by: Cheena (சீனா)
அன்பின் சக பதிவர்களே !
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்றவர் மைதிலி கஸ்தூரி ரெங்கன் - இவரது வலைத்தளம் : மகிழ் நிறை : makizhnirai.blogspot.com - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த ஆர்வத்துடனும், பொறுப்புணர்வுடனும், ஈடுபாட்டுடனும் - நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார்.
இவர் எழுதிய பதிவுகள் : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 090
அறிமுகப் படுத்திய பதிவுகள் : 118
பெற்ற மறுமொழிகள் : 485
வருகை தந்தவர்கள் : 2789
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 090
அறிமுகப் படுத்திய பதிவுகள் : 118
பெற்ற மறுமொழிகள் : 485
வருகை தந்தவர்கள் : 2789
பெற்ற தமிழ் மண வாக்குகள் : 070.
மைதிலி கஸ்தூரி ரெங்கன் பல் வேறு தலைப்புகளில் பதிவுகள் இட்டிருக்கிறார். பொதுவாக அனைத்துப் பதிவுகளிலும் - பதிவர்களை - ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் அவர்களை அறிமுகப் படுத்துவதை தலையாய கடமையாகச் செய்திருக்கிறார்.
மைதிலி கஸ்தூரி ரெங்கனை - அவரது கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு இனியா ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார்
இவரது வலைத்தளம்
: காவிய கவி : kaviyakavi.blogspot.com
Kaviyakavi என்னும் தளத்தில் இனியா Iniya எனும் பெயரில் 2012 ல்இருந்துஎழுதிக் கொண்டிருக்கிறார். இவரது தளம் 2013 ல் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் ஆரம்பத்தில் 6 மாதங்கள் வரை இவரது தளத்தை யாருமே பார்வை இடவில்லை.
இருந்தும் இவர் தளராது பதிவுகளை இட்டுக் கொண்டிருந்தார். ஆனால் இன்று எல்லாநாடுகளிலும்
இருந்து நூற்றுக்கணக்கானோர் பார்வை இடுவதைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைகிறார்.
இவரைப் பற்றி பெரிதாக சொல்வதற்கு எதுவும் இல்லை. ஈழமண்ணில்தவழ்ந்தவள் தான் இவர். இன்னல்கள் தீர இடம் தேடி இதயத்தைதொலைத்தவர். இருட்டினிலே தேடுகிறார் தொலைத்த வாழ்க்கையை. கனடா மண்ணில் தலையெடுக்க வந்தவர்களில் இவரும் ஒருவர் தான்.
சிறுவயதில் தமிழையும் இலக்கியத்தையும்ஆர்வமாக கற்றவர் தான். தொடரமுடியாத சூழ்நிலை இப்பொழுதுதான் நேரம் வந்திருக்கிறது ஆண்டவனின் தயவோடு.
இவரது கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
நல்வாழ்த்துகள் மைதிலி கஸ்தூரி ரெங்கன்
நல்வாழ்த்துகள் காவிய கவி : இனியா
நட்புடன் சீனா
சோதனை மறுமொழி
ReplyDeleteசீனா ஐயாவுக்கு என் உளமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் .....!
Deleteமிக்க நன்றி அய்யா!
Deleteவெல்கம் இனியா செல்லம்!
மைதிலி கஸ்தூரி ரெங்கன் அவர்களுக்கு நன்றி கூறுவதோடு; காவிய கவி : இனியா அவர்களை வரவேற்கிறேன்.
ReplyDeleteவாருங்கள் சகோ மிக்க நன்றி தங்கள் ஒத்துழைப்பை தொடர்ந்தும் நல்க வேண்டுகிறேன்.
Deleteநன்றி பாவணன் சார்!
Deleteவாழ்த்துக்கள் மைதிலி கஸ்தூரி ரங்கன்! வாருங்கள் வலைச்சரத்தினை அழகாகதொடுக்க இனியா. உங்கள் பணி சிறக்கட்டும்!
ReplyDeleteவாருங்கள் சகோ மிக்க மகிழ்ச்சி! தங்கள் ஒத்துழைப்பை தொடர்ந்தும் நல்க வேண்டுகிறேன். மிக்க நன்றி.....!
Deleteநன்றி சுரேஷ்! அண்ணா!
