அனைவருக்கும் வணக்கம்,
வலைச்சரத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு, பதிவுகளை எழுத வாய்ப்பளித்த தமிழ்வாசி பிரகாஷ் அண்ணன் அவர்களுக்கும், சீனா ஐயா அவர்களுக்கும் மிக்க நன்றி.
முதல் பதிவு சுயஅறிமுகப்பதிவாக இருக்க வேண்டுமென்பதால் என்னைப்பற்றி சில வார்த்தைகள்,
பெயர் : G.ஆண்டிச்சாமி
புனைப்பெயர் & வலைப்பூ : கில்லாடி ரங்கா
பொறியியல் கல்லூரியில் படித்துவிட்டு தற்போது பெங்களூரில் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறேன். மேலதிக விவரங்களுக்கு முகநூலில் இங்கே என்னை அணுகலாம்.
நான் ஏன் பதிவுலகிற்கு வந்தேன், எப்படி வந்தேன், அந்த இனிய விபத்து (இப்போ பதிவர்களும் இந்த வார்த்தைய யூஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாய்ங்களா பலே பலே) எப்படி நடந்தது என்று அறிய விரும்பினால் இந்தப்பதிவில் சென்று தெரிந்துகொள்ளலாம். அங்கே என்னைப்பற்றிய முழுமையான அறிமுகமும் இருக்கிறது.
பதிவுலகில் காலடி எடுத்து வைத்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளே முடிந்த குட்டிப்பையன் நான். என்னைக் கவர்ந்த திரைப்படங்களைப் பற்றி எழுதலாம் என்ற எண்ணத்தில் ஆரம்பித்ததே இந்த கில்லாடி ரங்கா வலைப்பதிவு. ஆரம்பகாலத்தில் பேச்சு வழக்கில் மட்டுமே எழுதினேன். அதுதான் என் பாணியாகவும் இருந்தது. அதுதான் சில படங்களைக் கலாய்ப்பதற்கும் வசதியான மொழியாக இருந்தது. நீதானே என் பொ(பு)ன்வசந்தம் (2012) என்ற பதிவுதான் நான் முதல் முதலாக எழுதியது. அதைத்தொடர்ந்து A History of Violence(2005) (18+) - பாட்ஷா ரீமேக், சூது கவ்வும் (2013) - செம ரகளை மாமா..!!, சிங்கம் 2 (2013) - வாங்கல்லேஏஏஏஏ போன்ற பல பதிவுகளை பேச்சுவழக்கிலேயே எழுதியிருந்தேன்.
ஆனால் போகப்போக எனக்கே அது தவறாகப்பட்டது. பேச்சுவழக்கில் எழுதுகிறேன் பேர்வழி என்று தத்துப்பித்தாக தமிழை எழுதியது மட்டுமில்லாமல், ஆங்கிலத்தையும் வடமொழிச்சொல்லையும் கலந்து எழுதிக்கொண்டிருந்தேன். பிற்பாடு புத்தி வந்தபிறகு, என் பொறுப்பை உணர்ந்து, என்னால் முடிந்தவரை தூய தமிழில் எழுத ஆரம்பித்தேன். இன்றுவரை அதைத் தொடர்ந்துகொண்டிருக்கிறேன். எழுத்துப்பிழை, இலக்கணப்பிழையின்றி எழுதவும், முடிந்தவரை முயன்று கொண்டிருக்கிறேன்.
ஆரம்பகாலத்தில் என்னுடைய கருத்துக்களைப் பதிவாக எழுதி வெளியிட்டுவிட்டு, அதை எவ்வளவு பேர் படிக்கின்றனர் என்ற கவலையே இல்லாமல் என்பாட்டுக்கு இருப்பேன். பிறகு சினிமா சினிமா வலைப்பூ எழுதிவரும் ஹாலிவுட் ராஜ் அண்ணன் அவர்கள் தான், முயற்சி செய்து எழுதுவதை நாம்தான் பலருக்குச் சென்றடைய வைக்க வேண்டும் என்று அறிவுரை கூறி பலவகையில் அதற்கு நிறைய உதவிகளும் செய்தார். கில்லாடி ரங்காவின் வளர்ச்சியில் அவருக்கும் கணிசமான பங்கு இருக்கிறது. மிக்க நன்றி அண்ணே. அதேபோல ஆரம்பகாலத்தில் முகநூலில் பதிவுகளைப் பகிர்ந்து, ஒரே நாளில் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுத்தந்த கொழந்த அண்ணன் அவர்களுக்கும், கருந்தேள் ராஜேஷ் அண்ணன் அவர்களுக்கும் மிக்க நன்றிகள்.
