இன்று நாங்க சுற்றுலா போறோம் நாங்க என்றால் நானும்
என் கணவர் ,மகள் எங்களோடு கலைச்செல்வி :) :)
இங்குள்ள பள்ளிகளில் ஏழு வாரம் பள்ளி தொடர்ச்சியாக நடக்கும்
பிறகு பத்து நாள் முதல் இரண்டு வாரம் வரை
விடுமுறை கிடைக்கும் ..அது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்
ஒரு சிறு ஓய்வு .அந்நேரத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் ஐரோப்பா
ஆசியா என அலைமோதும் ..டிக்கட் விலையும் மலிவாக கிடைக்கும் .
வெளி நாடுகளுக்கு செல்லாதோர் கூட உள்ளூரில் cottage புக் செய்து
குடும்பத்தோடு அந்நாட்களை கழிப்பார்கள் ..
(இப்பதிவு முழுதும் நாங்கள் உரையாடுகிறோம்..நீங்களும்
எங்களோடு இருப்பது போல கற்பனை செய்து படிங்க )
கலை .... அக்கா ..//என்ன வளவளன்னு பேச்சு சீக்கிரம்
ரெடியாகிட்டோம் புறப்படலாம் ...//
நான் ....சரி சரி :) ஏர்போர்ட் போகிற வழியில் தோழி பாயிஜாவை
பார்த்துவிட்டு போவோம் ..
அக்கா அவங்க அருமையான சுவையான பூரி கிழங்கு
கொடுத்து உபசரிச்சாங்க அத்துடன் சுவையான எள்ளுருண்டையும்
கொடுத்தாங்க :)
கலை ஒரு உருண்டைக்கு மேல் எடுக்ககூடாது :)என்றேனே
ஹாண்ட் லக்கேஜ்ல ஏர்போர்ட்ல வைக்க விட மாட்டாங்க .
சீக்கிரம் வா ட்ரான்சிட் ஜெர்மனியில் ..அங்கே ப்ரியாவை பார்த்து
விட்டு போகணும் ....
கலை ...அக்கா இது என்னது இந்த விமான பணிப்பெண் காப்பி
கொடுக்கறாங்க .பக்கத்துக்கு சீட்டு ஆள் கோப்பையை
கடிச்சு கடிச்சு திங்கறார்??????????
நான் .... உஷ்ஷ் :) கலை அது சாப்பிடக்கூடிய டூ இன் ஒன்
காப்பி கோப்பை நான் என் பதிவில் போட்டேனே படிக்கலியா .
. இங்கே சென்று பார் .
பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க புதிய கண்டுபிடிப்பு ..
உனக்கு பிளாஸ்டிக்கின் தமிழ் பெயர் தெரியுமா ? ..நெகிழி
இங்கே வரலாற்று சுவடுகள் பதிவில் பிளாஸ்டிக்கினால்
பூமிக்கு ஏற்படும் தீமைகள் பற்றி சொல்றாங்க படித்துப்பார் .
நம்ம நாட்டில் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் கூட நிறைய
விழிப்புணர்வு இதைபற்றி நடத்துறாங்க ..இங்கே ஊருலகம்
வலைப்பூவில் பாலித்தீன் பை தவிர்ப்போம்னு சொல்றாங்க
எல்லார் பதிவையும் படி ..ப்ளேன்ல சும்மா கேம்ஸ்
விளையாடாம....பணிப்பெண் வராங்க ..பார் ..அங்கே
ஒழுங்கா பெல்டை போடு !
கலை...அக்கா எனக்கு ரெண்டு கோக் டின் எடுக்கட்டா ""
நான் ...கலை கொகோகோலா உடம்புக்கு கெட்டது
எலுமிச்சை ஜூஸ் குடி நீ படிக்கல்லியா நலம் வலையில்
அதன் தீமைகளை ...
கலை...ஆஅமாங்கா ..பாத்ரூம் கழுவ கூட பயன்படுதராங்களாம் !! ..
நான் ...ஆமாம் பச்சை தேநீர் பற்றி ஹேமாவின் பதிவு சென்று படி .
அதன் நற்குணங்களை தெரிஞ்சிக்கோ சும்மா கண்ட ஜூஸ்
குடிக்ககூடாது .சரி தொணதொணன்னு னு பேசாம தூங்கு .
