Friday, June 6, 2014

வெளிநாட்டிற்கு சுற்றுலா போகலாமா




அன்பார்ந்த வலைப்பூ உறவுகளே,

இன்றைக்கு உலகம் மிகவும் சுருங்கி விட்டது. இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு சுற்றுலா போவது என்பது மிகவும் பெரிய விஷயம். அதிலும் வெளிநாட்டிற்கு போவது என்பது ரொம்பவே பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு இந்தியாவிற்குள்ளேயோ, வெளிநாட்டிற்கோ சுற்றுலா போவது என்பது ஒரு கஷ்டமான காரியமே இல்லை.

வெளிநாட்டைப் பற்றி எழுதிய பதிவர்களைத்தான் இன்றைக்கு நாம சந்திக்கப் போகிறோம்.

இந்திய பாஸ்போர்ட்டை வைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு, ஏறக்குறைய எல்லா நாட்டிற்கும் விசா எடுத்தாக வேண்டும். விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில நாடுகளுக்குத்தான் விசா எடுக்க வேண்டாம். எந்தெந்த நாடுகளுக்கு விசா வேண்டும் என்ற விளக்கத்துடன் ஒரு பதிவை குட்லக் அஞ்சனா என்பவர் தன் தளத்தில் சொல்லியிருக்கிறார் - விசா வாங்க வழிகாட்டும் இணையத்தளம் இதில் நீங்கள் www.visamap.net என்ற தளத்திற்கு சென்று பார்த்தால் விசா தொடர்பான செய்திகள் இருக்கும் என்று சொல்லியிருக்கிறார். (www.visamapper.com இயங்கவில்லை)

விசா எடுத்துட்டீங்க, விமானத்திற்கு டிக்கெட் போட வேண்டியது தானே, நாம் நிறைய வலைப்பூக்களில் வீட்டுக்குத் தேவையான டிப்ஸ் படித்திருப்போம். இங்கு மழைக்காகிதம் என்ற வலைப்பூவில் விமான பயணத்திற்கான டிப்ஸ் வழங்கியிருக்கிறார் - விமான பயண டிப்ஸ்

சரி,நீங்க விமான சீட்டும் எடுத்துட்டீங்க, ஆனா சில பல காரணங்களால் உங்கள் விமான சேவையை ரத்து செய்து இருப்பார்கள்,அடுத்த விமானத்தில் தான் நீங்கள் செல்ல முடியும் என்று நிலமை ஏற்படலாம். இது மாதிரி விஷயங்கள் விமானசேவையில் நடக்கக்கூடியது தான். நம் நண்பர் நாடோடிக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கே படியுங்கள் - எமிரேட் ஏர்லைன்ஸ் நீங்க நல்லா வரணும்


கீழே சொல்லியிருக்கிற எந்த நாடுகளுக்காவது உங்கள் விமானம் வந்து இறங்கியிருக்கா?

ஹாங்காங்

ஹாங்காங்கிலிருந்து திரு, ராம் என்பவர் ஹாங்காங்கைப் பற்றிய அவர் முழுமையான கட்டுரையை நமக்காக இங்கே எழுதியிருக்கிறார். ஹாங்காங் ஒரு அறிமுகம். உண்மையிலேயே ஒரு நாட்டைப் பற்றிய கட்டுரையை இந்த அளவிற்கு நான் எங்கேயும் படித்ததே இல்லை. அந்த அளவிற்கு விஷயங்களை எளிய முறையில் விளக்கியிருக்கிறார். நான் முதற்கொண்டு, வெளிநாட்டில் இருக்கும் பதிவர்கள் எல்லாம் அந்த அந்த நாடுகளைப் பற்றி இம்மாதிரியான ஒரு கட்டுரையை எழுதி பகிர்ந்துக்கொண்டால், மற்றவர்களுக்கு அது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்,

சிங்கப்பூர்

சுஷிமா என்ற இவர் சிங்கப்பூர் பற்றி சொல்லியிருக்கிறார் - நான் கண்ட சிங்கப்பூர்

துபாய்/ஷார்ஜா

திருமதி மனோ சாமிநாதன் அவர்கள் முத்துச்சிதறல்  என்ற வலைப்பூ மூலமாக துபாய்,ஷார்ஜா நாடுகளைப் பற்றி எழுதி வருகிறார். துபாய் அழகு.

ஷார்ஜாவில் இருக்கும் ஒரு சிறிய மிருகக் காட்சிசாலையைப் பற்றி இங்கே பார்க்கலாம் - போஷ் பாவ் 

லண்டன்

மூத்த பதிவாளர் திரு.டுபுக்கு அவர்கள் விடுமுறைக்கு வேல்ஸ் போன அனுபவத்தை இங்கே மூன்று பதிவுகளில் சொல்லியிருக்கிறார்.




ஜெர்மனி

டுபுக்குவைபோல் ஒரு மூத்த பதிவாளர் திருவாட்டி சுபாஷினி டிரெம்மெல் அவர்கள் ஜெர்மனியில் நடக்கும் ஒரு சாலைத் திருவிழாவைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள் - சாலைத் திருவிழா

சகோதரி பிரியசகி அவர்கள் கிறிஸ்துமஸ் மார்க்கெட் பற்றியும் கேவலார் சர்ச் பற்றியும் இங்கே சொல்லியிருக்கிறார்கள் - கிறிஸ்துமஸ் மார்க்கெட் மற்றும் கேவலார் சர்ச்

மற்றுமொரு சகோதரி ஏஞ்சலின் அவர்கள் ஐரோப்பாவிற்கு சுற்றுலா போகிறவர்கள் ஜெர்மனியை மிஸ் பண்ணக்கூடாது என்று கூறுகிறார்கள். ஊரைச் சுற்றி பார்ப்போம்


சுவிட்சர்லாண்ட்  

சக பதிவாளர் கில்லர்கீ அவர்கள் சுவிட்ஸர்லேண்ட்டில் தனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை இங்கே சொல்லியிருக்கிறார் - சுவிட்சர்லாண்ட்

இன்னும் நிறைய நாடுகளுக்கு செல்லலாம் தான், ஆனால் எதுவுமே ஒரு அளவோடு இருந்தால் தான் நன்றாக இருக்கும். “அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும்னு” சும்மாவா சொல்லியிருக்காங்க. அதனால, நான் இத்தோட இந்த பதிவை முடித்துக்கொள்கிறேன்.

நாளை வேறு சில பதிவர்களுடன் உங்களை சந்திக்கிறேன்.


38 comments:

  1. எனது வலைப்பூவை அறிமுகப்படுத்தியமைக்கு ரெம்ப நன்றிகள் சகோதரரே.
    மிக பிரயோசனமான,அருமையான‌ தள அறிமுகங்கள். அறிமுகப்படுத்திய அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரி.

      Delete
  2. வணக்கம்

    இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நானும் ஒவ்வொரு வலைப்பூவாக சுற்றுலாசென்று வருகிறேன்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

      Delete
  3. வணக்கம்
    எல்லா வலைப்பூக்களுக்கும் சென்று வந்தேன் அறிமுகம் செய்த வலைப்பூக்களில் 2வலைப்பூக்கள் புதியவை அறிமுகம்செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, தங்களின் சேவைக்கு மிக்க நன்றி நண்பரே.

      Delete
  4. 2 தளங்கள் புதியவை... நன்றி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி டிடி

      Delete
  5. எனது பதிவை அறிமுகம் செய்ததற்கு நன்றி சகோ.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  6. வந்து தெரிவித்த சகோ ரூபனுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  7. இன்றைய - ‘’பயணம்’’ - அருமை..
    நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

      Delete
  8. தகவல் தெரிவித்த சகோ.ரூபனுக்கு ரெம்ப நன்றிகள்.

    ReplyDelete
  9. இனிய நண்பர் அவர்களுக்கு... என்னையும் எனது Swiss அனுபவத்தையும் அறிமுப்படுத்தியதற்க்கு மூன்றெழுத்தில் சொல்லி முடித்துவிட விரும்பவில்லை என் மனதுக்குள்ளேயே இருக்குட்டும்.
    அன்புடன்
    Killergee

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  10. சகோதரர் ரூபன் அவர்களுக்கும் நன்றி

    ReplyDelete
  11. அனைத்து வலைபதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்...! அழகாக திட்டமிட்டு செயல் படுகிறீர்கள் சகோ ! தொடர வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ.

      Delete
  12. சிறந்த அறிமுகங்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  13. வெளிநாட்டுப்பயணம் அழகான தொகுப்பு.அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே

      Delete
  14. பதிவுகளை புதிய முறையில் வகைப்படுத்தி ,அறிமுகம் செய்யும் தங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள். நீங்கள் அறிமுகப்படுத்தியுள்ள பதிவர்களுக்கும் பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஐயா

      Delete
  15. உடன் வந்ததுபோல் இருந்தது. பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஐயா

      Delete
  16. உலகம் சுற்றவைத்த அழகிய பதிவு! அறிமுக வலைபதிவாளர்களுக்கு வாழ்த்துக்கள்! உங்களுக்கு எனது பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்

      Delete
  17. அறிமுக வலைபதிவாளர்களுக்கு வாழ்த்துக்கள். அனைத்தையும் படித்து சுற்றிப் பார்க்க கிளம்பிவிட்டேன்.உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரி

      Delete
  18. விரைவில் உங்க ஊருக்குதான் வரலாம்ன்னு இருக்கேன், அப்படி வரும்போது இதெல்லாம் உதவும் சகோ!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, கண்டிப்பாக வாருங்கள். மிகவும் மகிழ்ச்சி.
      அதற்குள், அந்த ஹாங்காங் அறிமுகம் மாதிரி, நானும் எனக்குத் தெரிந்த வகையில் ஆஸ்திரேலியா அறிமுகம்னு எழுதிவிடுகிறேன். அது இன்னும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் சகோ.

      Delete
  19. அனைத்து பதிவுகளும் மிகவும் பயனுள்ளவை. பல தகவல்களை பகிர்ந்து அனைவருக்கும் உதவிய அன்பு உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். வாழ்த்துகள்.

    அவர்கள் அனைவரையும் இனங்கண்டு, இங்கு அறிமுகம் செய்து, பலருக்கும் உதவி புரிந்த தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுதல்கள் சகோதரரே !

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி சகோதரி

      Delete
  20. உள்நாட்டு சுற்றுலா பதிவுகள் பலவற்றை படித்திருந்தாலும் வெளிநாட்டு சுற்றுலா பற்றிய பதிவுகள் துளசி டீச்சர் பக்கத்திலும், Alfy பக்கத்திலும் படித்ததுண்டு. இன்றைய அறிமுகங்களில் பலர் புதியவர்கள். நன்றி நண்பரே.

    ReplyDelete