Wednesday, April 30, 2014

சமையலில் நளபாகம் :)


                 அனைவருக்கும் பொன்னான புதன்கிழமை 
வணக்கங்கள் :)தலைப்பை பார்த்தவுடன் அனைவருக்குமே 
விளங்கியிருக்கும் ..:)
பெண்கள் வசமிருந்து ஆண்களுக்கு சென்றுவிட்டதோ 
இத்துறை எனும்  அளவுக்கு நிறைய ஆண்கள் சமையல்  துறையில் கோலோச்சுகிறார்கள் . நம்மூரில் ஆண்கள் சமைக்க   பற்பல காரணங்கள் உண்டு  தனிக்கட்டை வாழ்க்கை , 
ஹோட்டல் உணவை தவிர்க்க ,பணத்தை சேமிக்க ..இப்படி 

                        வெளிநாட்டில் உள்ள சமையல் நிபுணர்களை 
பாருங்கள் ,Heston Blumenthal ,Marco Pierre white,  Gordon Ramsey ,  
James Martin,     Keith Floyd,Anthony worral thompson ...இவர்கள் 
அனைவருமே இங்கிலாந்தின் பிரபல சமையல் நிபுணர்கள்     .

             நம்ம தொலைகாட்சிகளிலும் தாமு ,அறுசுவை அரசர் 
என அதிகம்ஆண்களையே  சமையல் நிகழ்சிகளில்
காட்டுகிறார்கள் இதில்வேறு  தல//தலப்பாக்கட்டு பிரியாணி 
செய்தார் //என்று  அடிக்கடி செய்தி ,படிக்க  பொறாமையாக 
இருக்கும் :)

எனக்கு திருமணம் நிச்சயமானதும்  வருங்கால கணவர் 
வெளிநாட்டில் படித்து வேலை செய்கிறார் .அங்கே அவரது 
சகோதரர்களுடன் இருக்கார் என்று சொன்னார்கள்....
மணமாகி கணவருடன் ஊருக்கு போனதும் முதல் இரண்டு 
மூன்று நாட்களுக்கு அவரின் சகோதர்கள் வீட்டுக்கு விருந்து 
சாப்பிட சென்றோம் .
அங்கே கண்ட காட்சிகள் வேறு எனக்கு  மிகவும் 
ஆனந்தமாக இருந்தது !  ஒவ்வொருவர் வீட்டிலும் 
மைத்துனர்கள் அழகா ஏப்ரன் கட்டிக்கொண்டு கிச்சனுக்கும் 
டைனிங் ஹாலுக்கு நடந்த வண்ணம் இருந்தாங்க ..:)

இப்படியே ஒரு வாரம் போனது எனக்கு ப்ரெட் பட்டர் ஜாம் ..
ரெடிமேட் நூடில்ஸ் மட்டுமே என் கணவர் பரிமாறினார் 
இதுவே இரண்டாம் வாரமும் தொடரவும் அவரே  சொல்லிட்டார்
 தனக்கு சமையல் தெரியாதென்று !....
.....(நான் மிரட்டவில்லை ).
நான் கேட்டேன் //அப்போ ஊரிலிருக்கும்போது எனக்கு போனில் சொன்னீங்களே ?அண்ணன் டின்னருக்கு வர்றார் ,தம்பி டின்னருக்கு
 வரார்னு ?....கணவர் ..//அது ..நான் காய்கறிகளை வாங்கி நறுக்கி 
வைத்துவிடுவேன் அவர்களே வந்து சமைப்பாங்க !!!//அவ்வ்வ்வவ் !
அங்கேயே மயங்கி விழாத குறைதான் எனக்கு .....

                            

சரி இப்போ நம்ம பிரபல பதிவர்கள் யார்யாரெல்லாம் சமையல் 
சிங்கங்கள் என்று பார்ப்போமா :) அம்மா ,பெரியம்மா ,சித்தி ,
அத்தை ,அண்ணி ,அக்கா தங்கச்சிங்க எல்லோரையும் வருக  !
வருக ! என அழைக்கிறேன் :)
அனைவரும் வந்து தட்டில் உள்ள நொறுக்குகளை எடுத்துகிட்டு 
நாற்காலியில் அமர்ந்துக்கோங்க :)
                                                                          


ஆண்கள் அனைவரும் இந்தாங்க சுவையான பன்னீர் சோடா 
கையில் எடுத்துக்கிட்டு சமையலறைக்கு போகலாம் :)

                                                                               
                                                                           
பிரபல எழுத்தாளரும் புத்தக பதிப்பாளருமான பத்ரி சேஷாத்ரி 
அவர்களின் பேட்டியும் ,கலக்கல் சமையல் குறிப்பும் இங்கே  
இது தினகரன் பத்திரிகையில் வெளியானது ..
தான் சமையல் செய்ய ஆரம்பித்த காரணத்தை தொடராக 
சொல்கிறார் ஓய்வுபெற்ற நீதிபதி இங்கே அவரின் ஸ்பெஷல் 
ரெசிப்பியும் அங்கே உள்ளது .

