வலைச்சரத்தில் கவிப்பூக்கள்!
எது கவிதை?
இதயத்தில் உதயமானதை
எழுத்திலே வடிப்பதுதான்
கவிதை!
சிலையை சிற்பிபார்த்து
பார்த்துச்
செதுக்குவதுபோல எழுத்திலே வார்த்தைகளை
செதுக்கி செம்மைப்படுத்தினால்
கவிதை!
பீறிட்டுவரும் எண்ணங்களை
எதுகை மோனையோடு சொன்னால்
கவிதை!
உள்ளத்தில் உருவாகும் உயர்வான
எண்ணங்கள்
வெள்ளமாக புரண்டுவர வேகமாக
உருவாகிறது கவிதை!
இலக்கணங்களை உடைத்து இன்று
இலட்சக்கணக்கான உள்ளங்களை
ஆள்கிறது புதுக்கவிதை!
மூன்றே அடியில் ஹைக்கூக்கள்
நன்றே சொல்கின்றன செய்திகள்!
இணையத்தில் ஏராளமான
கவிஞர்கள்! நான் வலைவீசியதில்
சிக்கியவர்கள் இன்று
வலைச்சரத்தில் வாசம் வீசுகிறார்கள்!
1.ப்ரியன்
கவிதைகள் தளத்தில் எழுதிவருகிறார் ப்ரியன்
இவரது கவிதையில் என்னை கவர்ந்த இதை நீங்களும் படியுங்கள்
பறத்தல் மிக அருமையான ஒரு கவிதை இது! கைக்குள் அடங்கிய நட்சத்திரங்கள் நான் மிகவும் ரசித்து படித்த ஒருகவிதை உள்ளங்கை வனம்
2.
நெஞ்சின் அலைகள்- தளத்தில் எழுதும்ஜெயபரதன்
கனடா இயற்கை சூழல்களையும் சுற்றுசூழல் மாசுபாட்டையும் கவிதையில் சிறப்பாக
சொல்கிறார் அண்டார்ட்டிகா இதில் கவிதை வடித்து அண்டார்டிக்கா பனிப்பாறைகள் உருகுவதால் ஏற்படும் விளைவுகளை சிறப்பாக விரிவாக கூறியுள்ளார்
3.பாலா
கவிதைகள்; தளத்தில் எழுதிவரும்பாலசுப்ரமணியன் முனுசாமியின் இந்த கவிதை வெயில் இயற்கையோடு இயைந்த வாழ்வு தொலைந்து போனதை சாடுகிறார் புனே நகரில் படுகொலை செய்யப்பட்ட சமூக சேவகர் தபோல்கரை பற்றிய கவிதை இங்கு
4.பின்னை
இளவழுதி கவிதைகள்- தளத்தில் இளவழுதி
வீரராசு வின் கவிதை கவனிப்பு அதிகமாக காதல் கவிதைகள் எழுதிய இவர் இப்போது தொடரவில்லை ஏனோ தெரியவில்லை!
