இது... இமாவின் உலகின் இன்னொரு பக்கம்.
இமாவில்
உலகம் உதித்த சமகாலத்தில், நண்பிகள் சிலரது வலைப்பூக்களும் மலர்ந்தன. ஆளை
ஆள் மாற்றி, தும்பை விட்டு வாலைப் பிடித்துக் கலாய்த்துக் கருத்துச்
சொல்லுவோம். அது ஒரு அழகிய காலம்.
அந்தக் கூட்டத்தில் நான்தான் சற்றுப் பெரியவளாக இருந்திருப்பேன்.
வலையுலகில் வயது மனதுக்குத்தான். இவர்களோடு சேர்த்து நானும்
குழந்தையானேன். பின்பு ஒருவர் மற்றொருவரை அறிமுகம் செய்ய.. ஒருவர்
இன்னொருவருக்கு ஏதாவது ஒன்றில் உதவ என்று எங்கள் வட்டம் பெரிதாகிற்று.
எல்லோரையும் அறிமுகம் செய்ய விரும்பினாலும்... இடுகை நீண்டுவிடும் என்னும்
காரணத்தால் மிகச் சிலரை மட்டுமே இங்கே குறிப்பிடுகிறேன்.
என் பக்கம் அடிக்கடி வரும் செல்ல மியாவுக்குப் பிடித்ததெல்லாம் உங்களுக்கும் பிடிக்கிறதா! இங்கே புதுமையான ஒரு வகை ரொட்டிக்கான சமையற்குறிப்பு கொடுத்திருக்கிறார். என் எழுத்து
இதுவென்றாலும்... உண்மையில் தலைப்பு 'பெண் எழுத்து' என்று நினைவு.
எப்போதும் நகைச்சுவையைக் கூடவே கொட்டி எழுதி வைப்பதால் இவர் வலையில் நான்
தேடிய இடுகை, இந்த இடுகை வெளியாகும்வரை என் கண்ணில் படவேயில்லை. :-)
எனக்கு 'ஐரிஸ் ஃபோல்டிங்' வேலைப்பாட்டை அறிமுகம் செய்து வைத்தவர் வானதி. சுவையாகக் கதை சொல்லும் இவர்... 100% கற்பனையாக எழுதிய கதை.. சோளப் பொரிக்கு சண்டை போடுவியா? வேலை கிடைத்தும் வலைப்பூவைக் கைவிடவில்லை. மாறாக அங்கு கிடைக்கும் அனுபவங்களையே கதைகளாக்கிவிடுகிறார். யாயாவா? சுறாவா? என்று ஒரு கதை, படித்துப் பாருங்கள்.
மகிஸ் ஸ்பேஸ் மகிக்கு மஞ்சள் நிறம் பிடிக்கும். இயற்கை பிடிக்கும். சமையல் அதிகம் பிடிக்கும்.
எனக்குப் சரம்கட்டக் காட்டிக் கொடுத்தவர் இவர். மாட்யூலர் ஒரிகாமியும் செய்திருக்கிறார் இங்கே... சுட்டி அந்தப் பிரிவுக்கே கொண்டுபோய் விடும், பாருங்கள்.
என்னை ஈர்த்தது.... இவர்கள் குழந்தை மனம். மழலைகள் என்று எண்ணித் தவிர்த்தால் தப்பு. திடீரென்று 'அட!' என்கிற மாதிரி அழகாக ஒரு இடுகை வரும். கிராமத்து கருவாச்சியையும், அன்பை விட ஆயுதம் எதுவுமில்லாத சிவாவையும்தான் சொல்கிறேன். கலைநயத்துடன் கலையின் மனவலி... என்னை மன்னித்துவிடு சகோதரி. & தெருவோரச் சிறார்கள் . சிவாவின்.. தேடல் இங்கே.
பிரியசகி சமீப காலமாக சங்கீதத்தில் மூழ்கியிருக்கிறார். :-) முன்பு!! வேலியும் மரங்களும் பற்றிச் சொன்னார். இவர் இடுகைகள் அனேகம் ஜெர்மன் அனுபவங்கள் பற்றியதாக இருக்கும் அல்லது தன் கைவேலையை இடுகையாகக் கொடுத்திருப்பார். பிரியா செய்த அழகிய காகிதப் பூக்கள் இங்கே காண்க.