முதலில் இவர் ஆஹா என்ன அழகு என்று அடை சாப்பிட அழைக்கின்றார் 
வெண்ணிலவை தொட்டு முத்தமிட ஆசை மிளகாய் பொடிகொஞ்சம் 
தொட்டுக்கொள்ள ஆசை என்று பாட்டு பாடி அழைக்கின்றார் :)
சும்மா சொல்ல கூடாது .அருமையான சுவை !!

அடுத்த பதிவர் இவர் புது வித பயத்தம்  பருப்பு அல்வா 
செய்ய சொல்லிதறார் ..அதுமட்டுமன்றி ஒரு விழிப்புணர்வு 
தகவலையும் பகிர்ந்துள்ளார் ..கண்டிப்பா படிங்க .

இவரை உங்க எல்லாருக்கும் நல்லா தெரியும் ..தெரியாத விஷயம் 
இவர் இவ்ளோ அருமையா காஜர் பராட்டா செய்வார் என்பது 

இவ்ளோ சுவையா ,ஆரோக்கியமான எலுமிச்சை ரசம் குறிப்பு 
தர இவர் ஒருவரால் மட்டுமே முடியும் ...இவர் தொலைக்காட்சி நிலையம் 
வேறு வைத்திருக்கிறாராம் ..குறிப்பு இங்கே :)

அடுத்து இவர் ஒரு சர்வதேச சமையல் ரெசிப்பி தந்திருக்கார் :)
ஸ்பானிஷ் உணவு  நானும் செய்து பார்த்தேன் ..ருசி அபாரம் !

ம்ம் அடுத்தவர் இவர் :)உருகி உருகி காதலித்தாலும் சமையலும் 
நல்லாவே செய்யறார் PANNA COTTA 
அத்துடன் ஒரு ஆரோக்கியமான ஸ்டார்டர்  இனிமே பால் கோபி குடிக்க மாட்டாரா ? :)

ஆஹா இவர் குறிப்பும் சூப்பர் :) திரட்டிப்பால் குறிப்பு வழங்குவது 
பிரபல DOHA பதிவர் :)

இவர் வாயூறும் சுவையான நெல்லிக்காய் ஊறுகாய் செய்ய 
சொல்லிதருகின்றார் இங்கே ...

இவங்க இ எ மி கா ஊறுகாய் போடசொல்லித்தராங்க இங்கே 

இவரின் ப்ளாகில் நிறைய குறிப்புகள் இருக்கு ஒவ்வொன்றா 
குறித்துகொள்ளவும் :)

சமைக்க தெரியாதவங்களுக்குன்னு அற்புத வழிகள்  :)
 இவரின் குறிப்புக்கள் பலருக்கு உதவலாம் 


இவரது மகனும் வருங்காலத்தில் சமையல் புலியாக 
வருவாரா :) இப்பவே எவ்வளவு விவரமா இருக்கார்னு பாருங்க 

மிக அருமையா இலையில் எப்படி உணவு பரிமாறணும் என்று 
விவரமாக சொல்றார் இங்கே  கொட் ரசம் சூப்பருங்கோ !
வெந்நீர் போடுவதற்கு  கூட இவ்வளவு அழகா குறிப்பு தர 
இவரால் மட்டுமே முடியும் :)

நிறைய குறிப்புகள் கிடைத்திருக்கும் என நினைக்கிறேன் அப்படியே 
இந்த பாடலையும் கேட்டு ரசியுங்கள் :)ஒவ்வொரு உணவையும் 
அருமையா பேர சொல்லி ,சொல்லி பாடுகிறார் இந்த பதிவர் :)
https://www.youtube.com/watch?v=JROigL20fwA



இன்றைய பதிவில் பகிர்ந்தவற்றை அனைவரும் செய்து பார்த்து 
சொல்லுங்க ..மீண்டும் நாளை சந்திப்போம் :)





அன்புடன் ஏஞ்சலின் .
                                                                        








99 comments:

  1. நிறைய பேர்கள் எனக்கு புதிதாக இருக்கிறார்கள், அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. வாங்க மனோ :) முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி .உங்க ரெசிப்பி நெல்லிக்காய் ஊறுகாய் செம டேஸ்ட்

      Delete
  2. Super blogs. Thanks for sharing it.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வான்ஸ் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .

      Delete
  3. தொடரும் இனிய நண்பர்களின் சமையல் பகிர்வுகளின் தொகுப்பிற்கு பாராட்டுக்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ தனபாலன்..உங்களுக்கு நன்றி சொல்ல கடமைபட்டிருக்கேன் ..வேலைக்கு போய் இப்போதான் வந்தேன்
      அதற்குள் அனைவருக்கும் செய்தியை தெரிவித்து பகிர்ந்ததற்கு மிக்க நன்றி

      Delete
  4. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete
  5. ஆஹா... இன்று அடியேனுக்கும் ஒரு அறிமுகம்... மிக்க நன்றி ஏஞ்சலின்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ வெங்கட் நாகராஜ் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ..என் பொண்ணு மூணு வேளையும் சப்பாத்தி சாப்பிடுவா ..இன்னிக்கு எங்க வீட்ல காஜர் பராட்டா தான் :)

      Delete
  6. தன்னலமற்ற சேவை செய்யும் தனபாலன் அவர்கள் மூலம் எனது தளம் இங்கு அறிமுகம் செய்யப்பட்டதை அறிந்தேன். என் தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. அதுமட்டுமல்ல என் தளத்தில் உள்ள பதிவுகளயும் நீங்கள் படித்து இருப்பதை அறிந்து எனக்கு மகிழ்ச்சி... நீங்கள் அறிமுகப்படுத்திய பதிவு நகைச்சுவைக்காக எழுதப்பட்டது...ரியல் வாழ்க்கையில் நான் மிகவும் அருமையாக சமைப்பேன்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ மதுரை தமிழன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ..நிஜமாவா சொல்றீங்க :) நீங்க நல்லா சமைப்பீங்களா அப்ப அடிக்கடி உங்க வீட்ல பூரிக்கட்டை பறக்குதுன்னு சொன்னாங்களே ?தகவல் ..bbc நியூஸ்
      ம்ம் சந்தோஷம் ..விரைவில் ஒரு சமையல் ரெசிப்பி உங்கள் பக்கத்தில் எதிர்பார்க்கின்றோம் :)

      Delete
  7. பன்னீர் சோடாவுடன்
    பயனுள்ள அருமையான தளங்களைப்
    பகிர்ந்துகொண்டதற்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. வாங்க அக்கா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
      அக்கா இந்த நளபாக சக்கரவர்த்திகள் பெண்களை மிஞ்சும் வண்ணம் சமைத்து அசத்தறாங்க அக்கா

      Delete
  8. உங்க அனுபவமும் அறிமுகப் பதிவுகளும் கலக்கல். பாராட்டுகள். ஒவ்வொன்றாய் சென்று பார்க்கிறேன் ஏஞ்சலின்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கீதா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ..நம்ம சொந்த கதை சோகக்கதை பிரபலமாகிடுச்சே :) ஹா

      Delete
  9. சமையல் சிங்கங்களுக்கு வாழ்த்துக்கள். நல்லா சுவாரசியமாக எழுதறீங்க ஏஞ்சல்.தொடருங்க.

    ReplyDelete
    Replies
    1. ஆசியா :) வாங்க வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி இந்த நளபாக சக்கரவர்த்திகள் பெண்களை மிஞ்சும் வண்ணம் சமைத்து அசத்தறாங்க அனைவரும் சிங்கங்கள்தான்:)

      Delete
  10. aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

    ReplyDelete
    Replies
    1. !!!!!oooooooooooooooooooooooooooooooooo

      Delete
  11. எக்ஸாம் கூட அஞ்சு மணிக்கு எந்திரிச்சி படிக்கல ...ஆனா இந்த அஞ்சு அக்காள் எழுதுறத அஞ்சு மணிக்குலாம் எடுத்து படிக்க வைக்கிறியே ஆண்டவா ...உன் திருவிளையாடல் என்னவோ

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர் :) இங்கப்பார் கலை இதெல்லாம் உனக்கு பயன்படும் விரைவில் சொல்லிட்டேன் :)

      Delete
    2. வாத்து மேய்க்கும் என் தங்கை அடிப்பிள் காய்வதா! எடுடா திருப்பாச்சி அருவாளை!கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!ஹீ

      Delete
  12. சமையலில் நளபாகம் :)//////////////////////////சூப்பர் டாபிக்

    ReplyDelete
  13. பெண்கள் வசமிருந்து ஆண்களுக்கு சென்றுவிட்டதோ
    இத்துறை //////////////

    சூப்பர் சூப்பர் .....எல்லா ஆண்களுக்கும் பயனுள்ள பதிவு அக்கா ,..சமைக்க தெரியாது கழுவ தெரியாது ன்னு சொல்லுற ஒவ்வொரு ஆண்மகனும் படிக்க வேண்டிய பயனுள்ள பதிர்வு ...