ஜெர்மனில இறங்கி பிரியசகி ப்ளாக் ஓனர் பிரியாவை
பார்த்துட்டு உடனே இந்தியா பிளைட் பிடிக்கணும் .!!
கலை ..அக்கா அவுங்கதானே ஜெர்மானிய அதிபர் Angela
அவர்களின் கையை குலுக்கி ரெண்டு வாரத்துக்கு கையை
கழுவாம இதான் சாக்குன்னு வேலை எதுவும் செய்யாம
இருந்தாங்க !!!
(பிரியா இதெல்லாம் கலை தான் பேசுறா நான் இல்லை )
நான் .....அஆங் ஆமாம் ..கலை இல்லையில்லை ஆமாம் :)
மீதியை ஒரு குப்பைதொட்டிலையும் ,பிளாஸ்டிக்
குப்பையை வேற குப்பை தொட்டிலையும் போட்டா
ஏன் ???
ஷரன் .. அம்மா கலை சித்தி எல்லாத்தையம் ஒரே bin இல்
போட்டாங்கம்மா !!!
நான் ... கலை வெளிநாட்டில் எல்லாத்தையும் முறையே
ரிசைக்கில் செய்வாங்க ,,இல்லையென்றால்
பிளாஸ்டில் குப்பை கடலில் ,ஆறு, ஏரிகளை
மாசுபடுத்தும் ..போன வருடம் நம்ம ஏரியா
எங்கள் ப்ளாக் .k .g .கௌதமன் சார் மற்றும் பலர்
செம்பரம்பாக்கம் ஏரியை சுத்தப்படுதினாங்களே
நினைவிருக்கா ??
கலை ...MIND VOICE ..{ஆண்டவா இந்த அஞ்சு அக்காவுக்கு மட்டும்
ஏன் இவ்ளோ ஞாபக சக்தியை கொடுத்தாய் ???
மாமாவும் ,பொண்ணும் முன் சீட்ல
தப்பிட்டாங்க நான்தான் அக்கா கிட்ட மாட்டிக்கிட்டேன்}
கலை ..அக்கா ஏர்போர்ட் வெளியில் என்ன ஒரே கூட்டமா
நிக்கிறாங்க எல்லாரும் சிலர் சிட்டுகுருவி மாதிரி டிரஸ்
போட்டிருக்காங்க சிலர் பட்டாம்பூச்சி போல ட்ரஸ்
போட்டிருக்காங்க எதுக்கு ?
நான் .. கலை அது சிட்டுக்குருவிகள் பட்டாம்பூச்சிகள் ,
தேனீக்கள் எல்லாம் மனிதர்களின் பேராசையாலும் ,கெட்ட
புத்தியாலும் அழிஞ்சி கொண்டு வருகின்றன அதனால்
இயற்கை ஆர்வலர்கள் தீமைதரும் பூச்சிகொல்லிகள்
போன்றவற்றை தடை செய்யக்கோரி ஊர்வலம் போறாங்க .
தேனீக்கள் இல்லைன்னா மனித இனமே அழியுமான்னு கேள்வி
எழுப்பறாங்க பசுமை இந்தியா என்ற வலைப்பூவில் :(
மேலும் கூவலப்புரம் வலைப்பூவில் அதைபற்றிசொல்றாங்க .
இயற்கை வளங்களை காப்போம் என்ற பதிவையும் படி .
இங்கே நோயற்ற வாழ்வே குறைவற்ற வாழ்வு வலைப்பூ
உரிமையாளர் கணேஷ் சிட்டுக்குருவிகளை பற்றி எழுதின
பதிவை வாசித்துப்பார் .
இங்கே நீர் நிலம் மனிதன் வலைப்பூவிலும் சிட்டுக்குருவிகள்
பற்றிய பதிவு இருக்கு வாசித்துப்பார் .
கலை ....கொர்ர்ர்ரர்ர்ர்ரர் ..
நான் ... என்னை பேசவிட்டுட்டு இந்த பொண்ணு தூங்குது ?
கலை .. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ அக்கா ஆஆ
நான் .. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் எதுக்கு கத்துற இப்போ
கலை .. அக்கா ப்ளேன் சென்னைக்கு போகாம டெல்லியில்
இறங்குது ????????!!!