நிஜமான காகிதப் பூக்கள் இங்கே கிடைக்கும். மங்குஸ்தான் பழம், சணல், வெண்ணெய் சுற்றி வந்த காகிதம் என்று எதை வேண்டுமானாலும் மீள்சுழற்சி செய்வார்.
இங்கே... இளையநிலா பொழிகிறது, ஏராளமான கவிதைகளும் க்வில்லிங் கலையுமாக. சில மாதங்கள் நாம் வலையுலகில் காணாதிருந்த இளமதி, அன்னையின் பிரிவுத்துயரிலிருந்து மெதுவே மீண்டு அன்னைக்குச் சமர்ப்பணமாக சில குறட்பாக்களோடு இந்த இடுகையை வெளியிட்டிருக்கிறார். மீண்டும் ஒளிவீச வருக இளமதி.
வேலைகள், குடும்பச் சூழல் என்று ஏதோவொரு முக்கிய காரணத்தால் வலைப்பூக்களுக்கு விடுமுறை விட்டிருக்கும் நட்புக்களும் இருக்கிறார்கள். பொழுது இல்லையென்பது இல்லை. வலையுலகு வந்தால் வலையில் மாட்டிக்கொள்வோம், இருக்கும் நேரம் பனியாய்க் கரைந்து போகுமே என்னும் எண்ணம். :-)
ஜீனோ... பிரம்மா சுஜாதா. :-) ஜீனோ தமிழ் வலையுலகில் தனக்கென ஒரு குட்டி மூலையை வைத்திருந்தது. ஜீனோ பாடிய வாத்துப் பாடல் இங்கே. ;) இப்போ ஒரேயடியாக எங்கோ ஒளிந்திருக்கிறது ஜீனோ.
ரத்தமின்றி.. கத்தியின்றி.. விஞ்ஞான புனைகதையொன்றை இயற்றிய பூங்கதிர்தேசத்தைச் சேர்ந்த சந்தனா மூன்றாம் முறை ஊர் சுற்றி வந்ததன்பின் சத்தமின்றி ஒளிந்துகொண்டார். ;(
இப்போது... இமாவும் ஒளிந்துகொள்ளவா!
மீண்டும் நாளை சந்திப்போம்.
இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் நன்மை பயக்கும் நாளாக அமையட்டும்.
_()_
அருமையான பதிவர்களை
ReplyDeleteவித்தியாசமாக அறிமுகம் செய்தது
மனம் கவர்ந்தது.
இவ்வார வலைச்சர ஆசிரியர் பணி தொடர்ந்து சிறக்க
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
நன்றி ரமணி ஐயா.
Deleteநட்பின் வலைப்பூக்களைச் சென்று பார்த்து ரசித்தேன். நன்றி இமா.
ReplyDelete:-) மிக்க நன்றி கீதா.
Deleteஇமா, சூப்பர். அறிமுகத்திற்கு நன்றி. பெரும்பாலும் எல்லோரும் ஏற்கனவே அறிமுகமான பதிவர்கள்.
ReplyDeleteஇன்னும் ஒன்றிரண்டு சேர்க்கத் தவறிவிட்டேன் வானதி. ;(
Deleteதங்கல் கைகளில் வலைச்சரம் - சக்கரம் போல சுற்றிச்சுழல்கின்றது - அருமை..
ReplyDeleteஎனினும் - சிறு திருத்தம்..
//எங்கோ ஒழிந்திருக்கிறது ஜீனோ// = எங்கோ ஒளிந்திருக்கிறது ஜீனோ.
// இமாவும் ஒழிந்து கொள்ளவா!// = இமாவும் ஒளிந்து கொள்ளவா!.
வாழ்க வளமுடன்!..
மிக்க நன்றி துரை செல்வராஜு. மாற்றி விட்டேன்.