    ReplyDelete
    Replies
    1. :) கலை ஒன்று கேள்விபட்டேன் :) அனைத்து ஆண்களுக்கும் ஏதாவது ஒரு சமையலாவது தெரியுமாம் :)
      ஆனா சிலர் கொஞ்சம் லேசி அவ்ளோதான் மற்றபடி அனைவரும் நளபாக சக்ரவர்த்திகள்

      Delete
    2. அது நிஜம் அஞ்சலின் அக்காள் §ஈஈ

      Delete

  14. அங்கே கண்ட காட்சிகள் வேறு எனக்கு மிகவும்
    ஆனந்தமாக இருந்தது ! ஒவ்வொருவர் வீட்டிலும்
    மைத்துனர்கள் அழகா ஏப்ரன் கட்டிக்கொண்டு கிச்சனுக்கும்
    டைனிங் ஹாலுக்கு நடந்த வண்ணம் இருந்தாங்க ..:)///////////////////////////


    அப்பா உங்கள பற்றி நல்லப் புரிஞ்சி இருக்காங்க ...அதான் உங்களுக்கு தகுந்த இடமா பார்த்து கண்ணாலம் கட்டிக் கொடுத்து இருக்காங்க ................

    ReplyDelete
    Replies
    1. yes kalai :) அது என்னமோ உண்மைதான் எனது மைத்துனர்கல் அனைவரும் சூப்பர் குக்ஸ் :)எங்காத்துக்காரர் இவங்களுக்கு காய்கறி மட்டும் நீட்டா நறுக்கு கொடுப்பாராம்

      Delete
  15. ரு வாரம் போனது எனக்கு ப்ரெட் பட்டர் ஜாம் ..
    ரெடிமேட் நூடில்ஸ் மட்டுமே என் கணவர் பரிமாறினார்////////////////////////////////

    மாமா ரொம்ப மோஷம் ....சமைக்க கத்துக்காம கண்ணாலம் கட்டி இருக்காங்க ....

    ReplyDelete
  16. தனக்கு சமையல் தெரியாதென்று !....
    .....(நான் மிரட்டவில்லை ).
    நான் கேட்டேன் //அப்போ ஊரிலிருக்கும்போது எனக்கு போனில் சொன்னீங்களே ?அண்ணன் டின்னருக்கு வர்றார் ,தம்பி டின்னருக்கு
    வரார்னு ?....கணவர் ..//அது ..நான் காய்கறிகளை வாங்கி நறுக்கி
    வைத்துவிடுவேன் அவர்களே வந்து சமைப்பாங்க !!!//அவ்வ்வ்வவ் !
    அங்கேயே மயங்கி விழாத குறைதான் எனக்கு ...../////////////


    பாவம் அக்கா நீங்க ,,,,,,ஒரு சமைக்க தெரியாத பையன் கிட்ட நம்ம வாழ்க்கைய கொடுத்தா என்னாறது ...ஒன்னு நாம சமைக்கணும் இல்ல சமைக்க தெரியுற பையன கட்டிக்கணும் .......அப்படி இல்லை வாழ்க்கை ல நல்ல சாப்பட்ட சாப்பிடவே முடியாது

    ReplyDelete
    Replies
    1. டின்னருக்கு பிறரை இன்வைட் பண்ணிட்டு அவங்களையே சமைக்க வச்சது உலகிலேயே ஒரே ஆள் என் கணவராகதான் இருக்கும்னு நினைக்கிறேன் :)

      Delete
  17. ! என அழைக்கிறேன் :)
    அனைவரும் வந்து தட்டில் உள்ள நொறுக்குகளை எடுத்துகிட்டு
    நாற்காலியில் அமர்ந்துக்கோங்க :)////////////


    யாரு செய்ததுன்னு சொல்லுங்க அப்போதான் சாப்பிட முடியும்

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர் :) நான்தான் அன்னிக்கே சொல்லிட்டேனே பொதுநலன் கருதி இந்த வாரம் நான் சமைக்க மாட்டேன்னு

      Delete
    2. முறுக்கும் .சீனி அரியம் மிகவும் சூப்பர்! பயத்தம் உருண்டை அதிகம் பிடிக்காது பிரெஞ்சில் வந்த பின்/ஹீ

      Delete
  18. அறிமுகமான அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் .....................