Deleteவணக்கம்
ReplyDeleteஅம்மா.
வலைச்சரத்தை பார்த்தவுடன் மகிழ்ச்சிதான்... சுய அறிமுகம் நன்று இந்த வாரம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் அம்மா...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஹா ஹா ரூபன் ! மிக்க மகிழ்ச்சி தொடர்ந்து ஆதரவு தருவீங்க இல்ல. வரருங்கள் வாருங்கள் சுவாரஸ்யமான பயணமாக அமையும் என நம்புகிறேன். மிக்க நன்றி ....
Deleteவாங்க வாங்க இனியா மேடம் வெடி வைத்திருக்கிறேன் என்றவுடன் உங்க அம்மு சரியாகவே சொன்னாங்க அடுத்து நீங்கதான் என்று ... கலக்குங்க ...
ReplyDeleteவாழ்த்துக்கள்
வாருங்கள் சகோ மிக்க மகிழ்ச்சி ! யாரு என் அம்மு இல்ல படு சுட்டி தெரியுமோ...! அவவுக்கு உடம்பெல்லாம் மூளை அப்பப்பா.....
Deleteஎன்ன மனைவி ஒரு வாரமா பதிவு போட்டாங்க அப்ப ஒரு கருத்தும் இங்கே போடலை ஆனா இனியா வந்தவுடன் கருத்து எல்லாம் வருது..
Deleteடீச்சரம்மா பாயிண்டை நோட் பண்ணுங்க.. டீச்சரம்ம உங்க வீட்டுல பூரிக்கட்டை இல்லை என்றால் தகவல் கொடுங்க நான் அனுப்பி வைக்கிறேன்
அப்பாடி பத்த வைச்சாசு/
thanks இனியா!
Deleteஇந்த கதை இங்க வேணாம் தமிழன் சகா! எப்பவும் நானே சிஸ்டம்ல இருந்தா அவர் எப்படி கமெண்ட் போட முடியும்:)
அடடட்டாடாஅ...ஹாஹாஹா.......தமிழா.....நாரதா....... பூரிக்கட்டை இங்கயுமா?!!! ஐயோ பாவம் அவங்களாவது நல்லாருக்கட்டுமே! ரெண்டு பேரும் நல்ல டீச்சர்ஸ் வேற.......மது சார் பேசாம இந்தத் தமிழன உங்க க்ளாஸ்ல கொண்டு வைச்சுக்கங்க......
Deleteமதுரை தமிழன் மீது அம்புட்டு பாசமா சகோ! இனிமே கிளாஸ் ல வச்சு திருத்த போறீங்களா அல்லது பாதுகாக்க போறீங்களா?
Deleteஇனியா நீங்க ரொம்ப அப்பாவியா இருக்கிங்க. துளசி சார் சொன்னது கஸ்தூரிசார் வகுப்பில் அல்ல மதுக் க்ளாலிஸ் போட்டா மதுரைத்தமிழன் அமைதியா ஆயிடுவான்னு சொல்லுறார். என்ன துளசி சார் நான் சொல்வது சரிதானே ஹீஹீஹீ
Deleteஅப்பாடா இனி கொஞ்சம் நான் வலை மேயலாம்...
ReplyDeleteமிக்க நன்றி சீனா அய்யாவிற்கும் தமிழ்வாசிக்கும்
அப்பிடியா நிறைய புல் எல்லாம் வைத்திருக்கிறேன் dont worry.
Deleteபோதுமா இருக்கும் என்று நம்புகிறேன்.....
இதையும் நோட்டு பண்ணுங்க தமிழன் சகா!
Deleteநான் நினைச்சேன் ரொம்ப tired அம்முஎன்று தான் நானே நன்றி சொன்னேன். இன்னும் காணலை அம்மு நல்லா தூங்கட்டுமே ரொம்ப காட் வொர்க் பண்ணி இருக்கா என்று பார்த்த ஏற்கனவே அம்மு.ம்..ம்.. நான் தான் பார்க்கலை sorry ம்மா.
Deleteகஸ்தூரி சார் உங்க மனைவிகிட்ட இருந்து லேப்டாப்பை புடுங்குங்க & என் பதிவுபக்கம் வர வீடாதீங்க இப்ப பாருங்க நீங்க எந்த புல்லை சொன்ன இவங்க எந்த புல்லை நினைக்கிறாங்க பாருங்க
Deleteவாழ்த்துக்கள் மைதிலி சிறப்பாக பணியாற்றியமைக்கு.
ReplyDeleteவரங்கள் சகோ! என் அம்முவுக்கு வாழ்த்துக்கள் தானே நானே நன்றி சொல்லிக்கிறேனே ப்ளீஸ். இதுவரை அவருக்கு ஒத்துழைப்பும் ஊக்கமும் தந்து உதவியமைக்கு மிக்க நன்றி ! அவருக்கு நல்கிய ஒத்துழைப்பில் பாதியாவது எனக்கு குடுங்கப்பா ப்ளீஸ்.
Deleteஒரு கல்லில இரண்டு மாங்காய் ஹா ஹா ...
நன்றி நேசன் சகோ!
Deleteஇனியாச்செல்லம் ஸ்மார்ட் ல!!
வருக வருக இனியா வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சகோ! தொடர்ந்து தருவீங்க இல்ல அது தாங்க ஒத்துழைப்பு. நீங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க செய்வீங்க.
Deleteஇந்த வார பிரியாணிக்கு ஆடு சிக்கிடுச்சுடோ.....
ReplyDeleteஆடா....டா...டா....... அடிக்கிறதுன்னு தீர்மானமா..மா....மா.... வேணாம் ஐயா பாவம் இல்ல நானு அடக்கி வாசிப்பா பில்டிங் தான் ஸ்ட்ரோங் பேஸ்மென்ட் ரொம்ப வீக்குப்பா அப்புறம் அழுதிருவேன்.
Deleteசகோதரி இனியா அவர்களுக்கு வெல்கம் வெல்கம்...
ReplyDeleteவாருங்கள் சகோ ! வரவேற்பு மட்டும் தந்தா போதாது சரியா கடைசி வரை பயணம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஓகேவா !ம்...ம்..ம்..
Deleteகுட் boy !
ReplyDeleteசனிக்கிழமை சரக்கு அடிக்க வேண்டாம் என்று நினைத்து இருந்தேன் மைதிலி போறாங்கன்னு வருத்தமா ஆனாதுனால சரக்கை எடுத்தேன். அப்ப நினைச்சேன் ஞாயிற்று கிழமை சரக்கை எடுக்க கூடாதுன்னு நினைச்சேன். மதுரைத்தமிழனை சும்மா இருக்க விட கூடாதுன்னு இந்த தமிழ்வாசியும் சீனா ஐயாவும் சேர்ந்து ஒரு ஆட்டை அனுப்பி வைக்கிறார்கள் அதனால் சந்தோஷத்தில் பாட்டிலை கையில் எடுத்துட்டேன்
வேண்டாம் சகோ ப்ளீஸ் நான் அவ்வளவு மோசம் இல்லை சகோ நம்புங்க நான் கவலை படுத்த மாட்டேன் ப்ராமிஸ் ok தானே எடுத்த பாட்டிலை எடுத்த இடத்திலேயே வைச்சிடுங்க நல்ல புள்ள இல்ல.ஆ..... அதானே பார்த்தேன். குட் boy.
Deleteஇனியா அவர்களே!
ReplyDeleteவணக்கம்!
இனியா வென்று இன்னொரு பதிவர் இருந்ததா ஞாபகம். பின்னூட்டம் மட்டும் இடுவாரு. நியு ஜெர்சில இருந்தாருனு நெனைக்கிறேன். அவர் ஒரு ஆண்மகன்..
நீங்க உங்க தோழி மைதிலியால் "இனியாச் செல்லம்" விளிக்க கவனித்த பிறகே, நீங்க அவரில்லை, வேரொருவர், ஈழத்தமிழ்ப் பெண்மணினு (சமீபத்தில்தான்) தெரிந்து கொண்டேன் .
வாழ்த்துக்கள் இனியா அவர்களே! :)
அடடா அறிமுகப் படுத்த முன்னரே தெரிஞ்சு போச்சா. ரொம்ப பீடிகை எல்லாம் போட்டு எல்லாம் வீணா போச்சே! சரி வேறு யாருக்கும் சொல்ல வேண்டாம் சரியா ...மிக்க நன்றி ! சகோ தொடர்ந்தும் ஆதரவு தர வேண்டுகிறேன் .
Deleteஇது வெல்கம் பதிவா அட ராமா இது தெரியாம கலாய்க்க ஆர்ம்பிச்சுட்டேன் நேற்று அடிச்ச சரக்கு இறங்கவில்லை போல சரி சரி. இப்ப வாழ்த்தி வர வேற்றா போச்சு//
ReplyDeleteகனடாவில் இருந்து வரும் தமிழ்தாரகை இனியா அவர்களே வருக வருக உங்களின் பொன்னான பதிவுகளால் இந்த வலைச்சரம் ஜொலிக்க போகிறது...
இனியா வாழ்த்திட்டேன் அதனால மறக்காம எனக்கு வேண்டியதை வாங்கி அனுப்பிடுங்க.....என்னா நீங்க நம்ம ஊரு பக்கத்தில்தான் வசிக்கிறீங்க.. அதனால நொண்டி சாக்கு எல்லாம் சொல்லக் கூடாது
சரி ஒரு பக்கெட் தண்ணி தலையில ஊத்திட்டு வாங்க எல்லாம் தெளிஞ்சிடும். வரவேற்பு பலமா இருக்கு ஒன்னும் உள் குத்து இல்லையே.
Deleteஆமா என்ன அனுப்பி வைக்கணும் ஓஓஓ பூரிக் கட்டை தானே. நேரிலேயே குடுத்தா போச்சு நான் என்ன இந்தியா விலேயா இருக்கிறேன் பக்கத்தில தானே சகோ முகவரிய தாங்க. இப்போ எப்பிடி...... பார்த்து சகோ ஹா ஹா .....
இனியா... இனி அவர்கள் இனியவர்கள்....
ReplyDeleteஅப்படியா மிக்க நன்றி சகோ தொடர வேண்டுகிறேன்.
Deleteகலக்கிச் சென்ற சகோதரிக்கும் இனி கலக்க வரும் சகோதரிக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக்க நன்றி சகோ! தொடர வேண்டுகிறேன்.
Deleteபணியினை சிறப்புடன் நிறைவு செய்த மைதிலி கஸ்தூரி ரெங்கன் நல்வாழ்த்துக்கள்..
ReplyDeleteபணியினை ஏற்று சிறப்பிக்க இருக்கும் காவிய கவி இனியா அவர்களுக்கு நல்வரவு!..
வாழ்க நலம்!..
வாருங்கள் சகோ ! மிக்க நன்றி வாழ்த்திற்கும் வரவுக்கும். தொடர வேண்டுகிறேன்.
Deleteகடந்த வாரம் மைதிலி கஸ்தூரி ரெங்கன் பதிவுகளைக் கண்டு மகிழ்ந்தோம். இவ்வாரப் பதிவுகளுக்கான ஆசிரியரான உங்களை வரவேற்கிறோம். இனியா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.இவ்வாறான ஒரு அருமையான முயற்சியை மேற்கொள்ளும் சீனா
ReplyDeleteஅவர்களுக்கு பாராட்டுகள்.
www.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in
வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோ ! தொடர்ந்து ஆதரவு நல்க வேண்டுகிறேன்.
Deleteசகோதரி இனியா அவர்களே... வருக வருக... அசத்த வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கு மிக்க நன்றி சகோ ! தொடர்ந்து ஆதரவு நல்க வேண்டுகிறேன்.
Deleteநல்வாழ்த்துகள் மைதிலி கஸ்தூரி ரெங்கன்
ReplyDeleteநல்வாழ்த்துகள் காவிய கவி : இனியா
இனிய வரவிற்கு வாழ்த்துகள்..
மைதிலி ரொம்ப ரயேட் அதனால நானே இருவர் சார்பாகவும் நன்றி சொல்கிறேன். தாங்கள் அளித்த ஒத்துழைப்பிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழி !
Deleteவாழ்த்துக்கள் மைதிலி சகோ.
ReplyDeleteஇனியா சகோவிற்கு, தங்களின் ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள். கலக்குங்கள் சகோ.
மைதிலிக்கு ஒத்துழைப்பு நல்கியமைக்கு நன்றி ! சகோ
Deleteஎன்னை வாழ்த்தியமைக்கும் வருகைக்கும் நன்றி! தொடருங்கள் ....