Thursday, February 13, 2014

அன்பின் பூ - நான்காம் நாள்

அன்பு வணக்கங்கள் எல்லோருக்கும்
வயதானவர்களுக்கு வாய்க்கு ருசியாய் சாப்பிடவேண்டும் என்ற ஆசை இருக்கும். வயதிருந்த காலத்தில் தன் குடும்பத்துக்காக உழைத்து தன் உண்டியை சுருக்கி பிள்ளைகள் கல்விக்காக அவர்கள் சந்தோஷத்துக்காக தன் சந்தோஷங்களைக்கூட புறம் தள்ளி வைத்துவிட்டு வயதானப்பின் இனி என்ன அக்கடான்னு இருக்கவேண்டியது தான். வேண்டியது எல்லாம் தானாக வரும் நம் இடத்துக்கு. இப்படித்தான் ஒவ்வொரு வயதானப்பெற்றோரும் நினைத்திருப்பார்கள். 

அவர்கள் ஆசைப்பட்டு கேட்கும் உணவை எண்ணை, காரம், உப்பு சர்க்கரை மிதமாய் குறைத்து சமைத்து உண்ணக்கொடுத்துப்பாருங்கள். அவர்கள் முகத்திலும் கண்ணிலும் தெரியும் மின்னலை.. உங்கள் மனம் நிறைந்துவிடும்…

அதேப்போல் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கொஞ்ச நேரம் உட்கார்ந்துப்பேச டைம் ஒதுக்கி இருப்போமா? ஓயாத வேலை தான்,  ஆனாலும் ஒரு நாளைக்கு அரைமணி நேரம் ஒதுக்கி வயதானவர்களிடம் உட்கார்ந்து அவர்களை பேசச்சொல்லி கேட்டுப்பாருங்களேன். அவர்களின் அனுபவ வாசல் திறந்து பொக்கிஷங்கள் அறிவுரைகளாக கிடைக்கும் நமக்கு.

இதனால் கண்டிப்பாக பயன் பெறப்போவதென்னவோ நாம் தான். அவர்களுக்கு? நம் பேச்சை இவ்ளோ நேரம் நம் பிள்ளை உட்கார்ந்து கேட்டானே என்ற ஆத்மத்திருப்தி. என் மனைவி, என் பிள்ளை, என் குடும்பம் அப்படின்னு மட்டும் இருக்காம வயசான அம்மா அப்பாவையும் அரவணைச்சுக்கிட்டு சந்தோஷமா வெச்சுக்கிட்டா முதியோர் இல்லம் எல்லாம் காணாமப்போய் காக்கா ஊச் ஆகிடும். அதுமட்டுமா?
வயதானவர்களை காலாற கோவில், பீச், பூங்கா இப்படி கூட்டிச்சென்றால் அங்கு விளையாடும் குழந்தைகளை பார்த்துக்கொண்டும் , தூய்மையான காற்றை சுவாசித்துக்கொண்டும் வீட்டுக்கு திரும்பி வரும்போது மன நிறைவோடு வருவார்கள். ராத்திரி படுத்ததும் உறக்கமும் வந்துவிடும் சீக்கிரமாக.

வீட்டில் இருக்கும் வயதானவர்களின் கனிவான அனுசரணையான பேச்சு, நாம் பிள்ளைகளை கண்டிக்கும்போதெல்லாம் வயதில் மூத்தவர்களாகிய அவர்கள் என்னம்மா இது சின்னப்பிள்ளை தானே இதுக்கெல்லாம் அடிப்பாளா? குழந்தைக்கிட்ட அன்பாச்சொன்னா கேட்டுப்பான். என்னடா கண்ணா அப்டி தானே அப்டின்னு குழந்தையிடம் கேட்டால், அட நமக்கு தாத்தா பாட்டி சப்போர்ட் பண்றாளேன்னு குழந்தைகள் குஷி ஆகிடும். நிறைய கதைகள் சொல்லச்சொல்லி கேட்கும்.