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் கலை அறிமுகமானவங்க அனைவருமே தங்க மனசுக்காரங்க !!

      Delete
    2. ஐயோ தனிமரம் எல்லாம் அப்படியில்லை என்று வாத்து நம்பாது அண்ணா ஒரு டுபாக்கூர் என்று நல்லா அறியும்!!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்அ

      Delete
  19. திங்க திங்க ஆசைப் பாட்டு மிகவும் அருமை ,..சூப்பர் ....ஆறு அந்த பாட்டை எழுதி பாடின அந்த அறுசுவை மன்னன் ....அழாக பாடி இருக்கார்

    ReplyDelete
    Replies
    1. ஆமா கலை :) கணீர் குரலில் ..பாடியிருக்கார் இல்லையா :)அந்த விடியோ மட்டும் அட்டாச் பண்ண முடில

      Delete
  20. வாழ்க்கைல மூணு வேளையும் வயிறார சாப்பிடமுன்னா அதுக்குசிறந்த வழி ..............
    ...............................
    .....................................
    ...............................................
    #######‪#‎நல்ல‬ சமைக்க தெரிஞ்சப் பையனப் பார்த்துக் கண்ணலாம் கட்டிக்கணும் ....

    ReplyDelete
    Replies
    1. :)) :)ஹா ஹா :) ..கலை நினைச்சது கிடைக்காட்டி கிடைச்சதை மிரட்டியாவது சமைக்க வச்சிடணும்

      Delete

    2. வணக்கம்!

      //நல்ல‬ சமைக்க தெரிஞ்சப் பையனப் பார்த்துக் கண்ணலாம் கட்டிக்கணும் ....//

      //கலை நினைச்சது கிடைக்காட்டிக் கிடைச்சதை மிரட்டியாவது சமைக்க வச்சிடணும்//

      நீங்கள் இருவரும் எழுதிக் கொண்டதைப் படித்துத் துாக்கி வாரிப் போட்டது

      உண்மையில் எனக்குச் சுடுநீா் கூட வைக்கத் தொியது,
      என் மனைவியை ஏமாற்றி வாழ்ந்துவருகிறேன்

      -----------------------------------------------------------------------------------------

      மகாகவி பாரதியும், பாவேந்தா் பாரதிதாசனாரும்
      இரவு, பால் காய்ச்சிக் குடிப்பதற்காகச் சமையல் அறைக்குச் சென்றாா்களாம்
      இருவரும் மிகவும் கடினப்பட்டுப் பால் காய்ச்சி குடித்தார்களாம்.

      அன்று இரவு முழுவதும் ஏதோ ஒரு சிந்தனையில் மகாகவி இருந்ததாகவும்
      காலையில் எழுந்தபொழுது மகாவியின் அருகே பெண்மை வாழ்க என்னும்
      பாடல் எழுதி இருந்ததாக பாவேந்தா் எழுதுகிறாா்

      அன்று மகாகவி எழுதிய பெண்மை வாழ்கவெனும் பாடல்
      இன்றும் பால்போல் சுவைக்கிறது

      ---------------------------------------------------------------------------

      கலையும் இனிய எஞ்சலுமே
      கதைத்த சொற்கள்! அப்பப்பா!
      நிலையும் இழந்து நிற்கின்றேன்!
      அலைபோல் தொடரும் இவா்ஆசை!
      மலையும் கடலும் வேண்டுமென
      மங்கை இருவா் கேட்கின்றார்!
      சிலையும் சிலையும் பேசுவதாய்ச்
      சிந்தை செய்து மகிழ்கின்றேன்!

      கவிஞா் கி. பாரதிதாசன்
      தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

      Delete
    3. ஐயா :)) நாங்க நல்ல பிள்ளைங்க மிரட்ட மாட்டோம் சும்மா விளையாட்டுக்கு :)
      விரைவில் சமைத்து அசத்துங்க இந்த பதிவுகளை பார்த்து !!

