Tuesday, February 4, 2014

தளிரின் இறைவணக்கம்!

தளிரின் இறைவணக்கம்!


எதைத்தொடங்கும் முன்னும் இறைவனை வணங்கித்
தொடங்குவது தொல் தமிழர் நம்பிக்கை!
உலகப்பொதுமறை தந்த வள்ளுவனும் இறைவாழ்த்து பாடித்தான்
ஆரம்பித்தான் இரண்டடி திருக்குறளை!
மளிகைச் சாமான் பட்டியலை எழுதும் போது
முதலில் விழுகிறது பிள்ளையார் சுழி!
இன்று எல்லோரும் ஓடுகிறார்கள் இறைவனைத் தேடி!
அன்றோ நம்முடனே இருந்தான் இறைவன்!
நம்மை மீறிய ஒரு சக்தி! அது நடத்துகிறது நம்மை!
அதைத்தான் கடவுள் என்கிறோம்! எல்லா மதங்களும் இதை
உணர்ந்திருக்கின்றன! உணர்த்துகின்றன! ஆனால்
உணராமல் உதைபடுகிறோம் உயர்ந்த கடவுள் யார்? என்று!
கடவுள் உயர்ந்தவன் எனில் உயர்ந்தவனில் உயரம் எவன்?
புரியாமல் போரிட்டுக் கொள்கிறோம்!
 திருவிழாக்கள் எதனால் தோன்றியது! வாழ்நாளெல்லாம் உழைக்கும்
வர்கங்களுக்கு ஒருநாள் விழா! ஏழைகளுக்கும் எளியோர்க்கும்
அது திருவிழா! ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்!
அதனாலே பலருக்கும் ஒருநாள் வருமானம்!
கொண்டாடுவோருக்கு கிடைப்பதோ வெகுமானம்!
இதைக்கொடு! இதைத்தருகிறேன் என்பதல்ல பக்தி!
கொடுப்பதும் அவனே! எடுப்பதும் அவனே! இதை உணர்ந்தால்வரும் முக்தி!
எத்தனையோ மகான்கள் அவதரித்த பூமி!
எத்தனையோ கடவுளர்கள் கோயில் கொண்ட பூமி!
பக்திரசம் ததும்பும் பாரத பூமி! நாமும் கொஞ்சம் பக்திரசம் அருந்துவோம் இன்று!


 சாஸ்திர சர்மா என்பவர் நடத்தும் வலைப்பூ இது! ஆன்மீகம் என்பது வலைப்பெயர்! திருவருளை வேண்டாதார் யார்? திருமகளின் புகழ்பாடும் ஸ்ரீ சூக்தம்! இதை தமிழில் பகிர்ந்துள்ளார் அழகாக இங்கு ஸ்ரீ சூக்தம் தமிழில்
அவசர யுகத்தில் இன்று சிறியவர் பெரியவர் என்று பார்ப்பது இல்லை! மரியாதை மறந்துபோன உலகாகிவிட்டது. பெரியவரை எப்படி மதிக்கவேண்டும் என்று கற்றுத்தருகிறார் இங்கே! பெரியவர்களை கேலி செய்யாதீர்
பிராணாயாமம் என்னும் மூச்சுப்பயிற்சி இது நமக்கு இன்று மிகவும் முக்கியம் யோகிகள் இதைச்செய்துதான் நூறாண்டு நோயில்லாமல் வாழ்ந்தார்கள் அதைப்பற்றி இங்கு! மூச்சுப்பயிற்சி


தோழி என்பவர் நடத்தும் சித்தர்கள் ராஜ்யம் வலைப்பூவில் கொட்டிக்கிடக்கின்றன தகவல்கள் ஏராளம்! அதில் சில இங்கே! ஆன்மீகம் என்றால் என்ன? கற்றுத்தருகிறார் இங்கே! ஆன்மீகம் என்றால் என்ன?
ஆறாத புண்களையும் குணமாக்க வைத்தியம் சொல்கிறார் இங்கே! புண்கள் குணமாக்க வைத்தியம்இன்று எங்கு எந்த சுவரை பார்த்தாலும் மூல நோய் விளம்பரம்தான் முதலில் நிற்கிறது. மூலத்தை கட்டுப்படுத்த சிறப்பான வைத்தியம் இங்கே! ஆறுவகையான மூல நோய்க்கு தீர்வு