பண்போடு வளரும், நல்லவைகள் புரியும். இப்படி வளரும் குழந்தைகள் நாளை நமக்கு வயசாகும்போது நம் பிள்ளைகள் நம்மை பாரமா நினைச்சு முதியோர் இல்லத்தில் கொண்டு விடாம நம்மை மதித்து நம்மை வீட்டில் இருத்தி நம் கால்கள் கிட்ட உட்கார்ந்து நம் மடியில் தலையை சாய்த்துக்கொண்டு பேசுவார்கள் நம் பிள்ளைகள்.


ஏன்னா நம்மைப்பார்த்து வளர்கிறார்கள் குழந்தைகள். நம் ஒவ்வொரு செயலும் குழந்தைக்கு பாடமாகிறது. நம்மில் இருந்து வெளிபடும் ஒவ்வொரு சொல்லும் குழந்தை கூர்ந்து கவனிக்கிறது. அதனால….. நல்லதே பேசுவோம்… நல்லதே செய்வோம்… பிள்ளைகளிடம் அன்பாய் இருப்போம்… பெரியவர்களுக்கு மரியாதைத் தந்து அவர்கள் சொல்பேச்சைக்கேட்டு நடப்போம். முன் ஏர் செல்லும் வழி பின் ஏர். நம் வழி நம் பிள்ளைகள் நடக்கும்.. நல்ல சந்ததி வளரும்…நாட்டுக்கும் நலன் சேர்க்கும்…

இன்று மனம் கவர் பதிவர்கள் சிலரை பார்ப்போமா?

வித்தியாசமான சிந்தனைகளின் தொகுப்பு நிறைந்த வலைப்பூ.

திடம் கொண்டு போராடச்சொல்லி  தொலைந்துப்போன நாட்களை மீட்டெடுக்கும் முயற்சியாக இவரின் இந்த எழுத்து நிறைந்த வலைப்பூ.

தேன்மிட்டாய் போல் தித்திக்கும் நிகழ்வுகளை சொல்கிறார் மினிமெல்ட் ஐஸ்க்ரீம் என்னை கவர்ந்த பதிவு.

வாழ்த்துவதில் எப்போதும் முன் நிற்கும் இவரைப்போலவே இவர் பதிவுகளும் ரசனையான கவிதைகள் நிறைந்த வலைப்பூ.

தான் உணர்ந்ததை பதிவுகளாக எழுதி வரும் வலைப்பூவுக்கு சொந்தக்காரர்.

அழகிய தமிழில் பாடல் வரிகளான கவிதைகள் நிறைந்த வலைப்பூ.

பல கவிஞர்களின் அற்புதமான கவிதைகளும் தானே எழுதிய கவிதைகளும் நிறைந்த  வலைப்பூ.

சமீபத்தில் ஆவிப்பா என்ற புத்தகம் வெளியிட்டவர். ரசனையான பதிவுகள் நிறைந்த வலைப்பூ.

எளிய வரிகளில் கிராமிய மணம் வீசும் பதிவுகள் நிறைந்த வலைப்பூ.

அனுபவங்கள் பகிரும் பதிவுகள் நிறைந்த வலைப்பூ.

நகைச்சுவையாடு கருத்தை அழகாகச்சொல்லி செல்லும் பதிவுகள் நிறைந்த வலைப்பூ.

நம் மொழி மட்டுமல்லாது பிற மொழி படங்கள் விமர்சன பதிவுகள் நிறைந்த வலைப்பூ.

தனக்கு ஏற்படும் அனுபவங்களையே நகைச்சுவையாய் பகிரும் பதிவுகள் நிறைந்த வலைப்பூ.

ஜனரஞ்சக பதிவுகளால் நிறைந்த வலைப்பூ.

கோகுல் மனதில் தோன்றியதெல்லாம் பகிரும் பதிவுகள் நிறைந்த வலைப்பூ.

மௌனத்தில் கூட சப்தங்களை உண்டாக்கும் கவிதைகள் நிறைந்த வலைப்பூ.

மனதுக்கு சரி என்று பட்டதை தைரியமாக எழுத்தில் கொண்டு வரும் பதிவுகள் நிறைந்த வலைப்பூ.

