பதிவுகலகில் முதன் முதலில் ஆர்வத்துடன் எழுத நுழையும் எல்லோருக்குமே ஒரு பாராட்டு கிடைத்தால் அது பெரிய சந்தோசமாக அமையும். பின்னர் ஒவ்வொரு பதிவிலும் இப்படி நண்பர்கள் கிடைத்து, உங்களது நட்பு வட்டம் விரிவடைய ஆரம்பிக்கும்போது இந்த வலைஉலகம் ஒரு புதிய நண்பர்கள் வட்டத்தையும், அனுபவங்களையும் கொடுக்கும் ! நீங்கள் ஒருவரே எல்லா விஷயங்களையும் பற்றியும் எழுத முடியாது, ஆனால் இந்த பதிவுலகில் சிலரது எழுத்துக்களும், அவர்கள் எழுதும் பதிவுகளும் உங்களை சுண்டி இழுக்கும். மீண்டும் மீண்டும் அவர்களது பதிவுகளை தேடி செல்ல ஆரம்பிப்பீர்கள்..... அப்படி எனது நண்பர்களும், பதிவர்களும் ஆகிய இவர்களை பற்றிய சிறிய குறிப்புகள், உங்களுக்கு உதவும் என்றே கருதுகிறேன் !!
நான் சொல்லும் எல்லா பதிவர்களும் முதல், இரண்டு என்று எந்த வரிசையிலும் சொல்லவில்லை, எல்லோருமே எனக்கு பிடிதமானவர்களே !
திண்டுக்கல் தனபாலன் :
பதிவுகளில் இவரை செல்லமாக DD என்று அழைப்பார்கள். இந்த பதிவுகளில் பதிவர்களையும், அவர்கள் எதில் சிறந்தவர்கள் என்று உங்களுக்கு சந்தேகம் என்றாலும் இவரை கேட்கலாம்..... எந்த பதிவுக்கும் முதல் கருத்து இவரோடதாகதான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை ! இவரது பதிவுகளில் திருக்குறளையும், பழைய பாடல்களையும் சேர்த்து இவர் எழுதுவது அனைவரையும் கவரும். இப்போது இவர் எழுதி வரும் பதிவு எழுதுவது எப்படி என்ற தொடர் புதிய பதிவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒன்று !
ரமணி : தீதும் நன்றும் பிறர் தர வாரா.....
மரபு கவிதைகளில் இருந்து புது கவிதைகள் வரை இவர் எழுதும் கவிதைகளில் ஒவ்வொன்றும் வித்யாசமாக இருக்கும். ஒவ்வொரு கவிதைகளிலும் வார்த்தைகளில் விளையாடி இருப்பார். "யாதோ ரமணி" என்ற தள பெயரில் எழுதும் இவரது பதிவுகளை கவிதை பிடிக்காதவர்களுக்கும் பிடிக்கும் என்பதே இவர்களின் பதிவுகளின் சிறப்பு !!
மோகன்குமார் : வீடு திரும்பல்
சார் இப்போ ரொம்ப பிஸி, அதனால் நிறைய பதிவுகள் எழுதுவதில்லை, ஆனால் எப்போ எழுதுவார் என்று காத்திருக்கிறோம் ! சினிமா விமர்சனம், வானவில் என்ற கருத்து கதம்பம், பயண கட்டுரைகள் என்று எல்லா ஏரியாவிலும் புகுந்து விளையாடுவார், படிக்க படிக்க உங்களை இவரது எழுத்துக்கள் உள்ளே இழுக்கும். சக பதிவர்களை பாராட்டுவது, நட்புடன் இருப்பது என்று என்றுமே இனியவர், இவர் எழுதிய வெற்றி கோடு என்ற புத்தகம் அருமை !!
ராஜி : காணாமல் போன கனவுகள்
பதிவுலகின் அக்கா என்று இவரை செல்லமாக அழைக்கலாம். முதன் முதலில் பேசும்போதே பாசத்தை பொழிவார். இவர் எழுதும் சமையல் குறிப்புகள், மௌன சாட்சிகள், கைவினை பொருட்கள் செய்யும் முறை, புண்ணியம் தேடி என்று பதிவுகளில் நம்பர் 1 பிளாக்கர் ஆக இருந்து கொண்டு இருக்கிறார் !
