் கவிதைகளில் மன உணர்வுகள் தத்ரூபமாக இருக்கும்.
இனிய தமிழில் கதைகளாலும் கவிதைகளாலும் மனம் கொள்ளைக்கொண்ட எழுத்துகளின் சொந்தக்காரர் என் அன்புத்தோழி.
எந்த ஒரு நிகழ்வினையும் சுவாரஸ்யமாக சொல்லிச்செல்லும் அன்புத்தோழியின் எழுத்துகள் நிறைந்த வலைப்பூ.
குறைவில்லாத நிறைவான பதிவுகளைப்பகிரும் வலைப்பூக்கு சொந்தக்காரர். அமைதியான எளிமையான அன்பு மனம் கொண்டவர்.
ரசனையான பதிவுகளின் சொந்தக்காரர் மனோ ஸ்வாமிநாதன் அவர்கள். இவர்களின் வரைதலும், சமையல் கலையும் எனக்கு மிகவும் விருப்பமானவை. இவரின் வலைப்பூ கதைகளால், நிகழ்வுகளால், சமையல்கலையால் நிறைந்து இருக்கும் எப்போதும்.
11. நாச்சியார்
1. தாய்மையின் கருணையுடன் குறும்புகளுடன் புகைப்படத்தில் மலரும் நினைவுகளுடன் சோலையாக இருக்கும் வல்லிம்மாவின் வலைப்பூவை நான் பார்க்கும்போதெல்லாம், என் மனதுக்கு மிக்க நெருக்கமானவர் வீட்டுக்குள் நுழைந்த உணர்வு ஏற்படும் எனக்கு.
12. அம்பாளடியாள்
சொக்கவைக்கும் தமிழால் வசப்படுத்தி வரிகளை அனாயசமாக பாட்டெடுத்து முத்தாய் பாடும் முத்தழகி அம்பாளடியாளின் வலைப்பூ முழுக்க இனிமையான சந்தம் அமைத்த பாடல் வரிகளால் நிறைந்திருக்கும். எனக்கும் ஒருமுறை அசத்தலாய் பாடியும் காண்பித்தார் என் அன்புச்சகோதரி தொலைப்பேசியில்.
13. சின்னு ரேஸ்ரி
சுவையான சமையல் மட்டுமல்ல, ஒரு விஷயம் எடுத்தால் அதில் ஆழ்ந்து அதைப்பற்றிய விவரங்களும் விரிவாகத்தருவதில் வல்லவர் இவர். இவர் வலைப்பூவில் பார்த்தாலே தெரியும்.
14. தென்றல் சசிகலா
வீசும் தென்றலில் வருடும் கவிதைகளாய் இருக்கும் சசியின் வலைப்பூவில். பழகும் தன்மையில் இனிமை. அமைதியான எளிமை. எழுதும் கவிதைகளைப்போலவே புன்னகையின் பூ... எனக்காக தயிர்சாதம் சாப்பிட்ட தங்கக்கட்டி.
1. கற்பனை வளத்துடன் நிகழ்வையும் கலந்து எளிமையான வரிகளில் சொல்லி நகைச்சுவையிலும் அசத்தும் இவர் மிடில் கிளாஸ் மாதவி.
மழலைக்கவிதையிலும் இலக்கணத்திலும் கருத்துகளிலும் கட்டுரையிலும் அசத்தும் இவர் மனதுக்கு வயது 16 தான். இனிமையான எழுத்துகளுக்கு சொந்தக்காரர்.
17. கீதமஞ்சரி
கலகலப்பான எழுத்துகளின் ஆளுமையில் குழந்தைக்கவிதையின் இனிமையில் தாலாட்டில் இப்படி பலவித கவிதைகளுக்கு சொந்தக்காரர் என் இனிய அன்புத்தோழி கீதா.
18. கோவை மு சரளா
கருத்தும் இனிமையும் கொண்ட எழுத்துகளின் சொந்தக்காரர் இவர். எளிமையானவர். இன்முகம் கொண்டவர்.
