இன்றைக்கு என் சக சினிமா பதிவர்கள் பற்றிய அறிமுகங்களைப் பார்ப்போம். அவர்களில் ஒருசிலர் ஏற்கனவே பிரபலமான பதிவர்கள் தான். இருந்தாலும் நான் விரும்பிப் படிக்கும் பதிவர்கள் என்ற முறையில் இங்கே பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
1.இயல் இசை நாடகம் சமூகம் - கருணாநிதி அர்ஜித்
இவரை முகநூலில் இங்கே பிடிக்கலாம். தான் ரசித்த திரைப்படங்கள், புத்தகங்கள் பற்றியும் தன் வாழ்வில் நடந்த அனுபவங்களையும் சுவைபட எழுதி வருகிறார். பழகுவதற்கு மிக எளிமையானவர். மற்றவர் மனம் புண்படும்படி ஒருவார்த்தை கூட பேசமாட்டார். அதனாலேயோ என்னவோ இன்னும் பிரபலமாகாமல் இருக்கிறார் :) :). தான் ஒரு அஜித் ரசிகன் என்று இவர் தன்னைப்பற்றிக் கூறிக்கொண்டாலும் பொதுவாக தமிழ்ப்படங்களின் ரசிகன் என்று சொல்லலாம். தமிழ்ப்படங்களின் மீது அவ்வளவு அக்கறை கொண்டவர். கிட்டத்தட்ட வாரத்திற்கு 2 படங்களுக்கு மேல் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து, தமிழ் திரையுலகை வாழவைத்துக்கொண்டிருக்கும் ஒருசில ஆட்களில் ஒருவர்.
கவிஞர், சிறுகதை எழுத்தாளர், விமர்சகர் என பன்முகங்கள் கொண்ட இவரின் பதிவுகளில் என்னைக்கவர்ந்த ஒருசில பதிவுகள் இதோ
2.பேயெழுத்து! - உமர் ஷெரீப்
இவரை முகநூலில் இங்கே பிடிக்கலாம். எப்போது பார்த்தாலும் பயத்தின் அழகியல், திகிலின் பயத்தியல் என்று திகில் படங்களைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கும் ஒரு திகிலான ஆள். ஆனால் நட்புடன் பழகுவதற்கு இனிமையானவர். "I'm not a horror fan. I'm the horror" என்று தன்னைப்பற்றிக் கூறிக்கொள்ளும் இவர் தீவிர கியர்மோ டெல்டோரோ விசிறி. வெறும் மூன்றாந்தர திகில் படங்களைப் பற்றியல்லாமல், உண்மையான க்ளாஸிக் திகில் படங்களைப் பற்றி நிறைய எழுதியுள்ளார். எனக்குத் தெரிந்து தமிழில் யாருமே இப்படி திகில் படங்களைப் பற்றி எழுதவில்லை. இவர் ஒருவர் தான் அந்த வேலையைச் செவ்வனே செய்து வருகிறார். விமர்சகராக மட்டுமல்லாமல் நல்லதொரு சிறுகதை எழுத்தாளராகவும் மின்னுகிறார்.
காமிக்ஸ், திரைப்படம், இலக்கியம், சிறுகதைகள், நாவல்கள் என நல்ல படைப்புகள் எதுவாயினும் ஆர்வமுள்ள இவரின் பதிவுகளில் "நாட்டாரியல், தொன்மங்களின் அழகியல்" போன்ற வார்த்தைகளை அடிக்கடி பார்க்க முடியும். :) இவரின் பதிவுகளில் எனக்குப் பிடித்த சில இதோ,
3.Blog about movies,music and much more... - சரண்குமார்
இவரை முகநூலில் இங்கே பிடிக்கலாம். நல்ல சிறுகதை எழுத்தாளரான இவர் வலைப்பூவில் சினிமா பற்றி மட்டுமே எழுதி வருகிறார். நல்ல இலக்கியம், திரைப்படங்களில் ஆர்வமுள்ளவர். தனிப்பட்ட முறையில் இவரது சிறுகதைகளைப் படித்திருக்கிறேன். கூடிய சீக்கிரம் அவற்றையும் வலைப்பூவில் வெளியிடுவார் என்று நம்புகிறேன். நல்லதொரு திரைப்படக் கதாசிரியராக வரக்கூடியவர்.
இவரது பதிவுகளில் ஒருசில,
ஹாரி பாட்டர். உங்களை குழப்பும் சில கோட்பாடுகள்.
