Thursday, March 6, 2014

கடந்து சென்ற காலங்கள்

வலைச்சர நட்புகளுக்கு இனிய வணக்கம்.

கடந்த ஒவ்வொரு நொடியும்
நடந்த ஒவ்வொரு நிகழ்வும்
அடங்கும் ஒரு சொல் வரலாறு
கடந்ததும் நிகழ்ந்ததும் விதைத்தது
தொடங்கும் புது வரலாறு

ஆமாம், வரலாறு என்பது முடிந்து போனது மட்டும்  இல்லை. ஏதோ ஒரு நிகழ்வால் வருங்காலத்தையும் நிர்ணயித்துச் செல்கிறது. ஆக, கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இணைக்கும் சங்கிலியாய் அமைந்துவிடுகிறது. வலைச்சரம்  உருவான வரலாறு நோக்கினால் பல வலைச்சர ஆசிரியர்களைக் கடந்து,  புதிய பொறுப்பாசிரியர் ராஜி, சகோதரர் தமிழ்வாசி பிரகாஷ், சீனா ஐயா, இவர்களை எல்லாம் கடந்து, வலைத்தளங்கள் உருவானதையும்,  இணையம் வந்ததையும், அதற்கு முன் தொலைபேசி, அஞ்சல் என்று இருந்ததையும், மின்னலையில் தகவல் அனுப்ப முடியும் என்று கண்டுபிடித்த மைக்கேல் பாரடேயையும், இப்படிப் பல அறிவியல் கண்டுபிடிப்புகளையும் தொட்டுக் கொண்டே சென்றுவிடலாம் புறா விடு தூதுக்கும், இன்னும் அதற்கு முன்னும் (அதுவே பெரிய கட்டுரையாகிவிடும்). அப்போ, வரலாறு வாழ்வோடு ஒன்றியது அல்லவா? முக்கியத்துவம் வாய்ந்தது அல்லவா? அப்படிப்பட்ட அருமையான  வரலாறு வலைத்தளங்களில் கொட்டிக் கிடக்கின்றது. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போமா?

சித்தன்னவாசல் ஓவியங்கள் பற்றி கேள்விபட்டிருப்பீர்கள், அதைப் பற்றி நடை நமது தளத்தில் அருமையான பதிவு படியுங்கள். வெட்டப் பட்ட மரத்தின் மீதான காதல் வரலாறாய் அழகாய்ப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சகோதரர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் தளத்தில், கண்ணகியின் நீண்ட பயணம் பல தகவல்களைச் சொல்கிறது. சில வரலாறுகள் மறக்கப்படுவதையும் ஒதுக்கப்படுவதையும் வேதனையுடன் சொல்லும் ஒரு பதிவு இது. மகாத்மா காந்தி அவர்கள் தமிழ் கற்ற வரலாறு இங்கே. இவருடைய தளத்தில் இன்னும் பல சிறப்பான பதிவுகள் இருக்கும் இவரின் சிறப்பான நடையில்.

தம்பி வெற்றிவேல் அவர்களின் இரவின் புன்னகை தளத்தில் களப்பிரர்கள் காலம் தமிழக வரலாற்றில் இருண்ட காலமானது ஏன் என்று நன்கு அலசப்பட்டுள்ளது. வானவல்லி என்ற சரித்திர நாவல் வேறு எழுதுகிறார் பல வரலாற்றுத் தகவல்களுடன். இப்போ பலாப்பழக் காலம், கண்டிப்பா இப்பதிவைப் படிங்க.

மதுரைக்கு பெயர் காரணம் அறிய படியுங்கள் இப்பதிவை.

மறைக்கப் பட்ட தமிழரின் வரலாறு சொல்கிறது இனியவை கூறல் என்ற தளம். இன்னொரு பதிவு ஜோனஸ் என்பவர் போலியோவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த வரலாற்றைப் பற்றிக் கூறுகிறது.

குமரிகண்டம் பற்றிய பல தகவல்கள் சொல்கிறது யாழ் பாவாணன் அவர்களின் இப்பதிவு. தமிழ் தளங்களைக் களஞ்சியப்படுத்தும் தகவல் தமிழாசிரியர்களே! தமிழ் பற்றாளர்களே! பதிவில். தமிழ் பேச மறந்தோரால் எப்படி முடியும் என்று இவர் குமுறுவது எது?

சென்னை மதராசப் பட்டினமாய் இருந்தபொழுது, அழகிய படங்கள். கவிதைகளும் நிறைந்துள்ளன இவர் தளத்தில். இது நட்பா? காதலா?.

கடமை பற்றி அம்பேத்கர் சொன்னது இப்பதிவில். யோகன் அவர்களின் திருமண வாழ்த்து உயிர் எழுத்துகளின் வரிசையில் இனிமையாய் இருக்கிறது. நிலவை மட்டுமே ரசித்தவர் இப்பொழுது அமாவாசையையும் ரசிக்கிறாராம், ஏன் என்று அறியச் சொடுக்குங்கள் இப்பதிவை.