5 தமிழ் கவிதைகள் தளத்தில் பாஸ்கரின் கவிதை தன்னம்பிக்கை ஊட்டுகிறதுநம்பிக்கையூன்றி நட முக நூலின் முகத்திரையை கிழிக்கும் கவிதை இது பேஸ்புக்
6
விஜய் கவிதைகள்- தளத்தில் எழுதிவரும் விஜய் அகத்திணை கவிதைகளில் கில்லாடி இவரது இந்த
கவிதைரோஜாமலர் இந்தக் கவிதையை படித்துப் பாருங்கள் இயற்கையின் நியதி
7.உயிர்த்தமிழ் தளத்தில் சஞ்சய் தமிழ்நிலாவின்
இந்தகவிதையை பருகுங்கள் ஒரு துளி மழை நட்பை சிறப்பிக்கும் இந்த கவிதையை ரசியுங்கள்! நட்புக்கு மரணம் இல்லை! வறுமையை குறுங்கவிதைகளால் வடித்துள்ளார் இங்கு வறுமை
8.கவிதைகள்மற்றும் கவிதைகள்மட்டும் தளத்தில்
எழுதிவருகிறார் பெ.முரளி(கவிதன்) இவரது முதல் கவிதையை படியுங்கள் முதல்கவிதை காதல்ரசம் சொட்டுகிறது இந்த கவிதையில் தேவதைகளின் தேவதை
9.சிவகுமாரன் கவிதைகள் தளத்தில் எழுதிவரும்
சிவகுமாரன் இந்தக் கவிதை என்னமாய் சுடுகிறது வளி,வலி காதலை எழுதாத கவிஞர்கள் இல்லை! வெண்பா வடித்திருக்கிறார் இங்கு காதல் வெண்பா
10.ரோஜாக்கள்
என்ற தளத்தில் எழுதிவரும்தோழி பிரஷா படக்கவிதைகள் படைப்பதில் வல்லவர்
இவரது படத்துடன் கவிதை யை படித்துப்பாருங்கள் ஓர் பெண்ணின் கதை! யை இங்கு சென்று கேளுங்கள்!
11.
நாவிஷ் கவிதைகள் தளத்தில் எழுதும் நாவிஷ்
செந்தில்குமார் இப்போது எழுதுவதில்லை! இவரது இந்தகவிதை விகடனில் வெளிவந்தது என்பதே
இதன்சிறப்புக்கு உதாரணம் இந்த கோடை ஏன் சிலரை மட்டும் சுடுகிறது?
12.தீதும்
நன்றும் பிறர்தரவாரா என்ற தளத்தில் எழுதிவருகிறார் இனிய நண்பர் யாதோ ரமணி இவரது
கவிதைகள் எல்லாமே சிறப்பு! எதைச்சொல்லி எதைவிட இது ஒரு பானை சோற்றுக்கு ஒருபதம்பார்க்க இந்த கவிதை மேற்கில் தோன்றும் உதயம்! குடிப்பழக்கம் என்னவெல்லாம் செய்யும் என்று புட்டுபுட்டு வைக்கிறார் படைப்பு என்பது என்ன? என்பதை இங்கே புரியவைக்கிறார் பண்டித விளையாட்டா படைப்பு? நான் மிகவும் ரசித்த ஓர் உவமை இது படித்துப்பாருங்கள் கண்ணாடி பிம்பக்கறை
13.தென்றலின் வாசம் தளத்தில் மேலூர் ராஜா
விவசாயிகளின் கஷ்டங்களை இப்படி பகிர்கிறார் விவசாயியின் ஏக்கம் காதலை மெல்லிய வார்த்தைகளில் சொல்கிறார் உன் வார்த்தை
14.
மழைச்சாரல் தளத்தில் எழுதும் ப்ரியா
இயற்கையை நேசிப்பவர் அவரது இந்த கவிதைபுல்வெளி யை படித்து ரசியுங்கள் நட்சத்திரங்களை இப்படி வித்தியாசமாக பார்க்கிறார் இங்கு நட்சத்திரக் கூரையினடியில்!
15. சொல் புதிது என்னும் தளத்தில் எழுதிவரும் அசின் சாரின் இந்தக் கவிதை காலமாற்றத்தை சாடுகிறது சிறப்பான ஒன்று மழைபற்றிய கவிதை
வலைச்சரத்தில்
கவிஞர்கள் ஏராளம்! இன்னும் சிலரும் என் வலையில் சிக்கியுள்ளார்கள் அவர்கள் நாளை
அறிமுகம் ஆவார்கள். இவர்களது தளங்களுக்கு சென்று ஊக்கப்படுத்துங்கள்! வயலுக்கு உரமிடுவது
போல படைப்பாளிக்கு தேவை ஊக்கம்! அது உங்கள் பின்னூட்டத்தில் கிடைக்கும்!