வந்தாரை வாழவைக்கும் எங்கள் சென்னை என்ற வரிகளோடு இவர் சினிமாவை அலசி எழுதப்படும் அருமையான விமர்சனம் எழுதும் பதிவுகள் நிறைந்த வலைப்பூ.

அகடவிகடமாக சிரிக்கவும் சிந்திக்கவும் ரசிக்கவும் நெகிழவும் வைக்கும் பதிவுகள் நிறைந்த வலைப்பூ.

உண்மையானவன் என்றுச்சொல்லி அனுபவங்களும் நிகழ்வுகளையும் தொகுத்து பகிர்வாய் பதிந்த பதிவுகள் நிறைந்த வலைப்பூ.

பயனுள்ள பல அனுபவங்கள், நிகழ்வுகள் பகிர்ந்த பதிவுகள் நிறைந்த வலைப்பூ.

அழகிய கவிதைகள் நிறைந்த வலைப்பூ.

துறுதுறு கவிதைகளால் ரசனை பதிவுகள் நிறைந்த வலைப்பூ.

இவர் வலைப்பூவில் அம்மா சொன்ன கதைப்படித்தேன். மிக அருமை.

உணர்வுகளைக்கலந்து எழுதிய கவிதை தொகுப்பு நிறைந்த வலைப்பூ.

விருந்துண்ண வாங்க என்று அன்போடு அழைத்து அசத்தலான படங்களுடன் விருந்து பதிவுகள் நிறைந்த வலைப்பூ.

சைவ பதார்த்தங்கள் சமைத்த பதிவுகள் நிறைந்த வலைப்பூ.

மீண்டும் நாளை சந்திப்போம்


55 comments:

  1. வள வளனு சுய புராணமும் அறிவுரையும் பேசுறப்ப பொறுமையா இருந்தா நமக்கு நல்லதுனு சொல்றீங்க..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்பா கண்டிப்பா அவர்களின் அனுபவம் நமக்கு பாடமாகலாம். அவர்களின் பேச்சை கேட்கிறோம் என்ற ஆத்ம திருப்தி அவர்களுக்கு உண்டாகலாம்.

      Delete
  2. வயதானவர்களுக்கு உணவு மட்டுமில்ல... அவர்கள் அதிகம் ஏங்குவதே பேச்சுத் துணைக்குத்தான். அவர்களை மதித்து பேச்சுக் கொடுத்தால் முகத்தில் தென்படும் அந்த சந்தோஷம் இருக்கிறதே...! சொல்ல வார்த்தைகள் சிக்காது மன்ச்சூ! அதை ரொம்ப அழகாச் சொல்லியிருக்கீங்க. இனியா போன்ற சில தளங்கள் நான் இதுவரை பார்க்காதது. பாத்திடுறேன்!

    ReplyDelete
    Replies
    1. உண்மை கணேஷா. நாம் கற்க நிறைய இருக்கு அவர்களிடம்.

      Delete
  3. அறிமுகங்களுக்கு சென்று வருகிறேன்...

    நேரம் கிடைப்பின்... அதுவரையில் :-

    தங்களின் கருத்துரைக்காக :
    "எந்தெந்த உயிருக்கு எத்தெத்தனை சதவீதம் அன்பு செலுத்தணும்ன்னு ஒரு பட்டியலிருந்தால் ரொம்பச் சந்தோசம் !"

    எதற்கும் எனக்கு புரிவதற்கு இந்தப் பதிவுலே "உயிர்" என்றிருக்கும் இடத்திலெல்லாம் கடவுள் என்று மாற்றி வாசிக்கிறேன்...!

    http://dindiguldhanabalan.blogspot.com/2014/02/Love-Yourself.html

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பகிர்வை சென்றுப் பார்த்தேன். அன்பை எல்லோரிடமும் சமமாய் பகிரும் அருமையான பகிர்வு. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா.