நாளை சந்திக்கும் வரை,
நட்புடன்,
கிரேஸ்

30 comments:

  1. புதியவர்களை அறிந்து கொண்டு வருகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய சோதனை மறுமொழிக்கு முன்பாகவே உங்கள் மறுமொழி!!! :)

      Delete
  2. வலைச்சர வரலாற்றில் இன்றைய என் பதிவு :)

    ReplyDelete
  3. தமிழ் கவிதைத் தீவு தளம் புதிது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    வரலாறு வலைத்தளங்கள் - அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி, நன்றி திரு.தனபாலன்.

      Delete
    2. http://tamiltidings.blogspot.in/2011/09/blog-%20%20post_11.html இந்த இணைப்பில் %20%20 இதை மட்டும் எடுத்து விடுங்கள்... நன்றி...

      Delete
    3. சரி செய்துவிட்டேன்,, நன்றி திரு.தனபாலன்.

      Delete
  4. அறிமுகக் கட்டுரை அருமை...

    ReplyDelete
  5. மீண்டும் ஒரு வரலாறு...
    தனித்துவமான தகவல்களைக் கொண்ட வலைத்தளங்கள்..
    நல்வாழ்த்துக்களுடன்..

    ReplyDelete
  6. அனைவரும் அறியப்படவர்களே .வாழ்த்துக்கள் சகோ சிறப்பான
    அறிமுங்களைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் .அனைவருக்கும் என்
    இனிய வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

    ReplyDelete
  7. அருமையாக தொகுத்துள்ளீர் தளங்களை பார்வையிட்டு வருகிறேன்! நன்றி!

    ReplyDelete
  8. வலைச்சரம் நிர்வாகக் குழுவிற்கு மிக்க நன்றி.
    அன்றொரு நாள் அருணா செல்வம் அவர்கள் ஆசிரியப் பொறுப்பேற்ற வேளை, எனது யாப்பறிந்து பாபுனைய வாருங்கள் (http://paapunaya.blogspot.com/) தளம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
    THURSDAY, MARCH 6, 2014 இன்று ஆசிரியப் பொறுப்பேற்றிருக்கும் கிரேஸ் அவர்கள் எனது தூய தமிழ் பேணும் பணி (http://yarlpavanan.wordpress.com/) தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    மீண்டும் வலைச்சரம் நிர்வாகக் குழுவிற்கு நன்றி கூறுவதோடு, எனது தளங்களை அறிமுகம் செய்த ஆசிரியர்களுக்கும் மிக்க நன்றி.

    தமிழ் உலகிற்கு வலைச்சரம் ஆற்றும் பணிக்கு அதாவது தமிழ்ப் பதிவர்களையும் தமிழ்த் தளங்களையும் அறிமுகம் செய்யும் பணிக்கு எனது ஒத்துழைப்பை என்றும் வழங்குவேன் என உறுதிகூறுகிறேன்.

    எல்லோருக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  9. பல வரலாற்று தளங்களும் ஏற்கனவே அறிந்தவையே,அறிமுகமானோர்க்கு வாழ்த்துக்கள்!

    # மதுரைப்பெயர்க்காரணம் என கொடுக்கப்பட்ட சுட்டியில்,

    Sorry, the page you were looking for in this blog does not exist.

    என்று தான் உள்ளது,ஆனால் அதே தளத்தில் உள்ள வேறொரு சுட்டிமூலம் போனால் சரியான தளம் திறக்கிறது. மாற்றி தொடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது..

    ReplyDelete
    Replies
    1. மதுரைக்குப் பெயர் காரணம் சுட்டியை சரிசெய்துவிட்டேன்..தகவலுக்கு நன்றி.

      Delete
  10. மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. அருமை கிரேஸ்... ஒரே சாரம் கொண்ட பதிவுகளை தேடி அருமையாக தொகுத்து உள்ளீர்கள்.. வாழ்த்துகள் :)

    ReplyDelete
  12. வரலாற்றை மையமாக வைத்து ஒரு சிறு வரலாறு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. இன்றைய செய்தி; நாளைய வரலாறு. தினந்தோறும் படியுங்கள் வலைச்சரம்.
    நானும் இன்றைய வலைச்சரம் படித்துவிட்டேன்;
    இது இன்று செய்தி - நாளை வரலாறு.
    நான் வலைச்சரம் படித்தேன்.
    தாங்கள் வரலாறு படைத்தீர்கள்.

    நன்றிங்க...

    ReplyDelete
    Replies
    1. இன்று செய்தி - நாளை வரலாறு..உண்மைதான்..

      நன்றி முஹம்மது நிஜாமுத்தீன்.

      Delete
  14. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
    வரலாறு கூறும் வரலாறு அருமை....

    ReplyDelete
  15. இதுவரை அறியாத சில அற்புத
    பதிவர்களை தங்கள் பதிவின் மூலம்
    அறிந்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்....

    ReplyDelete
  17. சரித்திரமாகிறது ஒவ்வொரு நிகழ்வும்.. விதைத்துச்செல்லும் நல்லவை வரும் காலத்திலும் வரலாறாகலாம் என்ற நம்பிக்கை விதை விதைத்திருக்கிறீர்கள்பா..

    அறிமுகங்கள் அனைத்து பேருக்கும் அன்பு வாழ்த்துகள், கரந்தை ஜெயகுமார் சார் பதிவுகள் எப்போதுமே பிரமிப்பு தருபவை...

    ReplyDelete