அன்பார்ந்த
வலைப்பூ உறவுகளே,
உங்கள்
அனைவருக்கும் என்னுடைய அன்பு கலந்த வணக்கங்கள். வலைப்பூ உலகத்தில் இரண்டே வயதான
இந்த குழந்தையை நம்பி ஒரு வாரத்திற்கு வலைச்சரத்திற்கு ஆசிரியராகும் பொறுப்பை
ஒப்படைத்த அன்புமிக்க சீனா ஐயாவிற்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த ஒரு வாரமும் என்னால் இயன்ற அளவு சிறப்பாக இந்த ஆசிரியப்பணியை செய்ய
முயல்கிறேன்.
என்னையும்
பதிவுலகத்தில் அறிமுகப்படுத்திய ஸ்கூல் பையன் அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அடியேனின்
திருநாமம் சம்பந்தம் ஆகும். கடந்த பதினேழு ஆண்டுகளாக மஸ்கட், யுகே, சிங்கப்பூர், மலேஷியா மற்றும் ஜப்பான் எல்லாம் சுற்றிவிட்டு
ஒரு வழியாக ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்து சிட்னி மாநகரில் கணினியை மாரடித்துக் கொண்டிருக்கிறேன்.
வார இறுதி நாட்களில் சனிக்கிழமையன்று சிட்னியில் ஹோல்ஸ்வோர்தி என்னும் இடத்தில் இயங்கும்
பாலர் மலர் தமிழ் பள்ளியில் கடந்த ஆறு வருடங்களாக தமிழ் சொல்லிக்கொடுத்து கொண்டு வருகிறேன்.
உண்மையை சொல்லப்போனால் தமிழ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்வதற்கு
பதில் தமிழ் படித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னால் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
(ஏன்னா, அந்த அளவிற்கு நான் தமிழில் ரொம்ப ஸ்ட்ராங்!!!)
2011யில்
நாமளும் ஒரு வலைப்பூவை தொடங்கலாம் என்று எண்ணி உண்மையானவன் என்று பெயர் வைத்து ஒரு
சுபயோக தினத்தில் தொடங்கினேன். அதற்கு பிறகு என்ன எழுதுவது என்று தெரியாமல் அப்படியே
வைத்துவிட்டேன். பிறகு ஒரு வருடம் கழித்து, மீண்டும் அந்த வலைப்பூவை தூசித்தட்டி எழுத ஆரம்பித்தேன்.
நான் சொக்கன்
ஆனதற்கு காரணம் இந்த பதிவில் சொல்லியிருக்கிறேன்.
சிட்னியில்
முதன்முதலில் ஒரு வீட்டை வடகைக்கு எடுப்பது என்பது எவ்வளவு கடினம் என்பதை நான் இந்த
பதிவில் சொல்லியிருக்கிறேன். சிட்னியில் வாடகை வீடு
நான் சிட்னியில்
தான் முதன் முதலில் கார் ஓட்டுனர் உரிமத்தை பெற்றேன். அதில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை
இதில் எழுதியிருக்கிறேன். நான் லைசென்ஸ் எடுத்த கதை
எல்லோரும்
கவிதை எல்லாம் எழுதுறாங்களேன்னு, நானும் முயற்சி செஞ்சு பார்த்தேன். அப்பத்தான் கவிதைக்கும் நமக்கும் ரொம்ப
தூரம்னு தெரிஞ்சுது. இருந்தாலும் விடாப்பிடியாக உரைநடையில் காதல் கவிதையை இங்கே எழுதியிருக்கிறேன். காதல் தொகுப்பு
தாய்மை
என்றொரு சிறிய தொடர்கதையும், காதல் கீதம் என்றொரு சற்று நீண்ட தொடர்கதையும் இங்கே எழுதியிருக்கிறேன். தொடர்கதைகள்
என்னுடைய
முதல் அமெரிக்க அனுபவத்தையும், தலைவா திரைப்படத்தில் நடித்த அனுபவத்தையும் இங்கு பகிர்ந்திருக்கிறேன்.தொடர் கட்டுரைகள்
சிறு குழந்தைகளின் நாடகமான "தமிழ் பாடம்" நாடகம் இங்கு சிட்னியில் இரு வெவ்வேறு மேடைகளில் மேடையேற்றப்பட்டிருக்கிறது.
தமிழ் பாடம் - நாடகம்
தமிழ் பாடம் - நாடகம்
என்னுடைய
சுயபுராணம் சற்றே நீண்டு விட்டது. அதனால் முடித்துக்கொள்கிறேன். நாளை முதல் பதிவர்களை
அறிமுகம் செய்யும் வேலையில் இறங்குகிறேன்.
பின்குறிப்பு: சிட்னி நேரமானது இந்திய
நேரத்தைக் காட்டிலும் நாலரை மணி நேரம் முன்னதாக இருப்பதால், என்னால்
இந்திய நேரப்படி காலை நேரங்களில் பதிவிட இயலாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மாலையில்
கண்டிப்பாக பதிவிடுகிறேன். சில நாட்களில், அலுவலகத்தில் கொஞ்சம்
வேலை குறைவாக இருந்தால், முன்னதாக பதிவிடுகிறேன்.
சுய அறிமுகம் அழகு தொடரட்டும் பணி ஐயா
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteவலைச்சர பணி சிறப்பாக அமைய வாழ்த்துகள்.
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோதரி.
