வலையுலகச் சொந்தங்களுக்கு வணக்கம்!
ஆசிரியர் தொழிலுக்கு நான் போக வேண்டும் என்று பத்தாம் வகுப்பு முடித்ததும் முடிவெடுத்தேன். அதற்கும் ஒரு ஆசிரியர் தான் காரணம்.அதன் விளைவே இன்று நான் அரசுப்பள்ளியில் ஆசிரியர். என்னைப் போலவே வலைப்பக்கத்தில் எழுதி வரும் ஆசிரியர்கள் நிரம்ப உள்ளனர். அவர்களில் எனக்கு தெரிந்த பதிவர்களை அறிமுகம் செய்வதில் மட்டற்ற மகிழ்ச்சி.
ஆதவனுக்கு அறிமுகம் தேவையா! இது அவருக்கான அறிமுகம் இல்லை. ஏனெனில் இவர் அனைவரும் அறிந்த முகம். இருப்பினும் நான் இங்கு அறிமுகம் செய்வது என் நன்றி முகம் காட்டுவதற்கு. மூங்கில் காற்றின் வழியே இசையென எழுந்து பல நண்பர்களின் மனம் கவர்ந்த ஐயா முரளிதரன் அவர்களின் பதிவை அறிமுகம் செய்வதைப் பெருமையாக கருதுகிறேன்
ஜே.சி.ஐயின் மண்டலப் பயிற்சியாளர்களில் ஒருவர், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாழ்வியல் திறன்களை இலவசமாக வழங்கிவரும் நிகில் நிறுவனத்தின் பயிற்சியாளர்களில் ஒருவர். சினிமா விமர்சனம் எழுதுவதில் தனி ஸ்டைல். வாசிப்பு மாற்றத்திற்கான வடிகால் என்பதை நம்பும், பள்ளி மாணவர்கள் பள்ளிப்புத்தகம் தாண்டி படிக்க வேண்டும் எனும் எண்ணம் கொண்ட பன்முகச் சிந்தனையாளர் திரு. கஸ்தூரிரெங்கன் அவர்களின் பதிவு
மகிழ்நிறை மிகவும் அழகான பெயர் இத்தளத்தில் எழுதுபவர் என் உடன்பிறவா அக்கா மைதிலி கஸ்தூரி ரெங்கன் அவர்கள். வயதில் இளையவராக இருந்தாலும் எழுத்துக்களில் நல்ல கூர்மை இருக்கும். கவிதைகளில் ஆழம் இருக்கும். அழகான இரு பெண்குழந்தைகளுக்கு தாயான இவரின் கவிதை கண்டிப்பாக உங்களுக்கு இனிக்கும்
கரந்தை தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் புதிய செய்திகளுடன் சிறந்த மனிதர்களை அறிமுகம் செய்யும் சிறந்த மனிதர் இவர். இவரின் எழுத்துகளை நான் கண் கொட்டாமல் பார்ப்பது உண்டு அப்படிப்பட்ட ஒரு பதிவு கோரா
ஓய்வு பெற்ற ஆசிரியர் தேனியை விட சுறுசுறுப்பானவர். பல மக்கள்நல பணிகளைச் சத்தமில்லாமல் செய்து கொண்டிருப்பவர். இசையில் சிறந்து விளங்கும் இவர் எண்ணற்ற கிராமிய பாடல்களைக் குறுந்தகதிட்டு சிறப்பு சேர்க்கும் பாவலர் பொன்.கருப்பையா அவர்களின் புதுகை மணிமன்றம் தளத்தின் ஒரு பதிவு
பாலக்காட்டில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் துளசிதரன் மற்றும் அவரது தோழி கீதா அவர்களும் தில்லைக்காத்து கிரோனிக்கல் எனும் தளத்தில் எழுதி வருகிறார். அன்பான குணம் கொண்டவர்கள் இவர்களின் பதிவு
வேர்களைத்தேடி எனும் வலைப்பக்கத்தில் எழுதிவருமான , மொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை என முழங்கும் இளையவர், தமிழறிஞர்களின் முக்கிய தினங்களை மறவாமல் நினைவு கூறும் கல்லூரி பேராசிரியர் முனைவர் இரா. குணசீலன் அவர்களின் பதிவு
தமிழாசிரியர், தேனியின் சுறுசுறுப்புக்கு சொந்தக்காரர், கனியும் மனம் கொண்டவர் கனியின் சுவை போலும் பேச்சுக்கொண்டவர். சிறந்த சிறுகதை எழுத்தாளர். இவ்வளவு சிறப்பு கொண்ட திரு.குருநாதசுந்தர் அவர்களின் பதிவு
திண்டுக்கல் மாவட்டம் லந்தக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணிபுரிந்து வரும் திரு.கோபி அவர்கள் வயதில் இளையவர் ஆனாலும் இலக்கண, இலக்கிய புலமை வாய்ந்தவர். அவரின் பதிவுகளின் ஒன்று கனவு இலக்கண நூல் அறிவோம்!