      Delete
  21. இங்கும் தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சியின்னா அது ஆண்களின் அறுசுவை நேரம்தான். பெண்கள் மிகக் குறைவு.
    நல்ல சமையல் குறிப்புகள் கொடுத்த தளங்களின் அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    .//..(நான் மிரட்டவில்லை ).// நம்பிட்டோம்.
    உங்களின் அனுபவ பகிர்வுடன் அழகான தொகுப்பு அஞ்சு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ப்ரியா :) எங்க அப்பாவே எவ்ளோ நல்லா சமைப்பார் தெரியுமா :)
      நம்பனும் ப்ரியா ..நான் மிரட்டவில்லை :) வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி

      Delete
  22. தங்கள் அறிமுகத்தை வரவேற்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சகோ

      Delete
  23. அடுத்தவர் இவர் :)உருகி உருகி காதலித்தாலும் சமையலும்
    நல்லாவே செய்யறார் PANNA COTTA .////ஐய்யோ!!!!!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. அண்ணா :) இப்பெல்லாம் அவர் சமையல்அறையில்தான் இருக்கிறார் என்று கேள்வி :)

      Delete
    2. இது எல்லாம் வேலைத்தளத்தில் இருந்து சுட்டது யோகா ஐயா அறிவார்! வீட்டில் இன்னும் ஆத்துக்காரிதான் எஜமானி!

      Delete
    3. சமையல் அறை என் தொழில் இப்ப பாரிசில்!ஹீ அதுதான் அதிகம் வெளியில் விடுவது இல்லை எஜமானும் எஜமானியும்!ஹீ

      Delete
  24. இன்றைய சமையல் கலை வல்லுனர்கள்(!?){ஆண்கள்} எல்லோருக்கும்!!!!!!!!!!!வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அண்ணா

      Delete
    2. அடதனிமரம் என்னையும் அதில் சேர்த்துவிட்டாங்க அஞ்ச்லின் அக்காள் யோகா ஐயா என்னத்தைச் சொல்ல!ஹீ

      Delete
  25. இன்றைய அறிமுகத்தில் சிலர் புதிய முகங்களைக் கண்டேன்,நன்றி தங்கச்சி!

    ReplyDelete
  26. இன்னமும் சில பெண்கள் 'சுடுநீர்'(வெந்நீர்) வைக்கவே தெரியாமல்,குடும்ப வாழ்க்கைக்குத் தயாராக உள்ளனர்.அவர்களுக்கு,நன்றாக சமைக்கத் தெரிந்த ஆண்கள் வாய்க்கக் கடவது,ஹ!ஹ!!ஹா!!!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அண்ணா :) முதலில் அவங்களுக்கு கிச்சனை சுத்திகாண்பிகனும் :)
      நானும் வழிமொழிகிறேன்

      Delete
    2. இப்ப எல்லாம் பெண்கள் அதிகாரிகள் §ஈஈ

      Delete
  27. தட்டில் உள்ள நொறுக்குகளை எடுத்துகிட்டு ருசித்து சாப்பிட்டுக் கொண்டு பதிவுகளை படித்தேன்.
    சுவையோ சுவை.

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அக்கா //நொறுக்கு நமக்கு மட்டும்தான் அக்கா ..சிங்கங்களுக்கு ஒன்லி சோடா

      Delete
  28. 'எங்களை'யும் எங்கள் ஊறுகாயையும் ப்ரமோட் செய்ததற்கு நன்றி! எங்களுடன் இடம்பெற்றிருக்கும் சமையல் வல்லுனர்களுக்கும் எங்கள் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் :) இஎமிகா //பேரே கலக்கலா இரூக்கெ :) வருகைக்கும் சக வல்லுனர்களை பாராட்டியதற்கும் மிக நன்றி

      Delete
  29. திண்டுக்கல் தனபாலன் /..மிக்க நன்றி சகோ ...
    நண்பர்களே ..work சென்று வந்து அனைவருக்கும் பதில் அளிக்கின்றேன்

    ReplyDelete
  30. பாரம்பர்ய மிக்க நொறுக்குத் தீனிகளுடன் பன்னீர் சோடாவும்
    வழங்கியமைக்கு மிக்க மகிழ்ச்சி..

    ’’உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்..’’ - என்பது முதுமொழி..

    நல்ல சுவையான தளங்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி..

    ReplyDelete
    Replies
    1. அண்ணா !!! வெயிட் வெயிட் !! நொறுக்கு பெண்களுக்கு ,..சமைக்க போனா சிங்கங்களான உங்களுக்கெல்லாம் தான் பன்னீர் சோடா :) வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

      Delete
    2. இருந்தாலும் பரவாயில்லை.. ஓரமா கொஞ்சம் போல..
      நான் சமைக்கப் போன சிங்கம் ( !? ) என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்!..

      Delete
  31. அன்புள்ள நிர்மலா,

    வணக்கம்.

    இன்றைய வலைச்சரப்பதிவினை மிகவும் சுவையாகக் கொடுத்துள்ளீர்கள் போலத் தெரிகிறது. பாராட்டுக்கள்.