மறவாதீர்கள்! படிப்பதுடன் ஒரு சிறு கருத்தும் இட்டு சென்றால் படைப்பாளியின் உள்ளம்
குளிரும்! மேலும் நல்ல படைப்புக்கள் துளிர்க்கும்! இன்று நான் அறிமுகம் செய்த பலர் வலையில்எழுதுவதை நிறுத்திவிட்டார்கள். ஊக்கம் ஊட்ட ஆளில்லாததும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்! அதனால்தான் சொல்கிறேன்! நல்ல படைப்புக்களை நாடிப் படியுங்கள்! உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள்! மீண்டும் சந்திப்போம்!
புதிய தளங்களுக்கு சென்று வருகிறேன். பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஇன்றைய கவிஞர்கள் பற்றிய அறிமுகம் சிறப்பாக உள்ளது... அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Balasubramanian Munisamy, இளவழுதி வீரராசு, கவிதன், Asin sir, - இவர்களின் தளம் புதியவை... அனைத்து தளங்களையும் தொடர்கிறேன்... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteதோழமை தனபாலனே,
Deleteதங்களின் வருகைக்கும் வாசிப்பிற்கும் வாழ்த்திற்கும் நன்றி.
- அசின் சார்.
என் தளத்தை இங்கே அறிமுகப் படுத்தி ஊக்கப் படுத்தியமைக்கு மிகவும் நன்றி...:) இதைப் போன்ற ஊக்குவிப்புகளே எங்கள் எழுத்துக்களை இன்னும் சிறப்பாக்குகின்றன...:)
ReplyDeleteநான் விரும்பித் தொடரும்
ReplyDeleteஅருமையான கவிஞர்களுடன்
என்னையும் சமமாக அறிமுகம் செய்தமைக்கு
மனமார்ந்த நன்றி
அனைத்துக் கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்....
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்...
அருமை ! வாழ்த்துக்கள் சகோ .
ReplyDeleteகவிதைகளைத் தேடிப் பிடித்து எங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி. தாங்கள் தந்துள்ள அறிமுகமும் அருமை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteதொடர்ந்து ஐந்தாவது முறையாக அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி!
ReplyDeletewww.nellaibaskar.blogspot.in
புது முக அறிமுகங்கள் அருமை!
வாழ்த்துக்கள்.!
புதிய நல்ல கவிதைகளின் தளங்களை அறிமுகம் செய்துள்ளீர்கள். நன்றிகள்!
ReplyDeleteவெகு நாட்கள் , சாரி வருடங்கள் கழித்து திரும்ப எழுத ஆரம்பித்து இருக்கும் இந்த நேரத்தில் (மறு)அறிமுகம்! நன்றி தோழரே.
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteத.ம. +1
நன்றி அண்ணா.. தங்களின் அறிமுகத்தால்
ReplyDeleteஇன்று புதியதொரு கரம் பற்றி வீர நடை
( தாயின் கரம் பற்றி நடக்கும் குழந்தை போல ) மகிழ்ச்சி
துள்ளலில் உலகளவர்கள் பார்வைக்கு
செல்வதை நினைக்கையில் அளவில்லாத ஆனந்தம்
அடைகிறோம்--- வாழ்த்துங்கள் வளர்கின்றோம்
மேலும் என்னுள் உள்ள திறமையை எனக்கே அறியவைத்த
திரு.""" தென்றல் சசிகலா """" அவர்களுக்கு எனது மனமார்ந்த
நன்றிகளை சமர்பிக்க கடமை பட்டுள்ளேன்......
என்றும் என்றேன்றும்
அன்புடன் .....
மேலூர் ராஜா ,,,
நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே
ReplyDeleteநெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே
ReplyDeleteஅனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!!!
ReplyDeleteநன்றி மிக்க நன்றி, அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
ReplyDeleteதாமதத்திற்கு முதலில் மன்னிக்கவும். அறிமுகத்திற்கு நன்றி
ReplyDelete