வலைப்பக்கம் வேலுநாச்சியர் ஆனாலும் வலைப்பக்கம் உள்ளே தென்றல் அழகான கவிதைகளை நாளும் வடிக்கும் ஆசிரியர் இவரின் எண்ணங்கள் சமூக நோக்கம் கொண்ட ஆசிரியர் கவிஞர் கீதா அவர்களின் பதிவு
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் கவிஞர் சுவாதி அவர்களின் கவிதைத்துளிகளில் நீங்களும் நனைந்து வரலாம் வாருங்கள் பறவையாக ஆசை....
வலசைப்போகும் கவிக்குயில் புதுக்கோட்டை அரசு பள்ளியில் தமிழ்க் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்தக் குயிலின் பெயர் துரைக்குமரன் இவரது எழுத்துகள் செறிந்த எண்ணங்களைக் கொண்டது
இப்படிக்கு இ.ஆரா என்றும் இனியவன் எனும் பெயரில் ஆசிரியர் கிங் ராஜ் அவர்களின் சிந்தனைகள் புதுமையானதாகவும் நடைமுறை வாழ்வோடு பொருந்திப் போவதுமாக இருக்கும் அவரின் பதிவு ஓ...பேய் கூட்டங்களே......
குறிப்பு
நான் மேற்குறிப்பிட்ட நண்பர்களில் ஆங்கிலம், கணிதம் எடுக்கும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள். ஆனாலும் இவர்கள் தமிழில் எப்படி இப்படியெல்லாம் கலக்குகிறார்கள் என்று எண்ணி பல நேரம் வியப்பில் ஆழ்ந்து போவதுண்டு. இவர்களுக்கு நம் அனைவரின் சார்பாக அன்பு கலந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும். தொடரட்டும் உங்கள் எழுத்துப் பயணம். உங்கள் எழுத்துக்களால் தான் நாளைய விடியல் இருக்கிறது. நன்றி...
இன்றைய பதிவில் - ஆசிரியர்களை அறிமுகம் செய்தது அருமை!..
ReplyDeleteதங்களின் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்..
மிக்க நன்றீங்க ஐயா. தங்களின் அன்பான கருத்துரைக்கும் வருகைக்கும்..
Deleteவணக்கம்
ReplyDeleteசகோரதன்..
வித்தியாசமான தலைப்புக்களில் நல்ல முறையில் அறிமுகத்தை அசத்தியுள்ளீர்கள் இன்றைய வலைச்சரஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சென்று வருகிறேன் பதிவுகளுக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சகோதரரின் உற்சாகப்படுத்தும் பின்னூட்டத்திற்கு அன்பான நன்றிகள்
Deleteஅனைத்தும் சிறந்த தளங்கள்...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ரொம்ப நன்றீங்க சகோதரர்
Deleteதமிழ்மணம் இணைத்து விட்டேன் சகோதரா... +1 நன்றி...
ReplyDeleteரொம்ப ரொம்ப நன்றீங்க சகோதரர். உங்கள் அன்புக்கு நான் என்றும் நன்றிக்கடன் பெற்றவனாய் இருக்க வேண்டும்..