      Delete
  4. சகோதரி மஞ்சு அவர்களுக்கு வணக்கம்!
    வயதானவர்கள் ஏங்கிக் கொண்டு இருப்பார்கள் தங்களை யாரும் கண்டுக்கிறதே இல்லை என்று நிச்சயமாக அவர்களோடு ஓரிரு வார்த்தைகள் அன்பாக பேசினாலும் போதும் சந்தோசப் படுவார்கள் நோய்களும் உண்மையில் குறைந்து விடும். எவ்வளவு புரிந்துணர்வோடு கூறியிருக்கிறீர்கள். அதற்கு தலை வணங்குகிறேன் தோழி.

    அத்துடன் அடியேனையும் அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...!
    வாழ்க வளமுடன் ...!
    அனைத்து வலைதள உறவினர்க்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
    Replies
    1. அவ்வளவே தான்பா.... இப்படி ஒவ்வொருவரும் சிந்திக்க செயல்பட ஆரம்பிச்சுட்டால் வீட்டில் வயதானவர்களுக்கு தான் இவர்களுக்கு பாரமாக இருக்கிறோம் என்ற நினைப்பு ஏற்படாது கண்டிப்பாக. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்.

      Delete
  5. 'நமக்கும் ஓர் நாள் இந்நிலை' என்று நினைத்தால் அனைத்தையும் சுபம்-சுகம்... சுருக்கமாக சொன்னாலும் நாட்டுக்கு நலன் சேர்க்கும் கருத்துக்கள்… பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    "நந்தலாலா இணைய இதழ்" தளம் புதிது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா.

      Delete
  6. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் உங்களுக்கும் என் மனமார்ந்த
    வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் தங்கை.

      Delete
  7. முன் ஏர் செல்லும் வழி பின் ஏர். நம் வழி நம் பிள்ளைகள் நடக்கும்.. நல்ல சந்ததி வளரும்…நாட்டுக்கும் நலன் சேர்க்கும்…

    நலன் சேர்க்கும் இனிய கருத்துகளுடனும் .
    அருமையான பதிவர்கள் அறிமுகத்துடனும்
    இணைந்த இன்றைய வலைச்சரத்திற்கு வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா இராஜராஜேஸ்வரி.

      Delete
  8. மக்களில் ஒருவராய் மனதில் நிறைவாய் என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி மஞ்சு(லு)

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் கண்ணதாசன்.

      Delete
  9. முன் ஏர் செல்லும் வழி பின் ஏர். நம் வழி நம் பிள்ளைகள் நடக்கும்.. நல்ல சந்ததி வளரும்…நாட்டுக்கும் நலன் சேர்க்கும்…//
    உண்மை நன்றாக சொன்னீர்கள் மஞ்சு.
    இன்றைய வலைத்தளபதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    பணியை சிறப்பாக செய்வதற்கு உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் மேம்.

      Delete
  10. vவாழ்த்துக்கள் மஞ்சு.அறிமுகங்கள் அருமை

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா ஸாதிகா.

      Delete

  11. வேலைப்பளுவால்
    வாடிக்கொண்டிருந்த
    வலைப் பூவிற்கு
    அன்பின்
    நீர் ஊற்றி
    உயிர் ஊட்டிய தோழமைக்கு மிக்க நன்றி

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் செய்தாலி.

      Delete
  12. //ஏன்னா நம்மைப்பார்த்து வளர்கிறார்கள் குழந்தைகள். நம் ஒவ்வொரு செயலும் குழந்தைக்கு பாடமாகிறது. நம்மில் இருந்து வெளிபடும் ஒவ்வொரு சொல்லும் குழந்தை கூர்ந்து கவனிக்கிறது. அதனால….. நல்லதே பேசுவோம்… நல்லதே செய்வோம்… பிள்ளைகளிடம் அன்பாய் இருப்போம்… பெரியவர்களுக்கு மரியாதைத் தந்து அவர்கள் சொல்பேச்சைக்கேட்டு நடப்போம். முன் ஏர் செல்லும் வழி பின் ஏர். நம் வழி நம் பிள்ளைகள் நடக்கும்.. நல்ல சந்ததி வளரும்…நாட்டுக்கும் நலன் சேர்க்கும்…//

    ஆஹா, இன்றைய அறிமுகங்களைவிட தாங்கள் சொல்லியுள்ள முன்னுரை வரிகளில், நான் அப்படியே சொக்கிப்போய்விட்டேன்.