    //முதலில் இவர்

    ‘ஆஹா என்ன அழகு ! .... அடையைத் தின்னு பழகு !!’
    என்று அடை சாப்பிட அழைக்கின்றார்

    ‘வெண்ணிலவை தொட்டு முத்தமிட ஆசை
    மிளகாய் பொடிகொஞ்சம் தொட்டுக்கொள்ள ஆசை’

    என்று பாட்டு பாடி அழைக்கின்றார் :)

    சும்மா சொல்லக் கூடாது.

    அருமையான சுவை !!//

    சமையல் குறிப்புகள் பற்றி அடியேன் முதன்முதலாக நகைச்சுவையுடன் எழுதி மாபெரும் வரவேற்புகள் [Todal No of Comments: 268 + 166] பெற்று, பரிசினையும் வாங்கிக்கொடுத்த என் பதிவுகளை இன்று இங்கு வலைச்சரத்தில் அடையாளம் காட்டி அறிமுகம் செய்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது ..... நிர்மலா.

    தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    இந்தத்தகவலை முதன்முதலாக எனக்கு இன்று அறிவித்த அன்பு நண்பர் திண்டுக்கல் திரு. தனபாலன் அவர்களுக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. மறக்க முடியுமா !! அந்த அடை மற்றும் மிளகாய் பொடியை :)
      அண்ணா நான் வேலைக்கு போய்விட்டேன் அதான் தகவல் தெரிவிக்க தாமதம் ஆகிடுச்சி ..ஆனா சகோ தனபாலனுக்கு நானும் நன்றி சொல்லிகிறேன் இங்கும்

      Delete
  32. Avvvv vaazhththukkal anju kalakkiddinka. Best wishes to all.
    me kku fever ...orange kudichchu bed rest edukkiren:). ... will come soon ... tamil comments poda :).

    ReplyDelete
    Replies
    1. என்னது ! ஜுரமா ..இங்கே யாரோ பழரச ரெசிப்பி மற்றும் வெந்நீர் ரசிப்பி கொடுத்தாங்க அதைபார்த்து செய்து சாப்பிட்டு வாங்க ஈவ்னிங்

      Delete
  33. நளபாக ஸ்பெஷல் அறிமுகம் அசத்தல்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சுரேஷ் வருகைக்கும் வாழ்த்தியதற்கும் மிக்க நன்றி!

      Delete

  34. வணக்கம்!

    நொறுக்குத் தீனிகளை நோக்கி..நான் வந்தேன்!
    முறுக்கு மிகஅருமை! மூளை - பொறுக்குமோ?
    இன்லட்டு வாசத்தை! இன்றை வலைச்சரம்
    பொன்னிட்டு வைத்த பொலிவு!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கவிஞர் ஐயா

      Delete
  35. பலகாரம் எடுத்து கொண்டேன், அனைவருக்கும் வாழ்த்துக்கள் , பெண்களை விட ஆண்கள் தான் சமையலில் மிகவும் அசத்துவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. .ஆமாம் :) நிறைய சமையல் பதிவர்கள் ஆண்களில் இருக்காங்க ஜலீ

      Delete
  36. நளபாகம் இன்று வித்தியாசமான தொகுப்பு அதுவும் சோடா தனிச்சுகம்!

    ReplyDelete
  37. பலரும் சமையலில் ஜாம்பாவான்கள் அதில் என்னையும் அறிமுகம் செய்ததுக்கு என் நன்றிகள் இந்த ஊக்கிவிப்பு இன்னொரு அம்பலத்தார் வார்தையின் ஆசரீரி என்பது போல இருக்கு! சமையல் பதிவு எழுதுவதை விட தொடர் மீதுதான் உருக்கம்!ஹீ

    ReplyDelete
  38. பாடல் தனித்துவம் அதுவும் வடக வத்தல் ஆசை!ஹீ அது ஒரு காலம்! நல்ல பாடல் அறிமுகத்துக்கு நன்றி சீலா மீன் தனித்துவம்!ம்ம் தினமும் பாடல் ஐபோனில் இனிக்கேட்க ஆசை!ஹீ

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நேசன் :)

      Delete
  39. //
    சமையலில் நளபாகம் :)
    ➦➠ by: Angelin
    ////

    தலைப்பை பார்த்ததும் எங்கேயோ இடிக்குதே.... அப்போ நாளைக்கு தமயந்தி பாகமா?? :).. வர வர அஞ்சுவுக்கு கிட்னி ரொம்பத்தான் ஸ்பீட்டா வேர்க் பண்ணுதே... சூப்பர்... தலைப்பிலயே கலக்குறீங்க அஞ்சு.... கீப் இட் மேல:).