19. அப்பாவி தங்கமணி
குட்டி குட்டி நிகழ்வுகளைக்கூட ரசனையாக சொல்லும் இயல்பான எழுத்துகளுக்கு சொந்தமானவர் அப்பாவி தங்கமணி. ஒரே ஒரு முறை இவர் வீட்டில் இட்லி மிளகாப்பொடி போட்டு சாப்பிடனும். அனன்யா என்னிக்கோ சொன்னதுப்பா…
20. ஹுஸைனம்மா
வீட்டைக்கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார் அதோடு வீட்டை மாத்திப்பார்னு சொல்லும்போதே தெரிகிறது இதில் இருக்கும் அவஸ்தைகள் எத்தனைன்னு. ரீசண்டா நாங்களும் அனுபவப்பட்டுட்டோமுல்ல.
21. ஸாதிகா
இவர் பதிவுகளுக்கு நான் என்றும் ரசிகை. நேர்ல பார்த்தபோது அமைதியாக அன்பு மனதுடன் எங்களிடம் பேசியது இன்றும் நினைவில் நிற்கிறது. அடுத்தமுறை கண்டிப்பா அதிக நேரம் உங்க வீட்டில் இருப்போம்பா..
22. ஆசியா உமர்
வாயில் நீர் வரவைக்கும் அருமையான சமையல் பதிவுகளை பகிர்ந்து அசத்துவார் இவர்.
தொலைப்பேசியில் பேசினாலோ அல்லது நேரில் பார்த்தாலோ இடைவிடாமல் சிரிக்கவைக்கும் அன்புத்தோழி ராஜியின் பதிவுகள் சொல்லும் கருத்து ஏராளம். அத்தனையும் பயனுள்ளது.
பதிவுகளில் மேன்மை, ஒன்றுமே தெரியாது என்றுச்சொல்லி எத்தனையோ கருத்துகளைச்சொன்ன பதிவு. இப்படி நிறைய பதிவுகள் இவருடையது சொல்லிட்டே போகலாம். இவரை நேரில் பார்க்கமுடியாமல் மிஸ் பண்ணிட்டாலும் போனில் பேசிக்கிட்டோமே நாங்க ரெண்டுப்பேருமே.
25. துளசிதளம்
எழுத்துகளின் தோரணங்களில் நம்மை வலைப்பூவுக்குள் அழைக்கும் அன்பின் எழுத்துகளுக்கு சொந்தமானவர் இவர்.
26. மதுரகவி
ஆன்மீகம் என்றாலும் ஏதாவது நிகழ்வென்றாலும் அனுபவம் என்றாலும் எழுத்துகளால் கட்டிப்போட்டுடும் அசாத்திய பதிவுகளுக்கு சொந்தக்காரர்.
27. ராஜலக்ஷ்மி பரமசிவம்
எதைச்சொன்னாலும் அதை எல்லோரும் ரசிக்கும்படி சொல்வதில் வித்தகர். அன்பின் மறு உருவம். இவர் பதிவுகளே இதற்கு சாட்சி.
27. ராஜலக்ஷ்மி பரமசிவம்
எதைச்சொன்னாலும் அதை எல்லோரும் ரசிக்கும்படி சொல்வதில் வித்தகர். அன்பின் மறு உருவம். இவர் பதிவுகளே இதற்கு சாட்சி.
நாளை மீண்டும் சந்திப்போம் நண்பர்களே. அன்பு நன்றிகள்.
அறிமுக தளங்களுக்கு சென்று வருகிறேன்...
ReplyDeleteதமிழ்மணம் சப்மிட் பண்ணலை இன்னைக்கு மறந்துட்டேன். அதையும் இணைத்து எல்லோர் தளங்களிலும் சென்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதையும் சொல்லிவிட்டு வந்த உங்களுக்கு என் மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா.
Deleteமலர்ந்து மணம் வீசும்
ReplyDeleteமங்கையரின் பதிவுகளை
மணம் வீச அறிமுகப்படுத்தியது
மகிழ்ச்சியளித்தது ..
மணிராஜ் தளத்தையும் அறிமுகப்படுத்தி பெருமை சேர்த்ததற்கு இனிய நன்றிகள்..!
மலரும் ஒவ்வொரு நாள் காலைப்பொழுதும் தெய்வத் தரிசனத்துடன் ஆரம்பிக்கும் மணிராஜ் தளத்துக்கு அன்பு வாழ்த்துகளுடன் நன்றிகள்பா இராஜராஜேஸ்வரி.