முத்துக்குமார் என்பவர் நடத்தும் இந்த தளத்தின் பெயரும் ஆன்மீகம்! சிலரை பார்க்க செல்லும் போது தியானத்தில் இருக்கிறேன் என்பார்கள்! வீட்டில் டீவி ஓடிக்கொண்டிருக்கும் பிள்ளைகள் கத்திக் கொண்டிருப்பார்கள் ஆனால் தியானம் செய்துகொண்டிருப்பார் தியானம் செய்யும் போது கவனிக்க வேண்டியவைகளை இங்கே சொல்கிறார் இவர். தியானம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை
இறைவனை எப்படி அடைவது? அதற்கு ஐந்துவழிகள் இருக்கின்றனவாம் இதோ அந்த ஐந்துவழிகள்! இறைவனை அடைய ஐந்து மார்கங்கள்

அன்ன பூரணி என்பவர் நடத்தும் வலைப்பூ இது! இதன் பெயரும் ஆன்மீகம்! வரவேற்பில்லாமல் போனதால் எழுதுவதை நிறுத்திவிட்டார் போலும் சமயக்குரவர்கள் நால்வர் அவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே சமயக்குரவர்கள் நால்வர்

ஆன்மீகக் கடல் என்றொரு வலைப்பூ இதில் குற்றாலத்தில் நிகழ்ந்த அதிசயம் என்று ஒரு பகிர்வு! குற்றாலத்தில் நிகழ்ந்த அதிசயம் ஆச்சர்யமாயிருக்கிறது இதைப்படித்தால் இதே வலைப்பூவில் சர்ப்ப தோஷங்கள் திருமணத்தடை நீக்கும் கோயில் பற்றி ஒரு பதிவு இது.
விச்சு என்பவர் எழுதும் வலைப்பூ சித்தர்கள் முக்தி அடைந்த இடங்களை ஜீவ சமாதிகள் என்று கூறுவர். அந்த ஜீவ சமாதிகளை எப்படி வணங்க வேண்டும் என்று கூறுகிறார் ஜீவ சமாதிகளை எப்படி வணங்க வேண்டும்
இன்று விருந்தாளி என்ற சொல்லே வேப்பங்காயாக கசக்கிறது! ஆனால் விருந்தாளியை எப்படி உபசரிக்கவேண்டும் என்று சொல்கிறது இந்தக் கதை! அதிதி போஜனம்
நிறைய கடன் இருக்கு தீரவே மாட்டேங்குது என்று சொல்பவரா நீங்கள் இதை படித்து தீர்வு காணுங்கள்! உங்க கடன் தீர வேண்டுமா?

மணிராஜ் என்ற தளத்தில் அருமையான ஆன்மீகத்தகவல்களை தருகிறார் சகோதரி இராஜ இராஜேஸ்வரி!  தோரணகணபதியைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவர் என்னவெல்லாம் தருவார் இங்கு ஜோரான வாழ்வளிக்கும் தோரண கணபதி
பாதுகைகள் பரதன் வாழ்வில் பெரும் திருப்பம் உண்டாக்கியவை! பாதுகா சஹஸ்ரம் பற்றி இங்கே படியுங்கள்! பாதுகா சஹஸ்ரம் கொஞ்சி விளையாட ஒரு பிள்ளை வரம் கேளாதார் எவர்?சென்னை முகப்பேரில் உள்ள மகப்பேறு அளிக்கும் கோயில் பற்றிய தகவல்கள் இங்கே! மகப்பேறு அளிக்கும் முகப்பேர் கோயில்

புதியதோர் உலகம் செய்வோம் என்று முழங்குகிறார் சக்திவேல் பாலசுப்ரமணியன் இவர் தோல்வியைத் தாங்குவது எப்படி என்று கற்றுத்தருகிறார் இங்கே! தோல்வியைத் தாங்குவது எப்படி? வேதங்கள் ஏதோ ரகசியம் சொல்கின்றனவாம் இங்கே போய் அறிந்துகொள்ளுங்கள்! வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்

ரமணன்ஸ் என்பவர் நடத்திவரும் உண்மையைத்தேடி என்ற வலைப்பூவில் வள்ளலார் பற்றிய வரலாறு சுவையானது. அவதார புருஷர் வள்ளலார் ஆதித்ய ஹிருதயம் சொல்லியே இராமன் இராவணனை வென்றார். சூரியவணக்கம் எப்படி செய்வது இங்கே கற்றுத்தருகிறார். சூரிய வணக்கம்