அதே போல இங்கே வலைச்சரத்திலும் நண்பர்கள் பிரேம்குமார்.சி மற்றும் சே.குமார் இருவரும் என்னை அறிமுகம் செய்து வைத்து பலரைச் சென்றடைய வைத்தனர். அவர்களுக்கும் என் நன்றிகள்.
இனி கில்லாடிரங்காவில் சில பதிவுகளைப் பார்ப்போம். நான் எழுதியதில் எனக்குப் பிடித்த, மற்றவர்களுக்கு உபயோகப்படும் என்று மனதுக்கு நிறைவான சில பதிவுகள்,
1.Magnolia (1999) (18+)
2.டைம் ட்ராவல் தொடர்
3.The Stoning of Soraya M. (2008) - இஸ்லாமியப் பெண்களின் சுதந்திரம் ?
4.Disconnect (2012) - இணைய அரக்கன்
5.Band of Brothers (2001) Mini Series
6. The Hunt (2012) - விரிவான அலசல்
7.An American Crime (2007) - நெஞ்சைப் பதறவைக்கும் உண்மைக்கதை
சுயஅறிமுகம் சுயசொரிதலாக மாறுவதற்குள் இந்தப்பதிவை முடித்து விடுகிறேன். நாளையிலிருந்து எனக்குப் பிடித்த, நான் தொடர்கிற வலைப்பதிவாளர்கள் பற்றிப் பார்க்கலாம். ஆதரவிற்கு மிக்க நன்றி.
ஆண்டிச்சாமி.
கில்லாடிரங்கா
1.Magnolia (1999) (18+)
2.டைம் ட்ராவல் தொடர்
3.The Stoning of Soraya M. (2008) - இஸ்லாமியப் பெண்களின் சுதந்திரம் ?
4.Disconnect (2012) - இணைய அரக்கன்
5.Band of Brothers (2001) Mini Series
6. The Hunt (2012) - விரிவான அலசல்
7.An American Crime (2007) - நெஞ்சைப் பதறவைக்கும் உண்மைக்கதை
சுயஅறிமுகம் சுயசொரிதலாக மாறுவதற்குள் இந்தப்பதிவை முடித்து விடுகிறேன். நாளையிலிருந்து எனக்குப் பிடித்த, நான் தொடர்கிற வலைப்பதிவாளர்கள் பற்றிப் பார்க்கலாம். ஆதரவிற்கு மிக்க நன்றி.
ஆண்டிச்சாமி.
கில்லாடிரங்கா
உங்களின் திருப்தியான பகிர்வுகள் எங்களுக்கும் திருப்தி...
ReplyDeleteஅசத்துங்க... வாழ்த்துக்கள்...
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி :)
Deletesuper thala ....என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் மென்மேலும் வெற்றி பெற்றிட :)
ReplyDeleteநன்றி தல.. :)
Deleteதங்களின் வரவு நல்வரவாகுக..
ReplyDeleteநல்வாழ்த்துக்கள்..
மிக்க நன்றி ஐயா.. :)
Deleteஆஹா..நல்ல ஆரம்பம். தொடருங்கள் ஜீனியரே.
ReplyDeleteஅண்ணே, மிக்க நன்றி சீனியரே.. :)
Deleteசெம தலைவரே :) வாழ்த்துக்கள் !
ReplyDeleteநன்றி தலைவா :)
Deleteவலைப்பூ டெம்ப்ளேட்களிலேயே உங்க டெம்ப்ளேட் டிசைன் தான் பெஸ்ட்.