Deleteஅடாடா... இதென்ன பெண்கள் மலரா? எங்களுக்கு 10% இடஒதுக்கீடு கூடத் தராம பண்ணிட்டீங்களே மன்ச்சூ! அவ்வ்வ்வ்வ! இவர்களில் பெரும்பாலான பதிவர்கள் என் நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் என்பதில் கூடுதல் மகிழ்வு!
ReplyDeleteகணேஷா கணேஷா நல்லா பாருங்க உங்க படம் தானே மேலே முதலில் பதிந்திருக்கிறேன் :) ஒரு பர்சண்ட் கூட தராத என்னை 10 பர்செண்ட் நு அதிகமா சொல்லிட்டீங்களேப்பா ;) மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா..
Deleteராஜலக்ஷ்மி பரமசிவம் - வித்தகி என்றில்லையோ வரணும்? வித்தகர் ஆக்கிட்டீங்க... டீச்சராச்சே, with the கன் வந்துடுவாங்களோன்னு பயந்துட்டீங்களோ மன்ச்சூ...? ஹி... ஹி.. ஹி...!
ReplyDeleteஜெண்டர்வைஸ் மிஸ்டேக்ஸ் ஹிந்தில மட்டுமா தமிழிலும் வரும் எனக்கு. அதற்கான எடுத்துக்காட்டு தான் இதுப்பா :) இனிமே திருத்திக்கிறேன் சரியா?
Deleteரசிக்கும் தளங்களின் அருமையான பகிர்வுகளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா. உங்கள் சேவை அற்புதமானதுப்பா.
Deleteஎன்னவென்று சொல்வேன் மஞ்சு!!!!
ReplyDeleteஅழகிய மலர்ச்சரத்தில் இந்த நாருக்கும் இடம் அளித்தமைக்கு நன்றீஸ்ப்பா.
அச்சச்சோ. தப்பு தப்பு. மஞ்சுவின் தத்தக்கா பித்தக்கா நாரில் அழகான அன்பான அற்புதமான மலர்களில் ஒன்றாக தூய்மையான துளசியையும் சேர்த்திருக்கேன்பா.. :)
Deleteஅன்பாய் தொடுத்த வலைச்சரத்தில் என் வலைப்பூவும் இடம் பெற்றது மகிழ்ச்சி மஞ்சு.
ReplyDeleteநன்றி.
த்கவல் தந்து வாழ்த்திய திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி
உங்களுக்கும், தகவல் தெரிவித்த தனபாலன் சாருக்கும் நிறைவான அன்பு நன்றிகள்பா..
Deleteஉங்கள் பரந்த வலைத்தள வாசிப்பின் ஆழத்தை
ReplyDeleteஇந்த அருமையான பெண்பதிவர்களை
ஒன்று சேர அருமையாக
அறிமுகப் படுத்தியதன் மூலமே
புரிந்து கொள்ளமுடிகிறது
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வலைப்பூவில் பிறர் படைப்புகளை வாசித்து கருத்தெழுத முனைந்ததே முதன் முதல் உங்கள் பதிவு படித்து எழுதிய கருத்து மூலமாக தான் ரமணி சார். இந்த நன்றியை நான் வாழ்நாள் முழுக்க மறக்கவே மாட்டேன். மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ரமணி சார்.
Deleteமஞ்சுபாஷிணி, தேடிப்பிடித்து அழகான பகிர்வுகளை அறிமுகம் செய்தமைக்கு பாராட்டுக்கள். என் பகிர்வையும் பார்க்கும் பொழுது மகிழ்ச்சி.நன்றி.உங்கள் மனம் கவர் பதிவர்களுக்காக அன்பின் பூ இரண்டாம் நாள் முன்னுரை மிக அருமை.
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா... இத்தனை நாள் வலைப்பூவுக்கு லீவ் விட்டு நிறைய பேரின் படைப்புகள் வாசிப்பதை இழந்துட்டேனோன்னு தோன்றதுப்பா எனக்கு. இந்த வலைச்சரம் மூலமாக மீண்டும் என்னை எல்லோரின் பதிவுகள் பார்க்க வைத்ததற்கு கோபு அண்ணாவுக்கும் சீனா அண்ணாவுக்கும் ரொம்பவே கடமைப்பட்டிருக்கேன். மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா..
Deleteஅன்புச் சரத்தில் என்னையும் சேர்த்தமைக்கு நன்றி. வலைச்சர ஆசிரியர் ஆனதுக்கு (2ஆம் முறை) வாழ்த்துகள்.
ReplyDeleteஆஹா புள்ள என்ன நுணுக்கமா கவனிச்சிருக்கு புத்திசாலிப்பிள்ளை. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா கீதா.. அவ்ளோ தூரம் வந்துட்டு உங்களை பார்க்காமல் வந்துட்டேன் மிஸ் பண்ணிட்டேன். அடுத்த முறை கண்டிப்பாக சந்திக்கவேண்டும்பா...
Deleteஇன்றைய வலைச்சரம் மங்கையர் மலரா! அனைவருக்கும் வாழ்த்து!
ReplyDeleteஆமாம் அப்பா... மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அப்பா.
Deleteஎழுத்துகளில்
ReplyDeleteசுவை, எழுச்சி, அன்பு, கருணை, காதல்
இலக்கியம் ..... இப்படி எத்தனை எத்தனை
உணர்வுகளை பிரதிபலிக்கும் படைப்புகளை
அள்ளியள்ளி வழங்கும் மாதர்குல மாணிக்கங்கள்
அறிமுகம்..
அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் மகேன்.
Deleteஅருமை அக்கா தயிர் சாதம் முதல் அறிமுகத்தில் இடம்பிடித்து விட்டதே அடடா ? மனதுக்கு மகிழ்வான அறிமுகங்கள். வாழ்த்துக்கள் அக்கா. தொடருங்கள் தொடர்கிறோம்.
ReplyDeleteஎனக்கு ரொம்பவும் பிடிச்ச தயிர் சாதம் :) மனம் நிறைந்த அன்பு நன்றிகள் சசி.
Deleteஇன்றைய அறிமுகங்களாக ஜொலிக்கும் 27 நக்ஷத்திரங்களாக 27 பெண் பதிவர்களை அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளது அழகாகவே உள்ளது.
ReplyDeleteஅதிலும் இதிலுள்ள 27 நக்ஷத்திரங்களில் சுமார் 20 நக்ஷத்திரங்கள் என் நக்ஷத்திரத்திற்கு FAVORABLE ஆக அமைந்துள்ளது மேலும் மகிழ்ச்சியளிக்கிறது.
[MORE THAN TWO THIRD என் தொடர்பு எல்லைக்குள் உள்ளவர்களே ! ]
அனைவருக்கும் என் பாராட்டுக்கள், வாழ்த்துகள். மஞ்சுவுக்கு என் மகிழ்ச்சிகள்.
எனக்கும் ரொம்ப சந்தோஷம் அண்ணா.
Deleteகுழந்தைப்பிள்ளையார், குட்டிக் குழந்தை ஸ்ரீகிருஷ்ணன், கடைசியில் காட்டியுள்ள நிஜமான சுட்டிக்குழந்தை மூன்றும் அழகான அருமையான படத்தேர்வுகள். ;)
ReplyDeleteஎனக்கு மிகவும் பிடித்த படங்கள் அண்ணா.
Deleteஆஹா.. ஆஹா.. நன்றி நன்றி நன்றி மஞ்சுக்கா! :) :) :)
ReplyDeleteஅனன்யா :)
Deleteபல பதிவுகளில் உங்க பின்னூட்டங்களை - கலகலன்னு நேரில பேசுறது போல சரளமா இருக்கும்- மிகவும் ரசிச்சுப் படிச்சு அப்படியே உங்களுக்கும் ரசிகையா ஆனவ நான். உங்க மனசுல நானும் இடம் பிடிச்சிருக்கேங்கிறது எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியைத் தரும் விஷயம். ரொம்ப ரொம்ப நன்றிப்பா.
ReplyDeleteநேரில் தான் உங்களை சந்திக்கமுடியாமல் போய்விட்டதுப்பா.. கண்டிப்பா அடுத்தமுறை சந்திப்போம். எனக்கும் உங்களை இங்கு சந்தித்ததில் ரொம்ப சந்தோஷம்பா..
Deleteமஞ்சு..மஞ்சு....முகநூலின் மூலம் இங்கு வந்து 2 நாளுக்கும் கருத்திட்டேன்.
ReplyDeleteநிச்சயம் அன்புப் பதிவர்கள் எனக்கு அறிவித்திருப்பார்கள்.
இன்னும் மெயில் பார்க்கவில்லை.