வளரும் ஜோதிடம் என்றொரு தளம் இடைப்பாடி கருணாகரன் நடத்துகிறார் வழிபாடு எப்படி செய்யவேண்டும் இங்கே விரிவாக கூறுகிறார் வழிபாடு செய்வது எப்படி? நமது உயிர் எப்படி வருகிறது பின் எப்படி புறப்படுகிறது இங்கே சென்று அறிந்துகொள்ளுங்கள்!
தஞ்சையம்பதி என்ற தளத்தை நடத்தி வரும் துரை செல்வராஜ் எழுதியஅருட்பெரும் ஜோதி என்ற அருமையான பதிவை இங்கு படியுங்கள்! அருட்பெருஞ்ஜோதி  சபரி மலை ஐயப்பனை வணங்காதோர் யார்? ஹரிஹர சுதனான ஐயப்பனைப் பற்றி தொடர் எழுதிவரும் இவர்காட்சிகளாய் விவரித்து கண் முன் நிறுத்துகிறார் இங்கு ஹரிஹரபுத்ரன்   திருப்பாவை, திருவெம்பாவை விளக்கத்துடன் தஞ்சையை சுற்றியுள்ள நாம் அறியாத சில கோயில்களை காட்டுகிறார் இங்கு  மார்கழிப்பனியில்
கிருஷ்ணாலாயா என்ற வலைப்பூ அருமைநண்பர் ரவி நடத்தும் ஆன்மீகத்தளம்! விநாயகரை பற்றிய சில சுவையான தகவல்கள் இங்கு விநாயகனே வினை தீர்ப்பவனே  தொல்லைகள் அகல செய்யும் நிகும்பலா யாகம் குறித்து இங்கே சொல்கிறார் தொல்லைகள் தீர   ஏகபாத மூர்த்தி பற்றி அறிய ஏகபாத மூர்த்தி

செந்தில்குமார் என்பவர் நடத்தும் வலைப்பூ ஆன்மீகச் சுடர்
சிவவழிபாடு குறித்த சில தகவல்கள் இங்கே! சிவ வழிபாடு  

 இறைவணக்கத்தோடு துவக்கியுள்ளேன்! இன்னும் அருமையான வலைப்பூக்களையும் பதிவுகளையும் நாடி தேடி பகிர நல்வாழ்த்துக்களை பகிருங்கள்! நன்றி!

 இறுதியாக ஒர் செய்தி: இன்று 4-2-2014 அன்று எங்கள் ஊர் நத்தம் வாலீஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேக தினத்தினை முன்னிட்டு விசேஷ பூஜைகளும் ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மனுக்கு  அன்னப்பாவாடை வைபவமும் நடைபெற உள்ளது. வலைச்சர வாசக அன்பர்கள் அனைவரையும் எங்கள் ஊர் மக்கள் சார்பாக விழாவிற்கு வருக வருக என்று அழைக்கின்றேன்! வருக அம்மன் அருளை பெறுக! நன்றி!

25 comments:

  1. தமிழ் மணத்தில் இணைக்க முயற்சி செய்தேன்! இணைந்ததா என்று தெரியவில்லை! வாசக அன்பர்கள் தயவு செய்து இணைத்து விடவும்! நன்றி! அன்புடன் சுரேஷ்

    ReplyDelete
  2. "இதைக்கொடு! இதைத்தருகிறேன் என்பதல்ல பக்தி!
    கொடுப்பதும் அவனே! எடுப்பதும் அவனே! இதை உணர்ந்தால்வரும் முக்தி!" என்பது
    சிறந்த வழிகாட்டலே!

    தங்கள் தள முகவரியை வலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்கள் (http://thamizha.2ya.com) தளத்தில் இணைத்து உதவுங்கள்.

    ReplyDelete
  3. தமிழ்மணத்தில் இணைத்துவிட்டேன்.
    ஆன்மீகப் பதிவுகள் இவ்வளவு இருகிறதா? ஒன்றிரண்டு மட்டுமே நான் அறிந்தவை . அறிமுகம் செய்தமைக்கு நன்றி தொடர்க

    ReplyDelete
  4. அன்பின் சுரேஷ்

    ஆன்மீகப் பதிவு அருமை - சென்று பார்க்க வேண்டும் - அறிமுகங்களூக்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  5. ஆன்மிகப் பதிவுகளுடன்
    ஆசிரியர் பணியைத் துவக்கிய விதம் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. இறை வணக்கத்தோடு ஆரம்பித்தமை நிறைவைத் தருகிறது. தொடர்ந்து வருகிறோம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. எனது முதல் வலைப்பூவிலிருந்து உங்களுக்கு வாழ்த்துக்கள். இறை வணக்கத்தோடு ஆரம்பித்தமை நிறைவைத் தருகிறது

    ReplyDelete
  8. சிறப்பான ஆரம்பம்...