Deleteஇவ்வார வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றிருக்கும் திரு சுப.சம்பந்தம் என்கிற சொக்கன் சுப்ரமணியன் அவர்களே! தங்களை வருக வருக என வரவேற்று, தங்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன். . தங்களின் படைப்பான ‘சிட்னியில் வாடகை வீடு’ ‘நான் லைசென்ஸ் எடுத்த கதை’ தமிழ் பாடம் நாடக வடிவத்தின் உரை நடை (அதை வானொலியிலும் கேட்டு மகிழ்ந்தேன்.) அனைத்தும் அருமை. நேரம் கிடைக்கும்போது மற்றவைகளையும் படிப்பேன்.
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா.
Deleteஎன்னுடைய படைப்புகளை படித்தும்,கேட்டதற்கும் மிகவும் மிகழ்ச்சி.
அன்பின் சொக்கன் அவர்களே.. வருக.. வருக..
ReplyDeleteவலைச்சரத்தில் தங்களது பணி சிறப்பாக அமைய நல்வாழ்த்துகள்.
தங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா.
Deleteசுய அறிமுகம் அருமை! வலைச்சரப்பணியில் சிறக்க வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி சுரேஷ்
Deleteவாழ்த்துக்கள் திரு. சொக்கன் ஐயா.
ReplyDeleteதங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரா.
Deleteஅன்பின் சம்பந்தம் சுப்ரமணியன் - சுய அறிமுகப் பதிவு - தங்களின் அருமையான பதிவுகள் சுட்டிகள் கொடுக்கப் பட்டு விளக்கமுடன் இப்பதிவில் வெளியிடப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்சி - அனைத்தையும் சென்று பார்த்து படித்து மகிழ்ந்து மறுமொழிகள் இடுகிறேன். பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteதங்களுடைய வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteஇனிய நண்பர் சொக்கன் அவர்களுக்கு முதலில் எனது SORRY காரணம் சமீபத்தில் தங்களுக்கு ஒரு e-MAIL அனுப்பி ஒருகேள்வி கேட்டிருந்தேன் ஆனால் தாங்கள் ஊருக்கே தமிழ் சொல்லிக்கொடுக்கிறீர்கள் என்பதறிந்து மிக்க மகிழ்ச்சி உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் விரைவில் நல்லாசிரியர் விருது கிடைக்கட்டும்.
ReplyDeleteநீங்கள் SORRY எல்லாம் கேட்கத் தேவையே இல்லை. நான் தமிழ் சொல்லிக் கொடுக்கின்ற சாக்கில் படிக்கின்ற வயதில் படிக்காமல் விட்டுபோன தமிழை படித்துக்கொண்டிருக்கிறேன்.
Deleteதங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே.
நல்லாசிரியர் விருதுக்கு சமமாக, நான் இந்தாண்டு முதல் அந்த பள்ளியின் முதல்வராக செயல் பட்டுக்கொண்டு வருகிறேன்.
வலைச்சரப்பணிக்கு இனிய
ReplyDeleteவாழ்த்துகள்..
தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி அம்மா.
Deleteநீங்கள் நல்ல ஆசிரியராக இருந்தனால்தான் ஸ்கூல் பையனால் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறீர்கள்
ReplyDeleteஉண்மை தான் மதுரைத் தமிழா.
Deleteசுய அறிமுகம் அருமை .. வலைச்சரப்பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள் ..
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோதரி.
Deleteவணக்கம் சகோ
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பணி சிறக்க அன்பான வாழ்த்துகள். தமிழ் படித்துக் கொண்டிருக்கிறேன். இது தான் சரி சகோ. நாளும் படிக்கும் ஆசிரியன் தான் நல்லாசிரியன். நீங்க நல்லாசிரியர் ஆகிட்டீங்க சகோ. சிறப்பான பணியை செம்மையாக செய்வீர்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. கலக்குங்க. நன்றி.
தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோ.
Deleteகலக்குங்க வாத்தியாரே !
ReplyDeleteத ம 1
தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி பகவான்ஜீ
Deleteவாங்க... அன்பரே!
ReplyDeleteசுய அறிமுகம் அருமை.
மீண்டும் நாளை... இறை நாட்டம்.
தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே.
Deleteஅட, முதல் பதிவிலேயே எனக்கு அறிமுகமா? மிக்க நன்றி சார்...
ReplyDeleteஉங்களை முதல் பதிவுலே சொல்லாமல் இருந்தால் எப்படி!!!!!!
Deleteமேலும் அசத்த வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி டிடி
Deleteகலக்குங்கள் சொக்ஸ்..
ReplyDeleteத.ம ..ஐந்து.
தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி மது
Deleteவாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteதம 6
தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஜயக்குமார் சார்
Deleteவலைச்சர ஆசிரியரே பணி சிறக்க என் உளங் கனிந்த வாழ்த்துக்கள்...! சுய அறிமுகம் அருமை ! அசத்துங்கள் சகோ!
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ.
Deleteநல்வரவு.
ReplyDeleteநான் உங்க பக்கத்து வீட்டுக்காரிதான். நியூஸி.
சிட்னியில் ஏராளமான பதிவுலக நண்பர்கள் இருக்காங்க. இப்ப நீங்களும் நம் வட்டத்தில்:-)))
அடாடா, நீங்கள் பக்கத்து வீட்டுக்காரர் தானா!!!
ReplyDeleteதங்களுடைய வட்டத்தில் சேர்ந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி சகோதரி
நல்ல சுய அறிமுகம்.... இதில் குறிப்பிட்ட பதிவுகளை நான் படித்த நினைவில்லை. படிக்கிறேன்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட் சார்
Delete