    வழக்கம்போல பிள்ளையார், ஸ்ரீகிருஷ்ணன் + அந்தப்பாப்பா அருமை.

    பாராட்டுக்கள் + வாழ்த்துகள் ..... மஞ்சு.

    அன்புடன் கோபு அண்ணா

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா.

      Delete
  13. வணக்கம்

    அருமையான கருத்தாடலுடன் இன்று அறிமுகம் செய்த வலைப்பூக்கள் அத்தனையும் மிக அருமையானவை. நான் செல்லும் தளங்கள் தான்... இன்று என்னுடைய வலைப்பூவையும் அறிமுகம் செய்துவைத்தமைக்கு மிக்க நன்றி.....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா ரூபன்

      Delete
  14. மஞ்சு பாஷிணி மிக அருமையான பதிவு... என்னோட விருந்து உண்ண வாங்க அறிமுக படுத்தியமைக்கு மிக்க நன்றி... இனிய கருத்து பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள்!!! எனக்கு இப்பதிவை காண செய்த திண்டுக்கல் தன பாலன் சார்க்கு நன்றிகள்... :)

    ReplyDelete
    Replies
    1. தகவல் தெரிவித்த தனபால் சாருக்கு அன்பு நன்றிகள்.

      மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா விஜி

      Delete
  15. அறிமுகம் எல்லாமே நம்ம பிள்ளைங்கதான்...யாவருக்கும் வாழ்த்துக்கள்...

    என்னை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி"ப்பா...

    தகவல் தந்த திண்டுக்கல் ஜாம்பவானுக்கு நன்றி....

    ReplyDelete
    Replies
    1. தகவல் தெரிவித்த தனபால் சாருக்கு அன்பு நன்றிகள்.

      மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா மனோ

      Delete
  16. அருமையான தளங்கள்! ஒன்றிரண்டு தளங்களுக்கு சென்றதில்லை! சென்று பார்க்கிறேன்! குழந்தை வளர்ப்பு அறிவுரைகள் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா சுரேஷ்.

      Delete
  17. நல்ல பயனுள்ள கருத்துக்களுடன் பதிவர்கள் அறிமுகம் சிறப்பு.தொடரட்டும் பணி!

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் சகோ.

      Delete
  18. முதுமை இரண்டாம் குழந்தை பருவம் என்பதை பலரும் உணரும்படியாக செய்திருக்கிறது தங்கள் பதிவு.
    பெரிய பெரிய ஆளுங்களோட என் பேரையும் சேர்த்து
    அதுவும் முன்னும்,பின்னும் என் சகோக்களோடு அறிமுகம் செய்திருக்கிறீர்கள். மிக்க நன்றி. ஆனால் இனிதான் ரொம்ப பொறுப்ப இருக்கணும் இல்ல? இது எனக்கு நீங்கள் தந்திருக்கும் ஊக்கமாக கருதுகிறேன் சகோ! மீண்டும் என் நன்றிகள்!

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாகப்பா...

      மனம் நிறைந்த அன்பு நன்றிகள் மைதிலி.

      Delete
  19. மஞ்சுபாஷிணி! இன்று தான் பல நாட்களுக்குப்பிறகு வலைச்சரத்தைப்பார்க்க முடிந்தது! முதலில் வலைச்சர ஆசிரியர் பதவி பெற்றதற்கு இனிய வாழ்த்துக்கள்! தலையங்கங்கள் அனைத்தும் அழகாக, அருமையாக எழுதி வருகிறீர்கள்! என் வலைப்பக்கத்தையும் இரன்டு நாட்களுக்கு முன்னர் அறிமுகம் செய்திருக்கிறீர்கள்! இனிய நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் மனோம்மா.

      Delete
  20. பெரியவர்கள் குழந்தைகள் விஷயங்களில் கவனிக்க வேண்டியவற்றை நன்றாகச் சொன்னீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஐயா.

