நாளை முதல் எஸ்.சுரேஷ் ஆசிரியப் பொறுப்பேற்கிறார்.
இவர் தளிர் என்னும் தளத்தில் எழுதி வருகிறார்.
இவரது பெயர்: சா. சுரேஷ்பாபு.
ஊர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள நத்தம் கிராமம்.
தொழில் : கோயில் குருக்கள், டியுசன் ஆசிரியன்,
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தளிர் என்னும் வலைப்பூவில் பல்சுவை பகுதிகளை எழுதி வருகிறார். இவரை முதன் முதலில் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியவர் என் ராஜபாட்டை மேலையூர் ராஜா அவர்கள். அதற்குப்பின் ஏறக்குறைய ஒன்றரை வருடங்கள் கழித்து சிவஹரி மூலம் மீண்டும் அறிமுகம் ஆனார். எல்லோருக்கும் பிடித்த காப்பி பேஸ்ட் நோய் இவருக்கும் பிடித்து தற்போது அதிலிருந்து மீண்டு நல்ல பதிவுகளை கொடுக்க முயற்சித்து வருகிறார். படித்தது இளங்கலை வணிகவியல். சுமார் பத்து வருடங்கள் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு டியுசன் எடுத்து பள்ளியில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து முதல் மாணவராக வரச்செய்துள்ளார். இவரது மாணவர்கள் இப்போது நல்ல பணியில் உள்ளார்கள் என்பது மகிழ்ச்சி. பல்சுவை எழுதினாலும் ஹைக்கூ கவிதைகளும், குட்டிக்கதைகளும் இவருக்கு பிடித்தமானவை.
சா.சுரேஷ் பாபுவினை வருக வருக என வரவேற்று வாழ்த்தி ஆசிரியப் பொறுப்பில் அமர்த்துவதில் பெருமை அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் சா.சுரேஷ் பாபு
நட்புடன் சீனா
சோதனை மறுமொழி
ReplyDeleteவருக! சுரேஷ் ! வலைசர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteவருக! வருக !
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பணி ஏற்க வரும்
திரு.சா.சுரேஷ் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்!..
சுரேஷ்,
ReplyDeleteநல்வாழ்த்துக்கள்!
நல்வாழ்த்துக்கள் சுரேஷ் அண்ணா
ReplyDeleteநல் வாழ்த்துக்கள் சுரேஷ் சார்
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பணி கொடுத்திட்ட ஐயாவிற்கும் வாழ்த்திய நல் உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்! இதோ ஆரம்பமாகிறது என் பணி!
ReplyDeleteநண்பர் சுரேசுக்கு வாழ்த்துக்கள். நல்ல மொழிநடை உள்ளவர்.. மிகச்சிறப்பாக செய்வார். மேலும் எனக்கு பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்திய
ReplyDeleteநா.முத்துநிலவன்,
இ.பு.ஞானப்பிரகாசன்,
கலையன்பன்,
sathya nammalwar
ஆகியோருக்கு நன்றி..
வருக வருக இனிய நண்பரே... அசத்த வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேகங்கள் திரும்பி வந்தால் மழையெனக் கொள்வதுண்டு. மனிதர்கள் திருந்தி வந்தால் பிழையெனக் கொள்ளலாமா? ( எம்ஜிஆர் படப்பாடல் வரிகள்) இந்த வாரம் வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பை ஏற்க வரும், தளிர் சா.சுரேஷ் பாபு அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநல்வாழ்த்துகள் சுரேஷ்....
ReplyDeleteவாரம் முழுவதும் சிறப்பாய் பணி செய்ய வாழ்த்துகள்.