நான் .. அது நான் டெல்லியில் இறங்கி இரண்டு பேரை
பார்த்திட்டு அப்புறம் போலாம்னு நினைச்சேன் :)
இங்கே ஆச்சி ஆச்சின்னு ஒரு நெருங்கிய தோழி
இருக்காங்க மாபெரும் சாதனை பெண்களை பற்றி
எழுதினாங்களே அவங்கதான் .
அடுத்தது சொல்லுகிறேன் வலைப்பூ எழுதும் நம்ம
காமாட்சியம்மா இருக்காங்க அவங்க ரெண்டுபேரையும்
சந்திக்கணும் அவங்க எழுதின சாளகிரமம் பற்றிய பதிவு
எனக்கு ரொம்ப பிடிக்கும் .
கலை ...அக்கா எனக்கு காப்பி குடிக்கணும் உடனே !!
நான் .... இரு மாமா அங்கே வாங்கிட்டு வரார் ..கலை
எனக்கு காப்பின்னா மதுரகவி ப்ளாக் எழுதும் ரமா ரவி
நினைவுக்கு வராங்க அவங்களையும் சந்திக்கணும் .
கலை ....சென்னை வந்தாச்சு..அக்கா நான் வீட்டுக்கு போகணும் .
நான் .. கலை இன்னும் சிலரை சந்திக்கணும் அதற்கு உன்
துணை தேவை என்கூட சில நாள் இரு .இப்போ நம்ம
ஸாதிகா அக்கா வீட்டுக்கு போயிட்டு வரலாம் .
கலை .. அந்த தும்பி பதிவு உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்
தானே அக்கா ..
நான் ... ஆமாம் கலை சிறு வயது நினைவு வரும் ..
இன்னிக்கு நாம திருச்சிக்கு போறோம் கலை ..
நான் ... ..கலை மீத்தேன் எதிர்ப்பு திட்டம் பற்றிய காணொளி
பார்த்தாயா ..மறக்காமல் பார்
கலை ..அக்கா அங்கே என்ன ஒரு ஆள் தண்டோரா வச்சி
அடிசிக்கிட்டிருக்கார் //
அதுவா
//அன்பின் கோபு அண்ணா அவர்களின்
வலைத்தளத்தினில்
gopu1949.blogspot.in
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று
ஓர் சிறுகதை வெளியிடப்பட்டு வருகின்றது.
அந்த சிறுகதைக்கு விமர்சனம் எழுதியனுப்ப
போட்டியும் நடைபெற்று வருகிறது.
அனைவரும் இதில் கலந்துகொண்டு
பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.//
நம்ம கோபு அண்ணா வலைப்பூ சென்று பார் நிறைய
பரிசுமழை உண்டு நீயும் கலந்துக்கோ :)
கலை ..அக்கா இப்போ திருநெல்வேலிக்கா போறோம் ?
ராணியையும் சந்திச்சிட்டு போலாம்
அவங்க தேன்மிட்டாய் செய்து வைச்சிருப்பாங்க நமக்கு :)
கலை . அக்கா ..அங்கே ஒருத்தவங்க வீடு சுத்தி நிறைய பச்சை
பசேல்னு மரங்களா இருக்கே அதுதான் கெளசி அக்கா வீடா ?
நான் .. ஆமாம் கலை கௌசல்யா ..வீட்டுத்தோட்டம்
மரம் வளர்க்கணும் ,பள்ளியில் மாணவிகளின் சங்கடங்கள்
இயற்கை ,சுற்றுசூழல் நலம் என்று நல்ல விஷயங்களை
எழுதறாங்க .விழிப்புணர்வு என்றால் என்னன்னு அவங்க
பதிவை படித்துப்பார் ......
சரி கலை ..இத்துடன் நம்ம பயணம் முடிவுற்றது :)
நம் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லும் வேளை :)
.நட்புக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்
கொள்கின்றேன் ..ஒவ்வொருநாளும் வருகை தந்து என்னை
உற்சாகமூட்டிய அனைவருக்கும் மிக்க நன்றி .
இந்த ஒரு வாரம் முழுதும் எனக்கு இங்கு எழுத வாய்ப்பு
அளித்த சீனா ஐயா அவர்களுக்கும் மனமார்ந்த
நன்றிகள் .கிடைத்த வாய்ப்பை நல்ல முறையில்
பயன்படுத்தியிருக்கின்றேன் என்ற நம்பிக்கையில்
அனைவரிடம் இருந்தும் விடை பெறுகின்றேன் .