      Delete
  21. இன்றைய மனம் கவர் பதிவர்களின் பதிவுகளை தங்களின் மூலமாகக் காணும் வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு நாளும் வித்தியாசமான வலைப்பூக்களைத் தேடிக் கண்டுபிடித்து பகிர்ந்துகொள்ளும் தங்களின் முயற்சி பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஐயா.

      Delete
  22. பெற்றோரை நாம் அவசியம் மதிக்க வேண்டும் என்பதை அழுத்தமாய் உணர்த்திணீர்கள். நன்று!

    எனது "நிஜாம் பக்கம்" வலைப்பூவையும் அழகாய் பரிந்துரைத்தீர்கள். மகிழ்ச்சியும் நன்றியும்.

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா நிஜாமுத்தீன்.

      Delete
  23. என் தளத்தில் வந்து உடன் தகவல் அளித்து சிறப்பாய் உதவிட்ட திண்டுக்கல் தனபாலன் சாருக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தனபால் சாருக்கு என் நன்றிகளும்.

      Delete
  24. நாளை 2999-ஆவது பதிவு!
    மறுநாள் 3000-ஆவது பதிவு!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அடடே அப்படியா...மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா.

      Delete
  25. கடந்த வாரம் ஜோக்காளியை சகோ தளிர் சுரேஷ் அறிமுகம் செய்தார் ,இந்த வாரம் நீங்களும் அறிமுகம் செய்து மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விட்டீர்கள் !நன்றி ...உங்களுக்கும் ...தகவல் தந்த வலையுலக விரல் வித்தகர் சகோ திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் !
    த ம +1

    ReplyDelete
  26. இப்படி எல்லோரும் வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் அன்பு செலுத்துவோமானால், முதியோர் இல்லங்களே இல்லாமல் போய்விடும்.
    அருமையான சிந்தனை.

    வலைப்பூ உலகில் கொடிக்கட்டிப் பறக்கும் பிரபலமான பதிவர்களோடு என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.

    இந்த மகிழ்ச்சியான தகவலை சொன்ன தலைவர் திண்டுக்கல் தனபாலனுக்கும் நன்றி.

    ReplyDelete
  27. பெரியவர்களுக்கு நாம் எதுவும் செய்யக்கூட வேண்டாம் அன்பாய் நாலு வார்த்தை பேசினாலே போதும் என்பதை அழகாக சொன்னீர்கள்.

    ReplyDelete
  28. தொகுப்பு மிக அருமை மஞ்சு அக்கா. தொடர்பில் இருந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. மீண்டும் இங்கு சந்திக்க வைத்த திண்டுக்கல் தணபாலன் சாருக்கும் சிந்திக்க வைத்த உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். என் தளத்தை அறிமுகப் படுத்தியமைக்கும் அன்பு நன்றிகள் அக்கா.

    ReplyDelete
  29. என் தளம் பற்றி குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி சகோதரி.

    'எக்ஸ்ப்ரஸ் குரியர்' திண்டுக்கல் தனா அவர்களே. செய்தி சொன்னதற்கு உங்களுக்கும் நன்றி. உங்களுக்கு ஒரு பாராட்டு விழா வச்சாலும் தப்பில்ல தலைவா.

    ReplyDelete
  30. என் தளம் பற்றி இங்கு குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி மேடம்.
    நான் இங்கு குறிப்பிட்டுள்ள சில தளங்களுக்கு சென்றிருக்கேன். சிலவை எனக்கு புதியதாக அறிமுகப்படுத்தியதற்க்கு மிக்க நன்றி.. நான் அவசியம் எல்லா தளத்திற்க்கும் செல்கிறேன். உங்க தளம் மிக அருமை. ஒரு சில காரணங்களால் நான் அடிக்கடி வரவில்லை மிக விரைவில் வருகிறேன். எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்னுகிறேன். கூடிய சிக்கிரம் மிண்டும் தொடருகிறேன். நன்றி உங்க அருமையான எழுத்துகள் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.

    ReplyDelete
  31. இன்றைக்கு அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete