Wednesday, May 7, 2014

கோலங்கள் ! கோலங்கள் !!

 எழில் தனைக் கூட்டுமே
தீவினைகள் தமை விரட்டுமே
சிந்தையதை கூர் தீட்டுமே
வாசல் தனை அலங்கரிக்குமே
சிற்றுயிரின் பசியையும் தீர்க்குமே
அரிசி மாக் கோலமே !



வணக்கம் நண்பர்களே !



           இன்று  அழகான கோலங்களை நம் கண்களுக்கு விருந்தாக்கும் சில பதிவர்களை பார்க்கலாம் .

கோலம்  நமது பண்பாட்டுச் செறிவின் வெளிப்பாடு. அரிசி மாவால் இடும் கோலம் எறும்புக்கும்,பறவைக்கும் உணவாகிறது.அறிவு விசாலம், நாகரிக விருத்தி, சோம்பலின்மை, மறதியின்மை, சூட்சமபுத்தி, முயற்சி, ஊக்கமுடமை, மனச்சோர்வின்மை போன்ற மனம் தொடர்பான செயல்பாடுகள் கோலம் போடுவதில் அடங்கியுள்ளன. 
(கோலம் குறித்த இச்செய்திகள் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டன.) 

கோலம்  பற்றி  நமது  வலைப்பதிவர்களின் பதிவுகள் சிலவற்றை நாம் இன்று காணலாம்.

1. சகோதரி சசிகலா அவர்களின் கோலங்களை இங்கு காணலாம். வண்ண மயமான, கண்ணைக் கவரும் ரங்கோலிக் கோலங்கள்.  


2. காகிதத்தில் கிறுக்கியவை தளத்தில் சகோதரி ரதிதேவி அவர்கள் கணினியில் வரைந்த கோலங்கள் பலவற்றை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அழகான ரங்கோலிக் கோலம் நம் கண்ணைக் கவர்கிறது.

3. என் தமிழ் பக்கம் வலைப்பூவில் எழுதிவரும் சகோதரி ரேவதி சண்முகம் அவர்களது வண்ணமயில் கோலத்தினை ரசிக்கலாம் வாருங்கள்.

இவரது அழகான நெளிவுக் கோலங்களை இங்கு காணலாம்.

4. நல்லதோர் கருத்தினை வலியுறுத்தும் சகோதரி பவித்ரா நந்தகுமார் அவர்களது மாட்டுப் பொங்கல் கோலங்கள்.

 அழகான ஜல்லிக்கட்டு கோலம், இவரது ஓவியத் திறமைக்கு ஓர் சான்று.

5. ஊஞ்சல் தளத்தில் எழுதிவரும் சகோதரி ஞா. கலையரசி அவர்களது கைவண்ணத்தில்  அழகான கோலங்கள்.

இவரது கத்தரிகாய் கோலம்  அழகோ அழகு !

வண்ணப் பூக்களைக் கொட்டி வைத்தது போல மிளிரும் கோலங்கள் ... அருமை !

 இன்னும் சிலர் முகப் புத்தகத்தில்   கோலங்களுக்கென்று  தனி பக்கங்களை உருவாக்கி, தங்களது கோலங்களை பகிர்ந்து வருகின்றனர். அவற்றுள் சிலவற்றையும் காணலாம்.

6. விருதுநகர் கோலம் என்ற பக்கத்தில் சகோதரி சாந்தி அவர்கள் வண்ணக் கோலங்கள் பலவற்றை பகிர்ந்துள்ளார்.

7. ராணி மாருதன் அவர்கள் தனது ராணி'ஸ் ரங்கோலி 
முகப் புத்தக பக்கத்தில் தனது  வண்ணக் கோலங்களை பகிர்ந்துள்ளார்.

8. தமிழ் கலாச்சார கோலங்கள் தளத்தில் செல்வம் மற்றும் எழில் செல்வம் ஆகியோர் கோலங்கள் பகிர்ந்து வருகின்றனர். தீபாவளி நோன்பு கோலம் 
மற்றும் அரியாங்குப்பம் பச்சைவழி அம்மன் கோவிலில் எடுத்த கோலங்களின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார் பாருங்கள். 

9.  கோலங்கள் என்ற வலைப்பூவில் திருமதி. தேனம்மை  லஷ்மணன் அவர்கள் பல கோலங்களை பகிர்ந்திருக்கிறார். இவர் நம்மையும் " கோலமயில்களே ! கோலமிட வாருங்கள் ! "  என்று அன்புடன் அழைக்கிறார்.
பல பத்திரிகைகளிலும் இவரது கோலங்கள் வெளியாகின்றன.

இருதய கமல கோலம் போடுவதெப்படி என்று விளக்கியிருக்கிறார் பாருங்கள்.

வரலஷ்மி கோலம், விநாயகர் கோலம், கிருஷ்ணர் கோலம், கிராம தெய்வக் கோலங்கள், இராசிக் கோலங்கள், கண் திருஷ்டி நீக்கும் காவிக் கோலங்கள் முருகன் கோலம் என்று பல வகையான கோலங்களையும் பகிர்ந்திருக்கிறார்.

10. முனைவர்  இரத்தின. புகழேந்தி அவர்கள் கோலம் போடும் முறை, சாணிப் பிள்ளையார், பரங்கிப்பூ, அரிசி மாக்கோலத்தின் மகத்துவம் என்று பல விஷயங்களை தனது பொங்கல் கோலம் பதிவில்  விளக்கியிருக்கிறார்.
 
என்ன நண்பர்களே, இன்றைய பதிவுகளை பார்த்தீர்களா ? பதிவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிப்போமே ! நாளை வேறோர் தலைப்பில் வேறு புதிய பதிவர்களை சந்திப்போம்.



நன்றி ! வணக்கம் !!

45 comments:

  1. அன்பின் தமிழ் முகில் பிரகாசம் - அருமையான் பதிவு - அழகான கோலங்களை மையமாக வைத்து - அத்தனை கோலங்களையும் தேடிப் பிடித்து அறிமுகப் படுத்தியதற்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  2. சிறப்பான அறிமுகங்கள் .அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்
    தொடர்ந்தும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோ .

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      Delete

  3. வணக்கம்!

    வண்ணமொளிா் கோலங்கள் வார்த்த வலைகளை
    எண்ணமொளி ஏற்க இணைத்துள்ளீா்! - பண்டமிழா்
    பண்பாட்டைப் போற்றிப் பரவும் தமிழ்முகிலே!
    கொண்டாட்டம் தந்தாய் குளிா்ந்து!

    தமிழ்மணம் 3

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சார் :)

      Delete
    2. தங்களது அன்பான வாழ்த்துகட்கு இதயம் கனிந்த நன்றிகள் ஐயா.

      Delete
  4. சிறப்பான வித்தியாசமான அறிமுகம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அன்புடையீர், வணக்கம்.

    இன்று அழகழகான கோலங்களைப்பற்றிய பதிவுகளைத் தேடிக்கண்டு பிடித்து சிறப்பித்து வெளியிட்டுள்ளது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    அனைத்துத் தளங்களுக்கும் சென்று, ஒவ்வொரு கோலங்களையும் மிகவும் ரஸித்துவிட்டு, வலைச்சர அறிமுகத்தைப்பற்றியும் எடுத்துச்சொல்லிவிட்டு, பாராட்டி, வாழ்த்தி அதன் பிறகே இங்கு வருகை தந்துள்ளேன்.

    கோலங்கள் போலவே அழகான அறிமுகம் செய்துள்ள தங்களுக்கு என் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
    Replies
    1. எனக்குத் தெரியப்படுத்தியமைக்கும் வாழ்த்துக்களும் நன்றி கோபால் சார் :)

      Delete
    2. பதிவர்கள் அனைவருக்கும் அறியத் தந்தமைக்கு நன்றிகள் பல ஐயா.

      தங்களது மேலான ஊக்கத்திற்கும் அன்பிற்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  6. மூன்று தளங்கள் புதியவை... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கும் அறியத்தந்தமைக்கும் நன்றி சகோ :)

      Delete
    2. தங்களது வருகைக்கும் அன்பான வாழ்த்துகட்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  7. வலைச்சரத்தில் அழகுக்கோலங்களை அறிமுகப்படுத்தி எழில்கோலமிட்டதற்கு
    இனிய வாழ்த்துகள்..
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ராஜி மேம். எதிர்பார்க்கவே இல்லை நன்றி :)

      Delete
    2. தங்களது அன்பான வாழ்த்துகட்கும் பாராட்டுதல்கட்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      Delete
  8. கோலம் என்றாலே - அழகுதான்..
    அதிலும் பலவிதமான கோலங்களை பல்வேறு தளங்களில் இருந்து அறிமுகம் செய்து வலைச்சரத்தினை அழகுமயமாக ஆக்கி விட்டீர்கள்..
    அனைத்தையும் காணக் காண மகிழ்ச்சியாக இருக்கின்றது. நன்றி..