    Sasithara Sarma (Swiss), muthu kumar, Annapurani, Vhichu nathan, Sakthivel Balasubramanian, - இவர்களின் தளங்கள் அறியாதவை... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  10. தளிர் அண்ணாவிற்கு நன்றி கலந்த வணக்கங்கள். இரண்டாம் முறையாக கிருஷ்ணாலயா தளம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளமைக்கு மிக்க நன்றி.
    தங்களின் அன்பிற்கு நன்றி! அன்னை அபிராமியின் அருளாலும், எம் கண்ணனின் அருளாலும் நலமும் வளமும் பெற்று வாழ பிரார்த்தனை செய்கிறேன்!

    ReplyDelete
  11. திண்டுக்கல் தனபாலன் அய்யாவிற்கும் நன்றி. திண்டுக்கல் தனபாலன் அய்யா, தளிர் அண்ணா, சகோதரி ராஜேஸ்வரி அவர்களுக்கும் இங்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.!

    ReplyDelete
  12. ஆன்மீகத்தளங்களின் அறிமுகங்களுக்கு
    இனிய நன்றிகள்...

    எமது தளத்தின் பதிவுகளையும் அறிமுகப்படுத்தி சிறப்பித்தற்கு
    நன்றிகள்..!

    ReplyDelete
  13. வணக்கம்
    இன்று பல புதிய தளங்களை பார்க்க முடிந்து.... வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கு வாழத்துக்கள்...தொடருகிறேன் பதிவுகளை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  14. அருமை ..வாழ்த்துகள் சுரேஷ்..

    ReplyDelete
  15. //மணிராஜ் என்ற தளத்தில் அருமையான ஆன்மீகத்தகவல்களை தருகிறார் சகோதரி இராஜ இராஜேஸ்வரி!

    தோரணகணபதியைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவர் என்னவெல்லாம் தருவார் இங்கு ஜோரான வாழ்வளிக்கும் தோரண கணபதி

    பாதுகைகள் பரதன் வாழ்வில் பெரும் திருப்பம் உண்டாக்கியவை! பாதுகா சஹஸ்ரம் பற்றி இங்கே படியுங்கள்! பாதுகா சஹஸ்ரம்.

    கொஞ்சி விளையாட ஒரு பிள்ளை வரம் கேளாதார் எவர்? சென்னை முகப்பேரில் உள்ள மகப்பேறு அளிக்கும் கோயில் பற்றிய தகவல்கள் இங்கே! மகப்பேறு அளிக்கும் முகப்பேர் கோயில்//

    அடியேன் தினமும் மறக்காமல் சென்று தரிஸித்து மகிழும் வலைத்தளத்தினை இன்று இங்கு சிறப்பாகத் தாங்கள் எடுத்துக்கூறியுள்ளது, எனக்கு மேலும் மகிழ்ச்சியளிக்கிறது.

    அதற்காக என் ஸ்பெஷல் நன்றிகள்.

    ReplyDelete
  16. பல தளங்கள் புதிது. அறிமுகத்திற்கு நன்றி சகோ!

    ReplyDelete
  17. atthanai anbargalukkum nandrigal. mikka payanalikkum vithathil ullathu.

    ReplyDelete
  18. ஆன்மீக வலைத்தளங்கலைத் தொடுத்து அருளியிருக்கின்றீர். இன்றைய பரபரப்பு வாழ்க்கையில் மனதிற்கு அமைதியை அளிக்கும் ஆன்மீகச் சிந்தனைகளைப் பின்பற்றவும், சில மணித்துளிகளேனும் ஒதுக்கி புதியன கற்கவும் உங்களின் இத்தொகுப்புப் பகிர்வு உதவும். தொகுப்பின் முயற்சிக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  19. கருத்துரை அளித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள்!

    ReplyDelete
  20. ஆன்மீகத்தளங்களின் அறிமுகங்களுக்கு
    இனிய நன்றிகள்

    ReplyDelete
  21. இன்றைக்கு அறிமுகம் செய்யப்பட்ட அனைத்து பதிவுகர்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  22. Replies
    1. அன்புள்ளம் கொண்ட தளிர்சுரேஷ் அவர்களுக்கு , வணக்கம். எந்த எதிர்பார்ப்பும் இன்றி யாரும் கேட்காமலே மற்றவர்கள் வலைத்தளத்தையும், பதிவுகளையும் எல்லோரும் பார்க்கக்தூண்டும் அரிதான செயலை செய்யும் உங்களை மனதார பாராட்டுகிறேன் , யாருடைய பாராட்டுதல்களையும் எதிர்பாராது ஆற்றிவரும் உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் , வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம்.வளம் தரும் ஜோதிடம் , கருணாகரன். இடைப்பாடி.

      Delete