Friday, May 2, 2014

திருவிழா போகலாம் வாங்க :)



திருவிழா போகலாம் வாங்க :)

                                                                               

                                                                         



வணக்கம் நட்பு பூக்களே ! அனைவரும் மே தின விடுமுறையை 
ஆனந்தமாக கொண்டாடினீர்களா ? 
எங்களுக்கு திங்கள் கிழமை அன்றுதான் விடுமுறை .
இன்று உங்களை திருவிழாவுக்கு அழைத்து செல்லப்போகின்றேன்:)
நான் சிறு வயதில் திருவிழா போயிருக்கின்றேன் .
அப்பா மருத்துவர் அதனால் கிராமத்தில் அவருக்கென தனி 
உபசரிப்பு உண்டு :)கிளிப்பச்சை வர்ண பாவாடை கட்டி ,தலையில்
 இரண்டு பக்கமும் pig tail ,(ரிப்பன் கட்டி அதுவும் பச்சை நிறம் )
சென்றது நினைவுக்கு வருது !

அப்பாவின் உதவியாளர் ஒரு அண்ணா இருந்தார் அவர் என்னை
கைபிடித்து வேடிக்கை காட்டி கொண்டிருந்தார் .. சேமியா 
போட்ட ரோஸ்மில்க் குண்டு ஐஸ் என்று நினைக்கிறேன் :)
 அதை சாப்பிட்டுகொண்டே பராக்கு பார்த்திட்டு நடந்து !!!
கூட்டத்தில் தொலைந்து போனேன் !!ஆனா ஒலிபெருக்கியில்
அறிவிப்பு தரும் முன்னமே எங்கம்மா என்ன கண்டுபிடிச்சிட்டாங்க !! 
எப்படி தெரியுமா நான் கட்டியிருந்த பச்சை கலர் பாவாடை :)ரிப்பன்
மணமாகும் வரைக்கும் எனக்கு ட்ரஸ் தேர்வு அம்மா தான் ..
அதுவரைக்கும் நான் அணிந்த உடைகள் எல்லாமே கலர் கலரா தான்
இருந்தது ..கல்லூரி படிக்கும்போது கூட பலர் என்னை கேட்பார்கள்
எதற்கு பள பள நிறங்களை தெரிவு செய்கிறார்கள் உங்கள் வீட்டில் ?
அதன் ரகசியம் எனக்கு தானே தெரியும் :)

இன்றுமுதல் சித்திரை திருவிழா ஆராவாரத்துடன் துவங்குகிறது .
அதற்கான அட்டவணை அனைத்தையும் ஒவ்வொரு நாள் 
 செல்ல விரும்புபவர்கள் குறித்துக்கொள்ளுங்கள் ...

முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா இங்கே 
ராஜேஸ்வரியக்காவின் பதிவு 

இங்கே வைகையில் வந்திறங்கிய வள்ளல் அழகர் என கணீர் 
குரலில் மிக அழகாக பாடுவதை கேளுங்கள் ! 
பாடகர் யார் தெரிகிறதா !!
பாடகர் நமது அன்பின் சீனா ஐயா அவர்கள்தான்  !  :)
                                                                                  
பல்வேறு திருவிழாக்கள் பற்றிய சில நினைவுகளை
பகிர்கின்றார்கள் இவர்கள் ..........................................


நல்லகாலம் பொறந்தாச்சு என்று கவிதை படிக்கின்றார் கல்பனா .
பூவனத்தில் இவர் சித்திரை திருவிழாவில் தொலைந்ததை
நினைவு கூறுகின்றார் ..திண்டுக்கல் மலை வாழையும் நீர்மோரும்
இவர் நீங்கா நினைவில் இருக்காம் .



தமிழகத்தில் இரண்டாவது பெரிய தெப்பக்குளம் மதுரை
மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் என்கிறார் சித்திரவீதிக்காரன் .
கலங்கிய கண்களுடன் இவர் வைகையை பார்க்க காரணம்
இங்கே சென்று படிங்க இது மதுரை வாசகனின் நினைவலைகள் .


களிமண் ரேடியோவும் ,குழாய் ரேடியோவும் என இவரது
தேர்த்திருவிழா கால கிராமத்து நினைவுகள் ம்ம்ம் மிக அருமை ..
எந்நேரமும் காலுக்கு சாக்ஸும் ஷூவும் அணிந்த வெளிநாட்டில்
வாழும் எமது பிள்ளைகள் இவற்றையெல்லாம்
அனுபவிக்க கொடுத்து வைக்கவில்லை :(

சித்திரை திருவிழாவும் தொலைந்த மிதிவண்டியும்  இங்கே !