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான ஊக்கமூட்டும் கருத்துரைக்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.

      Delete
  9. என்னுடைய வலைத்தளத்தையும் பார்வையிட்டுப் பகிர்ந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த திருமதி தமிழ் முகிழ் ப்ரகாசம் அவர்களுக்கு நன்றிகளும் அன்பும். :) வாழ்க வளமுடன் :)

    ReplyDelete
    Replies
    1. தங்களது மேலான அன்பிற்கும் வாழ்த்துகட்கும் இதயங் கனிந்த நன்றிகள் சகோதரி.

      Delete
  10. தலைப்பைப் பார்த்ததும்,தேவயானி நடிச்ச 'கோலங்கள்' தொடரோ ன்னு நம்ம மக்கிப் போன மூளை சிந்திக்க ஆரம்பிச்சிடுச்சு,ஹி!ஹி!!ஹீ!!!அழகான "கோலங்கள்" தரும் பதிவர்களுக்கு வாழ்த்துக்களும்,உங்களுக்கு நன்றிகளும்!!!

    ReplyDelete
    Replies
    1. அந்த நாடகத் தொடரின் ஆரம்பத்திலும் கூட வண்ண கோலங்கள் காண்பிப்பார்கள் என்று கேள்விப்பட்டதுண்டு. இப்போதும் தொடர்கிறதா என்பது தெரியவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.

      Delete
  11. அழகான கோலங்கள் பதிவுகள் வெகு அருமை.
    இன்று இடம் பெற்ற பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது உற்சாகமூட்டும் கருத்துரைக்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      Delete
  12. விருதுநகர் கோலம் பார்க்க பார்க்க ஆனந்தம் எவ்வளவு அழகாய் போட்டு இருக்கிறார்கள்!சகோதரி சாந்திக்கு வாழ்த்துக்கள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  13. கோலங்கள் மிகவும் அழகுதான்.இனிய நல் வாழ்த்துக்கள் அறிமுகங்கள் அணைவருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது அன்பான கருத்துரைக்கு மிக்க நன்றி சகோதரரே !

      Delete
  14. என் பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய திருமதி தமிழ்முகிலுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      Delete
  15. தமிழ்முகில்,

    மனதிற்கும், கண்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் கோலங்களைப் பற்றிய பதிவுகளைத் தேடிப்பிடித்து பதிவாக்கியது அருமை. பல தளங்கள் அறியாதவை. இப்போதைக்கு 'மண்கவுச்சி' மட்டுமே போகமுடிந்தது. எங்கள் ஊர் பக்கம் பற்றிய பதிவுகள் அங்கே இருந்ததால் அதிலிருந்து வெளியில் வரவே மனதில்லை. மற்றவை நேரம் கிடைக்கும்போது. பகிர்ந்துகொண்டதில் நன்றி தோழி.

    இன்றைய அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் தோழி .

      Delete
  16. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.

      Delete
  17. எனது பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி
    எனக்கு பெருமை சேர்த்தும் புது நண்பர்களை அறிமுகபடுத்தியமைக்கும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

      Delete
  18. எனது பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மனமார்ந்த நன்றிகள்.......

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் தோழி.

      Delete
  19. Thank u sir
    For sharing my rangoli album

    ReplyDelete
  20. Thank u sir
    For sharing my rangoli album

    ReplyDelete
  21. எனது பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மனமார்ந்த நன்றிகள்.......

    ReplyDelete
  22. எனது பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மனமார்ந்த நன்றிகள்.......

    ReplyDelete
  23. எனது பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மனமார்ந்த நன்றிகள்.......
    https://picasaweb.google.com/100573106317211639353/HOiJhC

    ReplyDelete