நன்றி ,
அன்புடன் ஏஞ்சலின் ...
அவங்க தேன்மிட்டாய் செய்து வைச்சிருப்பாங்க நமக்கு :)
கலை . அக்கா ..அங்கே ஒருத்தவங்க வீடு சுத்தி நிறைய பச்சை
பசேல்னு மரங்களா இருக்கே அதுதான் கெளசி அக்கா வீடா ?
நான் .. ஆமாம் கலை கௌசல்யா ..வீட்டுத்தோட்டம்
மரம் வளர்க்கணும் ,பள்ளியில் மாணவிகளின் சங்கடங்கள்
இயற்கை ,சுற்றுசூழல் நலம் என்று நல்ல விஷயங்களை
எழுதறாங்க .விழிப்புணர்வு என்றால் என்னன்னு அவங்க
பதிவை படித்துப்பார் ......
சரி கலை ..இத்துடன் நம்ம பயணம் முடிவுற்றது :)
நம் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லும் வேளை :)
.நட்புக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்
கொள்கின்றேன் ..ஒவ்வொருநாளும் வருகை தந்து என்னை
உற்சாகமூட்டிய அனைவருக்கும் மிக்க நன்றி .
இந்த ஒரு வாரம் முழுதும் எனக்கு இங்கு எழுத வாய்ப்பு
அளித்த சீனா ஐயா அவர்களுக்கும் மனமார்ந்த
நன்றிகள் .கிடைத்த வாய்ப்பை நல்ல முறையில்
பயன்படுத்தியிருக்கின்றேன் என்ற நம்பிக்கையில்
அனைவரிடம் இருந்தும் விடை பெறுகின்றேன் .
நன்றி ,
அன்புடன் ஏஞ்சலின் ...
ஞாபக சக்தி உண்மையிலேயே அதிகம் - தளங்களை அறிமுகப்படுத்தியதிலும்... சிறப்பாக... சுவாரஸ்யமாக ஆசிரியர் பணியை முடித்தீர்கள்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி சகோ :)
Deleteஏஞ்சலின்,
ReplyDeleteஇன்று கமர்கட் மிட்டாயா !
அதுக்குள்ள ஞாயிறு வந்தாச்சா !! இந்த ஒரு வாரமும் போனதே தெரியாத அளவுக்கு பதிவுகளை அழகா கொடுத்திருந்தீங்க. விமானத்தை எங்க ஊர் பக்கமும் கொஞ்சம் திருப்பி ஓட்ட சொல்லியிருக்கலாமே !
இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சித்ரா .. நான் கலை பக்கத்தில் அவ பெல்டையும் சேர்த்து பிடிச்சு உக்காந்திருந்தேன் .கலை ரெடியா நேரே போய் பைலட்ட பிளேனை திருப்ப சொல்ற ப்ளானில் இருந்தா :
Deleteஅடுத்த முறை அமெரிக்க பயணம் வரோம் :)
. that is imli sweet .. ..புளிப்பு ,காரம் மிளகா ,கொஞ்சூடு சக்கரை போட்டு செய்வாங்களே புலி மிட்டாய் ..ஏர் இந்திய /இந்தியன் ஏர்வேஸ்
இவற்றின் பாரம்பரிய இனிப்புஸ்
உற்சாகமான சுற்றுலாவில் அருமையான பதிவுகளின் அறிமுகம் .. அனைவருக்கும் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா. நான் சிலருக்கு சொல்ல இயலாத நிலையிலும் நீங்க அன்போடு எனக்காக செய்திருக்கீங்க மிக்க நன்றி
Deleteபல புதிய தளங்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி சகோ தனபாலன் ..
Deleteஒவ்வொருநாளும் நான் செய்ய வேண்டிய வேலையை அன்போடு செய்திருக்கீங்க
மிக்க நன்றி
ReplyDeleteவணக்கம்!
உலகத்தைச் சுற்றிய வஞ்சியே! உன்றன்
நலமகத்தைக் கண்டுவந்தேன் நாளும்! - வலைச்சரத்தில்
தீட்டிய வண்ணங்கள் சிந்தனையில் நின்றனவே!
நாட்டினாய் வெற்றியை நன்கு!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி கவிஞர் ஐயா .ஒவ்வொருநாளும் கவி பாடி வாழ்த்தியதற்கு மிக்க நன்றிகள் .
Delete'நம்ம ஏரியா' வலைப்பதிவு அறிமுகத்திற்கு 'எங்கள்' நன்றி.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி கௌதமன் சார் ..
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதங்களுடன் சேர்ந்து - ஊர் சுற்றிப் பார்த்த மாதிரியே இருக்கின்றது.
ReplyDeleteஅத்தோடு அருமையான பதிவுகளின் அறிமுகம்.. நல்ல உத்தி..
ஒரு வாரம் முழுதும் கலகலப்பாக வலைச்சரத்தினை நடத்தியமைக்கு பாராட்டுக்கள்.
வாழ்க நலம்..
வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா ..:)
Deleteகிடைத்த வாய்ப்பை நல்ல முறையில்
ReplyDeleteபயன்படுத்தியிருக்கின்றேன் //
ஆம், உண்மை. நன்றாக செய்து இருக்கிறீர்கள்..
மிக அருமையாக ஆசிரியர் பணியை நிறைவு செய்தீர்கள்.
கமர்கட் தானே இன்றைய இனிப்பு.
எனக்கு மிகவும் பிடித்த மிட்டாய் எடுத்துக் கொண்டேன், நன்றி.
இன்றைய பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். உங்களுக்கும் வாழ்த்துக்கள் ஏஞ்சலின்.
வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கோமதியம்மா ..அது கமர்கட் இல்லை ..இம்லி ஸ்வீட் ,
Deleteஏர் இந்திய விமான ஸ்பெஷல் ..புளி மிட்டாய் :)
ஹைய்யோ!!!!! தூள் கிளப்பிட்டேம்மா இப்படி பயணத்திலேயே!!!!
ReplyDeleteநலமோடு வாழ்வாயாக!
வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி துளசியக்கா :)
Deleteஅன்புள்ள நிர்மலா,
ReplyDeleteவணக்கம். வலைச்சரப்பணியினை இனிதே நிறைவேற்றியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
>>>>>
//அன்பின் கோபு அண்ணா அவர்களின் வலைத்தளத்தினில்
ReplyDeletegopu1949.blogspot.in ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று ஓர் சிறுகதை வெளியிடப்பட்டு வருகின்றது.
அந்த சிறுகதைக்கு விமர்சனம் எழுதியனுப்ப போட்டியும் நடைபெற்று வருகிறது. அனைவரும் இதில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நம்ம கோபு அண்ணா வலைப்பூ சென்று பார் நிறைய பரிசுமழை உண்டு நீயும் கலந்துக்கோ :)//
ஆஹா, என் வலைத்தளத்திற்கும், என் சிறுகதை விமர்சனப்போட்டிக்கும் இப்படியொரு அழகான விளம்பரமா ? ;)))))
மிக்க நன்றி, நிர்மலா. சந்தோஷம். வாழ்க !
பிரியமுள்ள கோபு அண்ணா
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா
Deleteவலைச்சர அறிமுகத்திற்கு மிக்க நன்றி ஏஞ்சலின், அறிமுகமான மற்ற வலைபூக்களுக்கும் வாழ்த்துக்கள்.தகவல் தெரிவித்த தனபாலன் சாருக்கு நன்றிகள்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராதா
Deleteசுற்றுலாவோடு மனத்துக்கு இதமான பதமான பல நல்ல செய்திகளையும் பகிர்ந்துள்ளீர்கள். நன்றியும் பாராட்டுதல்களும் ஏஞ்சலின். அறிமுகமான பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருகைக்கும் ,பாராட்டுக்களுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கீதா :)
Deleteஒரு வார ஆசிரியப் பணியை,வேலைப் பழுக்களுக்கு மத்தியிலும் வித்தியாசமாக&பயனுள்ளதாகப் பகிர்ந்த தங்கைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்!மீண்டும் மாதம் ஒரு தடவையாயினும்,உங்கள் தளத்தில் பார்ப்போம் என்ற நம்பிக்கையுடன்....................
ReplyDeleteவருகைக்கும் ,பாராட்டுக்களுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா .நிச்சயம் காகிதபூக்களில் மீண்டும் சந்திப்போம்
Deleteஆசிரியப் பணியை அழகான முறையில் நிறைவேற்றி பல அருமையான பகிர்வுகளை அறிமுகப்படுத்தி ஆஹா ! அசத்திட்டீங்க ஏஞ்சல்.நலவாழ்த்துக்கள். இன்றைய பகிர்வும் மிக அருமை. அறிமுகப்படுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள். நானும் உங்களோடு சேர்ந்து சுற்றிப் பார்த்தாயிற்று.
ReplyDeleteவருகைக்கும் ,பாராட்டுக்களுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆசியா :)
Deleteஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ வன்தென்னன்
ReplyDeleteoooooo ,நான் ஓடியே போயிட்டேன் :)
Deleteஇன்று நாங்க சுற்றுலா போறோம் நாங்க என்றால் நானும்
ReplyDeleteஎன் கணவர் ,மகள் எங்களோடு கலைச்செல்வி :) :)///////////////////
ஹைஈ ஜாலி டோல்லி ராலி நானும் நானும் ஊரு சுத்தப் போறேன்
'
ReplyDeleteகலை...அக்கா எனக்கு ரெண்டு கோக் டின் எடுக்கட்டா ""
நான் ...கலை கொகோகோலா உடம்புக்கு கெட்டது /////////////////////////////அவ்வ்வ்வவ்வ்வ்வவ் இதுக்கு மேலயும் குடிக்கணுமா ...அக்கா உண்மையிலே நான் கோக் நிறைய குடிப்பேன் முன்னாடி ....இப்போ டயட் கோக் குடிக்கிறேன் .........
அதுக்கு நீ நார்மல் கோக்கே குடிக்கலாம் .//die ..t //இதுதான் டயட் கோக் நிறைய aspartame இருக்கு இதில .
Deleteவெறும் லைம் ஜூஸ் இல்லைன்னா பழ ஜூஸ் குடி
This comment has been removed by the author.
ReplyDeleteஆண்டவா இந்த அஞ்சு அக்காவுக்கு மட்டும்
ReplyDeleteஏன் இவ்ளோ ஞாபக சக்தியை கொடுத்தாய் ///////////////////////////////// இது உண்மையையே அக்கா ...அதிகமா அறிவாவும் படைசிப்போட்டுட்டார் இறைவன் ...
:) haaahaa
Deletenalama?......
ReplyDeleteVetha.Elanagthilakam.
மிக்க நலம் அக்கா :)
Deleteஅவுங்கதானே ஜெர்மானிய அதிபர் Angela
ReplyDeleteஅவர்களின் கையை குலுக்கி ரெண்டு வாரத்துக்கு கையை
கழுவாம இதான் சாக்குன்னு வேலை எதுவும் செய்யாம
இருந்தாங்க !!!////////////////////////////////////////////////////////////////////// அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ் ப்ரியா அக்கா எல்லாமே அஞ்சு அக்காள் சொல்லிக் கொடுத்துதான் சொல்லுறேன் ...எனக்கு ஏதாவது பரிசு கொடுக்கணும் எண்டா அதே அஞ்சி அக்காக்கு கொடுத்திடுங்க
கர்ர்ர் :) ப்ரியாக்கு தெரியும் என்னிக்கு உன்னோட சேர்ந்தேனோ அன்னிக்கே நான் உன்னை மாதிரி பேச யோசிக்க
Deleteஆரம்பிச்சிட்டேன்னு :)
குடிக்ககூடாது .சரி தொணதொணன்னு னு பேசாம தூங்கு .////
ReplyDeleteடோயன்ங் இது நான் சொல்ல வேண்டியது நீங்க சொல்லிடீங்க அக்கா ....
:) garrrrr
Delete
ReplyDeleteஷரன் .. அம்மா கலை சித்தி எல்லாத்தையம் ஒரே bin இல்
போட்டாங்கம்மா !!!./////
ஷெரோன் அம்மா உனக்கு தப்பு தப்ப சொல்லிக் கொடுத்து வளர்க்காகடா ...சித்தி கூட ஒரு வாரம் இரு ...அப்புறம் உன்னை அப்படி மாற்றிக் காட்டுறேன் பாரு ....
ரெண்டு பேருக்கும் சேர்த்து கருக்கு மட்டை :)
Deleteஅறிமுகமான அனைத்துப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅக்கா இந்தப் பதிவில் காமெடியா சொன்னா விடயங்களில் எவ்வளவு தெரிய வேண்டிய விடயங்கள் இருக்குனு யோசிக்கணும் ...
ReplyDeleteகாமெடியா நிறைய விடயங்கள் அறியக் கொடுத்தமைக்கு நன்றி ...ஒரு வாரமும் போனதே தெரியல ...இப்போதான் ஆரம்பிச்ச மாறி இருந்தது ....அதுக்குள்ளே போய்டுச்சி ....
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கலை ..இன்னமும் உன்னை நாலு இடத்துக்கு இழுத்துசுத்த ஆசையா இருந்தது ,தலைல கொட்டி எல்லாம் எழுத யோசிச்சேன் ..பதிவின் நீளம் கருதி கொட்டில் இருந்து தப்பித்தாய் பெண்ணே :)
Deleteஅன்புள்ள அஞ்சு என்ன அருமையாக ஆசிரியப் பணியைச் செய்து முடித்திருக்கிறாய். இவ்வளவு பணியினூடே என்னையும் பார்க்க வந்தது மிகவும் மகிழ்ச்சி. நீண்ட பிரயாணத்தில் களைப்பில்லாமல் நீ ஸந்தித்த யாவருக்கும் என் அன்பு விசாரிப்புகளும்,வாழ்த்துகளும்.. திரு.தனபாலன், திருமதி இராஜ ராஜேச்வரி இருவரும் அன்புடன் வாழ்த்துகளுடண் தகவல் கொடுத்தமைக்கு. யாவர் தளங்களையும் பார்த்துக் கொண்டே வருகிறேன். அன்போடு கூடிய ஆசிகள் அஞ்சு. அன்புடன்
ReplyDeleteமிக்க சந்தோஷம் .அம்மா ..நான் ராஜேஸ்வரி அக்காவுக்கும் நண்பர் தனபாலனுக்கும் மிகுந்த கடமை பட்டிருக்கேன் நீங்க வருகை தந்து வாழ்த்தியதில் ரொம்ப சந்தோஷம் .
Deleteமறுபடியும் நன்றி ஏஞ்சலின். :)))))
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் .
Deleteஇன்று பயணம் புதுமையான தொகுப்பு .!
ReplyDeleteபல புதிய தளங்கள் அறிமுகம் எனக்கு.
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteசிறப்பான பணி அஞ்சலின் வாழ்த்துக்கள் .மீண்டும் காகித பூக்கள் தளத்தில் நட்புடன் சந்திப்போம்!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நேசன் ..மிக சந்தோஷம் .சந்திப்போம் மீண்டும் காகிதபூக்களில் :)
Deleteஒவ்வொரு நாளும் வித்தியாசமான முறையில் சிறப்பாக வலைப்பூக்கள் அறிமுகம்! வாழ்த்துக்கள்! நன்றி!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்
Deleteபதிவுகள எல்லாம் இனிப்பாக இருக்கு.என்னையும் ஸ்வீட் பாக்சில் சேர்த்துக்கொண்டதற்கு நன்றி ஏஞ்சலின்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸாதிகா அக்கா
Deleteமிகவும் அருமையாக இருந்தது சுற்றுலா தொகுப்பு. ஜேர்மனிக்கும் வந்ததில் மிக்க மகிழ்ச்சி. என் தளத்தையும் அறிமுகப்படுத்தியமை க்கு ரெம்ப நன்றி அஞ்சு. இன்று தாமதமாகிவிட்டது வர.மன்னிக்க.
ReplyDeleteதகவல் தெரிவித்த சகோதரர் தனபாலன் அவர்கட்கு மிக்க நன்றிகள்.
அறிமுகப்படுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ஆசிரியப்பணியினை மிகவும் சுவாரஸ்யமாகவும், அருமையாகவும் செய்திருக்கிறீங்க அஞ்சு. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி priya:)
Deleteவித்தியாசமான பதிவுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ReplyDeleteசுற்றுலா பதிவுகளா உங்கள் வலைச்சர வாரத்தின் கடைசி நாளில்.... அருமை.
ReplyDeleteஅறிமுகம் செய்யப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி:)
ReplyDeleteஓ! என்னையும் பார்க்க வந்திங்களா நன்றி .கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு பிறகு எட்டிப் பாரத்திருக்கேன்.நல்ல உரையாடல் ,தொகுப்பு.
ReplyDelete