வணக்கம் வலைநண்பர்களே,
இன்றுடன் முடிகிற வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்றிருந்த சகோதரி மஞ்சு பாஷிணி அவர்கள் தமது ஆசிரியர் பணியை மிகுந்த ஆர்வமுடனும், ஈடுபாட்டுடனும், அனைவருக்கும் பிடித்தமான முறையில் நிறைவேற்றி நம்மிடமிருந்து மனநிறைவுடன் விடைபெறுகிறார்.
அவர் எழுதிய பதிவுகள் ஒவ்வொன்றிலும் பெருவாரியான பதிவர்களையும், பதிவுகளையும் அறிமுகம் செய்துள்ளார். இவரது பதிவால் நிறைய பதிவர்கள் தொடர்ந்து எழுத ஊக்கம் கிடைத்திருக்கும் என நினைக்கின்றேன். இவரது பதிவுகள் மொத்தம் 2200 பக்கப் பார்வைகளை பெற்றுள்ளது.
சகோதரி மஞ்சு பாஷிணி அவர்களை வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சி அடைகிறது.
நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க "காணாமல் போன கனவுகள்" வலைப்பூவை எழுதி வரும் சகோதரி ராஜி அவர்களை அழைக்கிறேன். இல்லத்தரசியாக பட்டுக்கு சொந்தமான ஆரணியில் வசித்து வரும் இவர் தனது வலைப்பூவில் அரசியல், சினிமா தவிர பல்சுவை விசயங்களை சுவாரஸ்யமாக எழுதி வருகிறார்.
நாளை முதல் பதிவுகளை அறிமுகம் செய்ய இருக்கும் சகோதரி ராஜி அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சி அடைகிறது.
நல்வாழ்த்துக்கள் மஞ்சுபாசினி...
நல்வாழ்த்துக்கள் ராஜி...
நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்.
சோதனை மறுமொழி...
ReplyDeleteவாழ்த்துகள் ராஜி
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி ஜோதிஜி
Deleteஎன்னை சிக்க வச்சுட்டீங்களா!?
ReplyDeleteஅட...! சகோதரி ராஜி... வாங்க... அசத்துங்க...!
ReplyDeleteமுயற்சி செய்யுறேன் அண்ணா!
Deleteவாழ்த்துக்கள் மஞ்சு பாஷினி அக்கா கடமையை திறன்பட செய்தமைக்கு .
ReplyDeleteவாழ்த்துக்கள் அன்புத் தங்கையே இவ்வாரம் முழுவதும் ஒளிமயமாகட்டும்
தங்கள் வரவினால் .
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் தங்கையே.
Deleteகையில டார்ச்சோட வரேன் ரூபிகா அக்கா, வாழ்த்துகளுக்கு நன்றி மஞ்சு!
Deleteவருக.... வருக... அன்புத் தங்கையே! நல்லறிமுகங்ளைத் தருக! ஆரவாரமாய்க் கழியவிருக்கும் வலைச்சர வாரத்திற்கு இப்போதே என் நல்வாழ்த்துகளை அளிக்கிறேன்!
ReplyDeleteஉங்க நம்பிக்கையை காப்பாத்த முயற்சி பண்ணுறேன் அண்ணா!
Deleteஅந்தக்காவுக்கு ரெம்ப டேன்ங்க்ஸ்...! இந்தக்காவுக்கு கங்குச்சிக்கா...!
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா.
Deleteசகோதரி மஞ்சுபாஷினிக்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteசகோதரி ராஜிக்கு வாழ்த்துக்கள்.
மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா நிஜாமுத்தீன்
Deleteவலையுலகில் தனக்கென ஒரு முத்திரை பதித்து வரும் சகோதரி ராஜி அவர்களை வருக! வருக! என வரவேற்கிறேன்! இந்தவாரம் வலைச்சரம் ஆசிரியை பணி சிறக்கவும் நிறக்கவும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteதிறம்பட தனது வலைச்சரம் பணியினை செய்திட்ட சகோதரி மஞ்சுபாஷிணி அவர்களுக்கு நன்றி!
கலக்கிக் சென்ற மஞ்சு அக்காவுக்கும் கலக்க வரும் ராஜி அக்காவுக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteவணக்கம் மஞ்சு !
ReplyDeleteஆசிரியப் பணியை செவ்வனே செய்து முடித்தமைக்கு பாராட்டுக்கள்...!
பதவி ஏற்கும் தோழி ராஜியை வருக வருக என வரவேற்கிறேன். பணி சிறக்கவும் வாழ்த்துகிறேன்....!.
சகோதரி மஞ்சுபாஷினிக்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteசகோதரி ராஜிக்கு வாழ்த்துக்கள்.
வணக்கம்
ReplyDeleteசகோதரி மஞ்சு சுபாஷினிக்கு பாராட்டுக்கள் புதிதாக வரும் வலைச்சர பொறுப்பாசிரியை... ராஜி அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்.... இந்த வாரம் சிறப்பாக அமையட்டும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்வாழ்த்துக்கள் மஞ்சுபாஷினி...பாராட்டுக்கள்..
ReplyDeleteநல்வாழ்த்துக்கள் ராஜி... !
வாழ்த்துகள் அக்கா!!
ReplyDeleteமஞ்சு அக்காவைப்போல நீங்களும் அசத்தனும் நாத்தனாரே...வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎங்கே இன்னும் நாத்தனாரின் அறிமுகப்பதிவை காணவில்லை..? அல்லது எனக்கு தெரியவில்லைலயா ?
ReplyDeleteநல்வாரச்சரம் படைத்துக் கொடுத்த அன்பு மஞ்சு மனம் நிறைந்த வாழ்த்துகள் அம்மா.
ReplyDeleteவரணும் ராஜி. கலகலப்பாக வரும் பதிவுகளை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள் அம்மா.
ReplyDeleteவாழ்த்துக்கள் ராஜி அக்காள்.பணி சிறப்புடன் அமையட்டும்
ReplyDeleteஒரு கலக்கலான,கலகலப்பான வாரத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன் அக்கா! அன்பு வாழ்த்துகள்
ReplyDeleteவிடைபெறும் ஆசிரியையுக்கு பாராட்டுக்கள்! பொறுப்பேற்கும் ஆசிரியை அக்காவிற்கு வாழ்த்துக்கள்! கனவுகள் மெய்ப்படட்டும்! நன்றி!
ReplyDeleteசென்ற வார ஆசிரியர் மஞ்சுபாஷிணி அவர்களுக்குப் பாராட்டுகள்.....
ReplyDeleteஇந்த வார ஆசிரியர் ராஜி அவர்களுக்கு வாழ்த்துகள்.