ஜோதியர் இல்லம் ஜோதிஜி திருப்பூர் :
"டாலர் நகரம்" என்ற புத்தகத்தை எழுதியவர் என்றால் நீங்கள் சட்டென்று புரிந்து கொள்வீர்கள் ! சமூக கருத்துக்களை சுவைபட, அதே சமயம் ஆழமாக எழுதுபவர் இவர். ஒரு முறை சந்தித்து இருந்தாலும் அடுத்த முறை சந்திக்க வேண்டும் என்று ஆர்வமுடன் காத்திருக்கிறேன் !
மின்னல் வரிகள் : பாலகணேஷ்
இவருக்கு என்னை தெரியுமா என்று தெரியவில்லை, ஆனால் இவரது பதிவின் ரசிகன் நான். போட்டோ ஷாப் கொண்டு இவர் வெளியிடும் படங்கள் குபீரென்று சிரிப்பை வரவழைக்கும். சரிதா என்ற ஒரு கேரக்டர் வைத்துக்கொண்டு இவர் எழுதும் பதிவுகள் சிரிப்பை வரவழைக்கும். சூப்பர் ஜி !
சுருக்.... நறுக்....எனக்கு பிடித்த பதிவர்களின் லிஸ்ட்
"ஆஸ்ட்ரோ வணக்கம் " ராஜேஷ் - ஜோதிட மேதை, ஒவ்வொரு நாளும் ஜாதகங்கள், பரிகாரங்கள் என்று ஜோதிட சம்மந்தமாக மிகவும் எளிய முறையில் எழுதுகிறார்.
"ஜோக்காளி" பகவான்ஜி - தினமும் ஒரு நகைசுவை துணுக்கு என்று கலக்குவார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவையில் !
"சங்கவி" சதீஷ் - வெகுஜன நடையில் எல்லா விஷயத்தையும் பற்றியும் சுவைபட எழுதும் நண்பர் இவர், ஒரு முறை படித்தால் தொடர ஆரம்பிப்பீர்கள் !
"கோவை நேரம்" ஜீவா - கோயம்புத்தூர்காரர், ஒவ்வொரு உணவக பதிவும், இவர் சுற்றும் ஊர்களும் நம்மை பொறாமை படவைக்கும் ! நல்ல எழுத்து நடை !
"ஜகமணி" மணிராஜ் - ஒவ்வொரு கடவுளும், அதன் சிறப்புகளும் என்று பக்தி மனம் கமழும் பதிவுகள் இவருடையது.
"ரம்யம்" மாதேவி - படங்களுடன் பல்சுவை பதிவுகள் இவருடையது, நான் தவறவிடுவதே கிடையாது !
"கோவை" ஆவி - படமாகட்டும், பயணமாகட்டும் அதை சிறப்பாக எழுதுவார். எட்டு திக்கும் சுற்றும் இந்த ஆவி, உங்களை பயமுறுத்தாமல் மகிழ்விக்கும் வித்தைக்காரர்.
கரந்தை ஜெயக்குமார் - உள்ளம் விரிந்தால் உலகமே சொந்தம் என்று எல்லா தலைப்பிலும் எழுதுபவர், ஒவ்வொரு தலைப்பும் சிறப்பு என்பேன்.
"தளிர்" சுரேஷ் - தெளிவாக ஒவ்வொரு விஷயமும் புரியும்படியாக இருக்கும் இவரது பதிவுகள். கதைகள், ஜோக் என்று கலந்து கட்டும் இவரது பதிவுகள்.
"நிகழ்காலம்" எழில் - குழந்தைகள், அவர்களது மனம் என்று சமூக கருத்துக்களை மிக சிறப்பாக பதிபவர். தொண்டுள்ளம் கொண்டவர் !
ஆரூர் மூனா செந்தில் - இவரது விமர்சனத்தை பார்த்துதான் படம் பார்க்கவே செல்வேன். பார்க்க முரடன் போல தெரிந்தாலும் குழந்தை இவர் !
இன்னும் நிறைய நிறைய புதிய, மூத்த, சிறப்பு பதிவர்களை நாளையில் இருந்து பார்க்கலாம். இது நிறைய புதிய நண்பர்களை அடைய உங்களுக்கும், எனக்கும் உதவும் என்று நினைக்கிறேன் !!
அழகான பதிவுகளின் அருமையான அறிமுகம்..
ReplyDeleteஅனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!..
அனைவரும் நன்கு அறிந்தவர்களே.... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஉங்களின் நட்புகளில் பலர் எனக்கும் நட்பு என்பதில் மிக்க மகிழ்வு.... என்னை உங்களின் நட்பாய் அறிமுகப்படுத்தியதில் மிக்க மகிழ்ச்சி . நன்றி.