என்னை (தளத்தை) அறிமுப்படுத்தியதற்கு இனிய நன்றிகள்.
இறையாசி நிறையட்டும்.
வேதா. இலங்காதிலகம்.
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் வேதாம்மா.
Deleteசிறப்பான அறிமுகங்கள் !! அனைவருக்கும் வாழ்த்துக்கள் .அன்போடு
ReplyDeleteகூடி மகிழ்ந்த நல்லுணர்வைக் கருத்தில் கொண்டு இந்தத் தங்கையின்
பாடல் வரிகளுக்குள்ளும் உள்ள சுவையை உணர்ந்து பாராட்டி இங்கே
அறிமுக ஊர்வலத்தில் இணைத்துக் கொண்டமைக்கு என் மனமார்ந்த
நன்றி கலந்த வாழ்த்துக்கள் மஞ்சுபாஷினி அக்கா .தொடரட்டும் அசுர
வேகத்தில் அறிமுக ஊர்வலம் நற் புகழைச் சேர்க்கும் வண்ணம் .
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் தங்கையே.
Deleteஅப்பாடா! முதல் முறையாக அல்மோஸ்ட் எல்லாப் பதிவர்களும் எனக்குத் தெரிந்தவர்கள்!
ReplyDelete:) அப்ப நாளைக்கு இன்னும் ஈசியா இருக்கும்பா..
Deleteஅன்பு மஞ்சு என் பதிவையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக நன்றி மா. இவ்வளவு அழகாக எழுதுபவர்கள் நடுவில் என் பதிவு. பார்க்கவே நன்றாக இருக்கிறது. அவ்வளவு பதிவர்களும் முத்தானவர்கள். மஞ்சுவைச் சரத்தில் சேர்த்த சீனா அவர்களுக்கும் நன்றி. வளமே சரம் தொடுக்க வாழ்த்துகள்.
ReplyDeleteவல்லிம்மா உங்களைப்போலவே உங்கள் முத்தான பதிவுகளும் அமைதியான அழகும்மா. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் வல்லிம்மா.
Deleteஒரு சிலரைத்தவிர பிற தளங்களின் பதிவுகளை வாசித்திருக்கிறேன்! தொடரவும் செய்கிறேன்! புதிய தளங்களுக்குச் சென்று வருகிறேன்! நீங்களும் களத்தில் இறங்கீட்டீங்க போல! உற்சாகமாக தொடருங்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா..
Deleteஇன்றைக்கு உங்கள் பதிவில் பெண்கள் ராஜ்ஜியமாக தெரிகிறது. வாழ்த்துக்கள். சிலரை தெரியும். பலரை தெரியாது. அவர்களின் வலைப்பூவில் சென்று பார்க்கிறேன். அறிமுகப்படுக்தியமைக்கு நன்றி.
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா..
Deleteஇன்னைக்கு மகளிர் தினம் போல தெரியுதே மஞ்சு அக்கா.
ReplyDeleteஅன்னையர் தினம்பா :)
Deleteமங்கையர் உலகம் போல :)) அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteமங்கையர் உலகம் மங்காத உலகம் :) மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா..
Deleteஅமர்க்களமான அறிமுகங்கள்!
ReplyDeleteஓரிரு வரிகளில் ஒருநாள் வாழ்க்கையை விவரித்த நயம் பாராட்டுதற்குரியது. இங்கு சுட்டிக் காட்டப்பட்ட வலைத் தளங்களின் பதிவர்கள் அனைவரும் ந்ன்றாகவே எழுதுபவர்கள்தாம். நான் தமிழ்மணத்தில் இவர்களது படைப்புகளை காணும்போதெல்லாம் படித்து வருகின்றேன்.
ReplyDeleteமனம்நிறைந்த அன்பு நன்றிகள் ஐயா.
Deleteஅன்புள்ள மஞ்சு,
ReplyDeleteசென்றமுறை உங்களைத் தொடர்ந்து நான் வலைச்சர ஆசிரியை ஆக இருந்தது இனிய நினைவாக மனதில் நிறைந்து நிற்கிறது. இன்றைய வலைச்சரத்தை அலங்கரிக்கும் தோழிகள் எல்லோருமே தெரிந்தவர்கள் என்பது இன்னொரு சந்தோஷம்.