குதிரைகள் கலக்கிய குருநாத சுவாமி கோவில் திருவிழா ..
திருவிழாவில் அறிவிப்பு :)//யாராவது குழந்தையைக் காணவில்லை
என்று வந்தால் குதிரைச் சாட்டை தயாரா இருக்கு, வெளுக்க//மேலும்
படிச்சு பாருங்க மிகவும் அருமையாக இருக்கு :)


அனைவரையும் தஞ்சை சித்திரைப் பெருவிழாவில் கலந்துக்கொள்ள
அழைப்பு விடுக்கிறார் இங்கே துரை செல்வராஜ் ஐயா .


இத்தனை பதிவுகளையும் சேகரித்தபோது எனக்கே இப்ப நம்மூர்
திருவிழா பார்க்கணும் போல ஆசையாக இருக்கு !
நம்மூரில் ஒவ்வொரு காரண காரியத்துடன் விழா கொண்டாடுவாங்க
ஆனா வெளிநாட்டினர் வெங்காயம் பூண்டு ஆஸ்பாரகசுக்கு எல்லாம்
திருவிழா கொண்டாடுறாங்க :)
           

இப்போது சில வெளிநாட்டு திரு விழாக்களை பார்ப்போம் :)

பல உலக நாடுகளின் அறுவடை திருவிழா பற்றி இவர்
இங்கே குறிப்பிட்டுள்ளார் மயிலை முத்துகள் தளத்தில் .



வெங்காயத் திருவிழா  சுபா அவர்கள் அழகிய படங்களுடன் 
சொல்கிறார் 
ஒரு பூதம் ஒன்று கிராமத்து மக்களுக்குத் தொல்லை 
கொடுத்துக் கொண்டிருந்ததாம். 
சந்தையில் வெங்காயம் விற்கும் பெண் ஒருத்தி அந்த 
பூதத்தைப் பிடித்து வெங்காயத்திற்குள் வைத்து விட்டாளாம். 
பூதம் தொலைந்த அந்த சந்தோஷத்தைக் கொண்டாட வேண்டாமா?
அதற்குத் தான் வெங்காயத் திருவிழா.

கில்ராயில் நடைபெறும் பூண்டு திருவிழா !!! நிறைய படங்களுடன்
சென்று படிங்க இவர் தளத்தில் .
சோமபான திருவிழா :) பியர் திருவிழா இங்கே சென்று வாசிங்க .

கவலைகளை மறந்து உற்சாக கொண்டாட்டம்  ஜெர்மானிய 
ரோசன் மொன்டாக் ..gowsy அக்கா பதிவில் .

ஆரஞ்சு திருவிழா
ஒவ்வோரு வருடமும் பிப்ரவரி மாதம் கொண்டாடபடும் இந்த
விழாவிற்கு இந்த வருடம் பயண்படுத்திய ஆரஞ்சுகளின்
எண்ணிக்கை 500 டண் ஐ தாண்டியதாம்.


சொக்கன் சுப்பிரமணியன் :) இவர் திருவிழா போனதை 

பத்திரிகையில் போட்டார்களாம் :)
நீங்களும் பாருங்க உண்மையா தாங்க சொல்கிறார் :)


தக்காளி திருவிழா பற்றி சொல்கின்றார் ஜாபர் சாதிக்
ஒரு மணி நேரம் மட்டுமே நடக்கும் இந்த திருவிழாவில்
பயன்படுத்தப்படும் தக்காளியின் எடை எவ்வளவு தெரியுமா 125 டன்...!




திருவிழா சுற்றிபார்த்ததில் அலுப்பா இருக்கா இந்தாங்க ஒரு 
ஜிகர்தாண்டா :)







நாளை மீண்டும் சந்திப்போம் :)

அன்புடன் ஏஞ்சலின் .





67 comments:

  1. மீ த ஃப்ர்ஸ்ட்டூ! :) இருங்க படிச்சிட்டு வரேன்! ;)

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகை தந்த மகிக்கு பஞ்சுமிட்டாயும் ஜிகர்தாண்டா ஸ்பெஷல் கிளாசும் :)

      Delete
  2. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதுத் தொகுப்பா கலக்கறேள்..சூப்பர்! :) திருவிழா போக இப்ப நேரமில்லை..அப்புறமா மறுக்கா:) வந்து பாத்துக்கறேன்.