Deleteவணக்கம்
ReplyDeleteசகோதரன்.
4 புதிய வலைப்பூக்களை அறிமுகம்செய்துவைத்துள்ளீர்கள் நன்றி...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி சகோதரர்! தளங்களுக்கு சென்று தகவல் தெரிவித்து விட்டு வந்திருப்பீர்களே? தொடரட்டும் உங்கள் பணி....
Deleteசுவையான தலைப்புக்களில் நல் அறிமுகம்!
ReplyDeleteஅருமை!
வணக்கம் சகோ. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் அன்பு நன்றிகள்..
Deleteஅருமையான அறிமுகங்கள் வாழ்த்துக்கள் சார் தொடரட்டும்பணி!
ReplyDeleteஅன்பான நன்றிகள் சகோதரரே. இணைந்தே தொடர்வோம்..
Deleteஅறிமுகப்படுத்தியவர்களுக்கு... வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துகள் வழங்கியமைக்கு அன்பு நன்றிகள்..
Deleteவித்தியாசமான தலைப்பெடுத்து கலக்குகிறீர்கள். அறிமுகங்கள் அனைவருக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள் பாண்டியரே!
ReplyDeleteஅன்பின் சகோதரி தருகிற ஊக்கமும் உற்சாகமான வார்த்தைகளும் தான் காரணமாக இருக்க முடியும். மிக்க நன்றிகள் சகோதரி
Deleteவலையுலகில் வளர்ந்து வரும் நல்லாசிரியர்கள் இவர்களில் ஒரு சிலரைத்த தவிர மற்றவர்கள் எல்லோரையும் பதிவுலகு மூலம் நன்றாக தெரியும்.... இவர்கள் குணத்திலும் மிக நல்லவர்கள்....அனைவருக்கும் பாராட்டுக்கள்.
ReplyDeleteபாராட்டி மகிழ்ந்த மதுரைத் தமிழனுக்கு என் அன்பு நன்றிகள்..
Delete///மைதிலி கஸ்தூரி ரெங்கன் அவர்கள். வயதில் இளையவராக இருந்தாலும் எழுத்துக்களில் நல்ல கூர்மை இருக்கும்////
ReplyDeleteஇவங்க பதிவுகளை படிக்கும் போது கவசம் அணிந்துதான் படிக்க வேண்டும் போல இருக்கு
. ///கவிதைகளில் ஆழம் இருக்கும். ///
எனக்கு நீச்சல் தெரியாது அதனால் இவர்கள் கவிதை பதிவு போட்டார்கள் என்றால் அந்த பக்கம் போகாம ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்...
///இவரின் கவிதை கண்டிப்பாக உங்களுக்கு இனிக்கும்///
இதனால் அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால் சுகர் பேஸண்ட் தயவு செய்து இவரின் கவிதைகளை படிக்காதீங்க்
பாண்டியன் நீங்க உங்க சகோவை பற்றி நல்ல டிப்ஸ் தந்து என்னை மட்டடுமல்ல எல்லோறையும் காப்ப்பாற்றி இருக்கீங்க... நன்றி
நான் எழுதினத்துக்கு இப்படியெல்லாம் அர்த்தம் கண்டிப்பீங்களா! வலைச்சரம் அறிமுகம் பல நட்புகள் மலர/ விரிவடைய காரணமாக இருக்கும் என் என்பதால் என் அக்காவின் வலைப்பக்கத்தை அறிமுகம் செய்தால் நீங்கள் அந்த பக்கம் யாரையும் போக விட மாட்டீங்க போல இருக்கே!! சுகர் பேசண்ட் அப்படி இப்படினு சொல்லி மக்களைப் பயமுறுத்தாங்க சகோதரரே!! ஹி ஹி...
Deleteரெண்டு நாள் நிம்மதியா ஊரக்கு போயிட்டு வந்தா இப்படி டோட்டல் டேமேஜ் பண்ணிவச்சுருக்கரே இந்த சகா?!! விடுங்க பாண்டியன் தம்பி இவர் பாலிடிக்ஸ் நம்மகிட்ட பலிக்குமா?
Deleteமைதிலி டீச்சர் சொல்லி தந்து ஒரு வேளை நான் படித்து இருந்தால் ரொம்ப புத்திசாலி ஆகி இருப்பேன்...அவங்க முதியோர்களுக்கு பாடம் எடுத்தால் என்னிடம் சொல்லுங்க நான் அவர்கள் வகுப்பில் வந்து கொஞ்சம் புத்திசாலியாக ஆகிக்கிறேன் அதுமட்டுமல்ல எனக்கு பாடம் சொல்லி தந்தால் டீச்சரும் நல்லாசிரியர் விருது வாங்கிவிடுவார்.
ReplyDeleteஉங்களுக்கு பாடம் நடத்தினா அவங்க கண்டிப்பாக நல்லாசிரியர் தான். விருது என்ன கொடுக்கிறது நாங்களே சொல்லிடுவோம்.
Deleteஆஹா! வழக்கம் போல அவசரப்பட்டுடியே மைதிலி:((
Deleteநன்றி சகோ அண்ட் சகா!
(ஆமா ரெண்டு பேரும் என்னை வச்சு காமெடி கீமிடி பண்ணலையே!)
அவர்களுக்கு எங்கள் பாராட்டுக்களையும்
ReplyDeleteவாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதில்
பெருமிதம் கொள்கிறோம்
வணக்கம் ஐயா
Deleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகுந்த நன்றிகள்
அருமை!
ReplyDeleteசரித்திர ஆசிரியர்களை சேர்த்துக்க மாட்டீங்களா????
வணக்கம் ஐயா
Deleteசரித்திர ஆசிரியர்? கண்டிப்பாக சேர்த்துக் கொள்வோம்.. யாருனு எத்தனை பேரு மட்டும் சொல்லுங்க அட்மிஷன் ரெடி...
என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி நண்பரே
ReplyDeleteதங்களை அறிமுகம் செய்ததில் எனக்கே மகிழ்ச்சி மற்றும் பெருமை ஐயா. தொடர்க உங்கள் பணி..
Deleteதம 4
ReplyDeleteநன்றிகள் ஐயா
Deleteஆசிரிய பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கும் மிகுந்த நன்றிகள் அம்மா
Deleteவலைச்சர ஆசிரியர் பணியை சிறப்பாக ஆற்றிவரும் தங்களுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துககொள்கிறேன்.
ReplyDeleteஎனது வலையையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி நண்பா.
தங்கள் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. நேரம் கருதி சொல்ல முடியவில்லை சகோதரரே. தொடரட்டும் உங்கள் சிறப்பான பகிர்வுகள். நன்றி..
Deleteவலைப்பூ அறிமுகத்திற்கு நன்றி சகோ.
ReplyDeleteமிக்க நன்றிகள் சகோதரி...
Deleteதம்பி பாண்டியன் அவர்களுக்கு! மிக்க மிக்க நன்றி எங்கள் வலைத்தளத்தை அதுவும் ஆசிரியர் என்றபடி அறிமுதப் படுத்தியதற்கு! தாமதமாக வந்து நன்றி உரைப்பதற்கு முதலில் மன்னிக்க வேண்டுகின்றோம்! கணினி பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடில்லை! அவ்வப்பொழுதுதான் வலைத்தளம் பார்க்க முடிகின்றது!
ReplyDeleteதம்பி ரூபன் அவர்கள் எங்கள் வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது வலைச்சரத்தில் என்று கொடுத்த செய்தி அறிந்து நாங்கள் மிகவும் வியந்து போனோம்! எங்கள் வலைத்தளமுமா என்று?! ஆச்சரியமும் சந்தோஷமும் கலந்த ஒரு கலவைதான்!
தம்பி ஒரு சிறிய திருத்தம்..... அது ஆங்கிலத்தில் இருப்பதால் எல்லொருக்குமே ஏற்படும் ஒரு குழப்பம்தான்! எங்கள் வலைத்தளம் "தில்லைஅகத்து........" தில்லைகாத்து" அல்ல.....என்பதை இங்கு தாழ்மையுடன் குறிப்பிட்டுக் கொள்கின்றோம்! தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்!
மிக்க மிக்க நன்றி எங்கள் வலைத்தளத்தையும் கருத்தில் கொண்டு அறிவித்ததற்கு!
வணக்கம் ஐயா
Deleteதங்களின் தளத்தை அறிமுகம் செய்ததில் எனக்கு தான் பெருமை. தங்களைப் போன்றோரின் நட்பு கிடைத்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சி. நேரம் கருதி அறிமுகத்தைச் சுருக்கி விட்டேன். மன்னிக்கவும். திருத்தத்தைத் தெரியப்படுத்தியமைக்கு நன்றிகள் சரிசெய்து விடுகிறேன். நன்றீங்க ஐயா
இங்கு அற்முகப்படுத்தப்பட்டிருக்கும் வலைத்தளங்களில் சில எங்களுக்குப் புதியவை. பல புதியவை அறிந்து கொள்ள முடிந்ததற்கு மிக்க நன்றி!
ReplyDeleteஎல்லா அன்பர்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்துக்கள்!
மிகுந்த நன்றிகள். தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி. கருத்துக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள்
Deleteநன்றிகள் ஐயா
ReplyDeleteஇவ்வளவு நல்லாசிரியர்கள் பதிவுலகில் இருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வணக்கம் சகோ
Deleteவருகை தந்து அனைவரையும் வாழ்த்தி மகிழ்ந்த தங்கள் நல்ல உள்ளத்திற்கும் நன்றிகள். தொடர்வோம் உயிர்கொண்ட நட்பை...
இங்கு அறிமுகமாகிய ஆசிரியப் பெருந்தகை
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்!
உங்களுக்கும் நன்றியுடன் இனிய வாழ்த்துக்களும் சகோ!
தொடர் வருகை தந்து வாழ்த்திய என் அன்பு சகோதரிக்கு எனது நன்றிகள் பல...
Deleteஅருமையான அறிமுகங்கள்.. வாழ்த்துகள்..!
ReplyDeleteவருகை தந்து வாழ்த்தியதற்கு நன்றிகள் அம்மா. தொடர்வோம்...
Deleteசிறந்த அறிமுகங்கள்
ReplyDelete(ஆசிரியர்களின் தளங்கள்)
மிகுந்த நன்றிகள் ஐயா. தங்களின் பணி போற்றுதலுக்குரியது..
Deleteமிக்க நன்றிங்க ஐயா. என்னையும் ஒரு பொருட்டாக மதித்து அறிமுகம் செய்தமைக்கு.
ReplyDeleteவணக்கம் சகோதரர்
Deleteதங்களின் தளத்தை அறிமுகம் செய்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நட்பில் தொடந்திருப்போம். நன்றி...
ஆசிரியர் மூலம் ஆசிரியர்கள் அறிமுகம்! சிலரை தெரியும்! தெரியாதவர்களை அறிந்துகொண்டேன்! நன்றி!
ReplyDeleteகருத்தூட்ட புயல் என்ற பட்டம் தங்களுக்கு மிகவும் பொருந்தும். அந்த அளவிற்கு நீங்கள் சென்று படித்து கருத்திடாத தளங்கள் இருப்பது சந்தேகமே! புதிய நண்பர்களை அறிமுகம் செய்த மகிழ்ச்சியோடு நன்றிகளும் சகோதரர்..
Deleteவலைப்பூவில் கலக்கும் ஆசிரியப் பெருமக்களை வெளிக்காட்டியது பாராட்டுக்குரியது.
ReplyDeleteவணக்கம் வருக ஐயா
Deleteபாராட்டுக்கும் வருகைக்கும் மிகுந்த நன்றிகள்.. தொடர்வோம் ஐயா
வலைப்பூவில் ஆசிரியர்களை நினைவுகூர்ந்து பாராட்டிய தங்களின் முயற்சி பாராட்டத்தக்கது.
ReplyDeleteஆசிரியர்களை அறிமுகப்படுத்தியது அருமை..
ReplyDelete