Deleteஇன்று எமது நட்பூ"க்களின் அறிமுகங்கள். அருமை.
ReplyDeleteஅதில் என்னையும் இணைத்தமைக்கு மிக்க நன்றிகள் இமா.
அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
இன்னும் அதிகமான எண்ணிக்கை இடுகைகளைக் குறிப்பிட்டு எழுதியிருக்கலாமென்று இப்போது தோன்றுகிறது. உங்கள் அழகழகான வாழ்த்து அட்டைகளை அறிமுகம் செய்யும் சந்தர்ப்பத்தைத் தவற விட்டுவிட்டேன். ;(
Deleteநட்பை மறவாமல் நினைவு கூர்ந்ததற்கு வாழ்த்துக்கள். அறியாத சில தளங்களை சென்று பார்க்கிறேன் .
ReplyDelete//அறியாத சில தளங்களை சென்று பார்க்கிறேன் .// பாருங்கள் சொக்கன். ஓவ்வொருவர் ரசனையும் வேறுவேறு. உங்களுக்குப் பிடிக்கக் கூடும்.
Deleteஇனிய இமா!
ReplyDeleteதனியாக இல்லை தரணியில் நாங்கள்
துணிவான தோழர் துணையென்றீர்! - பேணும்
வலைச்சரம் பேர்பொறிக்க வார்க்கின்றீர் நாளும்
கலைநயம் யாவும் கலந்து!
இவ்வார வலைச்சர ஆசிரியப்பணி உங்களிடம் என்பதை
இன்றுதான் கண்டுகொண்டேன்.
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!
பணி அதி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருப்பதைப் பார்க்க
மிக்க மகிழ்வாக இருக்கிறது... :)
நான் தற்சமயம் இன்று இங்கு வந்து பார்க்க,
நீங்கள் இவ்வார வலைச்சர ஆசியராகவும்
அதிலும் இன்றெனப்பார்த்து
என் வலைப்பூவினையும் இங்கு அறிமுகஞ் செய்திருப்பது கண்டு
ஆச்சரியத்தில் ஆச்சரியமாக இருக்கிறது...
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி இமா!
அறிமுகமாகிய அனைத்து நட்புகளுக்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்கள்!
எனை வாழ்த்தும் அனைத்து நட்புக்களுக்கும் அன்பு நன்றிகள்!
;-) என்னவோ ஒரு சந்தேகம். கடைசி நேரம் இளையநிலாவை வந்து பார்த்தேன். பிறகு என் இடுகையில் வசன அமைப்பைச் சரிசெய்யவேண்டியிருந்தது.
Deleteஇனி தொடர்ந்து வருவீர்கள் என்று நம்புகிறேன்.
மலர்ந்து மணம் வீசிய
ReplyDeleteநட்புப்பூக்களுக்கு வாழ்த்துகள்..
உங்களுக்கு என் அன்பான நன்றிகள் அக்கா.
Deleteவணக்கம்
ReplyDeleteவலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.... இந்த வாரம் சிறப்பாக அமையட்டும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன். :-)
Delete
ReplyDeleteவணக்கம்!
தமிழ்மணம் 1
நட்பினைப் பேணுகின்ற நங்கையா்தம் மின்வலையைப்
பட்டென நான்பறந்து பார்க்கின்றேன்! - கட்டாய்க்
கரும்களித்த காரிகையே! கன்னல் இமாவே!
விருந்தளிப்பாய் நாளும் விழைந்து!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
//விருந்தளிப்பாய் நாளும் விழைந்து!// முயற்சி செய்கிறேன் ஐயா.
Deleteதங்கள் கருத்துக்கு நன்றி.
நட்பிற்கு மரியாதை!?
ReplyDelete:-) என்னையே பலருக்குத் தெரியாது ராஜி. பல வலைத்தளங்களைச் சென்று பார்த்தாலும்... படிப்பேன், கருத்துப் பதிவிடாமல் வந்துவிடுவேன். பின்தொடர்வது தெரியாமல் பின்தொடர்வேன்.