ReplyDeleteகம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருக்கிறோம். அதான் டெம்ப்ளேட்டாவது நல்லா இருக்கட்டுமேனு தேடிப்பிடிச்சு போட்டு, கொஞ்சம் நமக்கேத்த மாதிரி மாத்தி வச்சுருக்கேன். உங்களுக்குப் பிடிச்சதுல ரொம்ப மகிழ்ச்சி அண்ணே.. :)
Deleteவாழ்த்துக்கள் சகோ தொடரட்டும் பணி!
ReplyDeleteமிக்க நன்றி சகோ :)
Deleteஅன்பின் கில்லாடி ரங்கா - பதிவு நன்று - சுய அறிமுகச் சுட்டிகள் அனைத்துமே அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteமிக்க நன்றி ஐயா :)
Deleteத.ம : 4
ReplyDelete
ReplyDeleteவணக்கம்!
நல்ல தமிழ்மொழியை நாடும் மனங்கண்டு
வல்ல கவியோன் வணங்குகிறேன்! - கில்லாடி
ரங்கா! சிலிா்த்தெழுதும் சிங்கா! பதிவுகளை
நுங்கா இனிக்க நுவல்!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
கவிதையாவே பாடிட்டீங்களா :) மிக்க நன்றி கவிஞர் ஐயா :)
Delete/சூப்பர் சுய அறிமுகம் நண்பா..
ReplyDelete//இந்தியா சுதந்திரம் வாங்கறதுக்கும் முன்னாடியே வந்த டெக்னாலஜில போட்ட கோடிங்க எடுத்து, தலையப் பிச்சுக்கிட்டு அனலைஸ் பண்ணி, ஒரு மாதிரி லைஃபே போரடிச்சப்போ தான் மறுபடியும் ப்ளாக் பத்தின யோசனை வந்துச்சி.//
ஹா ஹா... செம வர்ணனை... முகநூலில் நட்பு அழைப்பு விடுத்திருக்கிறேன், விருப்பமிருப்பின் ஏற்றுக்கொள்ளவும்.
நட்பழைப்பை ஏற்றுவிட்டேன். நட்புக்கும் சேர்த்து மிக்க நன்றி நண்பா.. :)
Deleteநல்ல சுய அறிமுகம்.
ReplyDeleteஇதுவரை உங்கள் பதிவுகளை படித்ததில்லை.... இனி படிக்கிறேன்.
வலைச்சரத்தில் இந்த வாரம் முழுவதும் நல்ல பதிவுகள் வெளியிட வாழ்த்துகள்.
உங்க வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி :)
Deleteசிறந்த அறிமுகங்கள்
ReplyDeleteபாராட்டுகள்
பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி :)
Deleteபேச்சுவழக்கில் எழுதுகிறேன் பேர்வழி என்று தத்துப்பித்தாக தமிழை எழுதியது மட்டுமில்லாமல், ஆங்கிலத்தையும் வடமொழிச்சொல்லையும் கலந்து எழுதிக்கொண்டிருந்தேன். பிற்பாடு புத்தி வந்தபிறகு, என் பொறுப்பை உணர்ந்து, என்னால் முடிந்தவரை தூய தமிழில் எழுத ஆரம்பித்தேன். இன்றுவரை அதைத் தொடர்ந்துகொண்டிருக்கிறேன். எழுத்துப்பிழை, இலக்கணப்பிழையின்றி எழுதவும், முடிந்தவரை முயன்று கொண்டிருக்கிறேன்.
ReplyDeleteதங்கள் தன்மதிப்பீட்டுக்கும், முயற்சிக்கும் பாராட்டுக்கள் நண்பரே.
வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
உங்களின் பதிவுகளை படித்தது இல்லை! சென்று படிக்கிறேன்! வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பதவிக்கு வாழ்த்துக்கள் ....! தங்கள் பதிவுகளை சென்று படிக்கிறேன்.
ReplyDelete