    பளப்பளப்பள ஆடைகளுக்கு இப்படி ஒரு ரகசியமா...ஹாஹா!! ஹீஹிஹிஹ்ஹி!!

    ReplyDelete
    Replies
    1. பளபளா உடை :) ம்ம்ம் இப்போ நினைச்சாலும் சிரிப்பு வருது ..திருமணம் முடிஞ்சப்போ எனக்கு கிடைத்த புடைவைகள் இன்னமும் பத்திரமா இருக்கு எல்லாமே ஜில் ஜில் ஜிகினா பச்சை பிங்க் நிறம்தான் :)

      Delete

  3. வணக்கம்!

    பஞ்சிமிட்டாய் போன்ற பதிவுகளை இன்றென்றன்
    நெஞ்சிலிட்டாய்! வண்ண நினைவிட்டாய்! - வஞ்சியே!
    வாழ்த்தி மகிழ்ந்தேன்! வடித்த வலையழகில்
    தாழ்த்திப் பணிந்தேன் தலை!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா ஒவ்வவொரு நாளும் அருமையான கவி பாடி என்னை ஊக்குவிக்கின்றீர்கள் வருகை தந்து எனை உற்சாகமூட்டுவதர்க்கு மிக்க நன்றி கவிஞர் ஐயா

      Delete
  4. அன்பின் ஏஞ்சலின் - ஏற்ற பொறுப்பினை சிறப்பாகச் செய்ய்கின்றமைக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா !

      Delete
  5. அன்பின் ஏஞ்சலின் - ////வைகையில் வந்திறங்கிய வள்ளல் அழகர் என கணீர் குரலில் மிக அழகாக பாடுவதை கேளுங்கள் !
    பாடகர் யார் தெரிகிறதா !! //// பெயரையும் போட்டு விடுங்களேன் - ஏன் சஸ்பென்ஸ் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. நேற்று நள்ளிரவு பதிவை வெளியிட்டு சென்றுவிட்டேன் :) இப்போதுதான் பார்த்தேன்
      தங்கள் பெயரையும் இணைத்துவிட்டேன் ஐயா :)

      Delete
  6. ஏஞ்சலின்,

    வித்தியாசமான பதிவுங்க‌. அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    'பளிச்' நிற உடையின் மகத்துவம் புரிந்தது. ஜிகர்தாண்டா எல்லாம் பார்த்ததுகூட கிடையாது. அதனால் 'காட்டன் கேன்டி'யுடன் திருவிழாவை சுற்றிப் பார்க்கப் புறப்பட்டாச்சு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சித்ரா :) வருகை தந்து என்னை உற்சாகபடுத்துவதற்கு மிக்க நன்றி ....ஜிகர்தாண்டா அங்கில்லையா :)நாம திறந்தா போச்சு முருகன் கடையை
      ஒபாமா அவர்களே சித்ரா இருக்குமிடத்தில் விரைவில் முருகன் இட்லி கடை திறக்க ஆவன செய்யுங்கள் :)
      :)

      Delete
  7. ஏஞ்சல் இன்றைக்கும் பகிர்ந்த தொகுப்பும் மிக அருமை. ஹைலைட்டே வைகை அழகர் தான்.:) !

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஆசியா :) வருகை தந்து என்னை உற்சாகபடுத்துவதற்கு மிக்க நன்றி ..வைகை அழகர் பாடல் பாடியது நம்ம சீனா ஐயா அவர்கள் தான் :)

      Delete
  8. ஏஞ்சல் , நானும் சுசிந்தீரம் திருவிழாவில் தொலைந்து கிடைத்தேன். காவல்துறையினர் தங்கள் இடத்திற்கு கொண்டு போய் தண்ணீர் பந்து, மிட்டாய் பெட்டி(ஒலைகூடையில் கிடைக்கும்) வாங்கி கொடுத்து ஒலிபெருக்கியில் அறிவித்தார்கள் அதை கேட்டு அம்மா வந்து அழைத்து சென்றார்கள்.

    திருவிழா பதிவுகள் சிலவற்றை படித்து இருக்கிறேன்,
    மற்றவைகளை படித்து விடுகிறேன்.
    திருவிழா பஞ்சுமிட்டாய் எடுத்துக் கொண்டேன்.
    நன்றி. உங்களுக்கும், இன்று வலைச்சரத்தில் இடம் பெற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. காணாம் போன அந்த நேரம் உங்களுக்கு படபடப்பா இருந்திருக்குமே !!...மிட்டாய் ஓலைபெட்டி !!! எனக்கு சின்னத்தில் யாரரோ ஊரில் இருந் து கொண்டு வந்தாங்க !!! வருகைக்கும் நினைவுகளை பகிர்ந்ததர்க்கும் மிக்க நன்றி அம்மா

      Delete
  9. //வைகையில் வந்திறங்கிய வள்ளல் அழகர் என கணீர் குரலில் மிக அழகாக பாடுவதை கேளுங்கள் !
    பாடகர் யார் தெரிகிறதா !! //

    சுகிசிவம் அவர்களா? அப்படித்தான் நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கோமதியம்மா அந்த பாடலை பாடுபவர் நமது சீனா ஐயா அவர்கள்தான் :)

      Delete
  10. திருவிழாவை சுத்திப் பார்த்தாச்சு. இன்னொரு ஜிகர்தண்டா கிடைக்குமா!?

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா :) உங்களுக்கு இல்லாததா ..வருகைக்கும் ரசிதத்ர்க்கும் மிக்க நன்றி ராஜி ..
      ஆமா நீங்க ஒருதரம் கூட காணாம போகல்லியா ??

      Delete
  11. வெள்ளிக்கிழமை.........+திருவிழா,அழகான பகிர்வு!பதிவர்கள் அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்!'ஜிகர்தண்டா' கொடுத்த தங்கைக்கும் நன்றிகள்!!!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் அன்பான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி அண்ணா ....
      பின்குறிப்பு //நானும் ஜிகர்தாண்டா செய்வேன் என்பதை தைரியமாக (கலை இல்லாத காரணத்தால் )சொல்லி செல்கின்றேன் :)

      Delete
  12. ஒலிபெருக்கியில்
    அறிவிப்பு தரும் முன்னமே எங்கம்மா என்ன கண்டுபிடிச்சிட்டாங்க !!
    எப்படி தெரியுமா நான் கட்டியிருந்த பச்சை கலர் பாவாடை :)ரிப்பன்/

    லுக் அட் மீ கலர் என்று செல்லப்பெயர் கொண்ட வண்ணங்கள்.. வாங்கும் போதே சொல்லுவார்கள் திருவிழாவில் தொலைந்தால் கண்டுபிடிக்க வசதியாக இருக்கும் என்று..

    திருவரங்கத்தில் வருடாவருடம் தொலைந்து போவோம் ..!

    \என் தங்கை ஆண்டாள் சந்நிதி அருகே கண்டுபிடித்ததால் அதுவரை வைத்திருந்த பெயர் மாறி ஆண்டாள் என்றே அழைக்கப்படுகிறார்..!

    ReplyDelete
    Replies
    1. அருமையான நினைவுகள் அக்கா ...எங்களுடன்பகிர்ந்ததத்ர்க்கு மிக்க நன்றி /இங்கே இரவு நேரங்களில் இருட்டில் ஒளிரும் ஆடைகளை அணிவார் ..தூரத்திலேயே அலெர்ட் செய்வதுபோல :)முந்தின காலத்தில் கூட்டம் குறைவு ...
      இப்போ திருவிழாக்காளில் //சாட்டை ட்ரீட்மென்ட் //உதவும்னு நினைக்கின்றேன் :)

      Delete
  13. எமது பதிவை சித்திரைத்திருவிழாவில் அறிமுகப்படுத்தியதற்கு
    நிறைவான நன்றிகள்..

    ReplyDelete
  14. இத்தனை விதமான திருவிழாக்களா, ஒவ்வொன்றையும் இப்பொழுது தான் சுத்திப்பார்க்க ஆரம்பித்திருக்கிறேன்.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. இந்த திருவிழாவில், எங்கள் ஊர் திருவிழாவையும் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சொக்கன் :) நான் பேப்பர்ல உங்க படத்தை பார்த்தேனுங்க உடனே இங்கே பகிர்ந்து விட்டேன்
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  16. அன்பின் நிரமலா, வணக்கம்.

    இன்று பஞ்சு மிட்டாயும் ஜிகர்தண்டாவும் ருசியோ ருசியாக உள்ளன.

    அதைவிட ருசி எது தெரியுமா?

    //முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா இங்கே ராஜேஸ்வரியக்காவின் பதிவு //

    ;)))))

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பிரியமுள்ள கோபு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா !

      Delete
  17. எஞ்சலின் என்னுடைய தளத்தையும் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி :-)

    இது பற்றி தெரிவித்த ராஜேஸ்வரி அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ !

      Delete
  18. பஞ்சு மிட்டாயும், ஜிகர்தண்டாவும் ரொம்ப டேஸ்ட்....///

    இன்றும் எனது பதிவை அறிமுகம் செய்தமைக்கு நன்றி அக்கா....///

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ !

      Delete
  19. திருவிழாவும் பஞ்சு மிட்டாயும் ஜிகர் தண்டாவும் அருமை..
    சரி!..
    முட்டை பலூனும் ரங்க ராட்டினமும் எங்கே!..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா ! முட்டை பலூன் உடைஞ்சி போச்சி ..ராட்டினம் டிக்கட் மட்டுன்ந்தான் இருக்கு :)

      Delete
  20. இன்றைய வலைச்சரத்தில் - தஞ்சையம்பதி - தளத்தினை அறிமுகம் செய்ததுடன்,
    பஞ்சு மிட்டாயும் ஜில்லென்று ஜிகர்தண்டாவும் வழங்கியமைக்கு அன்பின் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  21. இன்றைய பதிவு மிக சிறப்பு..அனைத்து புதிய பதிவர்களின் அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் ஏஞ்சலின்!!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேனகா :)

      Delete
  22. இன்று திருவிழா பகிர்வா அஞ்சு.பழைய ஞாபகங்களையெல்லாம் நினைவுபடுத்திவிட்டீர்கள். நான் தொலைந்து போனது இல்லை.
    ஜிகிர்தண்டா, பஞ்சுமிட்டாய் உடன் இன்றைய அறிமுகங்கள் அருமை. பாராட்டுக்கள் அஞ்சு.
    அனைத்துப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. சீனா ஐயாவின் குரலில் பாடல் காணொளி அருமையாக இருக்கு.

      Delete
    2. வருகைக்கும் கருத்துக்கும் பாடலை ரசித்ததற்கும் மிக்க நன்றி ப்ரியா :)

      Delete
  23. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ

    ReplyDelete
  24. வந்தேன் வந்தேன் திருவிழாக்கு .............திருவிழா வில் தொலைஞ்சிப் போன பிள்ளையா நீங்க ..same same பப்பி சேம் அஞ்சுக்கா

    ReplyDelete
    Replies
    1. நான் மாத்திரம் உங்க வீட்டுக்கு பக்கத்தில் இருந்திருந்தேன் ! முதல் வேலையா கண்ணை கட்டி உன்னை கொண்டு வேற ஸ்டேட்ல விட்டுட்டு வந்திருப்பேன் :)

      Delete
  25. Super post Anju. Best wishes to all thiruvila. Special wishes for Cheena anna.

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆ குருவே வயக்கம்

      Delete
    2. என்னிக்காவது அக்காவுக்கு வணக்கம் சொல்லியிருக்கியா நீ ??

      Delete
    3. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அதிறாவ் :)

      Delete
  26. ல்லூரி படிக்கும்போது கூட பலர் என்னை கேட்பார்கள்
    எதற்கு பள பள நிறங்களை தெரிவு செய்கிறார்கள் உங்கள் வீட்டில் ?../////////////நாங்கலாம் ராமராஜன் fans

    ReplyDelete
    Replies
    1. garrrr :)யெஸ் :) கலை யூ டூஊ

      Delete
  27. அற்முகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் ...சீனா அய்யா குரல் சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கலை :)

      Delete
  28. திருவிழா என்றாலே தனித்துவம் அதுவும் கூட்டுக்குடும்பத்தில் ரசித்த கடைசித்தலைமுறை நாம் என்பதில் வர்ணக்கலர் தனித்துவம்:))

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி nesan.

      Delete
  29. தொடரும் சிறப்பான தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  30. திருவிழாவுக்கு வந்தேன்
    நல்ல அறிமுகங்களைக் கண்டேன்
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .

      Delete
  31. திருவிழாக்களை சுற்றி பார்க்க அனைவரது வலைகளையும் ஒரு வலம் வந்தால் போதும்.பஞ்சு மிட்டாயும், ஜிகர்தண்டாவுடன் பதிவிட்டது மிக அருமை..அனைவருக்கும் வாழ்த்துக்கள்/

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜலீலா :)

      Delete
  32. சிறப்பான திருவிழா....

    Budiya ka baal [பஞ்சுமிட்டாய்] மற்றும் ஜில் ஜில் ஜிகிர்தண்டா சுவையோ சுவை! இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

      Delete