ReplyDeleteஅனைவரும் சிறந்த பதிவர்கள்...சிலர் என் நட்பு வட்டத்திலும்..
ReplyDeleteஅருமையான அறிமுகம்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅழகுத் தமிழில் அருமையான அறிமுகம்.
ReplyDelete"இப்போது திண்டுக்கல் தனபாலன் எழுதி வரும் 'பதிவு எழுதுவது எப்படி' என்ற தொடர் புதிய பதிவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒன்று!" என்ற தங்கள் அறிமுகம் நன்மை தரும் ஒன்று.
உங்களைத் தெரியாமலா,,,? நீங்கள் எழுதும் உணவக குறிப்புகளுக்கும் பயண அனுபவங்களுக்கும் நானும் ரசிகனே. கருத்திடவில்லை. அவ்வளவே..... என்னை ரசித்து இங்கே ஒரு நல்ல குழுவுடன் இணைத்து அறமுகம் தந்தமைக்கு மனம் நிறைய நன்றி சுரேஷ்.
ReplyDeleteஜகமணி" மணிராஜ் - ஒவ்வொரு கடவுளும், அதன் சிறப்புகளும் என்று பக்தி மனம் கமழும் பதிவுகள் இவருடையது.//
ReplyDeleteஎமது பதிவுகளை சிறப்பாக அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றிகள்..
அனைத்து அறிமுகப்பதிவர்களுக்கும் வாழ்த்துகள்..!
மிகச்சிறப்பான பதிவர்கள் அறிமுகம்! அவர்களுடன் இந்த சிறியேனையும் இணைத்து கவுரவித்தமைக்கு மிக்க நன்றி! தொடருங்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteரொம்ப நாள் அப்புறம் வலைச்சரம் பதிவு கண்ணுல படுது.... ஒரு வாரம் முன்னாடி தேடி பாத்துட்டு விசாரிக்கணும்ன்னு நினச்சுட்டே விசாரிக்க மறந்துட்டேன்... அவ்வ்வ்வ்.... இருந்தாலும் வெல்கம் back
ReplyDeleteமுதலில் எனது தள அறிமுகத்திற்கு நன்றி...
ReplyDeleteஅனைத்தும் தொடரும் அருமையான தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
தமிழ்மணத்தை இணைத்து விட்டேன்... +1
ReplyDeleteபகிர்ந்தவுடன் இணைத்து விடவும்... பலரும் வாக்களிக்க எளிதாக இருக்கும்... நன்றி...
நம்ம இனிய நண்பரின் இணைப்பு :
ReplyDeleteஅன்று http://aavippaa.blogspot.com/
இன்று http://www.kovaiaavee.com/
இதுவரை உங்களின் கமெண்ட் ஜோக்காளிக்கு வந்ததே இல்லை என்றாலும் ,ரசித்து வருவதற்கும் ,அறிமுகப் படுத்தியதற்கும் நன்றி !
ReplyDeleteத ம 2
நன்றி நண்பா..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅனைவருக்கும் .. வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவரும் நம்மாட்களே!!!!
ReplyDeleteஇனிய பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி நண்பரே
ReplyDeleteஎன்னையும் சிறந்த பதிவர்களுடன் இணைத்து
ReplyDeleteஅறிமுகம் செய்தது மிக்க மகிழ்வளிக்கிறது
இந்த வருடத்தில் உங்களுடன் சேர்ந்து ஒரு பயணம்
செய்ய வேண்டும் என்கிற எனது ஆசை பூர்த்தியாகும் என
நினைக்கிறேன்...வாழ்த்துக்களுடன்....
என்னை அறிமுகம் செய்தற்க்கு நன்றி நண்பரே
ReplyDeleteஇன்றைய அறிமுகங்களில் பெரும்பாலானவர்கள் நான் தொடர்ந்து படிக்கும் நண்பர்களின் தளங்கள்.....
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள். சிறப்பான தளங்களை அறிமுகம் செய்த உங்களுக்கு பாராட்டுகள்.
இன்றைய அறிமுகங்களின் எனக்குப் புதியவர்கள் பலர் உள்ளனர். அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.
ReplyDeleteThank you Suresh; Not sure whether I will have one more innings like earlier; But will write when I have time; now professional works occupy much of the time.
ReplyDeleteThanks for your love and affection.