Mad Detective (San taam) [2007] -- Hong kong
The Shining
ஆங்கிலத்தில் இவர் எழுதிவரும் வலைப்பூவிலிருந்து சமீபத்திய பதிவுகள் ஒருசில இதோ,
The Objective ( 2008 )
The Amazing Spiderman 2
Doll Master ( 2004 ) Korean
WADJDA (film)-2012-Saudi Arabic- ‘பெண்களின் நிழல்கள்…’
the BOOK THIEF (2013)-Film-‘‘ புத்தகங்களின் குரல்கள்…’’
Memento- A Nonlinear Masterpiece!
நாளை மற்றுமொரு 5 பதிவர்களின் வலைப்பூக்களோடு சந்திக்கிறேன்.
நன்றி.
ஆண்டிச்சாமி.
கில்லாடிரங்கா
இவரது பதிவுகளில் ஒருசில,
ஹாரி பாட்டர். உங்களை குழப்பும் சில கோட்பாடுகள்.
Mad Detective (San taam) [2007] -- Hong kong
The Shining
4.Thirst For Cinema - பரத்
இவரை முகநூலில் இங்கே பிடிக்கலாம். திரைப்படங்களின் மீது அளவுகடந்த ஆர்வமும், வெறியும் கொண்டவர். இவருக்குத் தெரியாத உலகத் திரைப்படங்களே கிடையாது என்று கூறுமளவுக்கு அபரிமிதமான திரைப்பட அறிவு கொண்டவர். எந்தவகையான (Genre) திரைப்படங்களைக் கேட்டாலும், எந்த மொழியில் கேட்டாலும் அதில் உள்ள நல்ல படங்களின் பட்டியலை, நொடியில் சொல்லிவிடுவார். காப்பி அடிக்கும் இயக்குனர்கள் இவரை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். :) வலைப்பூ மட்டுமல்லாமல் முகநூலில் Thirst For Cinema என்ற பெயரில் ஒரு குழுமத்தையும் நடத்தி வருகிறார். திரைப்படங்கள் பற்றிய ஆரோக்கியமான விவாதங்களில் பங்கெடுப்பதை கௌரவமாகக் கருதுகிறவர். திரைப்படங்கள் பற்றி யார் என்ன கேட்டாலும் முகம் சுளிக்காமல், மகிழ்ச்சியுடன் பதில் அளிக்கக் கூடியவர்.ஆங்கிலத்தில் இவர் எழுதிவரும் வலைப்பூவிலிருந்து சமீபத்திய பதிவுகள் ஒருசில இதோ,
The Objective ( 2008 )
The Amazing Spiderman 2
Doll Master ( 2004 ) Korean
5.By Paradox - Lijoe Jason
இவரை முகநூலில் இங்கே பிடிக்கலாம். இணையத்தில் நான் பார்த்ததிலேயே மிக மிக இளம்வயது பதிவர் இவர் தான். முகநூல் கணக்குப்படி வெறும் 14 வயதே ஆன இளம் பதிவர். தற்போது தான் புதிதாக வலைப்பூ தொடங்கி எழுதி வருகிறார். இவரது பதிவுகளில் சில,WADJDA (film)-2012-Saudi Arabic- ‘பெண்களின் நிழல்கள்…’
the BOOK THIEF (2013)-Film-‘‘ புத்தகங்களின் குரல்கள்…’’
Memento- A Nonlinear Masterpiece!
நாளை மற்றுமொரு 5 பதிவர்களின் வலைப்பூக்களோடு சந்திக்கிறேன்.
நன்றி.
ஆண்டிச்சாமி.
கில்லாடிரங்கா
இளம் பதிவர்களை ஊக்குவிக்கும் பதிவு... வாழ்த்துக்கள்...
ReplyDeleteபுதிய அறிமுகங்கள் § பகிர்வுக்கு நன்றி ! அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDelete_/\_ :) ;) (Y)
ReplyDeleteபுதிய அறிமுகங்கள் நன்று.
ReplyDeleteபுதிய அறிமுக தளங்களுக்கு நல்வாழ்த்துக்கள்!..
ReplyDeleteவணக்கம் சகோதரர்
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். தங்களின் வலைச்சர ஆசிரியர் பணி சிறப்பாக நடைந்தேற வாழ்த்துகள். சிறப்பாக தொடரட்டும் உங்கள் பணி.
This comment has been removed by the author.
ReplyDeleteThanks for your compliments - Bharath
ReplyDeleteரொம்ப நன்றிங்க என்னை ஆறிமுகப்படுத்தனதிற்கு.... அதே நேரம், இளம் பதிவர்களுக்கு இது நல்ல நேரம்... enjoy! பதிவை என்னை மாதிரி (http://byparadox.blogspot.com/) மொக்கையா கொடுக்காம செமையாக கொடுங்க... Okay!
ReplyDelete