ஒவ்வொருவரும் ஒருவகையில் சிறப்பானவர்கள். அவர்களுடன் நானும் உங்களின் பட்டியலில் இருப்பது பெரிய சந்தோஷம். நன்றி மஞ்சு.
அடுத்தமுறை உங்களை நிச்சயம் சந்தித்தே ஆக வேண்டும்!
கண்டிப்பாக மேம். அடுத்தமுறை தவறாமல் சந்தித்துவிடுவோம்.
DeleteThank you very much!
ReplyDeleteஅன்பு வணக்கங்கள் மாதவி.
Deleteஇன்றைய சரத்தை, மங்கையர் (வலைச்)சரமாய் தொகுத்தளித்த விதம் அருமை. தினமும் இப்படி நிறைய பதிவர்களை அறிமுகப்படுத்துவீர்களா?
ReplyDeleteதினமும் எப்படி பண்ணுவேன்னு எனக்கு தெரியலப்பா... மனம் நிறைந்த அன்பு நன்றிகள் நிஜாமுத்தீன்.
Deleteஎதை முதலில் படிப்பது என்ற ஆர்வம் உண்டாகிறது. தெரிவு செய்யும் முறை அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஐயா.
Deleteஎன்னுடைய வலைத் தளத்தைப் பற்றி பாராட்டி சொன்னதில் மிக்க மகிழ்ச்சி மஞ்சு மேடம். நன்றிகள் பல.
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா..
Deleteஅத்தனை பேரும் அடுக்காய் சொன்ன வார்த்தைகளை நானும் கோர்த்து வைக்கிறேன் .. ரொம்பவே சந்தோஷம் மஞ்சு
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா புவன்.
Deleteகுறிப்பிட்ட அனைவரும் பண்பட்ட பதிவர்கள் நன்றி
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் முரளிதரன்.
Deleteஅருமையானவர்கள் அத்தனை பேரும். அறிமுகத்துக்கு நன்றி.
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா.
Deleteபின்னூட்ட நாயகி மஞ்சு பாஷிணி உங்கள் பதிவர்களின் அறிமுக சேவைக்கு பாராட்டுக்கள். என் தளத்தையும் அறியச் செய்த சேவைக்கு மிக்க நன்றி. புதிய வலையுலக படைப்பாளர்களையும் சந்திக்கின்றேன்
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா சந்திரகௌரி
Deleteஅறிமுகப்படுத்தப்பட்ட அனைவரும் அறிந்த அருமையான பதிவர்களே... வாழ்த்துக்கள்....
ReplyDeleteஆசிரியப் பதவிக்கும் இனிய பணி தொடரவும் என் வாழ்த்துக்கள்....!
ReplyDeleteஅறிமுகமான அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!
எனக்குத் தெரிந்தவர்கள் ஒரு சிலர் ..தெரியாதவர் பலர் .. அவர்களை இனி தொடர்கிறேன். அறிமுகப் படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteபோனமுறை வலைச்சரத்தில் என் பதிவு ’பேபிஅக்காவும் புராட்டாசி மாதமும் ’அறிமுக படுத்தினீர்கள். எனக்கும் நீண்ட பின்னோட்டம் கொடுத்து உற்சாக படுத்தியதை மறக்க முடியாது மஞ்சு நன்றிகள் பல.
ReplyDeleteமஞ்சு இது பெண்கள் மலரா மாற்றியதற்கு வன்மையா(அன்பா) கண்டிக்கிறேன்
ReplyDeleteமிக்க நன்றி மஞ்சு, தனபால் சகோ, வலைச்சரம் & சீனா சார்.
ReplyDeleteபாராட்டிய நட்புக்களுக்கும் நன்றி :)
என்னுடைய வலைப்பூவையும் அன்பின் சரத்திலொரு மலரெனத் தொடுத்தமைக்கு அன்பான நன்றிகள் மஞ்சு. நேரமின்மை காரணமாக உடனே வர இயலவில்லை. மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன் மஞ்சு.
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்....
ReplyDeleteத.ம. +1
அன்பின் மஞ்சு அவர்களுக்கு,
ReplyDeleteஅருமையான பதிவுகள், பின்னூட்டங்கள், அறிந்து கொண்ட மகிழ்வும் நிறைவும் என்னோடு இன்று.
ஜெயஸ்ரீ ஷங்கர் http://paavaivilakku.blogspot.in