Deleteதோன்றிற்று.. ஒரு இடுகையில் இவர்களை அறிமுகம் செய்தாலென்னவென்று. தவறாக இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.
Wowwwww!!! sweeeet imma :)
ReplyDeleteஇமா !!!!ஆல் தி cookies aka கெ கீஸ் :) ரொம்ப அருமையாக இருக்கு இதே போல எப்பவும் மணக்கும் சரமாக நாம் இருக்கவேண்டும்
ReplyDeleteஎன இறைவனை வேண்டுகிறேன் !
நானும். காணாமற் போனோரும் மீண்டும் வர வேண்டுகிறேன்.
Deleteஆவ்வ்வ் மீ வந்துட்டேன்ன்ன்ன்... முதலில் அந்த பூக் கார்ட் :) இது வேற கார்ட்.. எனக்குத்தானே? தங்கூஊஊ றீச்சர்:).. நாமளாவே சில விஷயத்தில முந்திடோணும்.:). ஆருக்கு றீச்சர் அது எனக் கேட்டால்.. அது அஞ்சுவுக்கு எனச் சொல்லிட்டாவே எனில் என் குட்டி இதயம் பொசுக்கென நொருங்கிடாது:)).. அதனாலதான் கிட்னியை ஊஸ் பண்ணினேன்... :)
ReplyDeleteவெல்கம் இமா... புது முகம் எல்லாம் பார்க்கிறேன்ன்.. இது இளமதியைச் சொல்லல்ல.. :).
// இது இளமதியைச் சொல்லல்ல//
Deleteமிக்க நன்றி அதிரா... )
அடடாஆஆஆஆ என்னாதூஊஊஊ றீச்சர்... என்ன இது மனஸ் வோட்டு ஆரோ போட்டிருக்கினமே.. என்ர சிவனே.. றீச்சருக்கு மைனஸ் வோட்டா.. நோஓஓஓஓஓஒ அப்படி இருக்க்காது.... ஒருவேளை போட்டது அஞ்சுவா இருக்குமோ.... இல்ல அம்முலுவோஒ... ஹையோ முருகாஆஆஆஆ எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்ஸ்... ஆணியே புடுங்க வாணாம் என்றுதான் நான் இண்டைக்கு வோட்டே போடல்ல.... போடல்ல... கொஞ்சம் இருங்கோ பின்பு வாறேன்ன்ன்ன் :).
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்...யாராவது கண்ணாடி போட மறந்து தட்டியிருப்பாங்க அதிஸ் :)
Deleteஆஹா... எப்பூடியெல்லாம் திங் பண்ணுறீங்க அஞ்சு.. உதுவும் சரியாத்தான் இருக்கும்... “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”.. எதுக்கு நெகடிவ்வா திங் பண்ணோனும்:).. சரி சரி அப்போ மீக்கு இப்போ அடுத்த வேலை என்னெண்டால்ல்.. ஆரெல்லாம் கண்ணாடி பாவிப்போர் என்பதைக் கண்டு பிடிக்கப் போறேன்ன்ன்ன்ன்.. எங்கிட்டயேவா?:)..
Deleteஹையோ அஞ்சு றீச்சர் கண்ணாடி போடுறவ...:) ஒருவேளை அவவே இதைப்... :) வாணாம் வாணாம் இந்த ஆராட்சியே வாணாம்ம் :) நமக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ் :).. கட்டிலுக்கு கீழ ஒளிச்சிருப்பதே மேல்... :).