    அனைத்து நளபாக அறிமுகத்தினருக்கும் வாழ்த்துக்கள்!!!!... தொடர்ந்தும் இப்படியே சமைத்து :)... சமையலைத் தொடர வாழ்த்துகிறேன் :)... உஸ்ஸ் அப்பாடா எப்பூடியாவது உசுப்பேத்தி உசுப்பேத்தி அனைவரையும் சமைக்கப் பண்ணிடோணும் :). (நான் எம் பாலரைச் சொல்லல்லே:)).

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அதிராவ் .:)

      எங்கே இடிக்குது :) இருங்க கட்டை எடுத்து வரேன் :)

      Delete
  40. //இத்துறை எனும் அளவுக்கு நிறைய ஆண்கள் சமையல் துறையில் /////////கோலோச்சுகிறார்கள் . ///////// றீச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஓடியாங்கோஓஓஓஓஓஓஓ... விளக்கம் பிளீஸ்ஸ்:) , அஞ்சு இப்போ பிஏச்டி முடிச்சிட்டா தமிழில:)... எனக்கு இது புரியவே இல்லை .. ஒருவேளை, இச் சொல் படிப்பிச்ச அன்று, மீ, அப்செண்ட்டாக இருந்திருப்பேனாக்கும்:))

    ReplyDelete
    Replies
    1. ஆமாமா :) தமிழில் டி //எடுத்தவர் ஆயிற்றே நீங்க

      Delete
  41. அனைவரது சமையல் குறிப்புக்களும் பார்த்து சமைக்கோணும் போல இருக்கு, பார்ப்போம்... முடிந்தால் முயற்சி பண்ணுறேன்... எப்பவும் பெண்கள் குறிப்பு பார்த்து சமைத்தாச்சு.. இனி மாத்தி சமைப்போம்...

    ReplyDelete
    Replies
    1. ஐயோ நான் கண்டியில் மங்கோ யூஸ் கிடைக்காமல் கண்டி தெப்பக்குளத்தில் தனிமரமாக குதிக்கப்போறன் காரணம் பூசார் தான் மகா ஜனங்களே! மங்கோ யூஸ் நானும் ஐராங்கனியும் குடிக்க காத்து இருந்தும் இன்னும் கண்டிக்கு வரவில்லை மகாராணி!ஹீ

      Delete
  42. ருசியான பகிர்வுகள்! அங்கங்கே எட்டிப் பார்த்தேன், எல்லாரின் குறிப்புகளும் வாயூர வைக்கின்றன. அனைவருக்கும் பாராட்டுக்கள்! :)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மஹி ..எல்லாம் நிறைய போட்டியாளர்கள் உங்களுக்கு :))

      Delete
  43. ஏகப்பட்ட நளன்கள் இருக்காங்க போல!!!!!

    இனிய பாராட்டுகள்.

    அந்த தட்டில் இருக்கும் அதிரசத்தை எடுத்துக்கிட்டேன். நன்றீஸ்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி துளசிக்கா ..எல்லாம் நமக்கே எடுத்துக்கோங்க :)

      Delete
  44. ஏஞ்சலின் நீங்கள் இந்த வார வலைச்சரம் ஆசிரியரா. அதுவும் இந்த பதிவு மிகச் சுவை. ஏயப்பா இவ்வளவு நல்ல நளன்கள் இருக்கிறார்களா..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வல்லிம்மா ..ஆமாம் :) நிறைய சமையல் பதிவர்கள் ஆண்களில் இருக்காங்க

      Delete
  45. எப்போதாவது கிடைக்கும் நேரத்தில் சமையலறை முயற்சிகள் செய்யும் என்னை நளபாக பட்டியலில் இணைத்த தங்களுக்கும் தகவல் அளித்த நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் நன்றி. இரண்டாவது முறையாக எனது சமையல் குறிப்பு வலைச்சரத்தில் வெளியானது மகிழ்ச்சியாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

      Delete
  46. ஒரே வாரத்தில் ஒரு வலைசர ஆசிரியரால் வலைசரத்தில் 2 முறை வேறு வேறு தலைப்புகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனது தளமே அதுவும் உங்களால் மட்டுமே.


    உங்களால் எனது பதிவுகள் ரசிக்கப்பட்டு பகிரப்பட்டுள்ளது எனக்கு ஆச்சிரியத்தை அளித்ததோடு மகிழ்ச்சியையும் தருகின்றது. உங்களுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பல பல நன்றிகளும்..



    வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

      Delete