இருங்காஆஆ :) போன வாரம் ஒருத்தர் ஏகிட்ட சொன்னாங்க //பத்து வருஷம் முன்னாடிதான் கண் டெஸ்ட் போனேன்னு :)))))))
Deleteகண்டுபிடிச்சிட்டேன் ...கண்ணாடியே போடாம காலம் ஓட்டுற அந்த ___ தான் இந்த வேலையை செய்தது
என்ர வைரவா.. பிள்ளையார் பிடிக்கப் போய் - மங்கியா மாறின கதையாயெல்லோ போகுது இதூஊஊ...:) இதுக்கொரு முடிவு கட்டாமல், என், மேல் இமை கீழ் இமையைத் தழுவாதூஊஊஊஉ .. இது அந்த தேம்ஸ் கரையில, கறுத்துப்போய் இருக்கும் முக்கோணக் கல்லின் மேல் சத்தியம்!!!!, றீச்சர் தூங்கினாலும்..:) வரும் சண்டே வரை.. இது வேற சண்(டை) ..டே... மீ நித்திரை கொள்ளப்போவதில்லை :).. ஆர் அந்த மைனஸ் வோட்டில கையை டச்சு பண்ணீனமோ லபக்கெனப் பிடிச்சுக் கொண்டு கூப்பிடுவேன்ன்... அஞ்சு உடனேயே ஓடி வந்திடோணும் சொல்லிட்டேன்ன்ன்:) என் மெல்லிய கை முறிஞ்சிடும் இல்லாட்டில் :).. உஸ்ஸ்ஸாஆஆஅப்பா.. ஏன் இப்பூடி வியர்க்குதெனக்கு:).. ஓ அது இங்க இன்று 24 டிகிரியாக்கும் அதேன்ன்ன்ன் :).
Delete///இப்போது... இமாவும் ஒளிந்துகொள்ளவா!///
ReplyDeleteஹையா.. ஜாலீஈஈஈஈஈஈஈ அப்போ றீச்சரும் கட்டிலுக்கு கீழ ஒளிச்சிட்டாஆஆஆஆஆஆஆஆ... ஹா..ஹா..ஹா... சரி சரி நாளை சந்திப்போம்ம்..
மியாவும் நன்றி றீச்சர்... கனகாலமா எதுவும் எழுதாமல் விட்ட என் புளொக்கையும் தூசு தட்டி இங்கே போட்டமைக்கு... இந்தாங்கோ உங்களுக்கு ஒரு “ ------ “. ஆருக்கும் காட்டாமல் எடுத்திடுங்கோ.. இங்கின எல்லோருக்கும் பாஆஆஆஆஆஆ..புக் காது... கழுகுக் கண்ணாக்கும்... ஹையோ மீ எம் பாலாரை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்ன்...:)..
எப்பூடி .. மீ வருமுன் காப்போனாக்கும்:) அதுதான் எம்பாலாரை மட்டும் என சொல்லிட்டேன்ன் :).. ஆனா அஞ்சு, அவ வந்தபின் காப்போன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)..
ஹையோ இனியும் வாணாம் இங்கின நாளை சந்திப்போம்...
//என் புளொக்கையும் தூசு தட்டி இங்கே போட்டமைக்கு...// :-) இனி தூசு படிய விடாதைங்கோ அதீஸ்.
Deleteஅட்டகாசம் போங்க...! பாராட்டுக்கள்...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
:-) நன்றி தனபாலன்.
Deleteஅறிமுகங்கள் எல்லாம் அறிந்தவர்கள் தான்! அணைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி நேசன்.
Deleteஇளையநிலா நீண்ண்ண்ண்ட ஓஓய்வு ஏஏண் என் நினைத்து இருந்தேன் அவரின் துயரை அறியத்தந்ததுக்கு நன்றி டீச்சர்!
ReplyDeleteஅவராக வெளியே சொல்லாத வரைக்கும் நாங்கள் சொல்வது சரியில்லை அல்லவா! இடுக்கண் களையாவிட்டாலும் புதிதாகக் கொடுக்காமலாவது இருக்கலாமே என்று தெரிந்த அனைவரும் அமைதி காத்தோம். காலம் எல்லாவற்றையும் ஆற்றும்.
Deleteதிரட்டியில் மைனஸ் ஓட்டு முன்னனியில்! இமா டீச்சரும் கலை போல சண்டிராணிதான்! ஹீ
ReplyDelete:-)))
Deleteநட்'பூ' மணக்கிறது இமா! நன்றிகள்! :)
ReplyDelete:-)
Deleteசிறந்த அறிமுகங்கள்
ReplyDeletevisit: http://ypvn.0hna.com/
நன்றி ஜீவலிங்கம்.
Delete